Monday, August 29, 2011

நள்ளிரவில் பஹ்ரைன் மண்டலத்தின் அவசர இரத்த தான உதவி


இரத்ததானம் செய்வதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் மட்டுமல்லாமல் வளைகுடா பகுதிகளிளும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளும் இரத்தான முகாம்கள் மூலமும் மற்றும் மக்களின் அவசர தேவைகளுக்காவும் இரத்ததை தானமாக வழங்கியும் இறைவனது கிருபையால் உயிர்காத்து வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.


கடந்த 25-8-2011 அன்று, சகோதரி ஒருவருக்கு பிரசவம் காரணமாக ரத்த போக்கு ஏற்பட்டதால், நள்ளிரவு ரத்தில் சல்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசரமாக  "B பாசிடிவ்" வகை  ரத்தம் தேவைப்பட, தவ்ஹீத் ஜமாஅத்தின் ரத்த தான சேவையை நன்கு அறிந்திருந்த அவர்கள் உடன் நமது பஹ்ரைன் மண்டலத்தை தொடர்பு கொண்டார்கள், உடன் துரிதமாக செயல்பட்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் மண்டல  நிர்வாகம் நள்ளிரவு என்று கூட பாராமல், சல்மானியா மருத்துவமனையில் தனது பஹ்ரைன் மண்டல நிர்வாகிகள் மற்றும் ஆதரவு சகோதரர்களை அனுப்பி சகோதரியின் சிகிச்சைக்கு தேவையான அளவு ரத்தம் (6 யூனிட்)  வழங்கியது. அல்ஹம்துலில்லாஹ்!


நள்ளிரவு என்றும் பாராமல் அவசர ரத்ததானம் செய்த நம் சகோதரர்களை பாராட்டி, சல்மானியா மருத்துவமனை நமது ஜமாத்திற்கு கடிதம் ஒன்றையும் வழங்கியது. அல்ஹம்துலில்லாஹ்!

....."எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்”...... 5:32. 













Sunday, August 28, 2011

வாராந்திர ரமாளான் சிறப்பு நிகழ்ச்சி, நாள் - 4


 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், ரமளான் மாதம் முழுவதும் நமது மண்டல சார்பாக இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து ஒரு சிறிய உரையும் தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோ. முஹம்மது ஒலி அவர்கள் நிகழ்த்தி வருகிறார்கள் என்பதை அனைவரும் அறிந்ததே.


இதில், வியாழக்கிழமையன்று (25-ஆகஸ்ட்) இரவுத் தொழுகைக்கு பிறகு சுமார்  11 மணியளவிலிருந்து நிகழ்ச்சிகள் இனிதே ஆரம்பமானது.

ஆரம்பகட்டமாக, சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு தொழுகை சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோ. முஹம்மது ஒலி அவர்கள் அனைத்து கேள்விகளுக்கும் அருமையான முறையில் பதில் அளித்தார்கள். அல்ஹம்ந்துலில்லாஹ்.... 

இதைத் தொடர்ந்து குர்ஆனின் 7ஆவது அத்தியாயமான, அஃராஃப் என்ற அத்தியாயத்திலிருந்து, வசனம் 55 முதல் 100 வரை, சகோதர சகோதரிகளை 6 குழுக்களாக பிரித்து, கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பதில் அளித்த குழுவிற்க்கு மார்க்க புத்தங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி வந்திருந்த மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.

இதைத் தொடர்ந்து நிர்வாகிகளுக்கான தாயீ பயிற்சி போட்டியில், இரண்டாவது சுற்றில் நன்கு முயற்சி எடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்ந்துலில்லாஹ்....

இதன் பிறகு வந்திருந்த சகோதர சகோதரிகளின் கேள்வி பதில் நிகழ்ச்சி நமது மண்டலம் சார்பில் நிகழ்த்தப்பட்டது. இதில் கார சாரமான கேள்விகளும் கேட்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சி சுமார் அதிகாலை 3.00 மணியளவில் நிறைவுபெற்றது. இதன் பிறகு ஸஹர் உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

இதில் ஏராளமான தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனைடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!  


பஹ்ரைனில் தாஇயி பயிற்சி முகாம்

 


அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.....

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தில் நிர்வாக மட்டத்திலான தாஇயி பயிற்சி முகாம் நடைபெற்றது.

இன்று (25.11.2011) இரண்டாம் சுற்று பயிற்சி முகாமில் நமது மண்டல நிர்வாகிகளான, சகோதரர் ஒலி முஹம்மது அவர்கள் "நரகம்" என்ற தலைப்பிலும், அவரை தொடர்ந்து சகோதரர் மாஹின் அவர்கள் "சொர்க்கம்" என்ற தலைப்பிலும், சகோதரர் அரபாத் அவர்கள் "சபை ஒழுங்கு" என்ற தலைப்பிலும்,  உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியை தாயகத்திலிருந்து வந்திருக்கின்ற சகோ. முஹம்மது ஒலி அவர்கள் தலைமை தாங்கி, சகோதரர்கள் ஆற்றிய உரையின் சிறு சிறு பிழைகளை மேற்கொள்காட்டினார். முதல் சுற்றில் காணப்பட்ட பிழைகளை திருத்தியதை சுட்டி காட்டினார்கள். அல்ஹம்ந்துலில்லாஹ்.......

மேலும், இனிவரும் கலாங்களில் இன்னும் முயற்சி செய்து சிறு சிறு பிழைகளும் வராதமாறு உரை நிகழ்த்துமாறு கூறி சபையை முடித்தார்.

இதில் நமது மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Wednesday, August 24, 2011

பஹ்ரைன் கிளை சார்பாக ரூபாய் 25,000/- நிதியுதவி


 
.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  பஹ்ரைன் மண்டலம் சார்பாக  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி ஏர்போர்ட் கிளை மர்க்கஸ் கட்டுமானப் பணிக்காக ரூ. 25,000.00/- (இருபத்தைதாயிரம் ரூபாய்). கடந்த 20-08-2011 அன்று நன்கொடையாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

பஹ்ரைனில் சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கான குரான் மனனம் போட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், ரமளான் மாதம் முழுவதும் நமது மண்டல சார்பாக இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து ஒரு சிறிய உரையும் தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோ. முஹம்மது ஒலி அவர்கள் நிகழ்த்தி வருகிறார்கள் என்பதை அனைவரும் அறிந்ததே.

கடந்த வெள்ளிகிழமையன்று  இப்தார் விருந்து பரிமாறி, மக்ரிப் தொழுகைக்கு பிறகு,  சகோ. முஹம்மது ஒலி அவர்கள் "நல்லறங்களை அழிக்கும் செயல்கள்" என்று சிறு உரையாற்றினார்கள். உரைக்கு பிறகு  நிகழ்ச்சிகள் இனிதே ஆரம்பமானது.


சிறுவர், சிறுமியர்களுக்கான அறிவுப்போட்டியில் (குரான் மனனம் போட்டி) ஆரம்பமானது. அல்ஹம்ந்துலில்லாஹ்... இதில் சிறு குழந்தைகள் கூட கலந்து கொண்டது வியப்பிற்குள்ளானது. அனைத்து சிறுவர் மற்றும் சிறுமியர்களும் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டது சிறப்பிக்க வைத்தது. இறுதியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.இதை சகோ. முஹம்மது ஒலி அவர்கள் நடத்தி வைத்தார்.

இதில் ஏராளமான சிறுவர் மற்றும் சிறுமியர்கள் கலந்து கொண்டு பயனைடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

இறுதியில் இதை கண்டு கழித்த தௌஹீத் சகோதர மற்றும் சகோதரிகள், இதை மாதம் ஒரு முறை நடத்த வேண்டும் என்று ஊக்க படுத்தினார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!







Saturday, August 20, 2011

வாராந்திர ரமாளான் சிறப்பு நிகழ்ச்சி, நாள் - 3

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், ரமளான் மாதம் முழுவதும் நமது மண்டல சார்பாக இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து ஒரு சிறிய உரையும் தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோ. முஹம்மது ஒலி அவர்கள் நிகழ்த்தி வருகிறார்கள் என்பதை அனைவரும் அறிந்ததே.


இதில், வியாழக்கிழமையன்று (18-ஆகஸ்ட்) இரவுத் தொழுகைக்கு பிறகு சுமார்  9 மணியளவிலிருந்து நிகழ்ச்சிகள் இனிதே ஆரம்பமானது.

ஆரம்பகட்டமாக, கடந்த 2 வருடங்களைப் போன்றே இந்த வருடமும் பஹ்ரைன் மண்டல சார்பில் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற வெள்ளியன்று உம்ரா பயணம் அழைத்து செல்லப்படுகிறது. அதை முன்னிட்டு உம்ரா செயல்முறை பயிற்சி விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் அதில் உம்ராவிற்கு செல்கின்ற சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு உம்ரா சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சகோதரர் அப்துல் ஹமீது அவர்கள் "லைலத்துல் கத்ர்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி, அதன் சிறப்புகளை வந்திருந்த சகோதர சகோதரிகளுக்கு விளக்கினார்.

அவரை தொடர்ந்து தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோ. முஹம்மது ஒலி அவர்கள் "சிறிய அமல்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதைத் தொடர்ந்து குர்ஆனின் 7ஆவது அத்தியாயமான, அஃராஃப் என்ற அத்தியாயத்திலிருந்து, வசனம் 101 முதல் 155 வரை சகோதர சகோதரிகளை 8 குழுக்களாக பிரித்து, கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பதில் அளித்த குழுவிற்க்கு மார்க்க புத்தங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி வந்திருந்த மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.

இதன் பிறகு வந்திருந்த சகோதர சகோதரிகளின் கேள்வி பதில் நிகழ்ச்சி நமது மண்டலம் சார்பில் நிகழ்த்தப்பட்டது. இதில் சிறந்த கேள்வி கேட்ட சகோதர மற்றும் சகோதரிக்கு மார்க்க புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி சுமார் அதிகாலை 2.40 மணியளவில் நிறைவுபெற்றது. இதன் பிறகு ஸஹர் உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

இதில் ஏராளமான தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனைடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!


Thursday, August 18, 2011

மாற்று மத தாவா

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ஹித் கிளையிலிருந்து நமது சகோதரர்கள் ஒரு மாற்று மத (கிறிஸ்துவ) நண்பர் ஒருவரை அழைத்து வந்து, தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோதரர் முஹம்மது ஒலி அவர்கள் மேற்பார்வையில் இஸ்லாத்தை பற்றி வந்திருந்த கிறிஸ்துவ நண்பருக்கு தாவா செய்தார்.

மேலும் அவருக்கு இயேசு சிலுவையில் அறையப்படவில்லை, இயேசு இறைமகனா?, இது தான் பைபிள் மற்றும் தமிழ் திருக்குர்ஆன் அவருக்கு வழங்கப்பட்டது.

நமது ஜமாஅத்தின் தாவா பணிகள் சிறப்பாக நடைபெற, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்.

மேலதிக தொடர்புக்கு, நமது மண்டல தாவா பொருப்பாளர் சகோதரர் ஹாஜா குத்புதீன் (39740498) அவர்களை தொடர்பு கொள்ளவும்.

Saturday, August 13, 2011

தீண்டாமை விலங்கை உடைத்தெறிந்த திருமறைக்குர்ஆன்

தீண்டாமை விலங்கை உடைத்தெறிந்த திருமறைக்குர்ஆன்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

பரந்து விரிந்த இந்தியப் பெருநாட்டிற்குள் ஆடு மாடுகளை, மேய்த்துக் கொண்டு நாடோடிகளாக நுழைந்த வந்தேறிகளின் கூட்டம் மண்ணின் மைந்தர்களாகிய ஆதி திராவிடர்களுடைய அறியாமையை பயன் படுத்தி அவர்களிடத்தில் சிலை வணக்கத்தை புகுத்தி முச்சந்திக்கு முச்சந்தி கோயிலைக் கட்டி வைத்துக்கொண்டு நாங்கள் தேவனின் தலையில் பிறந்ததால் நாங்களே வேதத்தை ஓதுவதற்கும், கோயிலில் பூஜை புணஷ்காரம் செய்வதற்கும் தகுதியானவர்கள் என்றுக்கூறி ஒட்டு மொத்த கோயில் நிர்வாகத்தையும்  தங்களுக்கே நிரந்தரமாக்கிக் கொண்டனர்.

இன்று இந்திய அரசியலில் கால் பதித்து அரசு அதிகாரத்தை கைப்பற்றி கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகள் முழுவதையும் தங்களுக்கு ஒதுக்கிக் கொள்வதற்கு முன்பு வரை ஒட்டு மொத்த ஆரியர்களின் வயிற்றுப்பிழைப்பு கோயிலுக்கு வழங்கும் பிரசாதமும், உண்டியலில் இடும் காணிக்கையைத் தவிர வேறில்லை அதனால் இவர்களின் பிழைப்பில் அவர்கள் குறுக்கிட்டு விடக்கூடாது என்பதற்காக நீங்கள் தேவனின் காலில் பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்பதால்  கோயில் நிர்வாகத்தில் மட்டுமல்லாமல் நகருக்குள்ளும் குடி இருக்கக் கூடாது என்றுக்கூறி அவர்களின் குடியிருப்பை  ஊர் கோடியில் ஒதுக்கி வைத்து அதற்கு சேரிகள் என்று பெயர் சூட்டி தங்களுடைய குடியிருப்பை கோயிலைச் சுற்றியும், நகருக்கு மத்தியிலும் அமைத்துக் கொண்டு அதற்கு அக்ரஹாரம் என்று பெயர் சூட்டி வாழ்க்கையைத் தொடங்கினர்.

சிறகொடிந்தப் பறவைகளாய் 

அந்த அப்பாவிகள் வந்தேறி ஆரியர்களால் அடிமைப் படுத்தப் படுவதற்கு முன் இயற்கை எழில் கொஞ்சும் இந்திய மண்ணில் சுதந்திரமாக சுற்றித் திரிந்தனர் இவர்களது வருகைக்குப்பின் சூத்திர முத்திரை குததப்பட்டப் பின் அவர்களது குடியிருப்புக்களாகிய சேரிகளை தவிர்த்து பொது இடங்களில் நடக்கக் கூட முடியாத அவலநிலையை அடைந்து கொண்டதுடன் ஆரியர்கள் அல்லாது வேறு சமுதாயத்து மக்களுடனும் கூட கலந்திட முடியாமல் சமத்துவமும், சகோதரத்துவமும் பறிக்கப்பட்டு சிறகொடிந்தப் பறவைகளாயினர்.

ஒடுக்கப்பட்ட இந்த மக்களுடைய அவல நிலையை மாற்றி அவர்களது துயர் துடைக்க எத்தனையோ இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டு குரல் கொடுத்தன அவைகளாலும் ஒன்றும் செய்ய இயலாமல் அவைகளும் ஒரு காலகட்டத்தில் அரசியல் அமைப்புகளாக பரினாமம் பெற்று யாரை எதிர்த்து யாருக்காக ஆதரவு குரல் கொடுக்க வேண்டும் எனும் நோக்கில் அமைப்பு துவக்கப்பட்டதோ எஅவைகளும் திர்க்க வேண்டியவர்களிடமே சட்டமன்ற, பாராளுமன்ற சீட்டுகளுக்காக சரணடைந்து கொண்டன.

மனுதர்மத்தை உடைத்தெறிந்து மனித தர்மத்தை நிலைநாட்டியது மாமறைக் குர்ஆன்
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிரிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். திருக்குர்ஆன்  49:13. என்றுக் கூறி மனிதன் கடவுளுடைய தலையிலும் பிறக்கவில்லை, காலிலும் பிறக்கவில்லை ஒரே ஒரு மனிதனே முதலில் படைக்கப்பட்டு அவரிலிருந்து அவருக்கு பெண் துணை படைக்கப்பட்டு உலகம் முடியும் காலம் வரை பிறக்கும் அனைத்து மனிதர்களும் ஒரே அச்சிலிருந்தே (அந்த இருவரிலிருந்தே) படைக்கப் படுகின்றனர் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்து வந்தேறி ஆரியர்களுடைய செட்டப் நாடகத்தை (மனுதர்மத்தை) உடைத்தெறிந்து மனித தர்மத்தை (சமத்துவத்தை) முழங்கியது மாமறைக்குர்ஆன். 

மேற்காணும் திருமறைக்குர்ஆனின் வசனம் சமத்துவத்தைக் கூறினாலும் சகோதரத்துவத்தைக் கூறவில்லை என்று சொல்லி அடிமைத் தளையிலிருந்து விடுதலைப் பெற விட மாட்டார்கள் ன்பதால் அவர்களின் உள்ளங்களையும் சூழ்ச்சிகளையும் அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். திருக்குர்ஆன் 49:10. என்றுக் கூறி சகோதரத்துவத்திற்கு அழுத்தமான அஸ்த்திவாரத்தை இட்டு தீண்டாமையை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்த்து வீழ்த்தியது சத்திய வேதம் திருமறைக்குர்ஆன்.
மனிதர்கள் தீட்டும் மலைப் போன்ற சூழ்ச்சி அல்லாஹ்வின் சூழ்ச்சிக்கு முன் தூள் தூளாக சிதறிப் பறந்து விடும் என்பதற்கு ஆரியர்கள் தீட்டிய தீண்டாமை சூழ்ச்சி அல்லாஹ்வின் சகோதரத்துவ திட்டத்தின் கீழ் சிதறி தவிடுப் பொடியாகியது மிகப் பெரிய உதாரணமாகும்.   

சகோதரர்களுக்கு மத்தியில் ஆண்டான் அடிமை எனும் சிந்தனை வருமா ?

சகோதரர்களுக்கு மத்தியில் தலையில் பிறந்தோன், காலில் பிறந்தோன் எனும் ஏற்றத் தாழ்வு சிந்தனை வருமா ?

சகோதரர்களுக்கு மத்தியில் கருப்பன் சிவப்பன் என்ற நிறவெறி சிந்தனை ஏற்படுமா ?

ஏற்படாது !
அதனால் ஆரியர்களால் சூத்திரர்கள் எனும் அடிமை விலங்கிடப்பட்டிருந்த அப்பாவி ஆதி திராவிடர்கள் அந்த அடிமை விலங்கை உடைத்தெறிவதற்கு சகோதரத்துவம் கூறிய இஸ்லாத்தை நோக்கி ஓடி வந்தனர்.

அவ்வாறு  அடிமை விலங்கை உடைத்தெறிந்து கொண்டு இஸ்லாத்தை நோக்கி வந்து சமத்துவ அந்தஸ்தை அடைந்து கொண்டவர்களே நம்முடைய முன்னோர்கள் ஆவர் அவர்களுடைய வாரிசுகளே இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நானும், படித்துக் கொண்டிருக்கின்ற உங்களிலும் அதிகமானோர் ஆவோம். 

இன்று சமுதாயத்தில் சமத்துவத்துடனும், சகோதர வாஞ்சையுடனும் வாழ்ந்து வருகிறோம் என்றால் திருக்குர்ஆன் முழங்கிய விடுதலை முரசு என்பதை மறந்திடக் கூடாது. அதனால் திருக்குர்ஆனை உலகில் வாழக்கூடிய மற்ற எல்லா மக்களை விடவும்  நாம் சங்கை செய்ய கடமைப் பட்டுள்ளோம்.

மனு தர்மத்தை உடைத்து மனித தர்மத்தை நிலை நாட்டிய  மா மறையை மறந்தவர்களை நோக்கி

குர்ஆனை மறந்தவர்களை நோக்கி குர்ஆன் கூறுகிறது அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிரிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான். 3:103

சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் நாடி இஸ்லாத்தை நோக்கி வந்தவர்களின் வாரிசுகளாகிய நாம் சமத்துவத்தை ஏற்படுத்திக் கொடுத்த திருமறைக்குர்ஆனை அழகுற ஓதி அது ஏவுகின்ற ஏவல்களை நமது வாழ்க்கையில் கடைபிடித்து ஒழுகி நடப்பதுடன் அது விலக்கும் விலக்கல்களிலிருந்து இயன்ற ரை விலகிக் கொண்டு வாழ்வதே தீண்டாமை விலங்கை உடைத்தெறிந்த திருக்குர்ஆனை சங்கை படுத்தியதாக அவ்லாஹ்விடம் கருதப்படும்.

எத்தி வைத்தால்
திருக்குர்ஆன் கூறும் சமத்துவமும், சகோதரத்தவமும் இன்றும் இந்தியாவின் அடிமைப் படுத்தப்பட்டிருக்கும் மக்களுக்கு எட்டாமல் இருந்து வருகிறது எட்ட விடாமல் அடிமை விலங்கு பூட்டிய ஆதிக்க வர்க்கம் தடுத்துக் கொண்டிருக்கின்றன. அவர்களது செவிப் புலன்களை '' இன்னமா அல் மூஃமினூன இஹ்வா  '' இறைநம்பிக்கையாளர்கள் சகோதரர்களே ! எனும் திருமறை வசனம் அவர்களது செவிப்பறையை தட்டினால் அடுத்த கனமே அவர்கள் தங்களது அடிமை விலங்குகளை உடைத்தெறிவதற்கு இஸ்லாத்தை நோக்கி விரைந்தோட தயங்க மாட்டார்கள்.  

அல்லாஹ்வின் நோன்பாளிகளே ! திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட இந்த ரமளான் மாதத்தில் திருக்குர்ஆனை அதிகம் ஓதி வருவதுடன் அது கூறும் ஏவல் - விலக்கல்களை நடைமுறைப் படுத்துவதுடன் அவரவர் சகதிக்குட்பட்ட அளவு சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் கூறும் சத்திய இஸ்லாம் அனைத்து தரப்பு மக்களிடமும் சென்றடைய உடலாலும், பொருளாலும் உதவ முன் வர வேண்டும்.

எழுதியபடி எம்மையும், வாசித்தப்படி உங்களையும் அமல் செய்
யும் நன் மக்களாக வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக ! 

வாராந்திர நிகழ்ச்சி - 12-08-2011

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி இந்த வாரம் கேள்வி பதில் நிகழ்ச்சியாக மாற்றி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோ. முஹம்மது ஒலி அவர்கள் நமது ஹித் கிளையின் சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறி விளக்கமளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நமது ஹித் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Friday, August 12, 2011

வாராந்திர ரமாளான் சிறப்பு நிகழ்ச்சி, நாள் - 2



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், ரமளான் மாதம் முழுவதும் நமது மண்டல சார்பாக இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து ஒரு சிறிய உரையும் தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோ. முஹம்மது ஒலி அவர்கள் நிகழ்த்தினர்கள்.

மேலும், வியாழக்கிழமையன்று இரவுத் தொழுகைக்கு பிறகு சுமார் 11 மணியளவில் ரமளான் சிறப்பு நிகழ்ச்சி பஹ்ரைன் மண்டல தலைமைகத்தில் நடைபெற்றது.

இதில் ஆரம்பகட்டமாக, நமது மண்டல தாவா பொறுப்பாளர் சகோ. ஹாஜா குத்புதீன் அவர்கள் "நபி (ஸல்) அவர்களின் சமூகத்தைச் சாராதவன்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அவரை தொடர்ந்து தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோ. முஹம்மது ஒலி அவர்கள் "வஹீயை மட்டுமே பின்பற்றுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி அதில் சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு மிக அழகான் முறையில் விளங்குமாறு வந்திருந்த சகோதரர்களுக்கு புரியுமள்வில் எளிய நடையில் விளக்கினார்.

இதைத் தொடர்ந்து குர்ஆனின் 14ஆவது அத்தியாயமான, இப்ராஹீம் என்ற அத்தியாயத்திலிருந்து சகோதர சகோதரிகளை 8 குழுக்களாக பிரித்து, கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பதில் அளித்த குழுவிற்க்கு மார்க்க புத்தங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி வந்திருந்த மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.

இதன் பிறகு வந்திருந்த சகோதர சகோதரிகளின் கேள்வி பதில் நிகழ்ச்சி நமது மண்டலம் சார்பில் நிகழ்த்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சி சுமார் அதிகாலை 2.40 மணியளவில் நிறைவுபெற்றது. இதன் பிறகு ஸஹர் உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

இதில் ஏராளமான தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனைடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்