Saturday, July 13, 2013

“பொறுமை” – ஹித் கிளை ரமலான் முதல் நாள் பயான்



அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் ஒரு கிளையாக செயல்பட்டு வரும் ஹித் பகுதியில், இந்த வருடம் முதல் முறையாக ஏக இறைவனின் பேருதவியால் ரமலான் மாதத்தில் இஃப்தார் மற்றும் அதனை தொடர்ந்து சிறப்பு பயான் நிகழ்ச்சிகளை, மார்க்கத்தை முறையாக கற்றறிந்த அழைப்பாளரை அழைத்து வந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் சார்பாக தாவா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

அதன் ஒரு அங்கமாக, ஹித் கிளையில் ரமலான் மாதத்தின் முதல் நாளான்று (10-07-2013) இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் அதிகமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

அதனை தொடர்ந்து சகோதரர் மனாஸ் அவர்கள், “இறைமறை கூறும் நற்பண்புகள்” என்ற தலைப்பின் முதல் நாளானன்று அதன் உட்தலைப்பான “பொறுமை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் அதிகமான தவ்ஹீத் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!


இந்த நிகழ்ச்சியானது தினமும், இஃப்தார் மற்றும் அதனை தொடர்ந்து ஒவ்வொரு தலைப்பிலும் சிறப்பு மார்க்க உரை நிகழ்த்தப்படுகிறது. தாங்கள் மற்றும் தங்களின் நண்பர்கள் அனைவரையும் இந்த மார்க்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செய்து, இந்த புனிதமிக்க ரமலான் மாதத்தில் இம்மை மற்றும் மறுமை ஈருலகிலும் வெற்றி பெற வேண்டுமாய் அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன், ஹித். 

0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்