அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், ரமளான் மாதம் முழுவதும் நமது மண்டல சார்பாக இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து ஒரு சிறிய உரையும் தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோ. முஹம்மது ஒலி அவர்கள் நிகழ்த்தி வருகிறார்கள் என்பதை அனைவரும் அறிந்ததே.
ஆரம்பகட்டமாக, கடந்த 2 வருடங்களைப் போன்றே இந்த வருடமும் பஹ்ரைன் மண்டல சார்பில் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற வெள்ளியன்று உம்ரா பயணம் அழைத்து செல்லப்படுகிறது. அதை முன்னிட்டு உம்ரா செயல்முறை பயிற்சி விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் அதில் உம்ராவிற்கு செல்கின்ற சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு உம்ரா சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சகோதரர் அப்துல் ஹமீது அவர்கள் "லைலத்துல் கத்ர்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி, அதன் சிறப்புகளை வந்திருந்த சகோதர சகோதரிகளுக்கு விளக்கினார்.
அவரை தொடர்ந்து தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோ. முஹம்மது ஒலி அவர்கள் "சிறிய அமல்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதைத் தொடர்ந்து குர்ஆனின் 7ஆவது அத்தியாயமான, அஃராஃப் என்ற அத்தியாயத்திலிருந்து, வசனம் 101 முதல் 155 வரை சகோதர சகோதரிகளை 8 குழுக்களாக பிரித்து, கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பதில் அளித்த குழுவிற்க்கு மார்க்க புத்தங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி வந்திருந்த மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.
இதன் பிறகு வந்திருந்த சகோதர சகோதரிகளின் கேள்வி பதில் நிகழ்ச்சி நமது மண்டலம் சார்பில் நிகழ்த்தப்பட்டது. இதில் சிறந்த கேள்வி கேட்ட சகோதர மற்றும் சகோதரிக்கு மார்க்க புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி சுமார் அதிகாலை 2.40 மணியளவில் நிறைவுபெற்றது. இதன் பிறகு ஸஹர் உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
இதில் ஏராளமான தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனைடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment