அல்லாஹ்வின் கிருபையால், தற்போதுள்ள தமிழ் அமைப்புகளின் தாவா பணிகளில் தலை சிறந்து விளங்குவது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே என்பது அனைவரும் அறிந்ததே. அதன் ஒரு கிளையான பஹ்ரைன் மண்டலத்தில் அரசு விடுமுறை தினத்தையொட்டி "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (பிற மதத்தினருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி)"16-12-2011 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

அவரைத் தொடர்ந்து அமீரகத்திலிருந்து சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்ட சகோ.ஹமீன் இப்ராஹிம் அவர்கள் "இஸ்லாம் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இந்த இஸ்லாத்தை பற்றிய அறிமுக உரையானது, வந்திருந்த மாற்று மத நண்பர்கள் இஸ்லாத்தை புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் மிக எளிதாகவும், அறிவுப்பூர்வமாகவும் இருந்தது.
இந்த உரையை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளி விட்டு குழுமியிருந்த மாற்று மத சகோதரர்களுக்கு தேனீர் விநியோகிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. தொடக்கத்திலியே சகோதரர்கள் மிகவும் ஆர்வமாகவும், ஆக்கப்பூர்வமான கேள்விகளையுல் தொடுத்தனர். இதற்க்கு நமது சகோதரர் மிகவும் தெளிவாக விளக்கினார்கள். இன்றைய நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில உங்கள் பார்வைக்கு.
- நபிகளார் அவர்கள் 25 வயதில், 40 வயதுடைய பெண்ணை திருமணம் செய்துகொண்டது ஏன்?
- சாதாரண மனிதராக தற்போதுள்ள நீங்கள் MLA, MP ஆனால் இதே சிந்தாந்தத்தை கூறுவீர்களா?
- மாற்று மதத்தவர்களை ஏன் திருமணம் செய்துகொள்ள இஸ்லாமியர்கள் தடுக்கிறார்கள்?
- காதல் திருமணத்தைப் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?
- பலதர மணத்தை இஸ்லாம் ஏன் ஆதரிக்கிறது?
இது போன்ற இன்னும் பல அறிவுப்பூர்வமான கேள்விகளை குழுமியிருந்த நண்பர்கள் கேட்டு விளக்கம் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியின் சிறந்த 2 கேள்விகளுக்கு 2 குர்ஆன் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் வந்திருந்த அனைத்து மாற்று மத நண்பர்களுக்கும் இலவசமாக அநேக புத்தகங்கள் வழங்கப்பட்டன. அவையாவன,
- இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (மாற்று மத நண்பர்களுக்கான கேள்வி பதில்கள்)
- இஸ்லாம் பெண் அடிமை தனத்தை ஆதரிக்கின்றதா?
- திருக்குர்ஆன் கூறும் அறிவியல் சான்றுகள்
- அர்த்தமுள்ள இஸ்லாம்
- வருமுன் உரைத்த இஸ்லாம்
மேலும் இலவசமாக இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் CD-களும் வழங்கப்பட்டன.
பிறகு மண்டல தாவா பொருப்பாளர் சகோ. ஹாஜா குத்புதீன் அவர்கள் முடிவுரை கூறி, வந்திருந்த சகோதரர்களை தங்களின் கருத்துக்கள் தெரிவிக்கும் படி அழைத்தார். அதை கேட்ட மாத்திரத்திலேயே மாற்று மத சகோதரர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து தத்தமது கருத்துக்களை கூறினார்கள்.
மேலும் அதிகமக இம்மாதிரியான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுமாறும், அதனாலேதான் நமது சகோதரத்துவம் இன்னும் சிறப்பாக வளரும் எனவும் தமது கருத்துக்களை பதிந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாற்று மத நண்பர்கள் மற்றும் நமது சகோதரர்கள் என பெரும் திரளாக வந்து கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை சிறப்பித்து தந்த அல்லாஹ்விற்க்கே எல்லாப் புகழும்!!!!
0 comments:
Post a Comment