Saturday, July 30, 2011

பஹ்ரைன் மண்டல நிர்வாக குழு கூட்டம் (27-07-2011)


இன்ஷாஅல்லாஹ் பஹ்ரைனில் வரும் ரமளானில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை குறித்து மண்டல நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இஷா தொழுகைகுப் பிறகு 27ஆம் தேதி நடைப்பெற்றது.

இதில், ரமளான் முழுவதும் இஃப்தார் ஏற்பாடுகள் பற்றியும்
அதைத் தொடர்ந்து சொற்பொழிவு நிகழ்ச்சி இஷா வரை நடத்துவது பற்றியும் முடிவு எடுக்கப்பட்டது.

மேலும், வார இறுதி நாட்களான வியாழன் இரவு 10.30 மணி முதல் ஸஹர் நேரம் முடிய உணவு வசதியுடன் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவது எனவும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி - 29-07-2011

 அல்லாஹ்வின் பேரருளால், பஹ்ரைன் மண்டல தலமையகத்தில் நடைபெறும் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தாயகத்திலிருந்து வருகை புரிந்திருக்கும் மாநில பேச்சாளரான, சகோ. முஹம்மது ஒலி அவர்கள்,"ரமளானை வரவேற்கிறோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அதில் அவர்கள், அல்லாஹ் தன் திருமறையின் 2ஆவது அத்தியாயமான அல் பகராவின் 183ஆவது வசனமான,

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல், உங்களுக்கும் குறிப்பிட்ட நாள்களில் நோன்பு கடைமையாக்கப்பட்டுள்ளது. 

மற்றும் 185ஆவது வசனமான, 

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.
என்ற வசனத்தை மேற்கொள்காட்டி தனது உரையை ஆரம்பம் செய்தார். இதில், 
நோன்பின் நோக்கம்,
நோன்பின் சிறப்பு
காலம் முழுவதும் நோற்றாலும் ஈடாகாது
நோன்பு நோற்க கடமைப்பட்டவர்கள்
நோன்பிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள்
சலுகை அளிக்கப்பட்டவர்கள்
நோன்பின் நேரம்
ஸஹர் உணவு
ஸஹருக்காக அறிவிப்பு செய்தல்
மறதியாக உண்பதும், பருகுவதும்
வேண்டுமென்றே நோன்பை முறிப்பவர்
குளிப்பு கடைமையானவர் நோன்பு நோற்பது
இரத்தம் குத்தி எடுத்தல்
நோன்பு துறத்தல்
ஆகியவற்றிற்கு விளக்கமளித்து, உரையை நிறைவு செய்தார்.

அதனை தொடர்ந்து, நோன்பு சம்பந்தமான கேள்வி பதில் நடைபெற்று, நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.



இதில் நமது தவ்ஹீத் தவ்ஹீத் சகோதர சகோதரிகள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!





Thursday, July 28, 2011

ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகள்


Tuesday, July 26, 2011

ரமளானின் சிறப்புகள் மற்றும் நோன்பின் சட்டங்கள்

ரமளானின் சிறப்புகள்



நோன்பின் சட்டங்கள் - 1



நோன்பின் சட்டங்கள் - 2



நோன்பின் சட்டங்கள் - 3



நோன்பின் சட்டங்கள் - 4



Monday, July 25, 2011

அவ்லியாக்களின் சிறப்புகளும், தரீக்காக்களும்.

அவ்லியாக்களின் சிறப்புகளும், தரீக்காக்களும். 
பி. ஜைனுல் ஆபிதீன்.
 
(இந்தக் கட்டுரை, சகோதரர் பி.ஜே. அவர்கள் இருபது வருடங்களுக்கு முன்பு தாம் ஆசிரியராக இருந்த ஒரு மாத இதழில் எழுதிய கட்டுரையாகும்.)
புராணங்களில் வரும் நிர்வாணச் சாமியார்கள், ஆபாசக் கடவுளர்களின் அட்டகாசங்களை மிஞ்சும் வகையில் அவ்லியாக்கள் என்று சுன்னத் ஜமாஅத்தினரால் கூறப்படுவோரின் அட்டகாசங்கள் அமைந்திருக்கின்றன. அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என்பார்கள். புத்தி பேதலித்தவர்களின் கடைசிப் புகலிடம் தரீக்கா என்ற போலி ஆன்மீகம் என்று கூறலாம். தரங்கெட்டவர்கள், தறுதலைகளின் கடைசித் தலம் தரீக்கா என்பதை இந்தக் குப்பையைப் படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.)
ஒரே இறைவனை மட்டும் வணங்க வேண்டும்; அவனது இறுதித் தூதர் அவர்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கை. இந்த இரண்டையும் அழுத்தமாகவும், உறுதியாகவும் நம்புவதுடன் மக்களுக்கும் இதை நாம் போதிக்கிறோம்.
அவ்லியாக்கள், மகான்கள், நாதாக்கள், பெரியார்கள், தரீக்காவின் ஷைகுமார்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு அவர்களை வணக்கத்திற்குரியவர்களாக ஆக்கக் கூடாது; அல்லாஹ்வின் ஆற்றலை அவர்களுக்கு வழங்கக் கூடாது என்றும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மதிப்பது போன்று இவர்களை மதிக்கக் கூடாது என்றும் கூறுகிறோம். அந்தப் பெரியார்களை மதிக்கிறோம் என்ற பெயரால் அவர்களை இழிவுபடுத்தக் கூடாது என்கிறோம்.
இவ்வாறு நாம் கூறுவதால், நாம் அவ்லியாக்களையே அவமதித்து விட்டதாக அலறுகின்றது சமாதிகளை வைத்துப் பிழைப்பு நடத்தும் கூட்டம். நம்மை சமூகப் பகிஷ்காரம் செய்யும்படி மக்களைத் தூண்டி விடுகின்றது ஷைகுகளின் காலடியில் சுவர்க்கத்தைத் தேடிக் கொண்டிருக்கும் கூட்டம். அவர்களைப் போலவே நாமும் அவ்லியாக்களைப் பற்றி அறிமுகம் செய்ய வேண்டும், அவ்லியாக்களின் சிறப்பை நாமும் பறைசாற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றது.
இவர்களின் ஆசையை நிறைவேற்றுவது என்று நாம் முடிவு செய்து விட்டோம். அவர்கள் அவ்லியாக்களைப் பற்றி அரபுக் கிதாபுகளில் அறிமுகம் செய்து வைத்திருப்பதை பாமர மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதால் அதைத் தமிழில் தருவது என்று தீர்மானித்து விட்டோம். இதற்காக அவர்கள் நமக்கு நன்றி தெரிவிப்பார்கள் என்று நம்புகிறோம்.
நிர்வாணச் சாமியார்.
அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி என்பவர் சுன்னத் வல் ஜமாஅத்தின் பெரிய இமாம். அவ்லியாக்களை மதிப்பதில் இவர் முதல் இடத்தில் இருப்பதாக சுன்னத் வல்ஜமாஅத்தினர் பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு. ஃபத்வாக்கள் வழங்கும் போது இவரது கூற்றையும் மேற்கோள் காட்டுவதுண்டு. ஆன்மீகத்துக்கு அளப்பரிய சேவை செய்தவர் எனவும் இவரை சுன்னத் ஜமாஅத்தினர் புகழ்ந்து கூறுவதுண்டு. இரகசிய ஞானம், ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்ற சித்தாந்தங்களுக்குப் புத்துயிரூட்டியவர் இவர். ஷைகு, முரீது வியாபாரத்திற்கு அதிக அளவு விளம்பரம் செய்தவர்.
அவ்லியாக்கள், ஷைகுமார்கள் ஆகியோரின் வரலாறுகளைக் கூறுவதற்காகவே பல வால்யூம்களில் இவர் தபகாத் என்ற பெரும் நூல் எழுதியுள்ளார். மத்ஹபுவாதிகளாலும், (அஞ்)ஞானப் பாட்டையில் நடப்பவர்களாலும் ஒருசேர மதிக்கப்படுபவர் இவர்.
இவர் எழுதிய தபகாத் நூல், அவ்லியா பக்தர்களுக்கும் முரீதீன்களுக்கும் வேதம். இவரது இந்த அரிய பொக்கிஷம் பெரிய பெரிய அரபிக் கல்லூரிகளில் நூலகங்களை இன்றளவும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது.
அரபு தெரிந்தவர்கள் மட்டுமே படித்து ரசித்து வந்த இந்தப் பொக்கிஷத்தை அரபு தெரியாதவர்களும் ரசிக்க வேண்டாமா? என்ற நல்லெண்ணத்தில் சில பகுதிகளை மட்டும் தமிழில் தருகிறோம். படித்து விட்டு அவ்லியாக்களை மதியுங்கள். நமது சொந்தக் கருத்தாக எதையும் இங்கே நாம் கூறவில்லை. அந்த நூலில் இடம் பெற்றுள்ள அரபி வாசகங்களில் நேரடித் தமிழாக்கம் மட்டுமே கூறப்பட்டுள்ளது. குறிப்பு என்று போடப்பட்ட விஷயங்கள் மட்டும் நமது விமர்சனம்.
அஷ்ஷைகு இப்ராஹீம்.
அந்த இறை நேசச் செல்வர்களில் ஒருவர் தான் அஷ்ஷைகு இப்ராஹீம் (ரலி) அவர்கள். அவர்கள் மிம்பரில் ஏறி நின்று நிர்வாணமாக குத்பா (சொற்பொழிவு) நிகழ்த்துவார்கள்.
(நூல்: தபகாத், பாகம்: 2. பக்கம்: 157)
(குறிப்பு: அவ்லியாக்களின் புகழ் பாடும் ஷேக் அப்துல்லாஹ் போன்றவர்கள் இந்த மகானின்(?) வழியில் ஜும்ஆ மேடைகளில், இந்த அவ்லியாவைப் பின்பற்றி நிர்வாணமாக தனது பக்தர்களுக்கு தரிசனம் தருவார் என்று எதிர்பார்ப்போமாக!)
இந்தப் பெரியார், பெரியவர்கள் முன்னிலையில் வைத்துக் காற்றை வெளிப்படுத்துவார். (வேறு நபரைக் காட்டி) இது இந்த நபர் வெளிப்படுத்திய காற்று என்று சத்தியம் செய்து கூறுவார். சம்பந்தப்பட்ட அந்த மனிதரோ வெட்கமடைவார்.
(நூல்: தபகாத், பாகம்: 2. பக்கம்: 157)
(குறிப்பு: இவ்வளவு கீழ்த்தரமாக நடந்தவர் தான் இறைநேசச் செல்வர்களில் ஒருவராம். இங்குள்ள நிர்வாணச் சாமியார்களுக்குக் கூட இவர் தான் முன்மாதிரியாக இருக்கக் கூடும். இந்த நிர்வாணச் சாமியாருக்கு ஏற்பட்ட அற்புதத்தைக் கேளுங்கள்.)
இந்தப் பெரியாரிடம் எனது தலைவர் முஹம்மது இப்னு ஷுஐப் சென்ற போது அவர் அந்தரத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு ஏழு கண்கள் இருந்தன.
இந்தப் பெரியாரைப் பற்றி அபூ அலீ என்பார் குறிப்பிடும் போது, அவரிடம் நீ சென்றால் வெட்டுக்கிளியாக அவரைக் காண்பாய். மறுபடியும் சென்றால் வனவிலங்காக அவரைக் காண்பாய். மீண்டும் அவரிடம் சென்றால் யானையாக அவரைக் காண்பாய். இந்தப் பெரியார் மண்ணை அள்ளி மக்களுக்கு வழங்கும் போது தங்கமாக, வெள்ளியாக அவை மாறும்.
(குறிப்பு: இவை சிறுவர் மலரில் இடம் பெறும் ஜோவின் சாகசம் அல்ல. பல அவதாரங்கள் பற்றிக் கூறும் புராணக் கதைகளும் அல்ல. அவ்லியாக்களை மகிமைப்படுத்தும் தபகாத் நூலில் பாகம்: 2, பக்கம் 80, 81ல் காணப்படும் விஷயங்கள் தான் இவை. பொட்டல் புதூரில் யானை அவ்லியா இருப்பதைப் போன்று இனி வெட்டுக்கிளி அவ்லியா, காண்டாமிருக அவ்லியா என்று தர்ஹாக்கள் தோன்றினாலும் ஆச்சரியமில்லை.)
அபூ கவ்தா.
அந்த இறை நேசச் செல்வர்களில் அபூகவ்தா எனும் அலீ அவர்களும் ஒருவராவார். இந்தப் பெரியார் ஒரு பெண்ணையோ, பருவமடையாச் சிறுவனையோ கண்டால்................................... அவர்களின் பின்பாகத்தில் தட்டிக் கொடுப்பார். மன்னனின் பிள்ளைகளானாலும், மந்திரியின் பிள்ளைகளானாலும் சரியே! பெற்றவர்கள், மற்றவர்கள் முன்னிலையிலானாலும் சரியே! மக்களை அவர் கவனிக்க மாட்டார்.
(தபகாத், பாகம்: 2, பக்கம்: 149)
குறிப்பு: கோடிட்ட இடத்தைப் பூர்த்தி செய்து கொள்க! அதை மொழியாக்கமும் செய்யவில்லை. அவ்லியாக்களை மதிக்கும் இலட்சணமும் அவ்லியாக்களின் இலக்கணமும் இது தானா?
சில்மிஷ வேலையைச் சாதாரண ஆள் செய்தால் அவனுக்குப் பெயர் காமுகன். பெரிய மனிதர் செய்தால் அவனுக்குப் பெயர் அவ்லியா? இறை நேசச் செல்வன்? இந்த அவ்லியா பக்தர்கள், ஷைகுமார்களிடம் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்று இது போன்று செய்வதற்கு அனுமதிப்பார்களா?
ஸய்யித் அஹ்மத் அல்பதவீ.
எனது ஷைகு அவர்கள், ஸய்யித் அஹ்மத் அல்பதவீ அவர்களின் அடக்கத்தலத்தில் ஒரு உடன்படிக்கை எடுத்தார். என்னை அஹ்மத் பதவியிடம் ஒப்படைத்தார். அப்போது கப்ரிலிருந்து சிறப்பான கை வெளிப்பட்டது. என் கையைப் பற்றிக் கொண்டது. அப்போது என் ஷைகு ஷனாவீ அவர்கள், கப்ரை நோக்கி, உங்கள் கவனம் இவர் மீது இருக்கட்டும்! உங்கள் கண்காணிப்பில் இவரை வைத்துக் கொள்க! என்று (எனக்காக) வேண்டினார். அப்போது சமாதியிலிருந்து, சரி என்று அவர் கூறியதை நான் கேட்டேன்.
நான் என் மனைவியிடம் சென்ற போது அவள் கன்னியாக இருந்தாள். ஐந்து மாதங்கள் அவளை நெருங்காமல் இருந்தேன். அப்போது ஸய்யித் அஹ்மத் பதவீ அவர்கள் (கப்ரிலிருந்து எழுந்து) வந்து என் மனைவியுடன் என்னைக் கையைப் பிடித்துக் கூட்டிச் சென்று தமது அடக்கத்தலத்தின் மேல் விரிப்பை விரித்தார். எனக்காக இனிப்புப் பதார்த்தங்கள் தயார் செய்தார். அதை உண்பதற்காக உயிருடன் உள்ளவர்களையும் இறந்தவர்களையும் அழைத்தார். இங்கே இவளது கன்னித்தன்மையை நீக்கு என்று கூறினார். அன்று தான் முதலிரவானது.
(தபகாத், பதவீயின் வரலாறு)
குறிப்பு: கப்ரிலிருந்து வந்து ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு செய்து கொடுப்பதெல்லாம் சாத்தியமா? என்பது ஒருபுறமிருக்கட்டும். அனைவர் முன்னிலையிலும் முதலிரவு நடத்தச் சொல்வது தான் அவ்லியாக்களின் வேலையா? இப்படி நடந்தவர் அவ்லியாவாக இருக்க முடியுமா? என்பதே கேள்வி!
இந்த அவ்லியா பக்தர்கள், கன்னி கழியாவிட்டால் இனி கப்ரஸ்தான் பக்கம் போக வேண்டியது தான். அவனவன் ஊட்டி, கொடைக்கானலில் தேனிலவு கொண்டாடுவான் என்றால் இந்தப் பரேலவிகளுக்கு கப்ருஸ்தானில் தான் தேனிலவு!
ஸய்யித் அல் அஜமீ.
இந்தப் பெரியாரின் பார்வை ஒரு நாயின் மீது பட்டது. உடனே எல்லா நாய்களும் அந்த நாய்க்கு அடிபணிந்தன. மக்கள் எல்லாம் தங்கள் தேவைகளை நிறைவேற்ற இந்த நாயிடம் விரைந்து வரலாயினர். அந்த நாய் நோயுற்ற போது அதனைச் சுற்றி எல்லா நாய்களும் அழுதன. அது இறந்ததும் மக்கள் அழுதனர். நாய்கள் ஊளையிட்டன. சிலரது உள்ளத்தில் அதை அடக்கம் செய்யுமாறு இறைவன் உதிப்பை ஏற்படுத்தினான். அவ்வாறு அடக்கம் செய்தார்கள். நாய்கள் யாவும் அந்த நாயின் கப்ரை ஸியாரத் செய்யலாயின. அந்த நாய்கள் மரணிக்கும் வரை இது நடந்தது. இந்தப் பெரியாரின் பார்வை இந்த நாயின் மேல் பட்டதால் இவ்வளவு மகிமை என்றால் அவரது பார்வை மனிதன் மேல் பட்டால்...?
(தபகாத், பாகம்: 2, பக்கம்: 62)
குறிப்பு: யானைக்கும், கழுதைக்கும் கப்ரு கட்டியுள்ளவர்களே! உங்கள் செயலுக்கும் இந்த அவ்லியாவின் வாழ்வில் ஆதாரம் இருக்கிறது.
நாய்களை யாரும் இனி அடிக்கக் கூடாது; நாய்களுக்கும் இனி மேல் தர்ஹாக்கள் கட்ட வேண்டும் என்று சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது என்று ஷேக் அப்துல்லாஹ் நடத்தும் மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றப்படலாம்.
இந்தப் பெரியார் கல்வத்திலிருந்து வெளியே வந்தால் யார் மீது இவரது பார்வை படுகின்றதோ அவரது கண்கள் சொக்கத் தங்கமாக மாறி விடும்.
(தபகாத், பாகம்: 2, பக்கம்: 61)
குறிப்பு: கண்கள் தங்கமாக மாறி விட்டால் எப்படிப் பார்க்க முடியும்? என்றெல்லாம் கேள்வி கேட்காதீர்கள். சுன்னத் ஜமாஅத் என்றால் இதை நம்பித் தான் ஆக வேண்டும்.
அப்துல்லாஹ் இப்னு அபீ ஹம்ஸா.
நான் நபி (ஸல்) அவர்களை விழிப்பிலேயே நேரில் சந்திக்கிறேன் என்று இவர் சொன்னார். வீட்டிலேயே முடங்கிக் கொண்டார். அவர் மரணிக்கும் வரை ஜும்ஆவைத் தவிர வேறு எதற்கும் வெளி வருவதில்லை.
(தபகாத், பாகம்: 1, பக்கம்: 15)
குறிப்பு: சாகும் வரை ஜும்ஆவைத் தவிர வேறு எதற்கும் இவர் வெளியே வர மாட்டாராம். ஐவேளை ஜமாஅத் தொழுகைக்குக் கூட வராதவன் எல்லாம் அவ்லியாவாம்.
நபி (ஸல்) அவர்களைக் கனவிலும், நனவிலும் கண்டு களிக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வானாக என்று சில சு.ஜ. ஆலிம்கள் தங்கள் சொற்பொழிவுகளில் கூறுகின்றனர். நபி (ஸல்) அவர்களை விழிப்பில் ஒரு போதும் இந்த உலகத்தில் சந்திக்க முடியாது என்று தெரிந்தும் இவர்கள் இப்படிப் பிரார்த்திக்கிறார்கள் என்றால் இந்தப் பலான அவ்லியாக்களைப் பின்பற்றித் தான்.
ஷஃபான் அல் மஜ்தூப்.
இப்பெரியார் ஜும்ஆ நாட்களிலும் மற்ற நாட்களிலும் பள்ளியில் இருந்து கொண்டு குர்ஆனில் இல்லாத புதிய அத்தியாயங்களை ஓதுவார். அதை எவரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். பாமரன் அதுவும் குர்ஆன் தான் என்று எண்ணிக் கொள்வான். ஏனெனில் அவர் ஓதுவது குர்ஆன் போலவே இருக்கும்.
(தபகாத், பாகம்: 2, பக்கம்: 187)
மார்க்க அறிஞர்கள் வீடுகளுக்குச் சென்று குர்ஆன் ஓதுவது போல் இந்தப் பெரியார் ஒரு வீட்டு வாசலில் அமர்ந்து ஓதினார். அவர் என்ன ஓதுகிறார் என்று செவிமடுத்தேன். வமாஅன்தும் ஃபீதஸ்தீகி ஹுதின் பிஸாதிகீன். வலகத் அர்ஸலல்லாஹுலனா கவ்மன். பில் முஃதபிகாதி யள்ரிபூனனா வயஃகுதூன அம்வாலனா மின் நாஸிரீன் என்று ஓதினார். (இது குர்ஆனில் இல்லாததாகும்.) இப்படி ஓதி விட்டு, இறைவா, கண்ணியமிக்க வேதத்திலிருந்து ஓதிய நன்மையை... என்று துஆச் செய்தார்.
(தபகாத், பாகம்: 2, பக்கம்: 187)
குறிப்பு: எள்ளளவு இறையச்சம் உள்ள எவரும் குர்ஆனுடன் எதையும் கலக்கத் துணிய மாட்டார். ஆனால் இந்த ஆளுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் என்று பாருங்கள்! இவருக்கும் பெயர் இறைநேசராம்!

இந்தப் பெரியார் முன்பகுதி, பின்பகுதியை மறைக்கும் விதமாகக் கோவணமே கட்டியிருப்பார்.
(தபகாத், பாகம்: 2, பக்கம்: 187)
குறிப்பு: ஆறேழு மீட்டர்களில் ஆள் மூழ்கிப் போகும் அளவுக்குத் துணியில் ஜிப்பாவும், குஞ்சான் வைத்த துருக்கி தொப்பியும் அணிய வேண்டிய அவசியம் இந்தப் பரேலவிகளுக்கு இல்லை. ஒட்டுக் கோவணத்தைக் கட்டிக் கொண்டு காசை மிச்சப்படுத்தலாம்.
இவை அவ்லியாக்களின் இலட்சணங்களில் சில பகுதிகளாகும். சுன்னத் வல்ஜமாஅத்தின் மிகப் பெரும் இமாமாக மதிக்கப்படும் அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி அவர்களின் நூலில் காணப்படும் இந்த விஷயங்களைக் கவனிக்கும் போது, கடந்த காலங்களில் யாரெல்லாம் அவ்லியாக்களாக மதிக்கப்பட்டார்கள் என்பது விளங்க வரும்.
இந்த சுன்னத் ஜமாஅத்தினர், இந்த உயர்ந்த (?) பண்புடையவர்களை இன்றளவும் அவ்லியாக்கள் என்று நம்புகின்றனர். மவ்லிதுக் கிதாபுகளில் வரும் துஆக்களில் இவர்களின் பெயர்களும் பெருமையுடன் குறிப்பிடப்படுகின்றன. இவர்கள் பொருட்டால் கேட்கப்படும் துஆக்களும் உள்ளன.
நியாய உணர்வும், சிந்திக்கும் திறனும், இஸ்லாத்தின் அடிப்படை பற்றி ஓரளவு அறிவும் இருக்கும் முஸ்லிம்களே! இந்தத் தன்மைகள் அவ்லியாக்களுடையது என்பதை நம்ப முடிகின்றதா? சிந்தியுங்கள். இப்படித் தான் நம்மை ஏமாற்றியுள்ளனர் இந்த முல்லாக்கள் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.

Friday, July 22, 2011

மருத்துவ உதவி

நமது மண்டலத்தில் உள்ள ஒரு தவ்ஹீத் சகோதரிக்கு கேன்ஸர் ஆபரேஷன் செய்வதற்காக பஹ்ரைன் தினார் 200 (இருநூறு மட்டும்) சகோதரியின் மருத்துவ செலவுக்காக, பஹ்ரைனிலிருந்து உதவி செய்யப்பட்டது.

சகோதரியின் ஆபரேஷன் நல்ல படியாக முடிய ஜமாஅத் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

மருத்துவ உதவி செய்ய விருப்புவோர், தொடர்புக்கு - 39943027

வாரந்திர பயான் - 22-07-2011


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் நடக்கும் வாராந்திர நிகழ்ச்சி இன்று கூடியது.

இன்றைய நிகழ்ச்சியில் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் "கியாமத் நாள்" என்ற தலப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் ஆரம்பமாக, அல்லாஹ் தன் திருமறையின் கூறியுள்ள பல்வேறு வசனங்களை மேற்கொள்காட்டினார். அவை,

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அந்த நேரத்தின் திடுக்கும் கடுமையான விஷயமாகும். (அல் குர் ஆன் 22 - 01)


நீங்கள் அதைக் காணும் நாளில் பாலுட்டும் ஒவ்வொருத்தியும், தான் பாலூட்டியதை மறந்து விடுவாள். ஒவ்வோரு கர்ப்பிணியும், தன் கருவில் சுமந்ததை ஈன்று விடுவாள். போதை வயப்பட்டோராக மனிதர்களைக் காண்பீர்! அவர்கள் போதை வயப்பட்டோர் அல்லர். மாறாக அல்லாஹ்வின் வேதனை கடுமையானது. (அல் குர் ஆன் 22 - 02)

ஆண்டுகளின் எண்ணிக்கையில் எவ்வளவு காலம் பூமியில் வாழ்ந்தீர்கள்? என்று கேட்பான். (அல் குர் ஆன் 23 - 112)


ஒருநாள் அல்லது ஒரு நாளில் சிறிது நேரம் வாழ்ந்தோம். கணக்கிடுவோரிடம் விசாரிப்பாயாக! என்று கூறுவார்கள். (அல் குர் ஆன் 23 - 113)

குறைவாகவே வாழ்ந்தீர்கள். இதை அறிந்தவர்களாக நீங்கள் இருந்திருக்கக் கூடாதா? என்று அவன் கூறுவான். (அல் குர் ஆன் 23 - 114)

உங்களை வீணாகப் படைத்துள்ளோம் என்றும் நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்படமாட்டீர்கள் என்றும் நினைத்து விட்டீர்களா? (அல் குர்ஆன் 23 - 115)

இன்னும் அல்லாஹ் தன் திருமறையில் கூறியிருக்கின்ற பல வசனங்களை கூறி உரையை முடித்தார்கள்.

இதில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

வாரந்திர பயான் - 22-07-2011

அல்லாஹ்வின் பேரருளால், ஹித் கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில நமது பஹ்ரைன் மண்டல தாவா பொருப்பாளர் சகோ. ஹாஜா அவர்கள், "நோன்பின் மாண்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அதில் அவர்கள், அல்லாஹ் தன் திருமறையின் 2ஆவது அத்தியாயமான அல் பகராவின் 183ஆவது வசனமான,

ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.

மற்றும் 185ஆவது வசனமான, 

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.

என்ற வசனத்தை மேற்கொள்காட்டி தனது உரையை ஆரம்பம் செய்தார்.

இதில்,

நோன்பின் நோக்கம்,
நோன்பின் சிறப்பு
காலம் முழுவதும் நோற்றாலும் ஈடாகாது
நோன்பு நோற்க கடமைப்பட்டவர்கள்
நோன்பிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்

சலுகை அளிக்கப்பட்டவர்கள்
நோன்பின் நேரம்
ஸஹர் உணவு
ஸஹருக்காக அறிவிப்பு செய்தல்
மறதியாக உண்பது, பருகுவதும்
வேண்டுமென்றே நோன்பை முறிப்பவர்
குளிப்பு கடைமையானவர் நோன்பு நோற்பது
இரத்தம் குத்து எடுத்தல்
நோன்பு துறத்தல்

ஆகியவற்றிற்கு விளக்கமளித்து, உரையை நிரைவு செய்தார்.

இதில் நமது ஹித் கிளையின் தவ்ஹீத் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

அருள்மிகு ரமளானும் அறியாமை அகற்றும் விளக்கங்களும்


எல்லாம் வல்ல அல்லாஹ் ரமளான் மாதத்தில் திருக்குர்ஆனை இறக்கியருளினான். இதைப் பற்றி அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான். 

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன்2:185) 

ரமளான் மாதம் முழுவதும் நோன்பு கடமையாக்கப்பட்டது ஏன்? என்ற ஒரு கேள்வியை எழுப்பினால் அம்மாதத்தில் புனிதமிகு குர்ஆன் அருளப்பட்டதால் தான் என்ற அழகிய பதிலை மேற்கண்ட இறைவசனம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. 

களங்கப்படும் இந்த கண்ணிய மாதம்
அல்குர்ஆன் அருளப்பட்ட இந்த அற்புத மாதத்தை நோன்பு நோற்று கவுரப்படுத்துங்கள் என்று கூறுகின்றான் அறிவுமறை வழங்கிய அல்லாஹ்! ஆனால் இந்த மாதத்தை கவுரவப்படுத்த வேண்டிய முஸ்லிம் சமுதாயம் களங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றது. 

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊர்களில் கூட பட்டப்பகலில் ஹோட்டல்களில் முஸ்லிம்கள் பகிரங்கமாக டீ குடித்தல், உணவருந்துதல் போன்ற செயல்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன. வீதிகளில் சென்றால் வீடுகள் தோறும் சினிமா பாடல்கள், டி.வி., வீடியோ காட்சிகள் என்றும் போல் இன்றும் நிரம்பி வழியும் தியேட்டர்கள், மேக மூட்டத்தைப் போன்று பீடி சிகரெட் புகைப் படலங்கள்! 

ஆயிரம் ரமளான் வரட்டும், நான் வீட்டை விட்டு அசைய மாட்டேன் என்று ஐங்காலத் தொழுகைக்காக பள்ளிக்கு வராமல் பாவத்தைத் தொடர்கதையாக்கும் ஆண் ஜென்மங்கள்! வீட்டிலிருந்து கொண்டே இந்த ரமளான் மாதத்திலும் தொழுகையைத் தொடராத நமது தாய்க்குலங்கள்! 

நாம் பட்டினி கிடந்து நோன்பு நோற்றால் போதும், படைத்தவனைத் தொழ வேண்டியதில்லை என்று அல்லாஹ்வின் ஒரு கட்டளையை ஏற்று மறு கட்டளையைப் புறம் தள்ளும் கூட்டம் ஒரு புறம்! பொருளாதாரம் வழங்கப்பட்டும் புனித மிகு ரமளானில் கூட பூட்டிய பெட்டிகளிலிருந்து ஏழைகளுக்கு வழங்கத் துணியாத கஞ்சர்கள் மறு புறம்! ரமளான் வந்தும் சாராயம், பழரசம், டாஸ்மாக் சரக்குகளை அடிக்கும் சாட்ஜாத்கள் இன்னொருபுறம்! 

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் ஆயிரம் அவலங்களை! இந்த அவலங்கள் எதைக் காட்டுகின்றன? அல்குர்ஆன் எனும் வேதம் இறங்கிய இந்தப் புனித மாதத்திற்கும் மற்ற மாதத்திற்கும் முஸ்லிம்களிடம் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. 

எப்படி முஸ்லிம்கள் அல்லாத மக்கள் வாழும் பகுதியில் ரமளானுக்கு எந்த மதிப்பும் இருக்காதோ அதுபோலவே முஸ்லிம்கள் மிகைத்து வாழும் பகுதிகளும் காட்சியளிக்கின்றன. வேதம் இறங்கிய இந்த ரமளான் மாதத்திற்கு நாம் அளிக்கக்கூடிய கண்ணியத்தைப் பார்த்து மாற்று மதத்தினரும் நோன்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் நம்முடைய நடவடிக்கைகள் அமைய வேண்டும். 

இறைத்தூதரின் எச்சரிக்கை
நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் ஏறி, ஆமீன், ஆமீன், ஆமீன்'' என்று கூறினார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மிம்பரில் ஏறும் போது, ஆமீன், ஆமீன், ஆமீன் என்று கூறினீர்களே!'' என்று கேட்கப்பட்டது. 

அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து, எவர் ரமலான் மாதத்தை அடைந்து அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படாமல் நரகம் புகுவாரோ அவரை அல்லாஹ் (தன் அருளி-ருந்து) தூரமாக்கட்டும்'' என்று கூறி, ஆமீன் என்று சொல்லுங்கள்'' என்றார்கள். நான் ஆமீன் என்றேன். எவருக்குப் பெற்றோர் இருவருமோ அல்லது ஒருவரோ இருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்யாமல் இறந்து நரகம் செல்வாரோ அவரை அல்லாஹ் (தன் அருளி-ருந்து) தூரமாக்கட்டும்'' என்று கூறி, ஆமீன் என்று சொல்லுங்கள்'' என்றார்கள். நான் ஆமீன் என்றேன். எவரிடம் உங்களைப் பற்றி கூறப்பட்டு, உங்கள் மீது ஸலவாத் கூறவில்லையோ அவரை அல்லாஹ் (தன் அருளி-ருந்து) தூரமாக்கட்டும்'' என்று கூறி, ஆமீன் என்று சொல்லுங்கள்'' என்றார்கள். நான் ஆமீன் என்றேன். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-), நூற்கள் : இப்னு ஹிப்பான், மவாரிதுல்லம்ஆன், முஸ்னத் அபீயஃலா, முஸ்னத் பஸ்ஸார், தப்ரானீ கபீர் 

இந்த ஹதீஸ் தரும் எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு நம்மை நாமே இந்த ரமளான் மாதத்தில் திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் அல்லாஹ்வின் சாபத்தை எதிர் கொள்ள வேண்டும். 

இனி ரமளான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் வழியில் நோன்பு நோற்பது பற்றியும் நடைமுறையில் உள்ள பித்அத்துக்களையும் பார்ப்போம். 

நிய்யத் ஒரு விளக்கம்
இன்று எல்லா வணக்கங்களிலும் இனம் காண முடியாத அளவுக்கு பித்அத்துக்கள் நுழைந்து விட்டதைப் போன்று இந்த நோன்பு எனும் வணக்கத்திலும் நுழைந்து விட்டன. இதற்கு எடுத்துக்காட்டு தான் நிய்யத். ரமளான் மாதம் வந்து விட்டால் பள்ளிவாசல் தோறும் வழங்கப்படும் நோன்பு நேர அட்டைகளிலும், பள்ளிவாசல் போர்டுகளிலும் நோன்பு வைக்கும் நிய்யத் என்று தலைப்பிட்டு ஒரு வாசகம் எழுதப்பட்டிருக்கும். 

நவைத்து ஸவ்மகதின் அன்அதாயி ஃபர்ழி ரமளான ஹாதிஸிஸ்ஸனதி லில்லாஹித் தஆலா என்று வாயால் சொல்லி வைக்கப்படும் இந்த நிய்யத்தின் பொருளைப் பார்த்தால் கேலிக்கூத்தாக அமைந்திருக்கும்.

இந்த வருடத்தின் ரமளான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை அதாவாக நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன் அல்லாஹ்வுக்காக''

இதுதான் மேற்படி நிய்யத்தின் பொருள். 

இந்த வருடத்து ரமளான் மாதத்தில் தான் நாம் பிறை பார்த்து முடிவு செய்கின்றோம். ரமளான் மாதத்தில் ஃபர்ளான நோன்பைத் தான் பிடிக்க முடியும். ரமளான் மாதத்தில் நஃபிலான நோன்புகளையா நோற்க முடியும்? அதாவாக'' என்று கூறுகின்றார்கள். ஒரு கடமையை அதற்குரிய நேரத்தில் செய்வதற்கு அதா என்று பெயர். காலம் தவறி செய்வதற்கு களா என்று பெயர். ரமளான் மாதத்தில் நோற்கப்படும் நோன்பு அதாவாகத் தானே ஆகும்? இதை வாயால் சொல்லவும் வேண்டுமா? 

நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன் அல்லாஹ்வுக்காக'' என்கின்றனர். பிறைக் கணக்குப்படி எப்போது பிறையைப் பார்க்கின்றோமோ அப்போதே அந்த நாள் ஆரம்பமாகி விடுகின்றது. இப்படியிருக்க நாளை பிடிக்க என்று கூறுவது எப்படிப் பொருத்தமாகும்? 

நிய்யத் என்றால் எண்ணுதல், தீர்மானித்தல் என்று பொருள். இது உள்ளம் சம்பந்தப்பட்ட விஷயம். உடல் சம்பந்தப்பட்டது அல்ல. இத்தகைய நிய்யத்தை செய்கிறேன்' என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. 

உளூ, தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களில் நிய்யத் என்ற பெயரில் வாயால் கூறப்படுவது மார்க்கத்தில் புதிதாக நுழைக்கப்பட்ட பித்அத் ஆகும். 

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 3243 

இந்த ஹதீஸைக் கருத்தில் கொண்டு நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தராத, நிய்யத் என்ற பெயரில் மேற்கண்ட வாசகங்களைக் கூறுவது தவிர்க்கப்பட வேண்டும். அதே சமயம் சுப்ஹ் நேரத்திற்கு முன்பே நோன்பு நோற்பதாக தீர்மானிப்பது அவசியம். 

ஸஹர் நேரம்
நிய்யத் என்ற பெயரில் சில வாசகங்களைக் கூறுவதோடு நிற்காமல், நிய்யத் செய்து விட்டால் எதையும் சாப்பிடக் கூடாது என்றும் கூறுகின்றனர். நிய்யத் செய்தல் என்பதே இல்லை எனும் போது நிய்யத் செய்து விட்டால் சாப்பிடக் கூடாது என்று தடை போடுவது எந்த விதத்திலும் சரியாகாது. 

வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! (அல்குர்ஆன்2:187) 

சுப்ஹ் நேரம் வரும் வரை சாப்பிடலாம் என்பதை இந்த வசனம் கூறுகின்றது. இதற்கு விளக்கமாக வரும் ஹதீஸ்களும் சுப்ஹ் நேரம் வரை ஸஹர் உணவு உண்ணலாம் என்பதை வலியுறுத்துகின்றன. 

பிலால் (ரலி) அவர்கள் (ஃபஜ்ருக்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், இப்னு உம்மி மக்தூம் (ரலி) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள். பருகுங்கள். ஏனெனில் அவர் தாம் ஃபஜ்ரு நேரம் வந்ததும் பாங்கு சொல்கின்றார்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1918, 1919

திருமறைக் குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் இவ்வளவு தெளிவாக இருந்தும், ஃபஜ்ரு நேரத்திலிருந்து அரை மணி நேரத்திற்கு முன்பே ஸஹர் நேரம் முடிந்து விடுவதாக பரவலான நம்பிக்கை மக்களிடம் உள்ளது. நோன்பு கால அட்டவணைகளை அச்சிட்டு மக்களிடம் விநியோகிப்பவர்களும் ஸஹர் முடிவு நேரம் என்று காலை 4 மணியிலிருந்து 4.30க்குள் குறிப்பிடுகின்றார்கள். 

இதனால் இந்த நேரத்திற்குப் பிறகு உறக்கத்திலிருந்து எழுபவர்கள் சுப்ஹ் நேரத்திற்கு அரை மணி நேரம் இருந்தால் கூட அன்றைய நோன்பை நோற்காமல் வீணாக்குகின்றனர். இது பெரும் குற்றமாகும். குர்ஆன், ஹதீஸைப் பற்றிய தெளிவு இல்லாததால் ரமளான் மாதத்தின் கடமையான நோன்பை இழந்து அல்லாஹ்விடம் குற்றவாளி ஆகும் நிலை ஏற்படுகின்றது. 

ஸஹர் முடிவு நேரம் என்று கூறி அரை மணி நேரத்திற்கு முன்பே ஸஹரை முடிப்பவர்கள் ஒரு புறம் என்றால், இரவு இரண்டு மணிக்கே எழுந்து ஸஹர் உணவை முடித்து விட்டு உறங்கி விடுவர்களும் உண்டு. இதுவும் நபிவழிக்கு மாற்றமான செயலாகும். 

ஸஹர் முடிவு நேரம் என்று கூறி அரை மணி நேரத்திற்கு முன்பே ஸஹரை முடிப்பவர்கள் ஒரு புறம் என்றால், இரவு இரண்டு மணிக்கே எழுந்து ஸஹர் உணவை முடித்து விட்டு உறங்கி விடுவர்களும் உண்டு. இதுவும் நபிவழிக்கு மாற்றமான செயலாகும். அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: அஹ்மத் 

மேற்கண்ட ஹதீஸ் ஸஹரைத் தாமதப்படுத்த வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தும் மூன்று மணிக்குள்ளாக ஸஹரை முடித்து விடும் வழக்கம் பெரும்பாலான மக்களிடம் உள்ளது. இது நபிவழிக்கு மாற்றமான செயல் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். 

இரண்டு பாங்குகள்
பிலால் (ரலி) அவர்களை ஸஹர் நேரத்தை அறிவிப்பதற்காகவும், அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களை ஸஹர் முடிவு நேரத்தை, அதாவது சுப்ஹ் நேரத்தை அறிவிப்பதற்காகவும் பாங்கு சொல்ல நபி (ஸல்) அவர்கள் நியமித்திருந்தார்கள் என்ற செய்தி பல்வேறு ஹதீஸ் கிரந்தங்களில் காணப்படுகின்றது. 

நீங்கள் ஸஹர் உணவு உண்ணுவதிலிருந்து பிலாலின் பாங்கு உங்களைத் தடை செய்து விட வேண்டாம். இரவில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்புவதற்காகவும், தொழுது கொண்டிருப்பவர்கள் திரும்பி வருவதற்காகவும் தான் பிலால் பாங்கு சொல்கின்றாரே தவிர சுப்ஹ் நேரம் வந்து விட்டது என்பதை அறிவிப்பதற்காக அன்று'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி 621 

மற்றொரு அறிவிப்பில், இரண்டு பாங்குகளுக்கும் இடையில் எவ்வளவு இடைவெளி இருக்கும் என்பதை விளக்கும் போது, அவர் பாங்கு சொல்லி விட்டு இறங்குவார், இவர் பாங்கு சொல்வதற்காக ஏறுவார்'' என்று இப்னு உமர் (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் விளக்கமளித்துள்ளார்கள். 

இந்த ஹதீஸிலிருந்து ஸஹரின் கடைசிப் பகுதியில் ஸஹர் பாங்கும், ஸஹர் முடிவை அறிவிப்பதற்கு சுப்ஹ் பாங்கு சொல்லப்பட்டிருப்பதை அறியலாம். 

இன்று ஜும்ஆவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தராத வகையில் இரண்டு பாங்குகள் சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் ரமளான் மாதத்தில் ஸஹர் நேரத்தில் சொல்லப்பட்ட இரண்டு பாங்குகளை இன்று நம்மில் யாரும் நடைமுறைப் படுத்துவதில்லை. இந்த நபிவழியை நமது ஜமாஅத்தினர் அனைவரும் நடைமுறைப் படுத்த முன்வர வேண்டும். 

நோன்பு துறத்தல்
சூரியன் மறைந்து இந்தத் திசையிலிருந்து இரவு முன்னோக்கி வந்து, அந்தத் திசையிலிருந்து பகல் பின்னோக்கிப் போனால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: புகாரி 1954 

நோன்பை நிறைவு செய்வதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), நூல்: புகாரி 1957

சூரியன் மறைந்தவுடன் நோன்பை நிறைவு செய்ய வேண்டும் என்பதைக் கூறும் ஹதீஸ்கள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. ஆனால் இன்று நடைமுறையில் பேணுதல் என்ற பெயரில் சூரிய மறைவு நேரத்திலிருந்து 5 அல்லது பத்து நிமிடங்கள் வரை தாமதமாக நோன்பு துறக்கின்றனர். தற்போது வெளியிடப்படும் ஆயிரக்கணக்கான நோன்பு அட்டைகள், பள்ளிவாசல்களில் குறிக்கப்படும் நோன்பு துறக்கும் நேரம் அனைத்தும் நபிவழிக்கு மாற்றமானவையே என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

நோன்பை முறிக்கும் காரியங்கள்
உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல் ஆகிய காரியங்கள் தான் நோன்பின் நேரமான ஃபஜ்ரிலிருந்து சூரியன் மறையும் வரை மார்க்கத்தில் தடுக்கப்பட்டவை ஆகும். 

வேண்டுமென்றே இக்காரியங்களை யாரேனும் செய்தால், ஒரு அடிமையை உரிமை விடுதல் அல்லது இரண்டு மாதங்கள் தொடர்ந்து நோன்பு நோற்றல் அல்லது 60 ஏழைகளுக்கு உணவழித்தல் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்ய வேண்டும். (பார்க்க புகாரி 1936) 

இவை தவிர பல்வேறு காரியங்கள் நோன்பை முறிக்கக் கூடியவை என்ற பெயரில் மக்களிடம் நடைமுறையில் உள்ளன.

1. குழந்தைகளை முத்தமிடுதல், 
2. இரத்தக் காயங்கள் ஏற்படுதல், 
3. எச்சிலை (சளியை) விழுங்குதல், 
4. முடி வெட்டுதல், 
5. வாசனை சோப்பு போடுதல், 
6. நறுமணம் பூசுதல், 
7. வாந்தி எடுத்தல், 
8. நோன்பு நேரத்தில் ஸ்கலிதம் ஏற்படுதல், 
9. உணவை நாவால் ருசி பார்த்து உமிழ்தல், 
10. பற்பசை அல்லது பல்பொடியைக் கொண்டு பல் துலக்குதல், 
11. மருத்துவத்திற்காக ரத்தம் வழங்குதல், 
12. ஆற்றில் முங்கிக் குளித்தல், 
13. காது, மூக்கு வழியாக தண்ணீர் உள்ளே செல்லுதல்,
14. நோன்பு துறந்த பின் ஓதும் துஆவைக் கூறுதல், 
15. நோய் நிவாரணத்திற்காக ஊசி போட்டுக் கொள்ளுதல், 
16. கண், காது போன்றவற்றுக்கு மருந்து போடுதல் போன்ற செயல்களால் நோன்பு முறியாது. 

தவறான நம்பிக்கைள்
யாராவது இறந்து விட்டால் இறந்தவரின் குடும்பத்தவர்கள் வலுக்கட்டாயமாக நோன்பை முறித்து விடுகின்றனர். இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. இவ்வாறு வேண்டுமென்றே நோன்பை முறித்தால் மேலே நாம் கூறியுள்ள பரிகாரங்களைச் செய்ய வேண்டும். இல்லையேல் அவர் மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையை ஏற்றாக வேண்டும். 

நபி (ஸல்) அவர்கள் பேரீச்சம்பழம் அல்லது தண்ணீர் கொண்டு நோன்பு துறப்பதை வலியுறுத்தியுள்ளார்கள். ஆனால் இதற்கு மாற்றமாக உப்பைக் கொண்டு நோன்பு துறக்கும் வழக்கம் உள்ளது. இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில் நோன்பு நோற்று, பித்அத்தான காரியங்களையும் மூட நம்பிக்கைகளையும் விட்டு விலகி அல்லாஹ்வின் நல்லருளைப் பெறுவோமாக! 

(நோன்பு பற்றிய முழுமையான விளக்கங்களுக்கு மவ்லவி பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய நோன்பு என்ற நூலைப் பார்வையிடுக!)
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்