Sunday, October 30, 2011

வாராந்திர நிகழ்ச்சி - 21-10-2011

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பயான் நிகழ்ச்சி 21-10-2011 வெள்ளிக் கிழமை மாலை மஃக்ரீப் தொழுகைக்குப் பின் இனிதே ஆரம்பமானது. 
இதில் நமது சகோ. அப்துல் ஹமீது அவர்கள் "இஸ்லாமிய பார்வையில் ஹஜ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

இந்த உரையின் ஆரம்பகட்டமாக அல்லாஹ் தனது திருமறையின் 2ஆவது அத்தியாயமான, அல் பகராவின் 197ஆவது வசனமான,



  الْحَجُّ أَشْهُرٌ مَّعْلُومَاتٌ ۚ فَمَن فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ ۗ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللَّهُ ۗ وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَىٰ ۚ وَاتَّقُونِ يَا أُولِي الْأَلْبَابِ


ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன் மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டா வாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை ல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்!

என்ற வசனத்தை மேற்கோள் காட்டி தனது உரையை ஆரம்பம் செய்தார்.


இதனைத் தொடர்ந்துநபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மற்றும் இன்றைய சுழலில் ஹஜ்க்கு செல்பவர்கள் ஆரேங்க்கேற்றும் கூத்துகள், அதைத் தொடர்ந்து திருப்பி வந்த பிறகு அவர்களை சந்தித்து கை குலுக்குதல், அப்படி செய்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்டும் என்று சொல்லக்கூடிய மூட நம்பிக்கைகளைப் பற்றி விளக்கமாக அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கி தனது உரையை முடித்தார். 


இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்