Sunday, September 25, 2011

பஹ்ரைன் மண்டலத்தில் நடந்த சிறப்பு பயான் நிகழ்ச்சி


அஸ்ஸலாமு அலைக்கும்,

பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக 23-09-2011 அன்று நடந்த சிறப்பு பயான் நிகழ்ச்சி:

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், கடந்த 23-09-2011 அன்று பஹ்ரைன் மணலத்திண் டிஎன்டிஜே மர்க்கஸில் சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள மாநில பேச்சாளார் எஸ்.முஹம்மது ஒலி MISc அவர்கள் "நபித் தோழர்களை கண்னியப்படுத்துவோம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். இதில் நபித் தோழர்ளின் சிறப்புகளை மிக நன்றாக விளக்கிக் கூறினார்கள், மேலும் நாம் எவ்வாறு நபித்தோழர்களை கண்னியப்படுத்த வேண்டும் என்றும் இதை எவ்வாறு மார்க்கம் கடமையாக்கியுள்ளது என்பதையும் மிகவும் அருமையாக விளக்கிக் கூறினார்கள், அதே சமயத்தில் வஹியை மட்டும் பின்பற்றுவதுதான் மார்க்கம் என்பதையும் ஆதாரத்துடன் விளக்கினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.
இந்த நிகழ்ச்சியில் எராளமான ஆண்களும் பெண்களும் இன்னும் மாற்றுக் கருத்துடையவர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதிதாக இஸ்லாத்தை ஏற்ற ஒரு சகோதரர் டிஎன்டிஜே நபித்தோழர்களை கண்ணியப்படுத்துகிறது என்றும் டிஎன்டிஜே வைப்ப்ற்றி இதுவரை எண்னியது தவறு என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியை பஹ்ரைன் மண்டல நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர், அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, September 22, 2011

பஹ்ரைனில் நடந்த சிறப்பு பயான் நிகழ்ச்சி.

அஸ்ஸலாமு அலைக்கும்,

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் சார்பாக 16-09-2011 வெள்ளிக் கிழமை மாலை 6:15 முதல் இரவு 9மணி வரை சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைப் பெற்றது, இதில் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோதரர் எஸ். முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.ஸி அவர்கள் "நரகத்திற்கு அலைக்கும் நவீன கலாச்சாரம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், இந்த உரையில் சமுதாயத்தில் நடைபெரும் கலாச்சார சீரழிவிற்கு அடிப்படைக் காரணங்களாக எவ்வாறு இன்றைய நமது அனுகுமுறை காரணமாகிறது என்று உண்மை சம்பவங்களுடன் உணர்ச்ரிப்பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகமும் தெளிவாக விளக்கினார்கள்.
 இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர், உரைக்குப் பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இன்னும் சனி முதல் புதன் முடிய ஆண்களுக்கு அரபி இலக்கண வகுப்புகளும், பெண்களுக்கு குர்ஆன் தஃப்ஸீர் வகுப்புகளும், ஆண், பெண் இருவருக்கும் தனியே பேச்சுப்பயிற்ச்சி வகுப்புகளும் வாரம் இருமுறை நடைபெறுகிறது.

Wednesday, September 21, 2011

நரபலிமோடியின் உண்ணாவிரத நாகடம்.



ஏகஇறைவனின் திருப்பெயரால்....


وَإِذَا قِيلَ لَهُمْ لاَ تُفْسِدُواْ فِي الأَرْضِ قَالُواْ إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ

''பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும் போது ''நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.2:11




நரபலிமோடியின் உண்ணாவிரத நாகடம்.


அமைதிஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி 72 மணிநேர உண்ணா விரதத்தை குஜராத் முதல்வர் நரேந்திரமோடி மேற்கொண்டுள்ளதை பத்திரிகைகள் பரபரப்பு செய்தியாக வெளியிட்டுக் கொண்டிருகின்றன.

அண்ணா ஹசாரேவை அம்போவென்று விட்டு விட்டு மோடி பக்கம் பல்டி அடித்து விட்டன பார்ப்பனப் பத்திரிகைகள்.

குஜராத் அமைதி இழந்து சமூக நல்லிணக்கம் கெடுவதற்கு வேறு யாராவது காரணமாக அமைந்து அதற்காக மோடி உண்ணாவிரதத்தை மேற்கொண்டால் உலகம் இவ ரது உண்ணாவிரதத்தை ஏற்றுக் கொள்ளும்.

காந்திப் பிறந்த மண்ணை சிறுபான்மை அப்பாவி முஸ்லீம்களின் இரத்தத்தால் தோய்த்து கலங்கப்படுத்திய கொலை வெறியன் இன்று சமூக நல்லிணக்கத்திற்காக உண்ணாவிரதம் இருக்கிறேன் என்றுக் கூறுவது  அதுவும் பத்தாயிரம் முஸ்லீம்களுடன் வேஷம் என்று உலகுக்குத் தெரியாதா ?

இந்த லட்சனத்தில் இது மதநல்லிணக்கத்திற்கு உலகுக்கே எடுத்துக்காட்டாம் ??? உலறுகிறது தினமலர். 

மதவெறியை தூண்டி மத நல்லிணக்கத்தை எவ்வாறு சீர் குலைப்பது  என்பதை குஜராத்தில் நிகழ்த்தி உலக சியோனிஸ்டுகளுக்கு க்ளாஷ் நடத்தியதை அவ்வளவு எளிதில் உலகம் மறந்திருக்கும் என்று நினைத்து விட்டது தினமலர். 
  
நான் மட்டும் முதல்வராக இல்லை என்றால் நானே முஸ்லீம்களின் மீது குண்டுகளை வீசி கொன்றொழித்திருப்பேன் முதல்வர் பதவி என்னைத் தடுக்கிறது என்றுக் கூறி சங்பரிவார குண்டர்களுக்கு கொலைவெறி ஊட்டியதையயும்குஜராத்தின் காவல்துறை உயரதிகாரிகளுடன் ரகசிய அமர்வுக்கு ஏற்பாடு செய்து அதில் இரண்டு நாட்கள் சங்பரிவார குண்டர்களின் அட்டூழியத்தை கண்டுகொள்ள வேண்டாம் என்றும் மூன்றாவது நாள் என் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக கட்டுப்படுத்தி விடுங்கள் என்றுக் கூறியதை தெஹல்கா மோடியின் ஒரிஜினல் நரபலி முகத்தை தோலுரித்து உலகுக்குக் காட்டியதை உலகம் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கும் என்று நினைத்து விட்டது தினமலர்.    

பத்தாயிரம் அல்ல பத்து லட்சமும் அல்ல பத்து கோடி முஸ்லீம்களை திரட்டி பிரம்மாண்டமான சமூக நல்லிணக்க மாநாட்டை மோடி நடத்தினாலும் 2002ல் முஸ்லீம் பெண்களின் மீதான கற்பழிப்புகள் மற்றும் படுகொலைகளினால் மோடியின் மீது விழுந்த கொலை வெறியன் என்ற கரும் புள்ளி கரையவே கரையாது. குறைந்த பட்சம் நரேந்திர மோடி என்றப் பெயர் நரபலி மோடி என்ற மாறியதுக் கூட திரும்பி நரேந்திர மோடியாக மாறுவது கஸ்டம்.

காக்கை எத்தனை தான் விழுந்து விழுந்து குளித்தாலும் கொக்காக மாற முடியாது என்பதை மோடியும்மோடியை ஆஹாஓஹோ வென்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் பார்ப்பன பத்திரிகைகளும் விளங்கி கொள்ளட்டும்.

இந்தியாவின் மதசார்பின்மையை குழி தோண்டிப் புதைத்து உலக அரங்கில் இந்தியாவை தலைகுணியச் செய்த கயவர்கள் ஒன்று விடாமல் துடைத்தெறியப்படாத வரை இந்தியாவில் அமைதிஒற்றுமைமற்றும் சமூக நல்லிணக்கத்தை ஒருக்காலும் நிலை நாட்டவே முடியாது.

முஸ்லீம்களின் பங்கு
குஜராத்தின் ஐந்து மண்டலங்களிலிருந்து தலா இரண்டாயிரம் முஸ்லீம்களை கொண்டு வந்து சேர்ப்பதை குஜராத் சிறுபான்மை அமைப்புத் தலைவர் தன்வீர் சேட்டிடம் பொறுப்பை ஒப்படைத்து கவனிக்க வேண்டிய முறையில் அவரை கவனித்ததால் அவர் முஸ்லீம்களிடம் சென்று 2002 நிகழ்வுகளை நினைவுபடுத்தி வலுக்கட்டாயமாக கொண்டு வந்து சேர்த்துள்ளார் என்பதுவே நிதர்சனமான உண்மை.

காரணம் 2002  முஸ்லீம்களின் படுகொலைக்குப் பிறகு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் கூட அதிக வாக்குகுள் முஸ்லீம் தொகுதிகளில் கிடைத்ததாக தகவல் அப்பொழுதே வெளியாகின அந்த ஓட்டுகள் விழுந்தவைகள் அல்ல விழ வைத்தவைகள் என்பது உலகுக்கேத் தெரியும் இதிலிருந்தே மேல்படி நாடக அரங்கில் கலந்து கொண்ட முஸ்லீம் ஆண்பெண்கள் அனைவரும் தாமாக பங்கேற்க வில்லைபங்கேற்க வைத்துள்ளனர். 

விரும்பினால் வரலாம் என்று மட்டும் கூறி இருந்தால் தன்வீர் சேட் கூட நாடக மேடையில் கலந்திருக்க மாட்டார்.

அனைவருக்கும் நீதி ?
எனது மாநிலத்தில் அனைவருக்கும் சமநீதி கிடைக்க நான் பாடுபடுகிறேன். நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏற்படும் வலியை என்னுடையதாக உணர்கிறேன். இதனால் இந்த விரத போராட்டத்தை துவக்குகிறேன் என நாகூசாமல் புளுகி உள்ளார் நாடக அரங்கில் மோடி.

2002 கலவரத்திற்கு முன்பும்பின்பும் முஸ்லீம்கள் குஜராத் அரசு அதிகாரத்தில் எத்தனை பேர் அமரத்தப்பட்டுள்ளனர் குஜராத்தில் மோடியின் ஆசீர்வாதத்துடன் இயங்கும் பிரபல கம்பெனிகளில் எத்தளை முஸ்லீம்கள் உயர் பெறுப்பில் அமர்த்தப் பட்டுள்ளனர் ? 

2002ன் கலவரத்தில் வீடு வாசல்களை இழந்து அனாதை ஆஸ்ரமங்கிளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பல வருடங்கள் அனாதைகளாய் கிடந்து அல்லல் பட்ட முஸ்லீம்களில் எத்தனை ஆயிரம் பேருக்கு வாழ்வாதார வசதிகளை செய்து கொடுத்தார் என்றப் புள்ளி விபரங்களை வாசித்துக் காட்டி விட்டு மேற்காணும் அனைவருக்கும் சமநீதி கிடைக்க நான் பாடுபடுகிறேன். என்றுக் கூறி இருந்தால் திருந்தி இருக்கிறார் என்று நம்பலாம்?

அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதத்தை உலக சாதனையைப் போல் எழுதி வருவதைக் கண்ட மோடி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவிக்கு தன் பெயரும் அடிப்பட்டு வருவதை அறிந்து ஓட்டுக்காக நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு முஸ்லீம்களிடம் வாலாட்டிக் கொண்டு வரவிருக்கிறார். அது தான் இந்த உண்ணாவிரத நாடகம் புரிந்து  கொள்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.

நரபலி மோடியின் நாடக மேடை கூடுதல் கலை கட்டுவதற்காக தமிழகத்திலிருந்தும் ஜெயலலிதா தனது பிரதிநிதிகைளை அனுப்பி உள்ளார்.   

அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.2:10

''பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும் போது ''நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.2:11

கவனத்தில் கொள்க! அவர்களே குழப்பம் செய்பவர்கள்எனினும் உணர மாட்டார்கள்.2:12

நன்றி:அதிரை ஏ.எம்.பாரூக்


Sunday, September 18, 2011

உள்ளங்கள் திரும்பாதவரை...



ஏகஇறைவனின் திருப்பெயரால்....

قال رسول اللَّه صلَّى اللَّه عليه و سلَّم :إنَّ اللَّه لاينظر إلى صوركم و أموالكم ولكن ينظر إلى قلوبكم و أماالكم ( مسلم

'அல்லாஹ் உங்கள் உடல்களையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையே பார்க்கின்றான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டுத் தம் விரல்களால் தமது நெஞ்சை நோக்கி சைகை செய்தார்கள்'' என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அறிவித்தார். நூல். முஸ்லிம்  5011


உள்ளங்கள் திரும்பாதவரை...




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் என்று பாடக் கேட்டது நினைவிருக்கலாம். உள்ளத்தில் உதிக்கும் ஆயிரம் எண்ணங்களும் உருப்படியானவைகளாக உதிப்பதில்லை ஆயிரத்தில் எத்தனையோ உதித்த வேகத்தில் உள்ளத்தை துருப்பிடிக்கச் செய்து விடுவதுமுண்டு உள்ளம் துருப்பிடித்து விட்டால் உடல் கெடுவதை விளக்கவுமா வேண்டும் ? .

உள்ளத்தை அடிக்கடிக் கழுவி தூய்மையாக்கிக் கொண்டால் தான் தீய எண்ணங்கள் உள்ளத்தில் தங்காது.  



  • உள்ளத்தை எவ்வாறு கழுவுவது ?
  • உள்ளம் எங்கு இருக்கிறது ?
உள்ளம் என்ற ஒரு உறுப்பு இருந்தால் அது இருக்கும் இடம் தெரிந்தால் ? நம்மால் கழுவ முடியவில்லை என்றாலும் டாக்டரிடம்  கொடுத்து பல் சுத்தம் செய்து கொள்வது போல் உள்ளத்தை கழுவி சுத்தம் செய்து கொள்ளலாம் ! உள்ளம் நமக்கு மறைவானவை அதில் உதிப்பதம் உதிப்பதில் தங்குவதும், போவதும்  மறைவானவைகளாகும்.

மறைவான தீயவைகள் உள்ளத்தில் தங்கி விடுவதை மறைவான இறைவனை தொழுவதன் மூலமே  கழுவி தூய்மைப் டுத்த முடியும். 

தன்னைக் கடந்து செல்லக் கூடிய நேரங்களில் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை இறைவனை நம்பிக்கையுடன் ( ஐ வேலை) தொழுது உள்ளத்தை தூய்மைப் படுத்திக் கொள்ளச் சொல்கிறது இஸ்லாம்.

அவ்வாறிருந்தால் தான் உள்ளம் செயல்படத் தொடங்கும் உள்ளம் நல்லவைகளை நாடிச் செல்லும் தீயவைகளை விட்டுத் திரும்பும்.

உள்ளங்கள் திரும்பாதவரை
 அதனால் தான் அல்லாஹ் உங்கள் உருவங்களைப் பார்ப்பதில்லை உள்ளத்தைப் பார்க்கிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

இன்றுப் பார்க்கிறோம்.

காசுக்காக தன்னைப் போன்ற சக மனிதர்களின் உயிரை சாய்த்து விடுகிறான் தலைக்கு ஒரு ரேட்காலுக்கு ஒரு ரேட்கைக்கு ஒரு ரேட்என்று விலைப் பேசுகிறான்.

பீறிட்டு ஓடக்கூடிய இரத்தம் அவனது உள்ளத்தை பாதிப்படையச் செய்வதில்லை என்றால் எந்தளவுக்கு உள்ளம் மாசுப் பட்டிருக்கும் ?

ஆசைக்கு இணங்க மறுக்கும் பெண்ணை கதற கதற கற்பழிக்கிறான் அவளது அழுகுரல் அவனது உள்ளத்தை பாதிப்படையச் செய்வதில்லை என்றால் எந்தளவுக்கு உள்ளம் மாசுப் பட்டிருக்கும் ?

இஸ்லாம் வருவதற்கு முன் இதே நிலை தான் உலகெங்கும் நீடித்திருந்தது இஸ்லாம் வந்து மனிதர்களை இறைவணக்கத்தில் ஈடுபடுத்தி உள்ளங்களை தூய்மைப்படுத்தி உயிரினங்களின் மீது இரக்கம் கொள்ளச் செய்தது.

A is for arab ‘s என்ற தலைப்பில் Jorge rabble என்ற வரலாற்றாசிரியர் salon.com என்ற அமெரிக்க செய்தி ஊடகத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில்A millennium ago, while the West was shrouded in darkness, Islam enjoyed a golden age. Lighting in the streets of Cordoba when London was a barbarous pit; religious tolerance in Toledo while pogroms raged from York to Vienna.  


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மேற்கத்தியர்கள் இருளில் மூழ்கி கிடந்தபோது இஸ்லாமியர்கள் பொற்காலத்தை அனுபவித்துக்கொண்டிருந்தனர்,லண்டன் ஒரு காட்டுமிராண்டிப் பகுதியாக இருந்த போது 'கார்டோபாஒளிவிளக்கால் மிண்ணிக் கொண்டிருந்தது. 'யார்;க் முதல் வீயென்னாவரை'மனித படுகொலைகள் நடந்த கொண்டிருந்த போது 'டோலிடோமதசகிப்புத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. என்று வர்ணித்திருந்தார்.

யுத்தகளத்திலும்.

மனசாட்சிக்குத் திரையிட்டு கொலை வெறியும்கொள்ளை சிந்தனையும்கற்பழிக்கும் காம உணர்வும் மேலேங்கி நிற்கக் கூடிய யுத்த களத்திலும் கூட உள்ளத்தை செயல்படச் செய்தது உலகில் இஸ்லாம் மட்டுமே.

கருனையே உருவான காருன்ய நபி(ஸல்) அவர்கள் ஆட்சி செய்த காலத்தில் தவிர்க்க முடியாத பல போர்களை சந்திக்க நேரிட்டது அவைகளில் அதிகமானப் போர்களில் மாபெரும் வெற்றியை ஈட்டினர் ஆனாலும் எதிராளிகளின் உயிர்களின் மீதும்மானம் மரியாதையின் மீதும் வெற்றியாளர்களின் மனிதாபிமானம் மேலோங்கி நின்றது.

மனிதாபிமானம் மேலோங்கி நின்றதற்கு 0முக்கியக்  காரணம். யுத்தத்தில் கலந்து கொண்டு வாளேந்தி போர் புரிய முடியாத பெண்களையும், குழந்தைகளையும் கொலலக் கூடாது என்று காருண்ய நபி (ஸல்) அவர்கள் உத்தரவுப் பிறப்பித்தது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டப் போர் வீரர்களின் உள்ளத்தில் இரக்கத்தை விதைத்து. 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைத் தடை செய்தார்கள். என்று இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நூல் புகாரி 3015.

தோல்வியை ஒப்புக் கொண்டு ஆயுதங்களை கீழேப் போட்டு யுத்தத்தில் சரணடைபவர்களை கொலலக் கூடாது என்று உத்தரவுப் பிறப்பித்தது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டப் போர் வீரர்களின் உள்ளத்தில் இரக்கத்தை விதைத்து.

எங்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஹுரக்காகூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். நாங்கள் அந்தக் கூட்டத்தாரிடம் காலையில் சென்றடைந்தோம். (அவர்களுடன் நடந்த சண்டையில்) அவர்களைத் தோற்கடித்தோம். நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைக் கண்டோம். அவரைச் சுற்றி வளைத்துக் கொண்டபோது அவர் 'லா இலாஹ இல்லல்லாஹ் - அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லைஎன்று சொல்ல அந்த அன்சாரி (அவரைக் கொல்லாமல்) விலகிக் கொண்டார். நான் என் ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்று விட்டேன். நாங்கள் (திரும்பி) வந்தபோது நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டவே அவர்கள் 'உஸாமாவே! அவர் 'லா இலாஹ இல்லல்லாஹ்'' என்று (ஏகத்துவ வாக்கியத்தை) மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?' என்று கேட்டார்கள். நான் '(நாங்கள் அவரைக் கொன்றுவிடாமல்) தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே அவர் அவ்வாறு கூறினார்'' என்று சொன்னேன். (ஆனால் என் சமாதானத்தை ஏற்காமல்) நபி(ஸல்) அவர்கள் அந்தக் கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால் நான் '(அந்தப் பாவத்தைச் செய்த) அந்த நாளுக்கு முன்பாக இஸ்லாத்தை ஏற்காமல் (அதற்குப் பிறகு ஏற்று) இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே; (பாவம் மன்னிக்கப்பட்டிருக்குமே!) என்று கூட நினைத்தேன். என்று உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். நூல் புகாரி 4269.

மனித உயிர்களின் மீது மட்டும் தான் கருணை கொண்டார்களா காருண்ய நபி.
ஒருமுறை இறைத் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் பயணத்திலிருக்கும் போது தம் இயற்கைத் தேவையை நிறைவேற்றிட சென்று விட்டு திரும்பும் பொழுது தோழர்கள் இரு குருவி  குஞ்சுகளுடன் கொஞ்சிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள் அவர்களுக்கு மேலே அவற்றின் தாய் குருவி நிம்மதியிழந்து தன் இரக்கைகளை விரித்து தாழ்த்தி பறந்து வந்து தன் இயலாமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்ததைக் கண்டு காருண்ய நபியவர்கள் ''இதன் குஞ்சுகளை பறித்து இக்குருவியின் நிம்மதியைக் குலைத்தவர் யார்அவற்றை அதனிடமே ஒப்படைத்து விடுங்கள்என்றுக் கடிந்து கொள்கிறார்கள் . அறிவிப்பவர்: அப்துல்லாஹிப்னு மஸ்வூத் நூல்: அபூதாவூது

இறைத் தூதர்களில் ஒருவர் ஒரு (பயணத்தில்) மரத்தின் கீழே தங்கினார். ஆவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனேஅவர் தம் (பயண) மூட்டை முடிச்சுகளை அப்புறப்படுத்தும்படி உத்தரவிட்டார். ஆவ்வாறே அவை மரத்தின் கீழிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. பிறகு எறும்புப் புற்றை எரிக்கும்படி உத்தரவிட்டார். ஆவ்வாறே அது தீயிட்டு எரிக்கப்பட்டது. அப்போது அல்லாஹ் அவருக்கு, 'உங்களைக் கடித்தது ஒரேயொர் எறும்பல்லவா? (அதற்காக ஓர் எறும்பு கூட்டத்தையே எரிக்கலாமா?)'' என்று வஹீ (இறைச்செய்தி) அறிவித்(து அவரைக் கண்டித்)தான். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' நூல்: புகாரி 3319.

மனிதாபிமானத்திற்கு சொர்க்கமே பரிசு 

மனித உயிர்களல்லாது பிற வாயில்லா ஜீவன்களின் மீதும் இரக்கம்  கொள்ளச் சொல்கிறது சத்திய இஸ்லாம். 


அதனால் மனிதர்களின் பெரும் பாங்களைக் கூட கருனையாளன் அல்லாஹ் மன்னித்து விடுகிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

விபசாரியான ஒரு பெண்ஒரு கிணற்றின் விளிம்பில் தன்னுடைய நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள். ஆந்த நாயைத் தாகம் சாகடிக்கவிருந்தது. ஆதைக் கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி (கிணற்று) நீரை இறைத்து அதற்குக் கொடுத்தாள். ஆவள் ஓர் உயிருக்குக் காட்டிய இந்தக் கருணையினால் அவளுக்கு (பாவ) மன்னிப்பு வழங்கப்பட்டது. என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 3321. 

நம்மில் சிலர் சில உயிர் பிராணிகளை வீட்டில் கட்டிப்போட்டும் கூண்டில் அடைத்தும் வளர்ப்பார்கள் அவர்களில் பலர் அவைகளைமரக்கட்டைகளைப் போல் பொம்மைகளைப் போல் நினைத்துக்கொண்டு அவற்றிற்கான உணவு மற்றும் நீர் போன்ற இன்றியமையாத தேவைகளை முறையாக செய்து கொடுக்க முன்வருவதில்லை விரும்பிய நேரங்களில் உணவோநீரோ கொடுப்பதும் மற்ற நேரங்களில் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதும் சிலரது வாடிக்கை.

உணவுநீர் மட்டும் தான் அவைகளுக்கு தேவை என்றும் நினைத்து விடக் கூடாது மனித இனத்தைப் போல் அவைகளுக்கும் ஆன்மா இருப்பதால் இனவிருத்தி செய்யும் ஆற்றல் இறைவனால் வழங்கப்பட்டுள்ளதால் அவைகளை அவைகள் வசிக்கக் கூடிய பகுதிகளில் விட்டு விடுவது தான் ஜீவகாருண்யத்திற்கு சிறந்த அடையாளம். 

அவைகளில் எதாவது ஒன்று நம்முடைய வீட்டில் கவனிப்பு குறைவின்றி செத்து விட்டால் அதற்கும் நாம் இறைவனிடம் பதில் சொல்லி ஆக வேண்டும்.

ஒரு பூனையைஅது சாகும்வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். ஆதை அடைத்து வைத்தபோது அவள் அதற்குத் தீனியும் போடவில்லைஅதற்கு (குடிக்கத்) தண்¡ரும் கொடுக்கவில்லைஅவள் அதை பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து) விடவுமில்லை. என்று  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி3482. '


நாயின் தாகத்தை தணித்த விபச்சாரிக்கு பரிசு பெரும்பாவம் மன்னிக்கப்பட்டு விட்டதென்றும், பூனையைக் கட்டிப்போட்டு சாகடித்ததற்கு தண்டனை நரகம் என்றும் இஸ்லாம் அறிவித்திருக்கிறதென்றால் அவ்வப்பொழுது பொதுமக்கள் நடமாடக் கூடிய இடங்களில் குண்டு வைத்து விலை மதிக்க முடியாத அப்பாவிகளின் உயிரைக் குடிப்பதற்கு காரணமாக இருப்பவர்களுக்கு இறைவன் என்ன தண்டனை வழங்குவான் சிந்திப்பர்களா ?

எங்கு குண்டு வெடித்தாலும் முதலில் முஸ்லீம்களின் பெயர் தான் ஊடகத்தில் வரும் காலம் கடந்து சாமியார்கள் என்றும், ஹிந்து மதவாத அமைப்பின் தலைவர்கள் என்றும் வரும்.


அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அல்லது சரியே, பெயரளவில் முஸ்லீமாக இருந்தாலும் சரியே, சத்திய இஸ்லாத்தின் சுகந்த காற்றை நுகர்ந்து கொண்டு உள்ளத்தை தூய்மைப் படுத்திக்கொண்டு அமைதியான வாழ்க்கை வாழ முன்வரவேண்டும். 


இல்லை என்றால் இதற்கு இறைவனிடம் மகத்தான் தண்டனை உண்டு என்பதை மட்டும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். 

'அல்லாஹ் உங்கள் உடல்களையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாகஇ உங்கள் உள்ளங்களையே பார்க்கின்றான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டுத் தம் விரல்களால் தமது நெஞ்சை நோக்கி சைகை செய்தார்கள்'' என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அறிவித்தார். நூல். முஸ்லிம்  5011



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவிதீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம்
 உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
நன்றி: அதிரை ஏ.எம்.பாரூக்

Wednesday, September 14, 2011

பஹ்ரைன் டி.என்.டி.ஜே மர்க்கஸில் நடந்த சிறப்பு பயான் நிகழ்ச்சி


அஸ்ஸலாமு அலைக்கும்,


பஹ்ரைனில் 09-09-2011 அன்று நடந்த நிகழ்ச்சியின் விபரம்:
அல்லஹ்வின் கிருபையால் கடந்த 09-09-2011 அன்று பஹ்ரைன் டி.என்.டி.ஜே மர்க்கஸில் வைத்து நடந்த சிறப்பு பயான் நிகழ்ச்சியில், இந்தியாவிலிருந்து வந்துள்ள S. முஹம்மது ஒலி MISc அவர்கள் "அயல் நாட்டு வாழ்க்கையும் சமுதாய கடமையும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், இதில் அயல் நாட்டில் நம்மவர்கள் படும் கஷ்டங்களையும் இந்தியாவில் உள்ள நமது சமுதாயத்தின் தேவை என்னவென்பதை தெளிவாக கூறி அதற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்னவென்பதையும் தெளிவாக எடுத்துக் கூறினார்கள், அலஹம்துலில்லாஹ். இந்நிகழ்ச்சியில் ஏராளமான் ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பினனர் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் புதிதாக வந்திருந்த சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கும்  S. முஹம்மது ஒலி MISc  அவர்கள் பதிலளித்தார்கள். 










Monday, September 12, 2011

ரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்...



ஐந்து நேரத் தொழுகைகளில் ஆட்கள் அதிகரிப்பு! பள்ளியை விரிவாக்கம் செய்ய வேண்டுமோ என்று எண்ணும் அளவுக்கு பள்ளியில் மக்கள் நெருக்கமும் இறுக்கமும் ஏற்பட்டு பள்ளி நிரம்பி வழிந்தது.  இவ்வளவு சிறப்பும் எதனால்? அல்லாஹ் இம்மாதத்தில் குர்ஆனை இறக்கியருளியதால்!  குர்ஆன் இறங்கிய லைலத்துல் கத்ர் அம்மாதத்தில் அமைந்திருப்பதால்!

எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த இரவை ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவாக ஆக்கி வைத்தான்.  இம்மாதத்தில் பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்குவோருக்கு அல்லாஹ் மன்னிப்பை வழங்குவதாக வாக்களித்தான்.  அதன் பலனை சிம்பாலிக்காக வெளிப்படுத்தும் விதமாக சுவனத்தைத் திறந்து வைத்து நரகத்தை மூடினான்.

இதனால் கொஞ்ச நஞ்ச ஈமானிய உணர்வு உள்ளவர்களும் இம்மாதத்தில் அல்லாஹ் அளிக்கும் அரிய வாய்ப்பைப் பெற வேண்டி படையெடுத்து வந்தார்கள்.  உண்மையில் ரமளான் இவர்களை இரவிலும் பகலிலும் சிறைப்படுத்தி வைத்திருந்தது.

அந்த வகையில் ரமளான் அவர்களைக் கைது செய்து, நற்பண்புகளைப் போதித்த ஒரு சிறைச்சாலை!

நல்ல பாடங்களைப் படித்துக் கொடுத்த ஒரு பாடசாலை!

இறையச்சத்தில் ஊனமாகிப் போய் கிடந்த சகோதரர்களை இறையச்சத்தின் பக்கம் நடை பயில வைத்த நடை வண்டி!

இந்த ரமளான் மாதத்தில் பெற்ற பண்புகள் என்ன? பாடங்கள் என்ன? என்று பார்ப்போம்.

ஐந்து நேர ஜமாஅத் தொழுகைகளில் தவறாது கலந்து கொண்டோம்.  இரவு நேரங்களில் தொழுதோம்.  சப்தங்கள் அடங்கிப் போன ஸஹர் நேரத்தில் விழித்து பிரார்த்தனை செய்தோம்.

இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்பு தேடுவோரகவும் (இருப்பார்கள்) (அல்குர்ஆன் 3:17)

இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர்.  இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்பு தேடுவார்கள். (அல்குர்ஆன் 51:17,18)

என்று அல்லாஹ், சுவனத்திற்குரிய முஃமின்களின் பண்புகளைக் கூறுவது போன்று குறைவாக உறங்கி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடினோம்.  இவற்றை ஏன் செய்தோம்?  நன்மையை நாடித் தானே செய்தோம்?  இதே காரியத்தை நாம் ரமளானுக்குப் பின்னாலும் தொடர்ந்து செய்தால் என்ன?  இவ்வாறு நம்மை நாமே கேட்டுக் கொள்வோம்.

இந்த அமல்கள் அடுத்த ஆண்டு வரை அல்ல!  ஆயுள் வரை தொடர்வோம்.

ரமளானின் பகல் காலங்களில் அனுமதிக்கப்பட்ட உணவு, பானத்தை சாப்பிட மறுத்தோம்.  ஏன்? அல்லாஹ் தடுத்திருக்கின்றான் என்பதால் தானே!  அப்படியாயின் வட்டி, லாட்டரி, லஞ்சம், மது, சூது, திருட்டு, கொள்ளை, மோசடி இவற்றின் மூலம் வரும் வருவாயை நாம் சாப்பிடலாமா?

நோன்பின் பகல் காலத்தில் தடை பிறப்பித்த அல்லாஹ் தானே இவற்றின் மீது எந்தக் காலத்திலும் தடை விதித்திருக்கின்றான்.  இதுபோன்ற காரியங்களில் நாம் ஈடுபடலாமா? என்பதை உணர்ந்து விலகவே ரமளான் என்ற பள்ளிக்கூடம் நம்மிடம் பாடம் நடத்த வந்தது.  இந்தப் பாடத்தை அடுத்த ஆண்டு வரை அல்ல! ஆயுள் வரை தொடர்வோம்.

அருகில் அனுமதிக்கப்பட்ட மனைவி படுத்திருக்கின்றாள். அக்கம் பக்கத்தில் யாருமில்லை.  இருந்தும் ரமளானின் பகலில் நோன்புக் காலத்தில் நாம் நெருங்கவில்லையே! ஏன்? அல்லாஹ் பார்க்கின்றான் என்ற உணர்வு தானே!  ரமளான் மறைந்த பின் அல்லாஹ் பார்க்காமல் மறைந்து போய் விடுவானா?  நிச்சயமாக மறைய மாட்டான். அவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.

நாம் இங்கே படித்த பாடம் நம் மனைவியை ரமளானில் பகல் காலங்களில் நாம் நெருங்காத போது, பிறன் மனையை ஏறிட்டுப் பார்க்கலாமா? அந்நியப் பெண்களைப் பார்க்கலாமா? பெண்களின் அங்க அவயங்களை குளோஸ்அப்பில் காட்டும் டிவி, சினிமாக்களைப் பார்க்கலாமா?

ரமளானில் பார்த்துக் கொண்டிருந்த அதே ரப்புல் ஆலமீன் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற பாடம் நம்மிடம் அடுத்த ஆண்டு வரை அல்ல! ஆயுள் வரை தொடரட்டும்!

உளூச் செய்கின்றோம். அப்போது தாகத்தால் நாம் தவித்துக் கொண்டிருக்கும் போது வாய் கொப்பளிக்க சுவையான தண்ணீரை வாயில் அனுப்புகின்றோம்.  

தொண்டைக் குழிக்குள் அந்தத் தண்ணீர் இறங்குவதற்கு ஒரு மயிரிழை அளவு தான் இருக்கின்றது.  ஒரு சொட்டு தண்ணீர் இறங்கினால் யாருக்குத் தெரியப் போகின்றது? ஏன் விழுங்கவில்லை? அல்லாஹ் பார்க்கின்றான் என்ற உணர்வு தான்!

அனுமதிக்கப் பட்ட பானத்தையே ரமளானில் பகல் காலத்தில் பருகவில்லையே!  ரமளான் முடிந்த பின்னர் தடுக்கப்பட்ட மது பானங்களை அருந்தலாமா? ரமளானில் பார்த்த அதே நாயன் தான் இப்போதும் பார்க்கின்றான்.  அதனால் ரமளானைப் பாடமாகக் கொண்டு தடை செய்யப் பட்ட பானங்களை ஆயுள் முழுவதும் தொடாமல் விலகுவோமாக!

சங்கிலித் தொடராக புகை பிடிப்பவர்கள், நோன்பு நோற்றதிலிருந்து நோன்பு துறக்கும் நேரம் வரை பீடி, சிகரெட் புகைப்பதில்லை.  உயிர்கொல்லியான இந்த நெருப்புக் கொள்ளிக்கட்டையை வாயில் வைக்காமல் இருந்ததற்குக் காரணம் என்ன? அல்லாஹ் பார்க்கின்றான் என்ற காரணம் தானே!  அதே காரணம் ரமளானுக்குப் பிறகு அறுந்து போகுமா?

நோன்பு நோற்கும் போது பார்க்கும் அந்த அல்லாஹ் தான் நோன்பு துறந்த பின் இரவு நேரங்களிலும் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.  ரமளான் முடிந்த பின்னரும் அவன் தான் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.

அவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பதால் நோன்பு நோற்கும் போது புகைப் பழக்கத்தை விட்ட நாம் இப்போதும் அதே இறையச்சத்துடன் விட முடியாதா? முயற்சி செய்தால் முடியும்.  எனவே புகைப் பழக்கத்தை அடுத்த ஆண்டு வரை அல்ல! ஆயுள் வரை விட்டொழிப்போமாக!

ரமளானில் ஏழைக்கு இரங்கினோம். அனாதைகளை அரவணைத்தோம்.  உறவினர்களுக்கு உதவி செய்து அவர்களிடம் ஒன்றிணைந்தோம்.  ஏன்? அல்லாஹ் பார்க்கின்றான் என்று தானே!  ரமளான் முடிந்த பிறகும் அந்தக் காரணம் தொடரும் போது நாமும் இந்த நன்மைகளை ரமளானுக்குப் பிறகு அடுத்த ரமளான் வரை என்றில்லாமல் ஆயுள் வரை தொடர்வோம்.

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம். கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்.  யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால், நான் நோன்பாளி என்று அவர் கூறட்டும் என்ற புகாரி 1904வது ஹதீஸின் படி நோன்புக் காலத்தில் யாரேனும் நம்மிடம் சண்டைக்கு, வம்புக்கு வந்தால் விலகி விடுகின்றோம். ஏன்? ஒரு தரப்பு இறங்கிப் போகின்ற போது எதிர் தரப்பு ஏறுவது கிடையாது.  எகிறிக் குதிப்பது கிடையாது.  இதன் மூலம் ரமளானில் வம்புச் சண்டைக்கு வருவோரிடம் ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றோம்.

இதே போன்று ரமளானுக்குப் பிறகும் அல்லாஹ் நம்மைப் பார்க்கின்றான் என்ற அடிப்படையில் ஒரு தரப்பாகிய நாம் இறங்கிப் போகின்ற போது அமைதி வாழ்கின்றது.  சுபிட்சம் ஏற்படுகின்றது.  இப்படி சுபிட்சமான பாடத்தை ரமளானுக்குப் பிறகும் அடுத்த ஆண்டு வரையில் அல்ல!  ஆயுள் வரை தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!

நன்றி : Rasmin MISc

Sunday, September 11, 2011

பஹ்ரைன் மண்டலத்தில் நடந்த அரபி இலக்கணம் பாட வகுப்பு


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் கடந்த 06-09-2011 (செவ்வாய்கிழமை) அரபி இலக்கணம் பாட வகுப்பு நடைபெற்றது.

இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த வகுப்பை தாயகத்திலிருந்து வருகை புரிந்த சகோதரர் முஹம்மது ஒலி அவர்கள் சிறப்பாகவும், அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில்  நடத்தினார் அல்ஹம்ந்துலில்லாஹ்... ஒவ்வொரு சனிக்கிழமை முதல் புதன் கிழமை வரை (வாரம் 5 நாட்கள்) அரபி இலக்கண வகுப்புகள் நடைபெறுகிறது குறிப்பிடதக்கது. 

பஹ்ரைன் மண்டல மாதாந்திர மசூரா


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....,
 
கடந்த 04-09-2011 ஞாயிறன்று பஹ்ரைன் மண்டல தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாதாந்திர மசூரா அல்லாஹுவின் கிருபையால் கூடியது. மண்டல நிர்வாகிகள் மற்றும் தாயகத்திலிருந்து வருகை புரிந்த சகோதரர் முஹம்மது ஒலி அவர்களும் கலந்து கொண்டனர்.
 
இதில் மண்டல தலைவர் சகோதரர் முபாரக் உம்ரா பயணத்தின் போது ஏற்பட்ட குறை, நிறைகள் பற்றி நம்மிடம் எடுத்துரைத்தார். இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் குறைகள் ஏதும் ஏற்படாதவாறு சகோதரர்கள் அனைவரும் ஆலோசனை வழங்கினர்.

அதன் பின்னர் ரமலானின் போது ஏற்பட்ட குறை, நிறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. அல்ஹம்ந்துலில்லாஹ் கடந்த கால ரமலானை விட இந்த ரமலானில் ஏற்பட்ட முன்னேற்றங்களை சகோதரர்கள் மத்தியில் காணப்பட்டது. இன்ஷா அல்லாஹ் இனி வரும் ரமலானில் இன்னும் அதிகமாக உழைக்க சகோதரர்கள் அனைவரும் ஆலோசனை வழங்கினர்.
 
இறுதியாக, உம்ரா நிறைவேற்றிவிட்டு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் திரும்பவும் பஹ்ரைனுக்கு வருகை புரிந்த சகோதரர் முஹம்மது ஒலி அவர்களை வைத்து ஒரு மாதம் முழு நேர தாவா செய்ய ஆலோசனை கேட்கப்பட்டது.

Thursday, September 8, 2011

பஹ்ரைனில் நடக்கவிருக்கும் பயான் நிகழ்ச்சிகள்


பஹ்ரைன் மண்டலம் சார்பாக ரூபாய் 85,000/- ஃபித்ரா வசூல்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  பஹ்ரைன் மண்டலம் சார்பாக ரூபாய் 85,000/- (என்பத்தி ஐந்தாயிரம்) ஃபித்ரா வசூல் செய்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமைக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

பஹ்ரைன் மண்டலம் சார்பாக 3 வது வருட ரமளான் உம்ரா பயணம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..... 
அல்லாஹாவின் மாபெரும் கிருபையால் மூன்று வருடங்களாக நபி வழியில் புனித ரமளானில் உம்ரா பயணத்திற்கு பஹ்ரைன் மண்டலம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கடந்த வருடங்களை போல் இந்த வருடமும் ரமளான் மாதத்தில் உம்ரா பயணத்திற்கு (மக்காஹ் & மதினா) கடந்த 26-08-2011 ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதில் தாயகத்திலுருந்து வருகை புரிந்த சகோதரர் முஹம்மது ஒலி அவர்கள் பயணத்தின் போது மார்க்க சொற்பழிவுகள் நிகழ்த்தினார்கள். பின்பு பயணிகளுக்கு நோன்பு திறக்க இப்தார் மற்றும் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதில் எராளமான சகோதர, சகோதரிகள் கலந்துக் கொண்டு பயன் பெற்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

Thursday, September 1, 2011

பஹ்ரைன் அராத் கேம்பில் நடந்த பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த நோன்புப் பெருநாள் அன்று, பஹ்ரைன் அராத்தில் உள்ள  கேம்பில் இந்தியாவிலிருந்து வந்த சில மாதங்களே ஆன தமிழகத்தச் சார்ந்த நமது சகோதரர்கள் தாங்கள் அடையும் இன்னல்களை பகிர்ந்து கொள்ள யாரும் இல்லையே என்றிருந்த நிலையில், நமது பஹ்ரைன் மண்டல நிர்வாகிகளின் தொடர்பு கிடைத்ததும், நாமது நிர்வாகிகள் அவர்களைச் சந்திதிது நலம் விசாரித்து, சில மார்கக விசயங்களையும் எடுத்துக் கூறினர்.
 இந்த சந்திப்பில் ஏஜெண்டுகளிடம் அதிக பணம் கொடுத்து இங்கு வேலைக்கு வந்ததையும், வருடத்தில் ஒரு நாள் கூட விடுப்பு இல்லை, குறைந்த சம்பளம், சுகாதாரமற்ற வசிப்பிடம், ஐநூறு நபர்களுக்கு வெறும் ஆறு கழிப்பிடங்களே உள்ளது, தரமற்ற உண்வு தரப்படுவது போன்ற தங்கள் படும் இன்னல்களை பகிர்ந்து கொண்டனர்.தங்கள் இங்கு வருவதற்கு பட்ட கடன் தீரவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இதையனைத்தையும் சகித்துக் கொண்டு வேலை செய்துவருகின்றனர்.இன்னும் ஒரு சகோதரர் இந்தியாவில் இருந்த போது தினம் ஐநூறு ரூபாய் சம்பாதித்ததையும் அனால் தற்போது இங்கு வெறும் ஆறாயிரம் மாதம் முழுவதும் சம்பாதிப்பதையும் மிகுந்த வேதணையுடன் கூறினார். இதுபோன்று இவர்கள் இன்னல்களுக்கு அளாவதற்கு நம்மவர்களே சிறு கமிஷங்களுக்கு ஆசைப்பட்டு இந்த பாதகச் செயல்களைச் செய்கின்றனர்.
நமது ஜமாஅத்தின் பத்திரிக்கைகளான உணர்வு, ஏகத்துவம், தீன் குலப்பெண்மனி, மற்றும் பாயான் சி.டி.க்களை பார்க்க படிக்க வேண்டும் என்ற அவர்களின் தேற்றத்தை அறிந்த நமது நிர்வாகிகள் அதற்கான ஏற்பாடுகளையும் செய்து தந்தனர். இந்த நிலையிலும் அவர்களின் சமுதாய சிந்தனைகள் நமது நிர்வாகிகளின் மனம் நெகிழச் செய்தது.
அவர்களுக்கு சற்று ஆறுதலளிக்கும் விதமாக நமது பஹ்ரைன் டிஎன்டிஜே மர்கஸில் வைத்து அடுத்த தினம் 31-08-2011 அன்று விருந்து உபசரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அலஹம்துலில்லா
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்