Showing posts with label நபித்தோழர்கள். Show all posts
Showing posts with label நபித்தோழர்கள். Show all posts

Sunday, July 3, 2011

இஸ்லாத்தை ஏற்ற முதல் முஸ்லீம் வரகா பின் நவ்ஃபல் (ரலி)


இஸ்லாத்தை ஏற்ற முதல் முஸ்லீம் வரகா பின் நவ்ஃபல் (ரலி)


(1997 மார்ச் மாத அல்ஜன்னத் பத்திரிக்கையில் பிரபல எழுத்தாளரும், ஆய்வாளருமான சகோதரர் எம்.ஐ. சுலைமான் அவர்களினால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரையை காலத்தின் தேவை கருதி இங்கு வெளியிடுகிறோம்.)

ஹிராக் குகையில் திருமறை வசனங்களை ஓதிக்காட்டிய ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பார்த்துப் பயந்தவர்களாக நபி (ஸல்) அவர்கள் தமது துணைவியார் கதீஜா (ரலி) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறிவிட்டு,

தனக்கு ஏதும் நிகழ்ந்து விடுமோ என தான் உறுதியாக அஞ்சுவதாகக் கூறினார்கள். அப்போது கதீஜா (ரலி) அவர்கள் அவ்வாறு கூறாதீர்கள் உங்களை அல்லாஹ் ஒரு போதும் இழிவுபடுத்த மாட்டான் ஏனெனில் தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள், (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள், வரியவர்களுக்கு உழைக்கிறீர்கள், விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள், உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகின்றீர்கள் என்றார்கள்.

பின்னர் நபியவர்களை வரகாவிடம் அழைத்துச் சென்றார்கள் வரகா அறியாமைக் காலத்திலேயே கிருத்தவ மதத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும் அவர் ஹீப்ரு மொழியில் எழுதத் தெரிந்தவராகவும், இன்ஜீல் வேதத்தை ஹீப்ரு மொழியில் அவர் எழுத வேண்டும் என்று அல்லாஹ் நாடிய அளவிற்கு எழுதுகிறவராகவும், கண் பார்வையற்ற பெரும் வயோதிகராகவும் இருந்தார்.

அவரிடம் கதீஜா (ரலி) அவர்கள் என் தந்தையின் சகோதரர் மகனே! உம் சகோதரர் மகன் கூறுவதைக் கேளுங்கள்! என்றார்கள். அப்போது வரகா நபியவர்களிடம் என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்? எனக் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் கூறினார்கள்.

அதைக் கேட்டதும் வரகா நபி (ஸல்) அவர்களிடம், வந்த இவர்தாம் மூஸாவிடம் இறைவன் அனுப்பிய நாமூஸ் (ஜிப்ரீல்) ஆவார் என்று கூறிவிட்டு உமது சமூகத்தினர்கள் உம்மை உமது நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே! என்று அங்கலாய்த்துக் கொண்டார்.

அப்போது நபியவர்கள் மக்கள் என்னை வெளியேற்றவரா போகிறார்கள்? என்று கேட்டார்கள் அதற்கவர் ஆம் நீர் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும், (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீர் வெளியேற்றப் படும்) அந்நாளை நான் அடைந்தால் உமக்கு பலமான உதவி செய்வேன். என்று கூறினார். அதன் பின் வரகா நீண்ட நாள் வாழாமல் மரணித்து விட்டார். இந்த முதற் செய்தியுடன் வஹீ (சிறிது காலம்) நின்று விட்டது.

(புகாரி 3,6982 முஸ்லிம்)

தாம் இறைத் தூதர் என்று வரகா அவர்கள் உறுதிப் படுத்தியதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்களுக்கு இறை செய்தி (சிறிது காலம்) தடைப்பட்டது என்று மேற்கூறிய செய்தி குறிப்பிடுகிறது.

எத்தனை நாட்கள் வஹீ வராமல் இருந்தது என்பதில் அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார்கள். மூன்று வருடங்கள் என்று சிலரும், ஆறு மாதங்கள் என்று சிலரும்,சில நாட்கள் என்று இன்னும் சிலரும் குறிப்பிடுகின்றனர். இவர்கள் குறிப்பிடும் இந்தக் காலக் கணக்கிற்கு எந்தச் சான்றும் ஸஹீஹான ஹதீஸ்களில் இல்லை.

வரகா பின் நவ்ஃபல் இஸ்லாத்தை ஏற்றாரா? 

நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் என்பதை உறுதிப் படுத்திய வராக அவர்கள் முஸ்லிமா? இல்லையா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. அவர் தொடர்பாக வந்துள்ள நபி மொழிகளை காண்போம்.

1. கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வரகா இப்னு நவ்ஃபல் அவர்களைப் பற்றிக் கேட்ட பொது "அவர் வெள்ளை நிற ஆடை அணிவிக்கப்பட்டவராக கண்டேன். அவர் நரகவாதியாக இருந்திருந்தால் அவர் மீது வெள்ளை ஆடை இருந்திருக்காது" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : அஹ்மத்

2. வரகாவை பற்றி கதீஜா (ரலி) அவர்கள் நபியவர்களிடம் கேட்டார்கள். "உங்களை அவர் உண்மைப் படுத்தினார் ஆனால் (இம்மார்கத்தை நீங்கள்) வெளிப்படுத்துவதற்கு முன் இறந்து விட்டாரே!" அதற்கு "கணவில் எனக்கு அவர் காட்டப்பட்டார். அவர் மீது வெள்ளை நிற ஆடை இருந்தது. அவர் நரகவாதியாக இருந்தால் அவர் மீது வேறு ஆடை இருந்திருக்கும்." என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : திர்மிதி

3. வரகா பின் நவ்ஃபல் அவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது "அவர் மீது வெள்ளை நிற ஆடை இருக்கக் கண்டேன். அவரை சுவர்க்கத்தில் கண்டேன். அவர் மீது பட்டாடை இருந்தது" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : அபு யஃலா

4. வரகா அவர்கள் இறந்த போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (வரகாவிற்கு) ஜன்னத்தில் (சுவர்கத்தில்) ஒரு கோட்டையைக் கண்டேன். அவர் மீது பட்டாடை இருந்தது. (ஏனெனில்) அவர் நான் கொண்டு வந்ததை நம்பினார். உண்மைப்படுத்தினார்.

அறிவிப்பவர் : அம்ர் பின் ஸர்ஹபீல் 
நூற்கள் பைஹகீ ஆபு நுஐம் (தலாயிலுன் நுப்வா)

5. "வரகாவை ஏசாதீர்கள் அவருக்காக ஒன்றோ, இரண்டோ சுவர்கத்தைப் பார்த்தேன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி)
நூற்கள் : பஸ்ஸார் இப்னு அஸாகீர்

மேற்கண்ட ஹதீஸ்களில் முதல் நான்கு செய்திகள் பலவீனமானவையாகும். ஐந்தாவது ஹதீஸ் இடம் பெரும் நூற்களில் இப்னு அஸாகீர் நூலின் அறிவிப்பாளர் வரிசை பலமானதாகும் என்று இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (அல்பிதாயா)

இப்னு அஸாகீரில் இடம் பெரும் ஹதீஸின் அடிப்படையில் வரகா அவர்களை முஸ்லீம், சுவர்க்கவாதி என்று முடிவு செய்யலாம். மேலும் புகாரியின் (3, 6982) அறிவிப்பில்,

"உமது சமூகத்தார் உம்மை உமது நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே!" என்று அங்களாய்த்துக் கொண்டார்.

"(நீர் வெளியேற்றப்படும்) அந்நாளை நான் அடைந்தால் உமக்க பலமான உதவி செய்வேன்." என்று கூறினார்.

இந்த வாசகங்கள் வரகா அவர்கள் நபி (ஸல்) அவரக்ள் கொண்டு வந்த இறைச் செய்தியின் மீது ஆழமாக நம்பிக்கை கொண்டிருக்கிறார் என்பதையே வெளிப்படுத்துகிறது.

ஈமான் என்பது இறைச் செய்தியையும், இறைத் தூதரையும் மனதால் நம்புவதுதான். இதை வரகா அவர்கள் ஏற்றுள்ளதினால் அவரை முஸ்லீம் என்று சொல்வதே சரியானதாகும்.

இதன் அடிப்படையில் இஸ்லாத்தை ஏற்ற முதல் நபர் என்ற பெருமையை வரகா (ரலி) அவர்கள் பெருகிறார்கள்.

தப்ரீ, இப்னு கானிஃ, இப்னு ஸகன் போன்ற அறிஞர்கள் வரகா அவர்களை நபித் தோழர்கள் என்றே கூறுகிறார்கள். (அல் இஸாபா)

Friday, July 1, 2011

அடக்கு முறைக்கு அஞ்சாத அபூதர் அல் கிப்பாரி (ரலி)


அடக்கு முறைக்கு அஞ்சாத அபூதர் அல் கிப்பாரி (ரலி)

அபுதர் அல் கிப்பாரி (ரலி) அவர்களின் வாழ்க்கையையும் அதில் நாம் பெற வேண்டிய படிப்பினைகளையும் அறிவோம்.அபுதர் அல் கிப்பாரி (ரலி) பற்றி ஓர் அறிமுகம்பெயர் : ஜுன்துப் இப்னு ஜுனாதாத் இப்னு சுப்யான் இப்னு உபைத் இப்னு ஹராம் இப்னு கிப்பார் இப்னு முலைல் இப்னு லம்hரா இப்னு பக்ர் இப்னு அப்து மனாத் இப்னு கினானா என்பதாகும்.
இவரது புனைப் பெயர் அபு தர் என்பதாகும்.மேலும் இவர் அல் கிப்பார் குலத்தைச் சேர்ந்தவர் ஆவார். தந்தையின் பெயர் :
ஜுனாதாத் இப்னு சுப்யான்தாயின் பெயர் : ரம்லத் பின்து வகீஆ ரலி அவர்கள்மனைவியின் பெயர் : உம்மு தர் ரலி அவர்கள் சகோதரரின் பெயர் :     உனைஸ் இப்னு ஜுனாதா ரலி அவர்கள்ஆதாரம் :     அஹ்மத் .சீரத்து அஃலாமுன் நுபலா.
இஸ்லாத்தை தழுவிய அபுதர்ரும் குடும்பத்தாரும்.இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்காக வேண்டி தனது ஊரிலிருந்து மக்கா நகரிற்கு வந்து சில நாட்கள் அங்கு தங்கியிருந்தார்கள்.பிறகு இரகசியமாக முஹம்மது நபி அவர்கள் இருக்கும் இடத்தை விசாரித்து அங்கு சென்று இஸ்லாத்தை தழுவினார்கள்.அபுதர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை தழுவிய போது மக்காவில் யாராவது இஸ்லாத்தை தழுவியதாக கூறினால் உடனே விசாரனையில்லாமல் அடிக்கக்கூடியவர்களாக மக்கத்துக் காபிர்கள் இருந்தார்கள்.அப்படியான நிலை இருந்தும் இஸ்லாத்தை தழுவியவுடனே பகிரங்கமாக இஸ்லாத்தை வெளிப்படுத்திய ஒரு உண்மைக் கொள்கைவாதியாவார். இதைப் பின் வரும் ஹதீஸ் சொல்கிறது.
அபூ ஜம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:எங்களிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “அபூதர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய விதம் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று கேட்க, நாங்கள் “சரி (அறிவியுங்கள்)” என்றோம். அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: அப+தர் (ரலி) அவர்கள் (என்னிடம்) சொன்னார்கள்: நான் கிஃபார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனாக இருந்தேன். அப்போது “ஒரு மனிதர் தம்மை நபி என்று வாதிட்டபடி மக்கா நகரில் புறப்பட்டிருக்கிறார்” என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. ஆகவே நான் என் சகோதரர்(அனீஸ்)இடம், “நீ இந்த மனிதரிடம் போய்ப் பேசி அவரது செய்தியை (அறிந்து) என்னிடம் கொண்டு  வா” என்று  சொன்னேன். அவ்வாறே அவர் சென்று அவரைச் சந்தித்துப் பிறகு திரும்பி வந்தார். நான், “உன்னிடம்  என்ன செய்தி உண்டு?”  என்று கேட்டேன். “நன்மை புரியும்படி கட்டளையிடவும் தீமையிலிருந்து (மக்களைத்) தடுக்கவும் செய்கின்ற ஒரு மனிதராக நான் அவரைக் கண்டேன்” என்றார். நான் அவரிடம், “போதிய செய்தியை எனக்கு நீ கொண்டுவரவில்லை” என்று கூறினேன். பிறகு தோலினால் ஆன (தண்ணீர்ப்)பையையும் கைத்தடியையும் எடுத்துக் கொண்டு மக்காவை நோக்கிச் சென்றேன்.அவரை நான் (தேடி வந்திருப்பதாகக்) காட்டிக் கொள்ளாமலிருக்கத் தொடங்கினேன். அவரைப் பற்றி விசாரிக்கவும் நான் விரும்ப வில்லை. (வேறு உணவு இல்லாததால்) ஸம்ஸம் தண்ணீரைக் குடித்துக் கொண்டு இறையில்லத்தில் (தங்கி) இருந்தேன். அப்போது அலீ (ரலி) அவர்கள் (கஅபாவில்) என்னைக் கடந்து சென்றார்கள். (என்னைக் கண்டதும்), “ஆள் (ஊருக்குப்) புதியவர் போலத் தெரிகிறதே” என்று கேட்டார்கள். நான், “ஆம்” என்றேன். உடனே அவர்கள், “அப்படியென்றால் (நம்) வீட்டிற்கு நடங்கள் (போகலாம்)” என்று சொன்னார்கள். நான் அவர்களுடன் எதைப் பற்றியும் கேட்காமலும்  (எதையும்) அவர்களுக்குத் தெரிவிக்காமலும் சென்றேன். காலையானதும் நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரிக்க இறையில்லத்திற்குச் சென்றேன். ஆனால், (அங்கு) ஒருவரும் அவர்களைப் பற்றி எதையும் எனக்குத் தெரிவிக்கவில்லை. அப்போது அலீ (ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். “மனிதர் (தான் தங்க வேண்டியுள்ள) தன் வீட்டை அடையாளம் தெரிந்து கொள்ளும் நேரம் இன்னும் வரவில்லையா?” என்று (சாடையாகக்) கேட்டார்கள். நான், “இல்லை” என்றேன். உடனே அலீ (ரலி) அவர்கள், “என்னுடன் நடங்கள்” என்று சொல்லிவிட்டு, “உங்கள் விவகாரம் என்ன? இந்த ஊருக்கு எதற்காக வந்தீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு, “நான் சொல்வதைப் பிறருக்குத் தெரியாமல் நீங்கள் மறைப்பதாயிருந்தால் நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்” என்று நான் சொன்னேன். அதற்கு அவர்கள், “அவ்வாறே செய்கிறேன்” என்று சொன்னார்கள். நான் அப்போது “இங்கே தம்மை இறைத் தூதர் என்று வாதிட்டபடி ஒரு மனிதர் புறப்பட்டிருக்கிறார்” என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. ஆகவே, நான் என் சகோதரரை அவரிடம் பேசும்படி அனுப்பினேன். போதிய பதிலை என்னிடம் அவர் கொண்டு வரவில்லை. ஆகவே, நான் அவரை (நேரடியாகச்) சந்திக்க விரும்பினேன்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “நீங்கள் நேரான வழியை அடைந்துள்ளீர்கள். இது நான் அவரிடம் செல்லும் நேரம். ஆகவே என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள். நான் நுழையும் வீட்டில் நீங்கள் நுழையுங்கள். ஏனெனில்,  (என்னுடன் வருவதால்) இவனால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று நான் அஞ்சுகின்ற ஒருவனைக் காண்பேனாயின், என் செருப்பைச் சரி செய்பவனைப் போல் சுவரோரமாக நான் நின்று கொள்வேன். நீங்கள் போய்க் கொண்டிருங்கள்” என்று சொன்னார்கள். இறுதியில் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் செல்ல, நானும் அவர்களுடன் உள்ளே சென்றேன். நான் நபி (ஸல்) அவர்களிடம், “எனக்கு இஸ்லாத்தை எடுத்துரையுங்கள்” என்று சொன்னேன். அவர்கள் அதை எடுத்துரைத்தார்கள். நான் இருந்த அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அப+தர்ரே! (நீ இஸ்லாத்தை  ஏற்ற) இந்த விஷயத்தை மறைத்து வை. உன் ஊருக்குத் திரும்பிச் செல். நாங்கள் மேலோங்கி விட்ட செய்தி உனக்கு எட்டும் போது எங்களை நோக்கி வா” என்று சொன்னார்கள். அதற்கு நான், “உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நான் இதை (ஏகத்துவக் கொள்கையை) அவர்களுக் கிடையே உரக்கச் சொல்வேன்” என்று சொல்லிவிட்டு, இறையில்லத்திற்கு வந்தேன். அப்போது குறைஷிகள் அங்கே இருந்தனர். நான், “குறைஷிக் குலத்தாரே! “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை” என்று நான் உறுதி கூறுகின்றேன். “முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்” என்றும் நான் உறுதி கூறுகின்றேன்” என்று சொன்னேன். உடனே, அவர்கள் “இந்த மதம் மாறி(ய துரோகி)யை எழுந்து சென்று கவனியுங்கள்” என்று சொன்னார்கள். அவர்கள் எழுந்து வந்தார்கள். என் உயிர் போவது போல் நான் அடிக்கப்பட்டேன். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னை அடையாளம் புரிந்துகொண்டு என் மீது கவிழ்ந்து (அடிபடாமல் பார்த்துக்) கொண்டார்கள். பிறகு குறைஷிகளை நோக்கி, “உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்! கிஃபார் குலத்தைச் சேர்ந்த மனிதரையா நீங்கள் கொல்கிறீர்கள்? நீங்கள் வியாபாரம் செய்யுமிடமும் நீங்கள் (வாணிபத்திற்காகக்) கடந்து செல்ல வேண்டிய பாதையும் கிஃபார் குலத்தவர் வசிக்குமிடத்தையொட்டித் தானே உள்ளது! (அவர்கள் பழிவாங்க வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?) என்று கேட்டார்கள். உடனே அவர்கள் என்னை விட்டு விலகிவிட்டார்கள். மறு நாள் காலை வந்தவுடன் நான் திரும்பிச் சென்று நேற்று சொன்னதைப் போலவே சொன்னேன். அவர்கள், “இந்த மதம் மாறி(ய துரோகி)யை எழுந்து சென்று கவனியுங்கள்” என்று சொன்னார்கள். நேற்று என்னிடம் நடந்து கொண்டதைப் போலவே நடந்து கொண் டார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னைப் புரிந்து கொண்டு என் மீது கவிழ்ந்து (அடி படாதவாறு பார்த்துக்) கொண்டார்கள். நேற்று அப்பாஸ் அவர்கள் சொன்னதைப் போலவே (அன்றும்) சொன்னார்கள் -இதை அறிவித்த பிறகு- இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “இது அப+தர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய ஆரம்பக் காலத்தில் நடந்த நிகழ்ச்சியாகும். அல்லாஹ் அப+தருக்கு கருணை காட்டுவானாக!” என்று சொன்னார்கள்.
(நூல் : புகாரி – 3522.)
அபுதர் ரலி அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது மட்டுமல்லாமல் தனது குடும்பத்தாருக்கும் ஊராருக்கும்  இஸ்லாத்தைப் பற்றிக் கூறி அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.என்பதை பின் வரும் நபி மொழி கூறுகின்றது.
நான் (என் சகோதரர்) உனைஸிடம் திரும்பிச் சென்றேன். அப்போது உனைஸ் “நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்று கேட்டார். “நான் இஸ்லாத்தை ஏற்று, (அதை) உண்மையென நம்பினேன்” என்று கூறினேன். உனைஸ், “(நீங்கள் ஏற்றுள்ள) உமது மார்க்கத்தைப் புறக்கணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. நானும் இஸ்லாத்தை ஏற்று, (அதை) உண்மையென நம்புகிறேன்” என்று கூறினார்.பிறகு நாங்கள் எங்கள் தாயாரிடம் சென்றோம். (நாங்கள் இஸ்லாத்தைத் தழுவிய விவரத்தைக் கூறினோம்.) அப்போது என் தாயார், “(நீங்கள் இருவரும் ஏற்றுள்ள) உங்கள் மார்க்கத்தைப் புறக் கணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. நானும் இஸ்லாத்தைத் தழுவி, (அதை) உண்மையென நம்புகிறேன்” என்று கூறினார்.பிறகு நாங்கள் எங்கள் வாகனத்தில் ஏறி எங்கள் “கிஃபார்” குலத்தாரைச் சென்றடைந்தோம். அவர்களில் பாதிப்பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு அய்மா பின் ரஹளா அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் முன்னின்று தொழுகை நடத்தினார்@ அவரே அம்மக்களுக்குத் தலைவராக இருந்தார்.ஃகிஃபார் குலத்தாரில் இன்னும் பாதிப்பேர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வரும்போது நாங்கள் இஸ்லாத்தை ஏற்போம்” என்று கூறினர். அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, எஞ்சியிருந்த பாதிப்பேரும் இஸ்லாத்தை ஏற்றனர்.“அஸ்லம்” குலத்தார் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) சென்று, “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் சகோதரக் குலத்தார் எந்த அடிப்படையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண் டார்களோ அதே அடிப்படையில் நாங்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோம்” என்று கூறினர்.அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(பெயருக்கேற்பவே) ஃகிஃபார்” குலத்தாரை அல்லாஹ் மன்னித்துவிட்டான் “அஸ்லம்” குலத்தாரைப் பாதுகாப்புப் பெற்ற வர்களாக ஆக்கிவிட்டான்” என்று கூறினார்கள்.
(நூல் : முஸ்லிம் – 4878.)
நபிகளாரின் உபதேசத்தை பெற்ற நபித் தோழர்நபித் தோழர்கள் தவறு செய்யும் போது நபிகளாரின்  உபதேசத்தைப் பெற்ற நபித் தோழர்கள் ஏராளம் இருக்கின்றனர்.அவ்வாறு நபிகளாரின் உபதேசத்தைப் பெற்றவர் தான் அபுதர் (ரலி) அவர்கள்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபுதர் (ரலி) அவர்களுக்கு தான் விரும்புவதையே  தனக்கும் விரும்புகிறேன் என்கின்ற அளவிற்கு உபதேசம் செய்ததை பின் வரும் நபி மொழிகள் கூறுகின்றது.
அபூதர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:நான் (நபி (ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ் வின் தூதரே! எனக்கு ஏதேனும் பதவி வழங்கக் கூடாதா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், தமது கையால் எனது தோள்மீது அடித்துவிட்டு, “அபூதர்! நீர் பலவீனமானவர். அது ஒரு அமானத் ஆகும். அதை முறைப்படி அடைந்து, அதில் தமக்குரிய பொறுப்புகளை நிறை வேற்றியவரைத் தவிர மற்றவர்களுக்கு அது (மறுமையில்) இழிவும் துயரமும் ஆகும்” என்று கூறினார்கள்.
(நூல் : முஸ்லிம் – 3729.)
அபூதர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “அபூதர்! உம்மை நான் பலவீன மானவராகவே காண்கிறேன். எனக்கு நான் விரும்புவதையே உமக்கும் விரும்புகிறேன். இருவருக்குக்கூட நீர் தலைமை ஏற்காதீர். அநாதையின் சொத்துக்கு நீர் பொறுப்பேற்காதீர்” என்று சொன்னார்கள்.
(நூல் : முஸ்லிம் – 3730)
நிறைவான மார்க்க அறிவு பெற்றவர்.அபுதர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு இருந்து மார்க்க விசயங்களைப் பற்றி அதிகமாக கேள்வி கேட்டு தெரிந்து கொண்டார்கள்.இதற்கு ஏராளமான நபி மொழிகள் இருக்கின்றன.ஆகவே இவைகளை படிப்பதோடு நிறுத்திவிடாமல் நாமும் மார்க்க விசயங்களை அதிகமாக அறிந்து அபுதர் அவர்களைப் போன்று நிறைவான மார்க்கமுடையவராவோம்.
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் “நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “(அவனைச் சுற்றிலும் இருப்பது) ஒளியாயிற்றே! நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?” என்று கேட்டார்கள்
(நூல் : முஸ்லிம் – 291.)
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவதுநான் நபி (ஸல்) அவர்களிடம், “எந்த நற்செயல் சிறந்தது? என்று கேட்டேன்.  அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஈமான் (நம்பிக்கை) கொள்வதும் அவனது பாதையில் ஜிஹாத் செய்வதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.  நான், “எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது என்று கேட்டேன்.  அதற்கு அவர்கள், “அவர்களில் அதிக விலை கொண்ட அடிமையும் தன் எஜமானர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும்  (தான் சிறந்தவர்கள்)” என்று பதிலளித்தார்கள்.  நான், “என்னால் அது (அடிமையை விடுதலை செய்வது) இயலவில்லையென்றால்?” என்று கேட்டேன்.  நபி (ஸல்) அவர்கள் “பல வீனருக்கு உதவி செய் அல்லது உழைத்துச் சம்பாதிக்க இயலாதவனுக்கு நன்மை செய்” என்று கூறினார்கள்.  நான் “இதுவும் என்னால் இயலவில்லை யென்றால்….?” என்று கேட்டேன்.  அதற்கு அவர்கள், “மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இரு. ஏனெனில், அதுவும் நீ உனக்கு செய்து கொள்ளும் ஒரு தர்மம் ஆகும்” என்று கூறினார்கள்.நூல் : புகாரி – 2518.அப+தர் (ரலி) அவர்கள் கூறியதாவதுநான் (நபி ஸல் அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! ப+மியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பளளி;வாசல் எது? என்று கேட்டேன். அவர்கள், “அல் மஸ்ஜிதுல் ஹராம்-மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறையில்லம்” என்று பதிலளித்தார்கள். நான், “பிறகு எது?” என்று கேட்டேன். அவர்கள், “(ஜெரூஸலத்தில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா” என்று பதிலளித்தார்கள். நான், “அவ்விரண்டுக்கு மிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடை வெளி) இருந்தது” என்று கேட்டேன். அவர்கள், “நாற்பதாண்டுகள்” (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைக்கப் பட்டது) பிறகு, “நீ தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுதுவிடு. ஏனெனில், நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில்தான் சிறப்பு உள்ளது” என்று சொன்னார்கள்.
(நூல் : புகாரி – 3366)
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்