Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Saturday, August 18, 2012

உலகமெங்கும் இஸ்லாத்தின் எழுச்சி! – ஒரு விரிவான பார்வை!



இறைவன் அருளிய இயற்கை மார்க்கமாம் இஸ்லாமிய மார்க்கம் அல்லாஹ்வின் மாபெரும் அருளால் உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் மாபெரும் வளர்ச்சி கண்டு வருகின்றது.
இஸ்லாத்திற்கு எதிராகப் பரப்பப்படும் அவதூறுகளுக்கு அளவே இல்லை. அதுமட்டுமல்லாமல் உலகத்திலேயே அதிகமான மக்களால் எதிர்க்கப்படும் ஒரே சித்தாந்தம் இஸ்லாம்தான். இப்படி அனைவரும் இஸ்லாத்தின் மீது அவதூறுகளையும், குற்றச்சாட்டு களையும், விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் தொடுத்துவரும் இவ்வேளையில், அதிகமான எதிர்ப்புகளைச் சந்தித்து வரும் இந்த மார்க்கம் மனித அறிவு போடக்கூடிய கணக்கின் பிரகாரம் பார்த்தால் வீழ்ச்சியடைந்து அழிவை நோக்கித்தான் சென்றிருக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படி உள்ளதா? இல்லவே இல்லை.
மாறாக இந்த அளவிற்கு அவதூறுகளையும், குற்றச்சாட்டுகளையும், விமர்சனங் களையும், எதிர்ப்பு களையும் சந்தித்து வரும் இந்த மார்க்கம் இவ்வளவு எதிர்ப்புகளையும் மீறி மகத்தான வளர்ச்சி கண்டு வருகின்றது.
இஸ்லாத்தை எதிர்ப்பவர்கள் இஸ்லாம் குறித்து கூறும் சாட்சி:
இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்று வருகின்றது என்று முஸ்லிம்களாகிய நாம் சொன்னால் பிறர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இஸ்லாமியர்கள் என்பதால் நமது மார்க்கத்திற்கு ஆதரவாக, “இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சி பெற்று வருகின்றது”என்று நாம் இட்டுக்கட்டி பொய் சொல்கின்றோம் என்று சொல்லி விடுவார்கள்.
நம்மை எதிர்க்கும் எதிரிகள் இந்தக்கருத்தைச் சொல்கின்றார்கள் என்று சொன்னால் அதை உங்களால் நம்ப முடிகின்றதா?
ஆம்! கத்தோலிக்க மதத்தலைவராக உள்ள போப் ஆண்டவர், “உலகத்தில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம்” என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார்.
உலகில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம் என போப் விடுத்த அறிக்கையை மேற்கோள் காட்டி வாடிகன் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதிகம் பரவிவரும் மார்க்கங்களில் இஸ்லாம் முன்னிலை வகிப்பதாகவும், கிறித்தவ மத நம்பிக்கையாளர்களைவிட மூன்று மில்லியன் அதிக எண்ணிக்கையுடையோராக முஸ்லிம்கள் உள்ளனர் என்றும், உலக மக்கள் தொகையில் நூற்றில் 17.5 சதவிகிதத்தினர் கிறித்தவர்களென்றால் அதில் 19 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வருடந்தோறும் 40 ஆயிரம் பேர் இஸ்லாத்தில் இணைவதாகவும், கிறித்தவ, யூத மற்றும் பிற மதத்தினர் இவ்வாண்டின் இறுதிப் பகுதியாகும்போது அதிகமாக இஸ்லாத்தில் இணையும் வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
கிறித்தவ மதத்தின் கத்தோலிக்க பிரிவாகவும், பெரும்பான்மையான கிறித்தவர்கள் ஏற்றுக் கொண்ட தலைவராகவும் உள்ள போப் ஆண்டவர் தனது அறிக்கையில், இஸ்லாம் குறித்து இவ்வாறு சொல்லியுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன், எந்த அளவிற்கு இந்த மார்க்கம் எழுச்சியும், வளர்ச்சியும் கண்டு வருகின்றது என்று.
அதுமட்டுமல்ல, கிறித்தவ நாடு என்ற அந்தஸ்த்துடைய நாடுகள் எல்லாம் அங்கு ஏற்பட்டுவரும் இஸ்லாமிய எழுச்சி காரணமாக, அலை அலையாய், மக்கள் இஸ்லாத்தை நோக்கி படையெடுப்பதன் காரணமாக அரண்டு போய் உள்ளது. எப்படி என்று கேட்கின்றீர்களா?
இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தக் கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் :
இஸ்லாத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதாகவும், அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி மக்கள் சென்று கொண்டிருப்பதாகவும் இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் டென்மார்க் நாட்டில் இஸ்லாமிய எதிரிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். எந்த அளவிற்கு இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சி பெற்று வருகின்றது என்பதை இந்த நிகழ்வுகள் நம் கண் முன்னால் படம் பிடித்துக்காட்டுகின்றன.
இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தச் சொல்லி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றார்களா என்று ஆச்சர்யமாகக் கேட்கின்றீர்களா?
ஆம்! அது குறித்து பத்திரிகைகளில் வெளியான செய்தி இதோ:
இஸ்லாமியர்களுக்கு எதிராக டென்மார்க்கில் போராட்டம்
ஐரோப்பாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தடுத்து நிறுத்தக் கோரி, டென்மார்க்கில் போராட்டம் நடந்தது.
ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இங்கிலாந்து விரைவில் கிறிஸ்தவ நாடு என்ற நிலையில் இருந்து மாறிவிடும் சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது என மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
டென்மார்க்கின் ஆரஸ் நகரில் நூற்றுக்கணக்கானோர் திடீரென திரண்டு இஸ்லாத்திற்கு எதிராகக் கோஷமிட்டபடி ஊர்வலம் சென்றனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு குழுவினர் போராட்டம் நடத்தினர்.
அப்போது இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களைக் காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டினர்.
இது தொடர்பாக 80க்கும் அதிகமானோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “டென்மார்க், இங்கிலாந்து, ஜெர்மனி, சுவீடன், போலந்து உள்பட பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 300க்கும் அதிகமானோர் இஸ்லாத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
பேரணி சென்றவர்களைத் தடுத்து நிறுத்த 2,500க்கும் அதிகமானோர் திரண்டனர். இதனால் மோதல் ஏற்பட்டது. நிலைமை இப்போது கட்டுக்குள் உள்ளது” என்றார்.
மேற்குறிப்பிட்ட செய்தியிலிருந்து நாம் அறியவரும் உண்மை என்னவென்றால், இஸ்லாத்தின் வளர்ச்சி அதன் எதிரிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமில்லையாம். “டென்மார்க், இங்கிலாந்து, ஜெர்மனி, சுவீடன், போலந்து உள்பட பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்” இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதாக டென்மார்க் காவல்துறை கூறியுள்ளதைப் பார்க்கும் போது, “டென்மார்க், இங்கிலாந்து, ஜெர்மனி, சுவீடன், போலந்து உள்பட பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய எதிரிகள் மேற்கூறப்பட்ட தங்களது நாடுகளில் இஸ்லாத்தின் வளர்ச்சியைக் கண்டு கதிகலங்கியுள்ளனர் என்பதும் தெரியவருகின்றது. அதுமட்டுமல்லாமல், “டென்மார்க்,இங்கிலாந்து, ஜெர்மனி, சுவீடன், போலந்து உள்பட பல ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து வருகின்றது என்ற உண்மையும் இதன் வாயிலாக வெளிப்படுகின்றது.
மேலும், இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் வைத்த முக்கியமான குற்றச்சாட்டு, கிறித்தவர்கள் மிகுதியாக வாழும் தங்களது நாடுகள் இஸ்லாத்தின் வளர்ச்சியின் காரணமாக கிறித்தவ நாடு என்ற அந்தஸ்தை இழந்து அது முஸ்லிம் நாடாக மாறிவிடுமோ என்ற பீதியின் காரணமாகத்தான் இந்தப் போராட்டம் என்றும் கருத்துக் கூறியிருப்பது, வல்ல இறைவனின் இம்மார்க்கம் எந்த அளவிற்கு வளர்ச்சியடைந்து கொண்டு செல்கின்றது என்பதற்கு மிகப்பெரும் சான்றாக அமைந்துள்ளது.
இஸ்லாத்தின் வளர்ச்சியை உண்மைப்படுத்தும் புள்ளி விபரங்கள்:
இஸ்லாத்தின் வளர்ச்சியின் காரணமாக கிறித்தவ நாடு என்ற அந்தஸ்த்தை இழந்து அது முஸ்லிம் நாடாக மாறிவிடுமோ என்ற பீதி இவர்களுக்கு வந்தது எப்படி என்று கேட்கின்றீர்களா?
இதோ அது குறித்து சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகளை உங்கள் பார்வைக்குத் தருகின்றோம்.
கீழ்க்கண்ட இந்த ஆய்வினை ஏதோ சவூதி அரேபிய அரசாங்கமோ, அல்லது இஸ்லாமிய வளைகுடா நாடுகளோ செய்தது என்று யாரும் நினைத்துக் கொள்ளக்கூடாது. அமெரிக்காவிலுள்ள ஒரு நிறுவனம்தான் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள வாஷிங்டனைச் சேர்ந்த மத மற்றும் பொதுவாழ்க்கை குறித்த ஆராய்ச்சி மையம் ஒன்று இஸ்லாத்தின் வளர்ச்சி குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இவர்கள் நடத்திய ஆய்வில், அடுத்த இருபது ஆண்டுகளில் இஸ்லாமியர் அல்லாதவர்களின் எண்ணிக்கையைவிட இரு மடங்கு அதிகமாக இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
இது குறித்து அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
“அதிகரிக்கும் இஸ்லாமிய மக்கள் தொகை”
உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், வருகிற 2030 ஆம் ஆண்டு வாக்கில் உலக மொத்த மக்கள் தொகையில் 25 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்களாக இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேபோல 2030-ம் ஆண்டில் இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 23.6 கோடியைத் தாண்டும் என்றும் அது கூறுகிறது. மேலும், அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம் மக்கள் தொகை, முஸ்லிம் அல்லாத மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் அதிகரிக்கும் என்றும் அது தெரிவிக்கிறது.
கடந்த 2010ல் இருந்த 6.9 பில்லியன் மக்கள் தொகையில் 23.4சதவிகிதம் பேர் முஸ்லிம்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது அடுத்த இருபதாண்டுகளில் 3.5 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அவ்வாறு 3.5 சதவிகிதம் அதிகரித்தால் 2010ல் 1.6 பில்லியனாக இருந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை, 2030ல் 2.2 பில்லியனாக அதிகரித்து காணப்படும்.
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இஸ்லாமிய மக்கள் தொகையின் இந்த அதிகரிப்பு, இதே வேகத்தில் தொடர்ந்தால், 2030ம் ஆண்டில் இருக்கும் 8.3 பில்லியன் மக்கள் தொகையில் கால்வாசிக்கும் அதிகமானோர், அதாவது 26.4 விழுக்காட்டினர் இஸ்லாமியர்களாக இருப்பர். அதாவது 2030ல் உலக மொத்த மக்கள் தொகை, 2010ல் காணப்பட்ட 6.9 பில்லியனிலிருந்து 8.3பில்லியனாக அதிகரித்துவிடும் என்றும், இதில் 26.4விழுக்காட்டினர் இஸ்லாமியர்களாக இருப்பர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த கால சமூகப் பொருளாதார போக்கின் அடிப்படையிலும்,தற்போது அதிகரித்து வரும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அடிப்படையிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அந்த ஆய்வறிக்கை, இதே போக்கு நீடித்தால் 2030 ஆம் ஆண்டுவாக்கில் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் வசிக்கும் நாடுகளின் எண்ணிக்கை தற்போதுள்ள 72 லிருந்து 79 ஆக அதிகரித்துவிடும் என்றும், அந்த 79 நாடுகளிலும் ஒரு மில்லியன் அல்லது அதற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றும் கூறுகிறது.
மேலும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றாலும், 2030 வாக்கில் வேறு எந்த ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காவில் அதிக இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இடம்பெயர்தல் மற்றும் சராசரி விகிதத்தைவிட அதிக பிறப்புவிகிதம் ஆகியவையே அடுத்த இருபதாண்டுகளில், இஸ்லாமிய மக்கள் தொகை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமையும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
1990லிருந்து 2010வரை உலக இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 2.2 விழுக்காடு அதிகரித்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளதாக அந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறுகின்றனர்.
இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு சொல்லப்பட்ட பொருந்தாத காரணம் :
மேற்கண்ட ஆய்வில் வேறு வழியின்றி இஸ்லாத்தின் வளர்ச்சியை அவர்களே ஒப்புக் கொண்டுவிட்டு அதற்குக் காரணம், “இடம்பெயர்தல் மற்றும் சராசரி விகிதத்தைவிட அதிக பிறப்புவிகிதம்” ஆகியவையே அடுத்த இருபதாண்டுகளில்,இஸ்லாமிய மக்கள் தொகை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமையும் என்று கூறியுள்ளனர்.
இஸ்லாத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு இடம்பெயர்தல் மற்றும் சராசரி விகிதத்தைவிட அதிக பிறப்புவிகிதம் ஆகியனதான் காரணம் என்று இவர்கள் கூறியுள்ள காரணத்தை ஏற்றுக் கொள்ள இயலாது. காரணம் என்னவென்றால், முஸ்லிம்களை விட பெரும்பான்மையாக வாழும் சமுதாய மக்களும் அதிக அளவு இடம்பெயரத்தான் செய்கின்றனர். அப்படி இடம்பெயர்வதால் ஒரு பகுதியிலுள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்து மறுபகுதியில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை கூடுமே தவிர, ஒட்டுமொத்த உலகத்தில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை இதனால் அதிகரிக்காது.
உதாரணத்திற்கு இந்தியாவிலுள்ள ஒரு லட்சம் முஸ்லிம்கள் வேறு ஒரு நாட்டிற்கு குடிபெயர்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.அந்த நாட்டில் ஒரு லட்சம் முஸ்லிம்களின் எண்ணிக்கை கூடக்கூடிய அதே நேரத்தில், இந்தியாவில் ஒரு லட்சம் முஸ்லிம்கள் குறைந்து விடுவார்களா? இல்லையா?
இந்த ஒரு அடிப்படைகூட விளங்காமல், இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் தவறான காரணத்தைக் கூறியுள்ளனர்.
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு அளவுக்கதிகமான மக்கள் அலை அலையாய் இஸ்லாத்தில் இணைவதால்தான் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. அதன்மூலம்தான் உலகநாடுகளில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற உண்மையை ஊடகங்கள் மறைக்கப்பார்க்கின்றன.
இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு அதிக பிறப்பு விகிதம் காரணமா?
இஸ்லாமியர்களின் பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாலும் இந்த நிலை ஏற்படலாம் என்று காரணம் கூறியுள்ளனர். இதுவும் பொருந்தாத காரணமாகும்.
சிறுபான்மையாக உள்ள முஸ்லிம்களின் பிறப்பு விகிதத்தை விட பெரும்பான்மையாக உள்ள கிறித்தவர்களின் பிறப்பு விகிதம்தான் அதிகமாக இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு முஸ்லிம்கள் மட்டும் குழந்தைகளை அதிகமாக பெற்றுக்கொண்டு போகின்றார்கள் என்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.இதுவும் பொருந்தாத பொய்யான காரணமாகும்.
அளவுக்கதிகமான மக்கள் இஸ்லாத்தைத் தழுவி வருகின்றார்கள் என்று சொன்னால் அது அவர்களுக்கு பின்னடைவு என்பதால் இந்தப் பொருந்தாத காரணங்களைக் கூறி சப்பைகட்டு கட்டுகின்றனர் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
இப்படியெல்லாம் இஸ்லாத்தின் வளர்ச்சி குறித்து புள்ளி விபரங்கள் வந்தால் இஸ்லாமிய எதிரிகள் சும்மா இருப்பார்களா? அல்லது கதிகலங்கிப்போய் போராட்டத்தில் குதிப்பார்களா? அதனுடைய பிரதிபலிப்புதான் இந்தப் போராட்டங்கள்.
ஆனால், இவர்கள் இத்தகைய போராட்டங்களை நடத்தி இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து விடலாம் என்று பகல் கனவு காண்கின்றார்கள். அது நடக்குமா? அவர்களது இந்த அல்ப ஆசை நிறைவேறுமா? நிறைவேறவே நிறைவேறாது என்று நாம் அடித்துச் சொல்லலாம். ஏன் தெரியுமா?
இது படைத்த இறைவனின் மார்க்கம். இஸ்லாத்தை நமக்களித்த வல்ல நாயன் தனது திருமறையில் சொல்லிக்காட்டுகின்றான் :
இஸ்லாத்திற்கு அழைக்கப்படும் நிலையில் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட மிகப் பெரிய அநீதி இழைப்பவன் யார்? அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.
இணை கற்பிப்போர் வெறுத்த போதிலும் அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர் வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான்.
அல்குர்-ஆன் 61 : 7,8,9
இஸ்லாத்தினுடைய வளர்ச்சியைக் கண்டித்து இவர்கள் போராட்டம் நடத்துகின்றார்கள். ஆனால், இவர்கள் நடத்தக்கூடிய போராட்டங்கள் வாயிலாகக்கூட இந்த சத்திய மார்க்கத்தை நோக்கி அல்லாஹ் மக்களை திரும்பிப்பார்க்க வைப்பான் என்று அவர்களுக்குத் தெரியவில்லை போலும். அவர்கள் எவ்வளவுதான் முயற்சித்தாலும் தன்னுடைய ஒளியை அல்லாஹ் முழுமைப்படுத்தியே தீருவான் என்ற இறைவசனம் இத்தகைய நிகழ்வுகளின் வாயிலாக உண்மையாகி வருகின்றது.
அல்ஹம்துலில்லாஹ்..

தகவல் : டிஎன்டிஜெடாட்நெட்

இங்கிலாந்தில் எழுச்சி பெறும் இஸ்லாம்



இங்கிலாந்தில் எழுச்சி பெறும் இஸ்லாம்

2030-ல் இங்கிலாந்து நாடு ஒரு கிறித்துவ நாடாக இருக்காது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு குறித்து பிரபல டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

மதநம்பிக்கை அற்றவர்கள் கிறித்தவர்களை விட அப்போது அதிக எண்ணிக்கை யினராக ஆகிவிடுவார்கள் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டிலும் 5 லட்சம் நம்பிக்கையாளர்களை கிறித்துவ மதம் இழந்து வருகிறது. ஆண்டுக்கு 7,50,000 பேர் என்ற அளவுக்கு இறை நம்பிக்கை அற்றவர்களின் எண்ணிக்கைப் பெருகி வருகிறது என்று டெய்லி மெயில் பத்திரிக்கை தெரிவிக்கிறது.

கிறித்தவ மதத்தவரின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மற்ற மதத்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று (காமன்ஸ்) நூலக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

முஸ்லிம்களின் எண்ணிக்கை கடந்த ஆறு ஆண்டுகளில் 39 சதவிகிதம் உயர்ந்து 30 லட்சத்தை எட்டியுள்ளது.

சீக்கியர்களும், யூதர்களும் சிறிதளவு குறைந்துள்ளனர் என்றும் டெய்லி மெயில் தெரிவிக்கிறது.

கடந்த ஆறு ஆண்டுகளில் 7.6 சதவிகிதமாக கிறித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து 2010ல் 4. 11 கோடி கிறித்தவர்கள் மட்டுமே இருப்பதை நான் கண்டேன். அதே கால கட்டத்தில் இறை நம்பிக்கையற்றவர்கள் எண்ணிக்கை 49 சதவிகிதம் உயர்ந்து 1.34கோடி மக்கள் இருக்கின்றனர் என்று பிரிட்டன் டோரி கட்சியைச் சேர்ந்த முன்னாள் நீதித்துறை அமைச்சர் கேரி ஸ்டிரீட்டர் தெரிவித்த செய்தியையும் டெய்லி மெயில் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

இவ்வாறாக ஒரு பக்கம் கிறித்தவம் தேய்ந்து கொண்டு போக போக மறுபக்கம் இங்கிலாந்தில் இஸ்லாம் எழுச்சி பெற்று சென்று கொண்டே உள்ளதையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி வரும் கிறித்தவர்கள்:

பிரிட்டனில் லட்சக்கணக்கான மக்கள் (குறிப்பாக கிறித்தவர்கள்) இஸ்லாத்தை நோக்கி அலை, அலையாய் வந்துகொண்டு இருகின்றனர்.

இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன் என்ற தலைப்பில் “The Independent”

என்ற பிரிட்டன் பத்திரிக்கை ஓர் ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளது. (பார்க்க http://www.independent.co.uk/news/uk/home-news/the-islamification-of-britain-record-numbers-embrace-muslim-faith-2175178.html)

கிறித்துவ உலகத்தின் அடித்தளமான ஐரோப்பாவே இஸ்லாத்தை நோக்கி வேகமாக நகர்வதைப் பார்த்து கிறித்தவ உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஐரோப்பா கண்டத்தில் பிரான்ஸில் தான் முஸ்லிம்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது, ஆனால் தற்போது பிரான்ஸைக் காட்டிலும் இஸ்லாமிய வளர்ச்சி விகிதம் பிரிட்டனில்தான் அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வுத் தகவல் தெரிவிக்கின்றது.

2001-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டவர்களின் எண்ணிக்கை 14,000 முதல் 25,000வரை இருக்கலாம் என கணக்கெடுக்கப்பட்டது. ஆனால் தற்போதைய கணக்கெடுப்பில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் முஸ்லிம்களாக மாறியுள்ளார்கள் என “Faith Matters” என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆய்வாளர்கள், மசூதிகளில் சென்று எத்தனை முஸ்லிம்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள் என்று கணக்கெடுத்துள்ளனர். அதில் தலைநகர் லண்டனில் மட்டும் 1400 முஸ்லிம்கள் கடந்த ஓராண்டில் பள்ளிவாசல்களில் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர், (அமைப்புகள் மூலமாகவும், தனி நபர் மூலமாகவும் இஸ்லாத்தை ஏற்றவர்கள் தனி), இப்படி பிரிட்டன் முழுவதும் பள்ளிவாசல்களில் எடுத்த கணக்கெடுப்பின் படி 5200 நபர்கள் ஓர் ஆண்டில் இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர். (அல்ஹம்துலில்லாஹ்).

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் இஸ்லாத்தை ஏற்ற நபர்களில் எண்ணிக்கை ஆண்டு ஒன்றுக்கு 4000. எனவே “The Independent” நடத்திய இந்தப் புது ஆய்வின்படி ஐரோப்பா கண்டத்தில் பிரிட்டன் மக்கள்தான் இஸ்லாத்தை தழுவுவதில் முன்னனியில் உள்ளனர். இந்த ஆய்வை நடத்திய “Faith Matters” அமைப்பின் இயக்குனர் கூறுகையில் நாங்கள் இந்தத் தகவலை பள்ளிவாசலில் திரட்டினோம், இது முழுவதுமாக எடுக்கப்பட்ட எண்ணிக்கை அல்ல, முழுவதும் கணக்கெடுத்தால் இந்த எண்ணிக்கை பன்மடங்காக இருக்கும் எனத்தெரிவித்தார் .

ஏன் முஸ்லிம்களாக மாறினார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், இஸ்லாத்தைப் பற்றி ஊடகங்கள் தொடர்ந்து பொய்பிரச்சாரம் செய்து வருகின்றது. இந்த பொய்ப் பிரச்சாத்தை பார்ப்பவர்கள், படிப்பவர்கள் இஸ்லாத்தை அறிய ஆர்வமடைகின்றனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் : tntj.net

சீனாவில் துளிர்விடும் இஸ்லாம்


சீனாவில் துளிர்விடும் இஸ்லாம்

சீனாவில் இஸ்லாத்தை ஒடுக்க அந்த அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்து வந்த போதிலும் அல்லாஹ்வுடைய மகத்தான அருளால் பல்வேறு தடைகளைத் தாண்டி இஸ்லாம் அங்கு எழுச்சி பெற்று வருகின்றது.

சீன அரசாங்கம் முஸ்லிம்கள் நோன்பு பிடிப்பதற்குக்கூட பல கண்டிஷன்களைப் போட்டு அடக்குமுறை செய்து வரும் செய்திகளை சில வாரங்களாக ஊடகங்களில் கண்டு வருகின்றோம்.

முஸ்லிம்கள் உண்ணாமல் பருகாமல் இச்சைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது சீன அரசாங்கத்திற்கு எந்த விதத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு நோன்பு வைக்கக்கூட இவர்கள் தடைவிதித்த போதிலும் இஸ்லாம் அங்கும் எழுச்சி கண்டு வருகின்றது.

சீனாவிலுள்ள ஷான்க்காய் நகரத்தின் தென் மேற்குப் பகுதியான யீவு சிட்டி சீனர்கள் அதிகமாக இஸ்லாத்தைத் தழுவும் ஒரு பகுதியாக உள்ளது.

தற்போது அந்த நகரத்தில் 35,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வசிக்கின்றனர்,

2000 ஆண்டு வாக்கில் இங்கு 100 முஸ்லிம்கள் தொழுகைக்காக ஒரு ஹோட்டல் ரூமை வாடகைக்கு எடுத்து தொழுது வந்தனர். தற்போது அங்கு மிகப்பெரிய பள்ளிவாசல் எழுப்பப்பட்டுள்ளது.

அந்த பள்ளியின் இமாம் ஐசின் கியொரொ அவ்குஆன் கூறுகையில் வரும் காலங்களில் நிச்சயம் இஸ்லாம் இந்த பகுதியில் வேகமாக வளரும் (இன்ஷா அல்லாஹ்) என்று குறிப்பிட்டுள்ளார். இந்தச் செய்தி நேஷனல் ரிப்போர்ட்டர் என்ற பத்திரிக்கையில் வெளியிடப் பட்டுள்ளது.

நாத்திக நாடான சீனா 5 மதங்களை மட்டுமே அங்கீகரிக்கின்றது . புத்திஸம், இஸ்லாம், புரோட்டஸ்டன்ட், கத்தோலிக், தாவோஇஸம் ஆகிய 5 மதங்களையும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வழிபாடுகள் செய்ய அனுமதிக்கின்றது.

அதிகாரப்பூர்வமாக 22 மில்லியன் முஸ்லிம்கள் சீனாவில் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சீனாவில் வசிக்கும் முஸ்லிம்களின் கணக்குப்படி 65 முதல் 100 மில்லியன் வரை முஸ்லிம்கள் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். அதாவது சீனாவில் 7.5 % முஸ்லிம்கள் வசிப்பதாக அங்குள்ள முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.

தகவல் : tntj.net

பிரேசிலில் எழுச்சி பெறும் இஸ்லாம்


பிரேசிலில் எழுச்சி பெறும் இஸ்லாம்

இஸ்லாத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு பிரேசில் நாடும் விதிவிலக்கல்ல. பிரேசிலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை தற்போது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரேசிலின் ரியோடி ஜெனீரா நகரத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சி அதிகமாக உள்ளது என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட பிரேசில் சமூகம் இஸ்லாத்தின் பால் கவரப்படுவதற்கோ, இஸ்லாத்தின் சின்னங்களை அணிவதற்கோ எவ்வித தடைகளையும் விதிப்பதில்லை என இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட பிரேசிலில் உள்ள இளம் பெண் ஃபாத்திமா கூறுகிறார்.

2000-ஆம் ஆண்டு சூழ்நிலைப் புள்ளி விபரப்படி 27,239 முஸ்லிம்கள் பிரேசிலில் வசித்தார்கள். தற்பொழுது பிரேசிலில் இத்திஹாதுல் இஸ்லாமியாவின் புதிய ஆய்வின் படி முஸ்லிம் மக்கள் தொகை பதினைந்து லட்சமாக அதிகரித்துள்ளது.

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் ரியோடி ஜெனீராவில் 500 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களில்85 சதவீதமும் பிரேசிலை சார்ந்தவர்கள் ஆவர்.

ஃபலஸ்தீன், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளைச் சார்ந்த ஏராளமானோர் பிரேசிலில் வசிப்பதால் அவர்கள் மூலம் கூட அந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்கும் அன்றாட நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

இப்படி இஸ்லாம் உலகின் அனைத்துப் பகுதிகளையும் ஆட்கொண்டுள்ளது.

தகவல் : tntj.net
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்