Saturday, July 27, 2013

மார்க்க கேள்வி பதில் சிறப்பு நிகழ்ச்சி


அல்லாஹ் தனது அருள்மறையாம் திருமறையான திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட புனிதமிக்க ரமலான் மாதத்தில், போட்டி போட்டு கொண்டு அருளை கொள்ளையடிக்க ஒவ்வொருவரும் முயற்ச்சி செய்து வருகிறோம்.

அந்த வகையில் அவனது அருளை கொள்ளையடித்துக் கொள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் மண்டல நிர்வாகம் ஓர் அரிய வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த வியாழன்று (26-07-2013) மறுதினம் அநேகமானவருக்கு விடுமுறை தினமாக இருப்பதனால், அன்றைய இரவு “சிறப்பு இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற இஸ்லாமியர்களுக்கான பிரத்யேக கேள்வி பதில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக, திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையிலும் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே, மார்க்கத்தின் ஐய்யப்பாடுகளை விலக்கிக் கொள்ள சகோதர சகோதரிகள் தங்களது மார்க்கம் சம்பந்தமான கேள்விகளை வினாத் தொடுத்தனர். அதில் சில.
  • அல்லாஹ்வை “அவன் என்று அழைப்பது ஏன்?
  • பெண்கள் ஜனாஸா தொழுகை நடத்தலாமா?
  • மனிதன் தவறு செய்து தவ்பா செய்த பின், செய்த தவறை மறுமை நாளில் திரையிட்டு காட்டுவானா?
  • நாம் செய்கின்ற தவ்பாவை, அல்லாஹ் ஏற்றுக் கொண்டுவிட்டான் என்பதை எவ்வாறு நாம் அறிந்து கொள்வது?
  • கணவன் ஜகாத் கொடுத்த பிறகு, மனைவி ஜகாத் கொடுக்க கூடாது என்று தடுக்கலாமா?
இது போன்ற இன்னும் அதிகமான கேள்விகளுக்கு சகோதரர் முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் கேள்வி கேட்ட சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தவ்ஹீத் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே.

Saturday, July 20, 2013

ரமலான் மாத இரண்டாம் வார சிறப்பு நிகழ்ச்சிகள்


 

 அல்லாஹ்வின் கிருபையால் இறைவேதமான திருக்குர்ஆன் இறங்கிய மாதமான புனித மிக்க ரமளான் மாதத்தின் இரண்டாவது வாரத்தை அடைந்துள்ளோம். இதில் முதல் வாரத்தை போன்றே பல மார்க்க நிகழ்ச்சிகளை பஹ்ரைன் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ளது. 

இந்த புனித மிக்க ரமளான் மாதத்தில் தினமும் இஃப்தார் நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து சிறப்பு மார்க்க சொற்பொழிவுகளும் நடைபெற்று வருகிறது.

ந்த ரமளான் மாத இரண்டாம் வாரத்தில் வெற்றி பெறும் மூஃமீன்கள் என்ற தொடர் உரை நமது பஹ்ரைன் மண்டல தலமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


ஒரு முஃமீன் வெற்றி பெற வேண்டுமெனில், எப்படிபட்டவனாக இருக்கவேண்டும் என்பதையும், மார்க்க கடமைகளை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அல்லாஹ் தனது திருமறையிலும் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையின் அடிப்படையிலும், தொடர் நிகழ்ச்சியாக நடைபெற்றது.

இந்த தொடர் நிகழ்ச்சியில் சகோதரர் மனாஸ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த அனைத்து நிகழ்ச்சிகள் அனைத்திலும் பஹ்ரைன் வாழ் தமிழ் மக்களை தூய்மையான மார்க்கத்தின் பால் அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன். 

Saturday, July 13, 2013

“கேள்வி இங்கே. பதில் எங்கே?” – கருத்தரங்கம்



அல்லாஹ் தனது திருமறையான திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட இந்த புனிதமிக்க ரமலான் மாதத்தில், அவனது அருளை தேடியவர்களாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் மண்டல நிர்வாகம் ஓர் அரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

“சூனியம்”. நாம் ஒவ்வொருவரும் சூனியம் சம்பந்தமாக பல்வேறு விஷயங்களை அறிந்து வைத்திருக்கிறோம். ஒரு சிலர் உலக விஷங்களில் சூனியத்தின் தாட்பரியத்தை பற்றியும் இன்னும் சிலர் இஸ்லாத்தில் (இல்லாத ஒன்றான) சூனியம் என்று இருக்கின்றவற்றையும், இன்னும் ஒருபடி மேல் சென்று நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்டதாகவும் (அஸ்தக்ஃபிருல்லாஹ்) பல்வேறு விதமான எண்ணங்கள் உள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.

இவர்களின் சந்தேகங்களுக்கும் குழப்பங்களுக்கும் மருந்தளிக்கும் வகையில் கடந்த 11-07-2013 அன்று “கேள்வி இங்கே. பதில் எங்கே?” என்ற ஒரு சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்து கொண்ட ஒவ்வொரு சகோதர சகோதரிகளும், தாங்கள் மற்றும் தங்களது உறவினர்கள் சூனியத்தால் பாதிக்கப்பட்டதாகவும் (?), அதனால் மனநிலை பாதிப்படைந்த நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் (?), மேலும் நபிகள் நாயகத்துக்கே சூனியம் வைக்கப்பட்டதாக வருகின்ற செய்திகள் ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டதாவும் இருக்கின்றதே, என்பன போன்ற சூனியம் சம்பந்தமான தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

இவர்களின் சந்தேகங்களுக்கு சகோதரர் முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் விளக்கமளிக்கயில், சூனியம் என்பது என்ன? நாம் தற்போது சூனியம் என்று நம்புகின்றோமே (நாம் இருந்த இடத்திலிருந்தே ஒருவரின் கை, கால்களை முடக்க முடியும்), இதை தான் அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள் நாயகமும் நமக்கு கற்றுத் தந்துள்ளார்களா? என்பன போன்ற அறிவுச்சார்ந்த கேள்விகளை எழுப்பி, வாதம் வைத்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் விளக்கமளித்தார்கள்.

மேலும், சூனியம் சம்பந்தமாக நமது ஜமாஅத் நிலைபாடு என்ன என்பதையும், அதை நாம் எந்த வகையில் எடுத்திருக்கிறோம் என்பதையும் மிக அழகாக, ஆழமான குறிப்புகளோடு, தெளிவாக விளக்கினார்கள்.

இதனை தொடர்ந்து, நமது ஜமாஅத்தின் திருமண நிலைபாடு குறித்தும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு, அதற்கும் விளக்கமளிக்கும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சியானது அமைந்திருந்தது.

நமது ஜமாஅத் ஒரு விஷயத்தை பற்றி ஒரு முடிவு எடுப்பதாக இருந்தால், அதை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் தான் எடுக்கிறது என்பதையும் மேலதிக விளக்கமாக சகோதரர் அவர்கள் பதிவு செய்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தவ்ஹீத் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே.

“இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” சிறப்பு நிகழ்ச்சி



அல்லாஹ் தனது அருள்மறையாம் திருமறையான திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட புனிதமிக்க ரமலான் மாதத்தில், போட்டி போட்டு கொண்டு அருளை கொள்ளையடிக்க ஒவ்வொருவரும் முயற்ச்சி செய்து வருகிறோம்.

அந்த வகையில் அவனது அருளை கொள்ளையடித்துக் கொள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் மண்டல நிர்வாகம் ஓர் அரிய வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த வியாழன்று (11-07-2013) மறுதினம் அநேகமானவருக்கு விடுமுறை தினமாக இருப்பதனால், அன்றைய இரவு “சிறப்பு இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” என்ற இஸ்லாமியர்களுக்கான பிரத்யேக கேள்வி பதில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக, திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையிலும் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே, மார்க்கத்தின் ஐய்யப்பாடுகளை விலக்கிக் கொள்ள சகோதர சகோதரிகள் தங்களது மார்க்கம் சம்பந்தமான கேள்விகளை வினாத் தொடுத்தனர். அதில் சில.
  • புனிதமிக்க ரமலான் மாதத்தில் ஷைத்தான் விலங்கிடப்பட்டுள்ளான் என்றால், நமது தொழுகையில் சஞ்சலம் ஏற்படுவது ஏன்?
  • ரமலான் மாதத்தில் குர்ஆன் இறக்கியதாக சொல்லும் இறைவன் எந்த வசனத்தை இந்த மாதத்தில் இறக்கினான்?
  • ஏழைகள் என்பவர்கள் யார்? யாசிப்பவர்கள் என்பவர்கள் யார்?
  • ஹூலுல் கவ்ஸர் தடாகத்திலிருந்து ஸஹாபாக்கள நீர் அருந்துவதிலிருந்து தடுக்கப்படுவார்களா?
  • பெருநாளன்று நோன்பு வைப்பது ஹாரமாக இருக்கும் போது, நாம் பெருநாள் கொண்டாடும் போது மற்ற இடத்தில் நோன்பு நோற்றுள்ளார்களே, இது ஹராம் இல்லையா?

இது போன்ற இன்னும் அதிகமான கேள்விகளுக்கு சகோதரர் முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் கேள்வி கேட்ட சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தவ்ஹீத் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே.

“பெருந்தன்மை” – மண்டல மூன்றாம் நாள் பயான்




அல்லாஹ்வின் கிருபையால், இந்த வருட ரமலான் மாத்தில் தலைசிறந்த அழைப்பாளரை அழைத்து வந்து மார்க்க நிகழ்ச்சிகள் செம்மையாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில், மூன்றாம் நாளான நேற்று (12-07-2013) நமது பஹ்ரைன் மண்டலத்தின் தலைமையகத்தில் இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு, கடந்த இரண்டு தினங்களையும் விட நேற்று விடுமுறை தினமாக இருந்ததனால் அல்லாஹ்வின் கிருபையால் இன்னும் அதிகமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

அதனை தொடர்ந்து, சகோதரர் முஹம்மது ஃபஸிஹ் அவர்கள், “இறைமறை கூறும் நற்பண்புகள்” என்ற தலைப்பின் உட்தலைப்பான “பெருந்தன்மை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் ஏராளமான தவ்ஹீத் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

“அண்டை வீட்டார் நலம் பேணுதல்” – மண்டல இரண்டாம் நாள் பயான்


அல்லாஹ்வின் கிருபையால், இந்த வருட ரமலான் மாத்தில் தலைசிறந்த அழைப்பாளரை அழைத்து வந்து மார்க்க நிகழ்ச்சிகள் செம்மையாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில், நேற்றைய முதல் தினத்தை தொடர்ந்து இரண்டாம நாளன்றும் (11-07-2013) நமது பஹ்ரைன் மண்டலத்தின் தலைமையகத்தில் இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

அதனை தொடர்ந்து, சகோதரர் முஹம்மது ஃபஸிஹ் அவர்கள், “இறைமறை கூறும் நற்பண்புகள்” என்ற தலைப்பின் உட்தலைப்பான “அண்டை வீட்டார் நலம் பேணுதல்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் ஏராளமான தவ்ஹீத் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

“பொறுமை” – மண்டல ரமலான் முதல் நாள் பயான்


அல்லாஹ்வின் கிருபையால், ஒவ்வொரு வருடமும் புனிதமிக்க ரமலான் மாதத்தில் மார்க்கத்தை முறையாக கற்றறிந்த அழைப்பாளரை அழைத்து வந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் மண்டலத்தின் சார்பாக தாவா நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது அனைவரும் அறிந்ததே.

அதன் தொடர்ச்சியாக, இந்த வருடமும் ஏக இறைவனின் உதவியால் அழைப்பாளரை அழைத்து வந்து மார்க்க நிகழ்ச்சிகள் செவ்வனையே நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு அங்கமாக, நமது பஹ்ரைன் மண்டலத்தின் தலைமையகத்தில் ரமலான் மாதத்தின் முதல் நாளான்று (10-07-2013) இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

அதன் தொடர்ச்சியாக சகோதரர் முஹம்மது ஃபஸிஹ் அவர்கள், “இறைமறை கூறும் நற்பண்புகள்” என்ற தலைப்பின் முதல் நாளானன்று அதன் உட்தலைப்பான “பொறுமை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் ஏராளமான தவ்ஹீத் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

இந்த நிகழ்ச்சியானது தினமும், இஃப்தார் மற்றும் அதனை தொடர்ந்து ஒவ்வொரு தலைப்பிலும் சிறப்பு மார்க்க உரை நிகழ்த்தப்படுகிறது. தாங்கள் மற்றும் தங்களின் நண்பர்கள் அனைவரையும் இந்த மார்க்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செய்து, இந்த புனிதமிக்க ரமலான் மாதத்தில் இம்மை மற்றும் மறுமை ஈருலகிலும் வெற்றி பெற வேண்டுமாய் அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன். 

“பெருந்தன்மை” – ஹித் கிளை ரமலான் மூன்றாம் நாள் பயான்



அல்லாஹ்வின் கிருபையால், இந்த வருட ரமலான் மாத்தில் தலைசிறந்த அழைப்பாளரை அழைத்து வந்து மார்க்க நிகழ்ச்சிகள் ஹித் கிளையில் செம்மையாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில், மூன்றாம் நாளன நேற்று (12-07-2013) ஹித் கிளையில் இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
அதனை தொடர்ந்து, சகோதரர் மனாஸ் அவர்கள், “இறைமறை கூறும் நற்பண்புகள்” என்ற தலைப்பின் உட்தலைப்பான “பெருந்தன்மை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் ஏராளமான தவ்ஹீத் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

“அண்டை வீட்டார் நலம் பேணுதல்” – ஹித் கிளை இரண்டாம் நாள் பயான்


அல்லாஹ்வின் கிருபையால், இந்த வருட ரமலான் மாத்தில் தலைசிறந்த அழைப்பாளரை அழைத்து வந்து மார்க்க நிகழ்ச்சிகள் செம்மையாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே.
 
அந்த வகையில், நேற்றைய முதல் தினத்தை தொடர்ந்து இரண்டாம் நாளன்றும் (11-07-2013) ஹித் கிளையில் இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து, சகோதரர் மனாஸ் அவர்கள், “இறைமறை கூறும் நற்பண்புகள்” என்ற தலைப்பின் உட்தலைப்பான “அண்டை வீட்டார் நலம் பேணுதல்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
 
இதில் ஏராளமான தவ்ஹீத் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

“பொறுமை” – ஹித் கிளை ரமலான் முதல் நாள் பயான்



அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் ஒரு கிளையாக செயல்பட்டு வரும் ஹித் பகுதியில், இந்த வருடம் முதல் முறையாக ஏக இறைவனின் பேருதவியால் ரமலான் மாதத்தில் இஃப்தார் மற்றும் அதனை தொடர்ந்து சிறப்பு பயான் நிகழ்ச்சிகளை, மார்க்கத்தை முறையாக கற்றறிந்த அழைப்பாளரை அழைத்து வந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் சார்பாக தாவா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

அதன் ஒரு அங்கமாக, ஹித் கிளையில் ரமலான் மாதத்தின் முதல் நாளான்று (10-07-2013) இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் அதிகமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

அதனை தொடர்ந்து சகோதரர் மனாஸ் அவர்கள், “இறைமறை கூறும் நற்பண்புகள்” என்ற தலைப்பின் முதல் நாளானன்று அதன் உட்தலைப்பான “பொறுமை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் அதிகமான தவ்ஹீத் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!


இந்த நிகழ்ச்சியானது தினமும், இஃப்தார் மற்றும் அதனை தொடர்ந்து ஒவ்வொரு தலைப்பிலும் சிறப்பு மார்க்க உரை நிகழ்த்தப்படுகிறது. தாங்கள் மற்றும் தங்களின் நண்பர்கள் அனைவரையும் இந்த மார்க்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செய்து, இந்த புனிதமிக்க ரமலான் மாதத்தில் இம்மை மற்றும் மறுமை ஈருலகிலும் வெற்றி பெற வேண்டுமாய் அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன், ஹித். 

Saturday, July 6, 2013

"ரமளானில் அருள் பெறுவோம்" தலைமை பயான் நிகழ்ச்சி


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (05-07-2013) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோதரர். ஜெய்லானி அவர்கள், "ரமளானில் அருள் பெறுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

"நோன்பு" ஹித் கிளை பயான்


அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (05-07-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோ. முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் "நோன்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

பெண்களுக்கான தஃப்ஸீர் வகுப்பு


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பெண்களுக்கான குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு நேற்று (05-07-2013) அஸர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
 
இதில் அதிகமான சகோதரிகள் மார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் அறிந்துகொள்ள, ஆலீம் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த வகுப்பில் அதிகமான சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!! 

"தொழுகை ஓதக்கூடியவைகள்" ஆண்களுக்கான வகுப்பு (இரண்டாம் பகுதி)

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 03-07-2013 அன்று ஆண்களுக்கான பிரத்யேக வகுப்பானது, தொழுகையில் நாம் ஓதக்கூடிய துஆக்களை அதன் அர்த்தத்துடன் கூடிய விஷயங்களின் தொகுப்பை நேற்று நடைபெற்ற வகுப்பின் தொடர்ச்சியாக இரண்டாம் பகுதி, சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள். 

இந்த வகுப்பில் தொழுகை ஆரம்பத்திலிருந்து, கடைசியாக ஸலாம் வரை என்னென்ன துஆக்கள் ஓதப்படவேண்டும், அவையனைத்தும் ஆதாரப்பூர்வமானவையா என்பதனை தொகுத்து இரண்டாம் பகுதியாக இந்த வகுப்பில் நடத்தப்பட்டது.  
 
இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்ந்துலில்லாஹ்.

"தொழுகை ஓதக்கூடியவைகள்" ஆண்களுக்கான வகுப்பு (முதல் பகுதி)

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 02-07-2013 அன்று ஆண்களுக்கான பிரத்யேக வகுப்பானது, தொழுகையில் நாம ஓதக்கூடிய துஆக்களை அதன் அர்த்தத்துடன் கூடிய விஷயங்களின் தொகுப்பை முதல் பகுதியாக, சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள். 

இந்த வகுப்பில் தொழுகை ஆரம்பத்திலிருந்து, கடைசியாக ஸலாம் வரை என்னென்ன துஆக்கள் ஓதப்படவேண்டும், அவையனைத்தும் ஆதாரப்பூர்வமானவையா என்பதனை தொகுத்து முதல் பகுதியாக இந்த வகுப்பில் நடத்தப்பட்டது.  
 
இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்ந்துலில்லாஹ்.
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்