Saturday, July 13, 2013

“இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” சிறப்பு நிகழ்ச்சி



அல்லாஹ் தனது அருள்மறையாம் திருமறையான திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட புனிதமிக்க ரமலான் மாதத்தில், போட்டி போட்டு கொண்டு அருளை கொள்ளையடிக்க ஒவ்வொருவரும் முயற்ச்சி செய்து வருகிறோம்.

அந்த வகையில் அவனது அருளை கொள்ளையடித்துக் கொள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் மண்டல நிர்வாகம் ஓர் அரிய வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த வியாழன்று (11-07-2013) மறுதினம் அநேகமானவருக்கு விடுமுறை தினமாக இருப்பதனால், அன்றைய இரவு “சிறப்பு இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” என்ற இஸ்லாமியர்களுக்கான பிரத்யேக கேள்வி பதில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக, திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையிலும் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே, மார்க்கத்தின் ஐய்யப்பாடுகளை விலக்கிக் கொள்ள சகோதர சகோதரிகள் தங்களது மார்க்கம் சம்பந்தமான கேள்விகளை வினாத் தொடுத்தனர். அதில் சில.
  • புனிதமிக்க ரமலான் மாதத்தில் ஷைத்தான் விலங்கிடப்பட்டுள்ளான் என்றால், நமது தொழுகையில் சஞ்சலம் ஏற்படுவது ஏன்?
  • ரமலான் மாதத்தில் குர்ஆன் இறக்கியதாக சொல்லும் இறைவன் எந்த வசனத்தை இந்த மாதத்தில் இறக்கினான்?
  • ஏழைகள் என்பவர்கள் யார்? யாசிப்பவர்கள் என்பவர்கள் யார்?
  • ஹூலுல் கவ்ஸர் தடாகத்திலிருந்து ஸஹாபாக்கள நீர் அருந்துவதிலிருந்து தடுக்கப்படுவார்களா?
  • பெருநாளன்று நோன்பு வைப்பது ஹாரமாக இருக்கும் போது, நாம் பெருநாள் கொண்டாடும் போது மற்ற இடத்தில் நோன்பு நோற்றுள்ளார்களே, இது ஹராம் இல்லையா?

இது போன்ற இன்னும் அதிகமான கேள்விகளுக்கு சகோதரர் முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் கேள்வி கேட்ட சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தவ்ஹீத் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே.

0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்