அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், ரமளான் மாதம் முழுவதும் நமது
மண்டல சார்பாக இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து ஒரு சிறிய உரையும் தாயகத்திலிருந்து
வரவழைக்கப்பட்ட சகோ. முஹம்மது ஒலி அவர்கள் நிகழ்த்தி வருகிறார்கள் என்பதை அனைவரும்
அறிந்ததே.
கடந்த வெள்ளிகிழமையன்று
இப்தார் விருந்து பரிமாறி, மக்ரிப் தொழுகைக்கு பிறகு, சகோ. முஹம்மது ஒலி அவர்கள்
"நல்லறங்களை அழிக்கும் செயல்கள்" என்று சிறு உரையாற்றினார்கள். உரைக்கு பிறகு நிகழ்ச்சிகள் இனிதே ஆரம்பமானது.
சிறுவர், சிறுமியர்களுக்கான அறிவுப்போட்டியில்
(குரான் மனனம் போட்டி) ஆரம்பமானது. அல்ஹம்ந்துலில்லாஹ்... இதில் சிறு குழந்தைகள் கூட
கலந்து கொண்டது வியப்பிற்குள்ளானது. அனைத்து சிறுவர் மற்றும் சிறுமியர்களும் மிக
ஆர்வத்துடன்
கலந்து கொண்டது சிறப்பிக்க வைத்தது. இறுதியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.இதை
சகோ. முஹம்மது ஒலி அவர்கள் நடத்தி வைத்தார்.
இதில் ஏராளமான சிறுவர் மற்றும் சிறுமியர்கள் கலந்து கொண்டு
பயனைடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
இறுதியில் இதை கண்டு கழித்த தௌஹீத் சகோதர மற்றும் சகோதரிகள், இதை மாதம் ஒரு முறை நடத்த வேண்டும்
என்று ஊக்க படுத்தினார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment