அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல விடுமுறை தினத்தை பயனுள்ள வழியில் கழிக்க அமீரகத்திலிருந்து சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் வந்திருந்தது அனைவரும் அறிந்ததே.
இந்த நிகழ்ச்சியானது பஹ்ரைன் மண்டல நிர்வாகிகளின் யோசனைப்படி "நவீன உலகில் இஸ்லாம்" என்ற தலைப்பில் ஒரு கலந்தாய்வு நிகழ்ச்சி 17-12-2011 அன்று மதியம் 3 மணியளவில் ஆரம்பமானது.
இதில் நமது சகோதரர்கள் இரு தரப்பாக அமர்ந்து இஸ்லாம் ஹராமாக்கிய வட்டி, வரதட்சனை ஆகிய தலைப்புகளிலும், இன்றைய கால கட்டத்தில் குழந்தைகளை எப்படி இஸ்லாமிய முறைப்படி வளர்ப்பது மற்றும் இன்றைய உலகில் ஆடம்பர வாழ்க்கைகாக மக்கள் எப்படியெல்லாம் இஸ்லாத்திலிருந்து விலகி நடக்கிறார்கள் என்ற 4 தலைப்புகளில் கலந்தாய்வு நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது.
இதில் அமர்ந்திருந்த இரு தரப்பு சகோதரர்களும் தத்தமது கருத்துக்களை மிகத் தெளிவாக, நகைச்சுவை கலந்து, எளிய முறையில் பதித்தனர். இந்த நிகழ்ச்சியை அமீரகத்திலிருந்து சிறப்பு விருந்தினராக வந்துள்ள சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் தலைமை தாங்கி நிகழ்ச்சியை மேலும் சிறப்புற செய்தார்கள்.
இரு தரப்பு சகோதரர்களும் அவர்கள் பதிந்த கருத்துக்களின் அடிப்படையில், இஸ்லாம் எப்படியெல்லாம் இந்த நவீன உலகில் அணுக வேண்டும் என்று ஆயிரத்தி நானுறு ஆண்டுகளுக்கு முன்பே ஏக இறைவன் தனது திருமறையிலும், உம்மி நபி (ஸல்) அவர்கள் வழியாலும் சொல்லிய எச்சரிக்கின்ற வாசகங்களை எடுத்துக் காட்டி தமது விளக்கத்தை கூறி முடித்தார்.
இதன் பிறகு கலந்து கொண்ட சகோதர்களின் கருத்து கேட்ட போது, இந்த கலந்தாய்வு நிகழ்ச்சியானது மிகவும் சிறந்ததோரு நிகழ்ச்சியாகவும், இந்த காலகட்டத்தில் எப்படியெல்லாம் மக்கள் சாக்கு போக்கு கூறி இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை புறந் தள்ளுகின்றனர் என்று மிக அழகாக எடுத்துக் காட்டப்பட்டது என்று கூறி சகோதரர் அவர்கள் தமது கருத்தை பதிந்தார்கள்.
இந்த நிகழ்ச்சியை நமது மண்டல நிர்வாகிகள் மிக சிறப்பாக ஏற்பாடு செய்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
இந்த நிகழ்ச்சியானது பஹ்ரைன் மண்டல நிர்வாகிகளின் யோசனைப்படி "நவீன உலகில் இஸ்லாம்" என்ற தலைப்பில் ஒரு கலந்தாய்வு நிகழ்ச்சி 17-12-2011 அன்று மதியம் 3 மணியளவில் ஆரம்பமானது.
இதில் அமர்ந்திருந்த இரு தரப்பு சகோதரர்களும் தத்தமது கருத்துக்களை மிகத் தெளிவாக, நகைச்சுவை கலந்து, எளிய முறையில் பதித்தனர். இந்த நிகழ்ச்சியை அமீரகத்திலிருந்து சிறப்பு விருந்தினராக வந்துள்ள சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் தலைமை தாங்கி நிகழ்ச்சியை மேலும் சிறப்புற செய்தார்கள்.
இரு தரப்பு சகோதரர்களும் அவர்கள் பதிந்த கருத்துக்களின் அடிப்படையில், இஸ்லாம் எப்படியெல்லாம் இந்த நவீன உலகில் அணுக வேண்டும் என்று ஆயிரத்தி நானுறு ஆண்டுகளுக்கு முன்பே ஏக இறைவன் தனது திருமறையிலும், உம்மி நபி (ஸல்) அவர்கள் வழியாலும் சொல்லிய எச்சரிக்கின்ற வாசகங்களை எடுத்துக் காட்டி தமது விளக்கத்தை கூறி முடித்தார்.
இதன் பிறகு கலந்து கொண்ட சகோதர்களின் கருத்து கேட்ட போது, இந்த கலந்தாய்வு நிகழ்ச்சியானது மிகவும் சிறந்ததோரு நிகழ்ச்சியாகவும், இந்த காலகட்டத்தில் எப்படியெல்லாம் மக்கள் சாக்கு போக்கு கூறி இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை புறந் தள்ளுகின்றனர் என்று மிக அழகாக எடுத்துக் காட்டப்பட்டது என்று கூறி சகோதரர் அவர்கள் தமது கருத்தை பதிந்தார்கள்.
இந்த நிகழ்ச்சியை நமது மண்டல நிர்வாகிகள் மிக சிறப்பாக ஏற்பாடு செய்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment