Sunday, October 30, 2011

வாராந்திர நிகழ்ச்சி - 28-10-2011


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பயான் நிகழ்ச்சி 28-10-2011 வெள்ளிக் கிழமை மாலை மஃக்ரீப் தொழுகைக்குப் பின் இனிதே ஆரம்பமானது. 

இதில் நமது சகோ. அப்துல் ஹமீது அவர்கள் "இப்ராஹிம் நபியின் மார்க்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

இந்த உரையின் ஆரம்பகட்டமாக அல்லாஹ் தனது திருமறையின் 16ஆவது அத்தியாயமான, அந்நஹ்ல்-லின் 123ஆவது வசனமான,



16:123


முஹம்மதே உண்மை வழியில் நின்ற இப்ராஹிமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக! என்று உமக்குத் தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை.

என்ற வசனத்தை மேற்கோள் காட்டி தனது உரையை ஆரம்பம் செய்தார்.

இதனைத் தொடர்ந்துநபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களைப் பற்றி விளக்கமாக அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கி தனது உரையை முடித்தார். 

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

வாராந்திர நிகழ்ச்சி - 21-10-2011

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பயான் நிகழ்ச்சி 21-10-2011 வெள்ளிக் கிழமை மாலை மஃக்ரீப் தொழுகைக்குப் பின் இனிதே ஆரம்பமானது. 
இதில் நமது சகோ. அப்துல் ஹமீது அவர்கள் "இஸ்லாமிய பார்வையில் ஹஜ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

இந்த உரையின் ஆரம்பகட்டமாக அல்லாஹ் தனது திருமறையின் 2ஆவது அத்தியாயமான, அல் பகராவின் 197ஆவது வசனமான,



  الْحَجُّ أَشْهُرٌ مَّعْلُومَاتٌ ۚ فَمَن فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ ۗ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللَّهُ ۗ وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَىٰ ۚ وَاتَّقُونِ يَا أُولِي الْأَلْبَابِ


ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன் மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டா வாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை ல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்!

என்ற வசனத்தை மேற்கோள் காட்டி தனது உரையை ஆரம்பம் செய்தார்.


இதனைத் தொடர்ந்துநபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மற்றும் இன்றைய சுழலில் ஹஜ்க்கு செல்பவர்கள் ஆரேங்க்கேற்றும் கூத்துகள், அதைத் தொடர்ந்து திருப்பி வந்த பிறகு அவர்களை சந்தித்து கை குலுக்குதல், அப்படி செய்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்டும் என்று சொல்லக்கூடிய மூட நம்பிக்கைகளைப் பற்றி விளக்கமாக அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கி தனது உரையை முடித்தார். 


இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Saturday, October 15, 2011

வாராந்திர நிகழ்ச்சி - 14-10-2011


அஸ்ஸலாமு அலைக்கும்,


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பயான் நிகழ்ச்சி 14-10-2011 வெள்ளிக் கிழமை மாலை மஃக்ரீப் தொழுகைக்குப் பின் இனிதே ஆரம்பமானது. 

இதில் சகோ. ஜெய்லானி அவர்கள் "துஆக்களின் சிறப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

இந்த உரையில் அல்லாஹ் தனது திருமறையில் துஆக்களைப் பற்றி குறிப்பிட்டுள்ள பல்வேறு வசனங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் ஆகியவற்றை மேற்கொள்காட்டி அழகிய முறையில் விளக்கினார்கள்.



இவர் நமது மண்டலத்தில் நடைபெற்ற தாயீ பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Wednesday, October 12, 2011

வாராந்திர நிகழ்ச்சி - 07-10-2011

அஸ்ஸலாமு அலைக்கும்,

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பயான் நிகழ்ச்சி 07-10-2011 வெள்ளிக் கிழமை மாலை மஃக்ரீப் தொழுகைக்குப் பின் இனிதே ஆரம்பமானது. 

இதில் நமது மண்டல தாஃவா பொருப்பாளர் சகோ. ஹாஜா குத்புதீன் அவர்கள் "அற்ப வாழ்வு மரணத்தை வெல்லுமா?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

இந்த உரையில் அல்லாஹ் தனது திருமறையில் மரண்த்தைப் பற்றி குறிப்பிட்டுள்ள பல்வேறு வசனங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் ஆகியவற்றை மேற்கொள்காட்டி அழகிய முறையில் விளக்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

தாயகம் செல்ல உதவி


நமது மண்டலத்தில் பணிபுரியும் ஒரு சகோதரருக்கு உடல்நிலை சரியிள்ளாத காரணத்தினால் தாயகம் செல்ல முடியாமல் இருந்தவருக்கு தாயகம் செல்வதற்காக விமான டிக்கெட் (பஹ்ரைன் தினார் 85.000) எடுத்து, ஜாமஅத் சார்பாக கொடுக்கப்பட்டது.

மேலும், உதவி செய்ய விருப்புவோர், தொடர்புக்கு - 39943027

Tuesday, October 4, 2011

பஹ்ரைனில் நடந்த மார்க்க விளளக்கப் பொதுக்கூட்டம்


அஸ்ஸலாமு அலைக்கும்,

 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பஹ்ரைன் டி.என்.டி.ஜே மர்க்கஸில் கடந்த 30-09-2011 வெள்ளிக்கிழமையன்று, மாலை 6:15மணி முதல் 8:30 மணி வரை மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் டிஎன்டிஜே மாநில பேச்சாளர் S.முஹம்மது ஒலி MISc அவர்கள் "ஏகத்துவம் தரும் ஒற்றுமை" என்னும் தலைப்பில் சமுதாய பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒற்றுமை அவசியம் எனவும், அந்த ஒற்றுமை ஏற்பட மார்க்கம் காட்டும் வழி என்ன எனவும், அதைத்தான் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருகிறது எனவும் தெளிவாகவும் அனைவருக்கும் புரியும் விதத்தில் உரையாற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்