அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பயான் நிகழ்ச்சி 28-10-2011 வெள்ளிக் கிழமை மாலை மஃக்ரீப் தொழுகைக்குப் பின் இனிதே ஆரம்பமானது.
இதில் நமது சகோ. அப்துல் ஹமீது அவர்கள் "இப்ராஹிம் நபியின் மார்க்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்த உரையின் ஆரம்பகட்டமாக அல்லாஹ் தனது திருமறையின் 16ஆவது அத்தியாயமான, அந்நஹ்ல்-லின் 123ஆவது வசனமான,
முஹம்மதே உண்மை வழியில் நின்ற இப்ராஹிமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக! என்று உமக்குத் தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை.

இதனைத் தொடர்ந்து, நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களைப் பற்றி விளக்கமாக அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கி தனது உரையை முடித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment