Showing posts with label சிறப்பு நிகழ்ச்சிகள். Show all posts
Showing posts with label சிறப்பு நிகழ்ச்சிகள். Show all posts

Saturday, January 26, 2013

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் விடுமுறை தினத்தை சிறந்த முறையில் கழிக்க நேற்று (25-01-2013) சிறப்பு "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமீரகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட  சகோதரர். ஹமீன் இப்ராஹிம் அவர்கள் வந்திருந்த சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மிகத் தெளிவாக விளக்கினார்கள்.

நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில
  • பெண்கள் காது குத்தலாமா?
  • ஒருவர் அக்கா தங்கை என்ற இரண்டு பெண்களை திருமணம் செய்யலாமா? 
  • எஞ்சியதற்கு தான் ஜகாத் என்பதன் விளக்கம் என்ன?
  • திருக்குர்ஆனின் 36ஆவது அத்தியாயமான யாஸீனில் உள்ள 42ஆவது வசனத்தின் விளக்கம் என்ன?
  • யூதர்களின் வரலாறு மற்றும் அவர்களின் கடவுள் நம்பிக்கை என்ன? 
என்பன போன்ற பல கேள்விகளை கேட்டனர். இந்த அனைத்து கேள்விகளுக்கும் குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அழகாக விளக்கமளித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!! 

மாற்று மதத்தினருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி


அல்லாஹ்வின் கிருபையால், தற்போதுள்ள தமிழ் அமைப்புகளின் தாவா பணிகளில் தலை சிறந்து விளங்குவது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே என்பது அனைவரும் அறிந்ததே. அதன் ஒரு கிளையான பஹ்ரைன் மண்டலத்தில் "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (பிற மதத்தினருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி)" என்ற நிகழ்ச்சி நேற்று (25-01-2013) ஏற்பாடு செய்யப்பட்டது.

இதின் ஆரம்பகட்டமாக நமது மண்டல தலைவரான சகோ. முபாரக் அவர்கள் வரவேற்புரை கூறி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதுபோன்ற மாற்று மதத் தினருக்காக சிறப்பு நிகழ்ச்சிகளை தமிழமெங்கும் நடத்தி வருகிறது எனபதை வந்திருந்த மாற்று மத நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லி விளக்கினார்கள்.

அவரைத் தொடர்ந்து அமீரகத்திலிருந்து சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்ட சகோ.ஹமீன் இப்ராஹிம் அவர்கள் "இஸ்லாம் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த இஸ்லாத்தை பற்றிய அறிமுக உரையானது, வந்திருந்த மாற்று மத நண்பர்கள் இஸ்லாத்தை புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் மிக எளிதாகவும், அறிவுப்பூர்வமாகவும் இருந்தது. 

இதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. தொடக்கத்திலியே சகோதரர்கள் மிகவும் ஆர்வமாகவும், ஆக்கப்பூர்வமான கேள்விகளை தொடுத்தனர். இதற்க்கு நமது சகோதரர் மிகவும் தெளிவாக விளக்கினார்கள். இன்றைய நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில உங்கள் பார்வைக்கு.
  1. மத மாற்றம் என்றால் என்ன?
  2. முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவது ஏன்?
  3. விஸ்வரூபம் படத்திற்கு முஸ்லீம்கள் ஏன் இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்? 
  4. இலங்கயை சேர்ந்த ரிஸானா நஃபிக் என்ற பெண்ணிற்கு சவுதியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது ஏன்?
இது போன்ற இன்னும் பல கேள்விகளை குழுமியிருந்த நண்பர்கள் கேட்டு விளக்கம் பெற்றனர். 
 
இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைத்து மாற்று மத அன்பர்களுக்கும் இஸ்லாத்தை தெரிந்து கொள்ளவதற்காக் இஸ்லாம் சம்பந்தமான விளக்க நூல் மற்றும் CDகள் இலவசமாக வழங்கப்பட்டன.
 
பிறகு மாற்று மத நண்பர்களுக்கு உணவு பரிமாறப்பட்டு சபை களைந்தது.

இந்த நிகழ்ச்சியில் மாற்று மத நண்பர்கள் மற்றும் நமது சகோதரர்கள் என பெரும் திரளாக வந்து கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியை சிறப்பித்து தந்த அல்லாஹ்விற்க்கே எல்லாப் புகழும்!!!!

சிறப்பு எளிய மார்க்கம் - பெண்கள்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் விடுமுறை தினத்தை சிறந்த முறையில் கழிக்க 24-01-2013 அன்று சிறப்பு பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமீரகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட  சகோதரர். ஹமீன் இப்ராஹிம் அவர்கள் வந்திருந்த சகோதரிகளின் கேள்விகளுக்கு குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மிகத் தெளிவாக விளக்கினார்கள்.

நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில
  • கணவன் மனைவிக்கு செய்யும் கடமைகள் என்ன?
  • தாவா யாரெல்லாம் செய்யலாம்? 
  • பெண்களில் பள்ளியில் தொழுவது சிறந்ததா? 
என்பன போன்ற பல கேள்விகளை கேட்டனர். இந்த அனைத்து கேள்விகளுக்கும் குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அழகாக விளக்கமளித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!! 

நிர்வாக தர்பியா

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் விடுமுறை தினத்தை சிறந்த முறையில் கழிக்க 24-01-2013 அன்று நிர்வாகிகளுக்கான தர்பியா நமது மண்டல நிர்வாகிகளின் தலைமையில் சிறப்பாக அரங்கேறியது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அமீரகத்திலிருந்து சகோதரர். ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் வந்திருந்து, நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

இதில் சகோதரர் அவர்கள் நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளையும், மக்களுக்கு மத்தியில் பின்பற்ற வேண்டியவைகளையும் மிக சிறப்பாக விளக்கினார்கள்.

இதில் நமது மணடல மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். 

Friday, March 16, 2012

உம்ரா வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாவா மற்றும் சமுதாய பணிகளில் சிறந்து விளங்குவதை அனைவரும் அறிந்ததே. அதே போல் அதன் கிளைகளாக செயல்பட்டு வரும் மண்டலங்களில் ஒன்றான பஹ்ரைன் மண்டலத்திலும் தாவா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு கட்டமாக, பஹ்ரைன் மண்டலத்தில் நமது தமிழ் பேசும் மக்கள் சிலர் அல்லாஹ் கூறியுள்ள உம்ரா என்ற வழிபாட்டை செய்ய திட்டமிட்டுள்ளனர். அந்த சகோதரர்களில் ஒருவர், நாம் வருடா வருடம் ஏற்பாடு செய்து சிறப்பாக நடந்த உம்ரா நிகழ்ச்சிகளில் கல்ந்து கொண்டிருக்கிறார். 

அவர் நம்மை அணுகி, "சில தமிழ் பேசக்கூடிய சகோதரர்கள் என்னோடு சேர்ந்து உம்ரா செல்ல இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் ஒரு உம்ரா சம்பந்தமான சட்ட திட்டங்கள் பற்றிய ஒரு வகுப்பு நடத்த முடியுமா?" என்று நம்மை அணுகினார்கள். 

அதற்கு நாம மறுக்காமல், தாரளாமாக செய்கிறோம் என்று ஒப்புக்கொண்டு இன்று (16-03-2012) அஸர் தொழுகைக்குப் பிறகு இந்த நிகழ்ச்சியை பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் உம்ரா சம்பந்தமான சட்ட திட்டங்களை வந்திருந்த சகோதர சகோதரிகளுக்கு புரியக்கூடிய அளவில் மிக சிறப்பாக விளக்கினார்கள். மேலும் அவர்களது உம்ரா சம்பந்தமாக அவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கும் பதில் அளித்தார்கள்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் உம்ரா சம்பந்தப்பட்ட விளக்கத்தை முன்பு ஆன்லைன் பிஜெ இணையதளத்திலிருந்து எடுத்து நமது பஹ்ரைன் மண்டல மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று மீள்பதிவு செய்த உம்ரா செய்யும் முறை புகைப்படங்களுடன் கூடியதை புத்தகமாக அடித்து அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதனுடன் மார்க்க சம்பந்தப்பட்ட சகோதரர் அல்தாஃபி ஆற்றிய உரை அடங்கிய ஏகத்துவ CD யும் அவர்களுக்கு வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. 

இதில் கலந்து அனைத்து சகோதர சகோதரிகளும் இந்த நிகழ்ச்சி சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் அமைந்திருந்து என்று கூறி விடை பெற்றனர்.

பஹ்ரைனில் அதிகமான தமிழ் பேசக்கூடிய ஜமாஅத்கள் இருந்தும் இவர்கள் நம்மை மட்டும் அணுகியது ஏகத்துவத்திற்க்கு தேம்புட்டும் வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Monday, January 2, 2012

பஹ்ரைன் மண்டல பொதுக்குழு

அல்லாஹ்வின் உதவியால், நேற்று (01-01-2012) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான பொதுக்குழு கூட்டப்பட்டது. இதன் முக்கிய நோக்கம், நமது ஜமாஅத்திற்காக தலைமையில் சொந்த கட்டிடம் வாங்குவதற்காக நம்மாள் எந்த அளவில் பொருளாதார உதவி செய்ய முடியும் என்பதற்காகவே.
இதன் ஆரம்ப கட்டமாக, தாயத்திலிருந்து சகோ. பி. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் தொலைபேசி மூலமாக நமக்கு தற்போது ஏன் சொந்த கட்டிடம் தேவை? அதன் முக்கியத்துவம் என்ன? என்பதை பற்றியெல்லாம் அவருக்கே உரித்தான பாணியில் எளிய முறையில் நமது சகோதரர்களுக்கு விளக்கினார்கள். சகோதரர் ஆற்றிய உரையை தொடர்ந்து அதற்கு மேலும் தெம்பூட்டும் வகையில் அவரை தொடர்ந்து நமது மண்டல தலைவர் சகோ. முபாரக் அவர்கள் ஆற்றிய உரை அமைந்தது. இவர் தமது உரையின் ஆரம்பமாத்திரத்திலேயே நமது ஜமாஅத்தின் கொள்கை என்ன? இந்த கொள்கை எப்படி பட்ட கொள்கை? அல்லாஹ்வும் அவனது துதரும் காட்டித் தந்த அடிப்படையில் தான் உள்ளதா? என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். மேலும், இந்த கொள்கையை 1980களில் சொல்ல ஆரம்பித்து இன்று எப்படிபட்ட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் எடுத்து விளக்கினார். அதனை தொடர்ந்து நமது ஜமாஅத் எப்படிபட்ட வேலைகளை எல்லாம் செய்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் குர்ஆன், ஹதீஸை சொல்கிறோம் என்று சொல்கின்றவர்களுக்கு மத்தியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எப்படிபட்ட சமுதாய பணிகளை செய்து வருகிறது, மேலும் நமக்கு என்று தனியாக சொந்த கட்டிடம் இருப்பதால் ஏற்படக்கூடிய பயங்கள் என்ன என்பதையெல்லாம் பட்டியலிட்டு காட்டினார்கள். இதை கேட்ட உடனேயே நமது நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் விரைந்து வந்து தங்களால் முடிந்த அளவுக்கு பொருளாதர உதவிகளை செய்கிறோம் என்றும், ஒவ்வோருவரும் தங்களால் எவ்வளவு உதவி செய்ய முடியும் என்றும் துண்டுச் சீட்டில் எழுதி பொருளாளர் அவர்களிடம் கொடுத்தனர். குழுமியிருந்த அனைத்து சகோதரர்களும் அல்லாஹ்விற்காக அழகிய கடன் வழங்கிய திருப்தியில் அனைவரும் கலைந்து சென்றனர்.
அல்லாஹ்வுக்கு யாரேனும் அழகிய கடன் வழங்கினால் அதை அவருக்கு அவன் பன்மடங்காக வழங்குவான். அவருக்கு மகத்தான் கூலியும் உண்டு. (அல் குர் ஆன் 57 - 11)

Monday, December 19, 2011

நவீன உலகில் இஸ்லாம் - ஓர் கலந்தாய்வு

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல விடுமுறை தினத்தை பயனுள்ள வழியில் கழிக்க அமீரகத்திலிருந்து சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் வந்திருந்தது அனைவரும் அறிந்ததே.


இந்த நிகழ்ச்சியானது பஹ்ரைன் மண்டல நிர்வாகிகளின் யோசனைப்படி "நவீன உலகில் இஸ்லாம்" என்ற தலைப்பில் ஒரு கலந்தாய்வு நிகழ்ச்சி 17-12-2011 அன்று மதியம் 3 மணியளவில் ஆரம்பமானது.


இதில் நமது சகோதரர்கள் இரு தரப்பாக அமர்ந்து இஸ்லாம் ஹராமாக்கிய வட்டி, வரதட்சனை ஆகிய தலைப்புகளிலும், இன்றைய கால கட்டத்தில் குழந்தைகளை எப்படி இஸ்லாமிய முறைப்படி வளர்ப்பது மற்றும் இன்றைய உலகில் ஆடம்பர வாழ்க்கைகாக மக்கள் எப்படியெல்லாம் இஸ்லாத்திலிருந்து விலகி நடக்கிறார்கள் என்ற 4 தலைப்புகளில் கலந்தாய்வு நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது.


இதில் அமர்ந்திருந்த இரு தரப்பு சகோதரர்களும் தத்தமது கருத்துக்களை மிகத் தெளிவாக, நகைச்சுவை கலந்து, எளிய முறையில் பதித்தனர். இந்த நிகழ்ச்சியை அமீரகத்திலிருந்து சிறப்பு விருந்தினராக வந்துள்ள சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் தலைமை தாங்கி நிகழ்ச்சியை மேலும் சிறப்புற செய்தார்கள்.


இரு தரப்பு சகோதரர்களும் அவர்கள் பதிந்த கருத்துக்களின் அடிப்படையில், இஸ்லாம் எப்படியெல்லாம் இந்த நவீன உலகில் அணுக வேண்டும் என்று ஆயிரத்தி நானுறு ஆண்டுகளுக்கு முன்பே ஏக இறைவன் தனது திருமறையிலும், உம்மி நபி (ஸல்) அவர்கள் வழியாலும் சொல்லிய எச்சரிக்கின்ற வாசகங்களை எடுத்துக் காட்டி தமது விளக்கத்தை கூறி முடித்தார்.


இதன் பிறகு கலந்து கொண்ட சகோதர்களின் கருத்து கேட்ட போது, இந்த கலந்தாய்வு நிகழ்ச்சியானது மிகவும் சிறந்ததோரு நிகழ்ச்சியாகவும், இந்த காலகட்டத்தில் எப்படியெல்லாம் மக்கள் சாக்கு போக்கு கூறி இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை புறந் தள்ளுகின்றனர் என்று மிக அழகாக எடுத்துக் காட்டப்பட்டது என்று கூறி சகோதரர் அவர்கள் தமது கருத்தை பதிந்தார்கள்.


இந்த நிகழ்ச்சியை நமது மண்டல நிர்வாகிகள் மிக சிறப்பாக ஏற்பாடு செய்தார்கள்.


இந்த நிகழ்ச்சியில் நமது சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

சிறப்பு நிகழ்ச்சி (17-12-2011)


ஏக இறைவனின் கிருபையால், எப்படா விடுமுறை வரும் உடனே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும் என்று கேட்கும் அளவிற்க்கு, இந்த முறை விடுமுறை தினத்தையும் பயனுள்ள வகையில் கழிக்க அமீரகத்திலிருந்து சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் வந்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இன்றைய (17-12-2011) நிகழ்ச்சி காலை 10 மணியளவில் ஆரம்பமானது. இதில் அமீரக ஒருங்கிணைப்பாளரான சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் ''குருதி உறவா? கொள்கை உறவா?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இவர் தனது உரையில், நாம் அன்றாட வாழ்வில் குருதி உறவிற்கே நாம முக்கியத்துவம் அளித்து கொள்கை உறவுக்கோ அல்லது மறுமையின் பயனுக்கோ முக்கியத்துவம் அளிப்பதில்லை என்றும் மேலும் நாம எந்த அளவுக்கு குருதி உறவிற்க்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறியுள்ளான் மற்றும் நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை எந்த விதத்தில் அமைந்திருந்தது என்பதை பற்றியும் மிகத் தெளிவாக விளக்கினார்கள்.

இதை தொடர்ந்து "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" முஸ்லீம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளான.

ஆண்கள் தரப்பிலிருந்து:
  1. திருமணத்தில் இடவசதி பற்றாக்குறையால் மண்டபம் பிடித்து திருமணம் நடத்தலாமா?
  2. கஸ்ர் தொழுகை எத்தனை நாட்கள் தொழலாம்?
  3. கஸ்ர் தொழுகை இந்த கால கட்டத்தில் கூடுமா?
  4. அசையா சொத்துகளுக்கு தற்போதைய விலைப்படி ஜகாத் கொடுக்க வேண்டுமா?
  5. திருமணம் பற்றிய TNTJ வின் நிலைபாடு என்ன?
பெண்கள் தரப்பிலிருந்து:
  1. தேன், கொசு போன்ற ஜந்துகளுக்கு ஊறு விளைவிப்பதைப் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?
  2. குளிப்பு கடைமையான பின் குளிக்காமல் உறங்கி மரணித்து விட்டால் என்ன நிலைமை?
  3. இஸ்ரேல் தயாரித்த பொருட்களை நாம் உபயோகிக்கலாமா?
  4. பலவீனமான ஹதீஸ்களை நாம் எப்படி அறிந்து கொள்வது?
இது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கு சகோதரர் அவர்கள் அறிவுப்பூர்வமாகவும், ஆதரப்பூர்வமாகவும், மக்கள் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் எளிய நடையில் விளக்கி சபையை முடிவுக்கு கொண்டு வந்தார்கள்.

இதனை தொடர்ந்து லுஹர் தொழுகையை ஜமாஅத்-ஆக தொழுது, மதிய உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே முடிவு பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோதர, சகோதரிகள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Sunday, December 18, 2011

பிற மதத்தினருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி



அல்லாஹ்வின் கிருபையால், தற்போதுள்ள தமிழ் அமைப்புகளின் தாவா பணிகளில் தலை சிறந்து விளங்குவது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே என்பது அனைவரும் அறிந்ததே. அதன் ஒரு கிளையான பஹ்ரைன் மண்டலத்தில் அரசு விடுமுறை தினத்தையொட்டி "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (பிற மதத்தினருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி)"16-12-2011 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது.


இதின் ஆரம்பகட்டமாக நமது மண்டல தலைவரான சகோ. முபாரக் அவர்கள் வரவேற்புரை கூறி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதுபோன்ற மாற்று மதத் தினருக்காக சிறப்பு நிகழ்ச்சிகளை தமிழமெங்கும் நடத்தி வருகிறது எனபதை வந்திருந்த மாற்று மத நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லி விளக்கினார்கள்.

அவரைத் தொடர்ந்து அமீரகத்திலிருந்து சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்ட சகோ.ஹமீன் இப்ராஹிம் அவர்கள் "இஸ்லாம் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த இஸ்லாத்தை பற்றிய அறிமுக உரையானது, வந்திருந்த மாற்று மத நண்பர்கள் இஸ்லாத்தை புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் மிக எளிதாகவும், அறிவுப்பூர்வமாகவும் இருந்தது. 
 
இந்த உரையை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளி விட்டு குழுமியிருந்த மாற்று மத சகோதரர்களுக்கு தேனீர் விநியோகிக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. தொடக்கத்திலியே சகோதரர்கள் மிகவும் ஆர்வமாகவும், ஆக்கப்பூர்வமான கேள்விகளையுல் தொடுத்தனர். இதற்க்கு நமது சகோதரர் மிகவும் தெளிவாக விளக்கினார்கள். இன்றைய நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில உங்கள் பார்வைக்கு.
  1. நபிகளார் அவர்கள் 25 வயதில், 40 வயதுடைய பெண்ணை திருமணம் செய்துகொண்டது ஏன்?
  2. சாதாரண மனிதராக தற்போதுள்ள நீங்கள் MLA, MP ஆனால் இதே சிந்தாந்தத்தை கூறுவீர்களா?
  3. மாற்று மதத்தவர்களை ஏன் திருமணம் செய்துகொள்ள இஸ்லாமியர்கள் தடுக்கிறார்கள்? 
  4. காதல் திருமணத்தைப் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?
  5. பலதர மணத்தை இஸ்லாம் ஏன் ஆதரிக்கிறது?
இது போன்ற இன்னும் பல அறிவுப்பூர்வமான கேள்விகளை குழுமியிருந்த நண்பர்கள் கேட்டு விளக்கம் பெற்றனர். 

இந்த நிகழ்ச்சியின் சிறந்த 2 கேள்விகளுக்கு 2 குர்ஆன் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் வந்திருந்த அனைத்து மாற்று மத நண்பர்களுக்கும் இலவசமாக அநேக புத்தகங்கள் வழங்கப்பட்டன. அவையாவன,
  1. இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (மாற்று மத நண்பர்களுக்கான கேள்வி பதில்கள்)
  2. இஸ்லாம் பெண் அடிமை தனத்தை ஆதரிக்கின்றதா?
  3. திருக்குர்ஆன் கூறும் அறிவியல் சான்றுகள்
  4. அர்த்தமுள்ள இஸ்லாம்
  5. வருமுன் உரைத்த இஸ்லாம்
மேலும் இலவசமாக இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் CD-களும் வழங்கப்பட்டன.

பிறகு மண்டல தாவா பொருப்பாளர் சகோ. ஹாஜா குத்புதீன் அவர்கள் முடிவுரை கூறி, வந்திருந்த சகோதரர்களை தங்களின் கருத்துக்கள் தெரிவிக்கும் படி அழைத்தார். அதை கேட்ட மாத்திரத்திலேயே மாற்று மத சகோதரர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து தத்தமது கருத்துக்களை கூறினார்கள்.

மேலும் அதிகமக இம்மாதிரியான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுமாறும், அதனாலேதான் நமது சகோதரத்துவம் இன்னும் சிறப்பாக வளரும் எனவும் தமது கருத்துக்களை பதிந்தனர்.

பிறகு மாற்று மத நண்பர்களுக்கு உணவு பரிமாறப்பட்டு சபை களைந்தது.

இந்த நிகழ்ச்சியில் மாற்று மத நண்பர்கள் மற்றும் நமது சகோதரர்கள் என பெரும் திரளாக வந்து கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியை சிறப்பித்து தந்த அல்லாஹ்விற்க்கே எல்லாப் புகழும்!!!!

ஹித் சிறப்பு நிகழ்ச்சி (16-12-2011)


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் அரசு விடுமுறை தினத்தையொட்டி அமீரகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோ.ஹமீன் இப்ராஹிம் அவர்களை தலைமையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நமது ஜமாஅத் சார்பில் அரங்க்கேற்றப்பட்டது.

இதன் முதல் கட்டமாக, நமது ஹித் கிளையில் வாரம் ஒரு முறை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடத்தப்படுவது அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து இந்த வாரம் (16-12-2011) சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்டுள்ள சகோ.ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் "தியாகம்" என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்தினார்கள்.

இவர் தனது உரையில் தியாகத்தைப் பற்றி அல்லாஹ் தனது திருமறையில் கூறியுள்ள அநேக வசனங்களில் ஒரு சில வசனங்களை மேற்கோள் காட்டினார். மேலும் அண்ணல் பெருமானார் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வராலாற்றிலிருந்தும் ஒரு சில செய்திகளை நமக்கு சுட்டிக்காட்டி அறிவுரை கூறினார்கள்.

இந்த நிகழ்ச்சியை நமது ஹித் கிளை சகோதரர்கள் சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே.

Saturday, November 26, 2011

குடும்ப ஒன்று கூடல்

அல்லாஹ்வின் திருப்பெயரால்,

பஹ்ரைன் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஆனது ஏதாவது விடுமுறை நாள் வந்தால் போதும் உடனே ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து விடுவார்கள் என்று சொல்லுமள்விற்க்கு இந்த தடவையும் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து பஹ்ரைன் வாழ் தமிழ் தவ்ஹீத் சகோதரர்கள் மத்தியில் ஒரு நல்ல பெயரை எடுத்துள்ளது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

முஹர்ரம் தினமான இன்று பஹ்ரைனில் அரசு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து நமது ஜமாஅத் தமிழ் முஸ்லீம் சகோதரர்களில் குடும்ப ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததது.

இன்றைய நிகழ்ச்சியில் ஆரம்பகட்டமாக நமது மண்டல தலைவர் சகோ.முபாரக் அவர்கள், இந்த நிகழ்ச்சியை பற்றி ஒரு சிறிய விளக்கம் அளித்துவிட்டு ஆரம்பம் செய்தார்கள்.

அதைத் தொடர்ந்து சகோ.பிஜெ அவர்கள் ஊட்டி தர்பியாவில் உரை நிகழ்த்திய "நாம் ஏன் தவ்ஹீத் ஜமாஅத்-ல் இருக்க வேண்டும்?" என்ற உரையின் CD-ஐ Projector உதவி கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இந்த உரையில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம், எப்படியெல்லாம் நமது செயல்பாடுகள் இருக்கின்றன, நமது திட்டங்கள் என்ன என்பதையெல்லாம் மிகத் தெளிவாக விளக்கினார்கள். இதைக் கேட்ட நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் இப்படியெல்லாமா நமது ஜமாஅத் திட்டங்கள் வகுக்கின்றது என்பதை மிக ஆச்சரியத்துடன் கேட்டனர்.

இதன் பிறகு மதிய உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

இந்த நிகழ்ச்சியால் நமது தாவா பணிகள் மேலும் சிறப்பாக நடைபெற இது பயனுள்ள வகையில் அமையும்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதரர்கள் குடுப்பத்துடன் கலந்து கொண்டு துஆ செய்து நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Saturday, November 12, 2011

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (11-11-2011)


அல்லாஹ்வின் கிருபையால், தாவா பணிகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இன்று (11-11-2011) இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (மாற்று மதத்தினருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி) பஹ்ரைன் மண்டலம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. 


இதின் ஆரம்பகட்டமாக நமது மண்டலத்தின் துணை தலைவரான சகோ. மொய்தீன் அவர்கள் வரவேற்புரை கூறி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதுபோன்ற மாற்று மதத் தினருக்காக சிறப்பு நிகழ்ச்சிகளை தமிழமெங்கும் நடத்தி வருகிறது எனபதை வந்திருந்த மாற்று மத நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லி தெளிவுபடுத்தினார்கள்.


அவரைத் தொடர்ந்து தாயகத்திலிருந்து சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்ட மேலாண்மை குழு உறுப்பினரான சகோ.M.S.சுலைமான் அவர்கள் "இஸ்லாம் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 


இந்த இஸ்லாத்தை பற்றிய அறிமுக உரையானது, வந்திருந்த மாற்று மத நண்பர்கள் இஸ்லாத்தை புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் மிக எளிதாகவும், அறிவுப்பூர்வமாகவும் இருந்தது. 
இந்த உரையை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளி விட்டு குழுமியிருந்த சகோதர, சகோதரிகளுக்கு தேனீர் விநியோகிக்கப்பட்டது. 


இதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. தொடக்கத்திலியே சகோதரர்கள் மிகவும் ஆர்வமாகவும், ஆக்கப்பூர்வமான கேள்விகளையுல் தொடுத்தனர். இதற்க்கு நமது சகோதரர் மிகவும் தெளிவாக விளக்கினார்கள். இன்றைய நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில உங்கள் பார்வைக்கு.
  1. ஒரே குர்ஆனை பின்பற்றும் நீங்கள் ஏன் இத்தனை பிரிவுகளாக பிளவு பட்டுள்ளீர்கள்?
  2. பன்றி உண்பதற்க்கு இஸ்லாம் ஏன் தடை விதித்துள்ளது?
  3. கடவுளுக்கு உருவமில்லை என்று சொல்லும் நீங்கள், ஏன் இறைவனை "அவன்" என்று குறிப்பிடுகின்றீர்கள்?
  4. இயற்கை சீற்றங்கள் ஏன் நிகழ்கின்றன?

இது போன்ற இன்னும் பல அறிவுப்பூர்வமான கேள்விகளை குழுமியிருந்த நண்பர்கள் கேட்டு விளக்கம் பெற்றனர். 

இந்த நிகழ்ச்சியின் சிறந்த 2 கேள்விகளுக்கு 2 குர்ஆன் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் வந்திருந்த அனைத்து மாற்று மத நண்பர்களுக்கும் இலவசமாக அநேக புத்தகங்கள் வழங்கப்பட்டன. அவையாவன, 
  1. இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (மாற்று மத நண்பர்களுக்கான கேள்வி பதில்கள்)
  2. அர்த்தமுள்ள கேள்வி, அறிவுப்பூர்வமான பதில்கள்
  3. இது தான் பைபிள்
  4. இயேசு இறைமகனா?
  5. இயேசு சிலுவையில் அறையப்படவில்லை
  6. அர்த்தமுள்ள இஸ்லாம்
  7. வருமுன் உரைத்த இஸ்லாம்

நமது சகோ. மொய்தீன் அவர்கள் முடிவுரை கூறி சபையை முடித்தார். 
பிறகு மாற்று மத நண்பர்களுக்கு உணவு பரிமாறப்பட்டு சபை களைந்தது.
அதன் பிறகு குழுமியிருந்த நமது முஸ்லீம் சகோதரர்கள் இஷா தொழுகையை ஜமாஅத்-ஆக தொழுத பின்னர் சகோ. M. S. சுலைமான் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த சகோதரர்கள், மற்றும் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த சகோதரர்கள் என அனைவருக்கும் நன்றி கூறினார்கள். 


இதைத் தொடர்ந்து சகோதரர் கூறிய ஒரு சில வார்த்தைகளால், குழுமியிருந்த சகோதர்கள் அனைவருக்கும் கண்களில் தண்ணீர் வெளியாகி விட்ட நிகழ்ச்சி. அவர் கூறியது, "நான் இந்த மாற்று மத நிகழ்ச்சிக்கு இத்தனை சகோதரர்கள் வருவார்கள் என்று எதிர் பார்க்கவில்லை. இப்படி இத்தனை பேர் வருவார்கள் என்று தெரிந்திருந்தால் இந்த நிகழ்ச்சியை ஒரு மன்றம் வாடகைக்கு எடுத்து நடத்தியிருக்கலாம் என்று பஹ்ரைன் மண்டல ஜமாஅத் சகோதரர்களிடம் கேட்டேன். அதற்கு இவர்கள் வெளிமேடையில் நடத்த பணமில்லை" என்று சொன்னவுடன் குழுமியிருந்த சகோதரர்கள் அனைவருக்கும் கண்கள் கலங்கிவிட்டது. இதை கேட்டவுடனயே நமது சகோதரர்கள் அனைவரும் இந்த ஏகத்துவ பணிக்கு வாரி வழங்கினார்கள். புகழ் அனைத்தும் இறைவனுக்கே!!!!



இதனைத் தொடர்ந்து இரவு உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே முடிவு பெற்றது. 


இந்த நிகழ்ச்சியில் மாற்று மத நண்பர்கள் மற்றும் நமது சகோதரர்கள் என அனைவரும் வந்து குழுமிவிட்டனர். இதனால் உட்கார்வதற்க்கு இடமில்லாமல் சகோதரர்கள் கால் கடுக்க நின்று நிகழ்ச்சியை கேட்டனர் என்றால் மிகையாகாது. இத்தனை மக்களை கொண்டு வந்து சேர்த்த அல்லாஹ்விற்க்கே எல்லாப் புகழும்!!!!

Wednesday, November 9, 2011

சிறப்பு நிகழ்ச்சி - ரிஃபா கிளை (09-11-2011)

அல்லாஹ்வின் திருப்பெயரால்,

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையின் சார்பாக சிறப்பு பயான் நிகழ்ச்சி இன்று (09-11-2011) நடைபெற்றது. 

இன்றைய நிகழ்ச்சியில், நமது தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள மாநில மேலாண்மை குழு உறுப்பினரான சகோ. M. S. சுலைமான் அவர்கள் "மரண்த்திற்க்கு பின்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

இதில் ஆரம்பகட்டமாக அல்லாஹ் தனது திருமறையில் கூறியிருக்கின்ற "இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டும் அன்றி வேறில்லை" என்ற வசனத்தை மேற்கோள் காட்டி தனது உரையை ஆரம்பித்தார்.


இந்த அற்பமான 50 அல்லது 60 வருட வாழ்க்கைகாக நாம் காட்டுகின்ற முக்கியத்துவத்தை விட, மறுமை வாழ்க்கையை நம்பக்கூடிய முஸ்லீம்களான நாங்கள் அதற்க்கு எந்தளவு முக்கியத்துவம் அளிக்கிறோம் என்பதை சிந்தித்து பார்க்க கடமைபட்டுள்ளோம் என்றார்.


இதனை தொடர்ந்து சகோதரர்கள் தங்களது மார்க்க சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.


இந்த நிகழ்ச்சியை நமது ஹித் கிளை சகோதரர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

சிறப்பு நிகழ்ச்சி - ஹித் கிளை (08-11-2011)


அல்லாஹ்வின் திருப்பெயரால்,

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டல ஹித் கிளையின் சார்பாக தியாகத் திருநாளின் நிகழ்ச்சி 08-11-2011 செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. 

இன்றைய நிகழ்ச்சியில், நமது தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள மாநில மேலாண்மை குழு உறுப்பினரான சகோ. M. S. சுலைமான் அவர்கள் "தவ்ஹீத் ஏற்படுத்திய மாற்றங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

இவர் உரையில் நாம் ஏகத்துவம் எனும் தவ்ஹீத் வருவதற்க்கு முன், முஸ்லீம்கள் என்று சொல்லக்கூடிய நாம் எப்படி இருந்தோம்? இன்று தவ்ஹீத் என்ற ஓரிறைக் கொள்கை வந்த பிறகு எப்படி இருக்கிறோம்? என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள வகையில் மிகத் தெளிவாக விளக்கினார்கள். 


இந்த ஏகத்துவம் என்ற தவ்ஹீத் இன்று எவ்வளவு வீரீயமாகவும், எப்படியெல்லாம் மக்களை கவர்ந்திருக்கின்றது, மேலும் இன்று மக்கள் இந்த ஏகத்துவ கொள்கையை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு நாளுக்கு நாள் முன் வருகின்றனர் என்பதை பற்றியும் விளக்கினார்கள். 


இதன் பிறகு சகோதர, சகோதரிகள் இஸ்லாம் சம்பந்தமான கேள்விகள் கேட்க சகோதரர் அவர்கள் மிக அழகாகவும், மக்களுக்கு விளங்கும் வகையிலும் எடுத்துரைத்தார்கள். 


இதனை தொடர்ந்து இரவு உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.


இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Tuesday, November 8, 2011

சிறப்பு நிகழ்ச்சி (பெண்களுக்காக)

அல்லாஹ்வின் கிருபையால், பெண்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி இன்று (07-11-2011) மக்ரீப் தொழுகைக்குப் பிறகு ஆரம்பமானது.

இந்த நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்த்து வருகை புரிந்துள்ள மேலாண்மை குழு உறுப்பினரான சகோ. M. S. சுலைமான் அவர்கள் "பெண்களின் சமுதாய கடமை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் அல்லாஹ் தனது குர்ஆனில் மற்றும் நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதரப்பூர்வமான ஹதீஸ்களை எடுத்துக் காட்டி பெண்கள் சமுதாயக் கடமையாக என்ன உள்ளது என்பதை அறிவுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் குறிப்பிட்டுக்காட்டினார்கள்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கேள்வி பதில் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அதில் கேட்கப்பட்ட கேள்விகளாவன.

  1. சுன்னத் ஜமாஅத்திற்க்கும், தவ்ஹீத் ஜாமஅத்-திற்க்கும் இடையேயுள்ள வேறுபாடுகள்
  2. தவ்ஹீத் ஜமாஅத் ஏன் அரபு அரசாங்கத்திடமிருந்து பண உதவி பெருவதில்லை?
  3. பணிக்கு செல்ல சொல்லி வர்புருத்தும் மனைவிகளை, கண்வன்மார்களை பற்றி இஸ்லாம் கூறும் விளக்கம்

மற்றும் பல கேள்விகளை கூடியிருந்த சகோதரிகள் கேட்டு விளக்கம் பெற்றனர்.

இதன் பிறகு ஒரு சிறிய உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நமது ஏராளாமான சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்