Saturday, July 13, 2013

“பொறுமை” – மண்டல ரமலான் முதல் நாள் பயான்


அல்லாஹ்வின் கிருபையால், ஒவ்வொரு வருடமும் புனிதமிக்க ரமலான் மாதத்தில் மார்க்கத்தை முறையாக கற்றறிந்த அழைப்பாளரை அழைத்து வந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் மண்டலத்தின் சார்பாக தாவா நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது அனைவரும் அறிந்ததே.

அதன் தொடர்ச்சியாக, இந்த வருடமும் ஏக இறைவனின் உதவியால் அழைப்பாளரை அழைத்து வந்து மார்க்க நிகழ்ச்சிகள் செவ்வனையே நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு அங்கமாக, நமது பஹ்ரைன் மண்டலத்தின் தலைமையகத்தில் ரமலான் மாதத்தின் முதல் நாளான்று (10-07-2013) இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

அதன் தொடர்ச்சியாக சகோதரர் முஹம்மது ஃபஸிஹ் அவர்கள், “இறைமறை கூறும் நற்பண்புகள்” என்ற தலைப்பின் முதல் நாளானன்று அதன் உட்தலைப்பான “பொறுமை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் ஏராளமான தவ்ஹீத் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

இந்த நிகழ்ச்சியானது தினமும், இஃப்தார் மற்றும் அதனை தொடர்ந்து ஒவ்வொரு தலைப்பிலும் சிறப்பு மார்க்க உரை நிகழ்த்தப்படுகிறது. தாங்கள் மற்றும் தங்களின் நண்பர்கள் அனைவரையும் இந்த மார்க்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செய்து, இந்த புனிதமிக்க ரமலான் மாதத்தில் இம்மை மற்றும் மறுமை ஈருலகிலும் வெற்றி பெற வேண்டுமாய் அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன். 

0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்