அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தில் நிர்வாக மட்டத்திலான தாஇயி பயிற்சி முகாம் சிறப்பு விருந்தினராக அமீரகத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள சகோ. ஹாமின் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமில் நமது மண்டல நிர்வாகிகளான, சகோதரர் முபாரக், ஜெய்லானி, ஜாஹிர், மாஹின், நிரஞ்சன் ஒலி, அரஃபாத் ஆகியோர் கலந்து கொண்டு 10 நிமிட அளவிலான ஒரு சிறிய உரையை நிகழ்த்தினார்கள்.
இவர்களின் உரையைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினரான, சகோதரர் ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் தலைமை தாங்கி, சகோதரர்கள் ஆற்றிய உரையின் பிழைகளை மேற்கொள்காட்டினார்.
மேலும், இனிவரும் காலங்களில் இந்த தவறுகள் வராதமாறு உரை நிகழ்த்துமாறு கூறி சபையை முடிவுக்கு கொண்டு வந்தார்.
0 comments:
Post a Comment