Sunday, November 27, 2011

முஹர்ரம் மாதமும், ஆஷுராவும்


Saturday, November 26, 2011

குடும்ப ஒன்று கூடல்

அல்லாஹ்வின் திருப்பெயரால்,

பஹ்ரைன் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஆனது ஏதாவது விடுமுறை நாள் வந்தால் போதும் உடனே ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து விடுவார்கள் என்று சொல்லுமள்விற்க்கு இந்த தடவையும் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து பஹ்ரைன் வாழ் தமிழ் தவ்ஹீத் சகோதரர்கள் மத்தியில் ஒரு நல்ல பெயரை எடுத்துள்ளது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

முஹர்ரம் தினமான இன்று பஹ்ரைனில் அரசு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து நமது ஜமாஅத் தமிழ் முஸ்லீம் சகோதரர்களில் குடும்ப ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததது.

இன்றைய நிகழ்ச்சியில் ஆரம்பகட்டமாக நமது மண்டல தலைவர் சகோ.முபாரக் அவர்கள், இந்த நிகழ்ச்சியை பற்றி ஒரு சிறிய விளக்கம் அளித்துவிட்டு ஆரம்பம் செய்தார்கள்.

அதைத் தொடர்ந்து சகோ.பிஜெ அவர்கள் ஊட்டி தர்பியாவில் உரை நிகழ்த்திய "நாம் ஏன் தவ்ஹீத் ஜமாஅத்-ல் இருக்க வேண்டும்?" என்ற உரையின் CD-ஐ Projector உதவி கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இந்த உரையில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம், எப்படியெல்லாம் நமது செயல்பாடுகள் இருக்கின்றன, நமது திட்டங்கள் என்ன என்பதையெல்லாம் மிகத் தெளிவாக விளக்கினார்கள். இதைக் கேட்ட நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் இப்படியெல்லாமா நமது ஜமாஅத் திட்டங்கள் வகுக்கின்றது என்பதை மிக ஆச்சரியத்துடன் கேட்டனர்.

இதன் பிறகு மதிய உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

இந்த நிகழ்ச்சியால் நமது தாவா பணிகள் மேலும் சிறப்பாக நடைபெற இது பயனுள்ள வகையில் அமையும்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதரர்கள் குடுப்பத்துடன் கலந்து கொண்டு துஆ செய்து நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Friday, November 25, 2011

வாராந்திர நிகழ்ச்சி - 25-11-2011



அல்லாஹ்வின் திருப்பெயரால்,


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பயான் நிகழ்ச்சி 25-11-2011 வெள்ளிக் கிழமை மாலை மஃக்ரீப் தொழுகைக்குப் பின் ஆரம்பமானது. 


இன்றைய நிகழ்ச்சியில் நமது மண்டல தாவா பொருப்பாளர் சகோ. ஹாஜா குத்புதீன் அவர்கள் "இஸ்லாமிய பார்வையில் மறப்போம் மன்னிப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 


இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 25-11-2011



அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையின் வாராந்திர நிகழ்ச்சி ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இன்றைய நிகழ்ச்சியில் சகோ.ஒலி அவர்கள், “இறைவனின் கண்காணிப்பு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் கிளை தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, November 22, 2011

கொள்கையா? கூட்டமா?



தமிழகத்தில் தவ்ஹீதுப் பிரச்சாரம் 80களில் துவங்கி, பின்னர் அதற்காக ஓர் அமைப்பு உருவானது. இறுதியில் அது ஒரு தனி சமுதாயமாகப் பரிணமித்திருக்கின்றது. முன்னர் சில வருடங்களில் தனியாகப் பெருநாள் கொண்டாடினாலும் அதிகமான சந்தர்ப்பங்களில் தனியாகப் பெருநாள் கொண்டாடவில்லை.

சமீப காலங்களில் ஜாக் மற்றும் தமுமுகவினர் அதிகமான சந்தர்ப்பங்களில் நோன்பு மற்றும் பெருநாளை தனியாகக் கொண்டாடினர்.

நம்மை நோக்கி ஜாக்கினர், இவர்கள் கூட்டம் சேர்ப்பதற்காக குராபிகளுடன் ஒத்துப் போகிறார்கள்' என்று விமர்சித்தனர்.

கூட்டம் கூட்டுவதற்காக, வசூலை அள்ளிக் கொட்டுவதற்காக இவர்கள் சு.ஜ.வுடன் சேர்ந்து பெருநாள் கொண்டாடுகிறார்கள் என்று விமர்சனம் செய்வதற்கு அருகதையற்ற சுனாமித் திருடர்களும் விமர்சனம் செய்தனர்.

சு.ஜ. கூட்டத்தை வைத்துத் தான் தவ்ஹீத் ஜமாஅத் இதுவரை படம் காட்டியது. தனியாக நின்றால் இவர்களின் சாயம் வெளுத்து விடும் என்று நந்தினி நாயகர்களும் தங்கள் பங்குக்கு விமர்சனம் செய்தனர்.

கூட்டத்திற்காகக் கொள்கை காணும் சந்தர்ப்பவாத நாடகக் கூட்டம் என்று நம்மைப் பற்றி இவர்கள் எண்ணிக் கொண்டனர். இது கொள்கைக்காக உள்ள இயக்கம் என்பதை இவர்கள் மறந்து விட்டனர். இந்த இயக்கத்திற்கு எண்ணிக்கை ஒரு பொருட்டே கிடையாது. லட்சியம் தான் அதன் இலக்கும் எல்லையும் ஆகும். கூட்டம் ஒரு பொருட்டே கிடையாது. கொள்கை தான் இதன் உயிர் மூச்சாகும். அதைத் தான் இந்தப் பெருநாள் நிரூபித்துக் காட்டியது.

இந்த இயக்கம் பிறை விஷயத்தில் இறையச்சத்தைப் பார்த்தது. நிறையப் பேர் எதில் இருக்கிறார்கள் என்ற பெரும்பான்மையைப் பார்க்கவில்லை.

பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு (முஹம்மதே!) நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை. (அல்குர்ஆன் 6:116)


இந்த வசனத்தின் அடிப்படையில் பெரும்பான்மையைத் தூக்கி எறிந்து விட்டு, தூதருக்குத் தான் கட்டுப்பட்டது. பழிப்பவரின் பழிப்புக்கு அஞ்சாமல் அல்லாஹ்வுக்கே அஞ்சியது.

நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏக இறைவனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 5:54). 

குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமாக ஒரு செயலைச் செய்யும் போது அதற்கு யாராலும் பதில் சொல்ல முடியாது. காரணம் பதில் இருக்காது.

இதுவரை எந்த நடைமுறையைப் பின்பற்றினீர்கள்? சென்ற நோன்புப் பெருநாளில் பிற மாநிலப் பிறையை ஏன் ஏற்கவில்லை? முந்தி வந்தால் மட்டும் ஏற்பீர்கள்; பிந்தி வந்தால் வந்தால் ஏற்க மாட்டீர்களா? என்ற கேள்விகளுக்கு டவுண் காஜியும் பதில் அளிக்க முடியவில்லை. உல(க)மாக்கள் சபையாலும் விடையளிக்க முடியவில்லை.

இந்தக் கேள்விக் கணைகளுக்கு விடையாகத் தான் மடை திறந்த வெள்ளமாய் இந்தப் பெருநாளில் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய தொழுகைகளில் மக்கள் வந்து இறங்கினர். அந்தத் திடல்களைக் கடல்களாக்கினர்.

இதுவே எனது பாதை. நானும், என்னைப் பின்பற்றியோரும் தெளிவான விளக்கத்தில் இருந்து கொண்டு அல்லாஹ்வை நோக்கி அழைக்கிறோம். அல்லாஹ் தூயவன். நான் இணை கற்பிப்பவன் அல்லன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 12:108) 

அல்லாஹ் சொல்வது போன்று எங்கள் பாதையில் தெளிவிருக்கின்றது; அதனால் துணிவிருக்கின்றது. தொய்வின்றி எங்கள் பயணம் தொடர்கின்றது. வெற்றி கொள்கைக்காகத் தான்! கூட்டத்திற்கு அல்ல! நம்மை விமர்சிக்கும் இவர்களுக்குக் கூட்டத்தின் மீது தான் நாட்டம். கொள்கை இல்லை. அதனால் கூட்டம் அவர்களிடம் இல்லை. வெறும் கூடாரம் மட்டும் தான் இருக்கின்றது. 

எங்களுக்குக் கொள்கையில் மட்டும் தான் நாட்டம். கூட்டத்தைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் கூட்டம் எங்களுக்கு வருகின்றது. இது அல்லாஹ்வின் வேலை.


Saturday, November 19, 2011

வாராந்திர நிகழ்ச்சி - 18-11-2011




அல்லாஹ்வின் திருப்பெயரால்,

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பயான் நிகழ்ச்சி 18-11-2011 வெள்ளிக் கிழமை மாலை மஃக்ரீப் தொழுகைக்குப் பின் ஆரம்பமானது. 

இன்றைய நிகழ்ச்சியில் நமது மண்டல வகுப்புகளின் பொருப்பாளர் சகோ. ஜெய்லானி அவர்கள் "நன்மை செய்வதில் நாம் ஏன் விரைவதில்லை?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

இவர் தமது உரையில் நாம் இவ்வுலக வாழ்கிற்க்கே முன்னுரிமை அளித்து வருகிறோம். அதன் கரணத்தால் நன்மை செய்வதில் நாம் முந்திகக்கொள்வதில்லை என்பதை வந்திருந்த அனைத்து சகோதர, சகோதரிகள் புரிந்தி கொள்ளுமளவிற்க்கு மிக எளிய நடையில் விளக்கினார்கள்.


இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 18-11-2011



அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையின் வாராந்திர நிகழ்ச்சி ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இன்றைய நிகழ்ச்சியில் நமது பஹ்ரைன் மண்டல தலைவர் சகோ.முபாரக் அவர்கள், “சந்தேகமான விஷயங்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் கிளை தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, November 12, 2011

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (11-11-2011)


அல்லாஹ்வின் கிருபையால், தாவா பணிகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இன்று (11-11-2011) இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (மாற்று மதத்தினருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி) பஹ்ரைன் மண்டலம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. 


இதின் ஆரம்பகட்டமாக நமது மண்டலத்தின் துணை தலைவரான சகோ. மொய்தீன் அவர்கள் வரவேற்புரை கூறி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதுபோன்ற மாற்று மதத் தினருக்காக சிறப்பு நிகழ்ச்சிகளை தமிழமெங்கும் நடத்தி வருகிறது எனபதை வந்திருந்த மாற்று மத நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லி தெளிவுபடுத்தினார்கள்.


அவரைத் தொடர்ந்து தாயகத்திலிருந்து சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்ட மேலாண்மை குழு உறுப்பினரான சகோ.M.S.சுலைமான் அவர்கள் "இஸ்லாம் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 


இந்த இஸ்லாத்தை பற்றிய அறிமுக உரையானது, வந்திருந்த மாற்று மத நண்பர்கள் இஸ்லாத்தை புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் மிக எளிதாகவும், அறிவுப்பூர்வமாகவும் இருந்தது. 
இந்த உரையை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளி விட்டு குழுமியிருந்த சகோதர, சகோதரிகளுக்கு தேனீர் விநியோகிக்கப்பட்டது. 


இதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. தொடக்கத்திலியே சகோதரர்கள் மிகவும் ஆர்வமாகவும், ஆக்கப்பூர்வமான கேள்விகளையுல் தொடுத்தனர். இதற்க்கு நமது சகோதரர் மிகவும் தெளிவாக விளக்கினார்கள். இன்றைய நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில உங்கள் பார்வைக்கு.
  1. ஒரே குர்ஆனை பின்பற்றும் நீங்கள் ஏன் இத்தனை பிரிவுகளாக பிளவு பட்டுள்ளீர்கள்?
  2. பன்றி உண்பதற்க்கு இஸ்லாம் ஏன் தடை விதித்துள்ளது?
  3. கடவுளுக்கு உருவமில்லை என்று சொல்லும் நீங்கள், ஏன் இறைவனை "அவன்" என்று குறிப்பிடுகின்றீர்கள்?
  4. இயற்கை சீற்றங்கள் ஏன் நிகழ்கின்றன?

இது போன்ற இன்னும் பல அறிவுப்பூர்வமான கேள்விகளை குழுமியிருந்த நண்பர்கள் கேட்டு விளக்கம் பெற்றனர். 

இந்த நிகழ்ச்சியின் சிறந்த 2 கேள்விகளுக்கு 2 குர்ஆன் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் வந்திருந்த அனைத்து மாற்று மத நண்பர்களுக்கும் இலவசமாக அநேக புத்தகங்கள் வழங்கப்பட்டன. அவையாவன, 
  1. இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (மாற்று மத நண்பர்களுக்கான கேள்வி பதில்கள்)
  2. அர்த்தமுள்ள கேள்வி, அறிவுப்பூர்வமான பதில்கள்
  3. இது தான் பைபிள்
  4. இயேசு இறைமகனா?
  5. இயேசு சிலுவையில் அறையப்படவில்லை
  6. அர்த்தமுள்ள இஸ்லாம்
  7. வருமுன் உரைத்த இஸ்லாம்

நமது சகோ. மொய்தீன் அவர்கள் முடிவுரை கூறி சபையை முடித்தார். 
பிறகு மாற்று மத நண்பர்களுக்கு உணவு பரிமாறப்பட்டு சபை களைந்தது.
அதன் பிறகு குழுமியிருந்த நமது முஸ்லீம் சகோதரர்கள் இஷா தொழுகையை ஜமாஅத்-ஆக தொழுத பின்னர் சகோ. M. S. சுலைமான் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த சகோதரர்கள், மற்றும் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த சகோதரர்கள் என அனைவருக்கும் நன்றி கூறினார்கள். 


இதைத் தொடர்ந்து சகோதரர் கூறிய ஒரு சில வார்த்தைகளால், குழுமியிருந்த சகோதர்கள் அனைவருக்கும் கண்களில் தண்ணீர் வெளியாகி விட்ட நிகழ்ச்சி. அவர் கூறியது, "நான் இந்த மாற்று மத நிகழ்ச்சிக்கு இத்தனை சகோதரர்கள் வருவார்கள் என்று எதிர் பார்க்கவில்லை. இப்படி இத்தனை பேர் வருவார்கள் என்று தெரிந்திருந்தால் இந்த நிகழ்ச்சியை ஒரு மன்றம் வாடகைக்கு எடுத்து நடத்தியிருக்கலாம் என்று பஹ்ரைன் மண்டல ஜமாஅத் சகோதரர்களிடம் கேட்டேன். அதற்கு இவர்கள் வெளிமேடையில் நடத்த பணமில்லை" என்று சொன்னவுடன் குழுமியிருந்த சகோதரர்கள் அனைவருக்கும் கண்கள் கலங்கிவிட்டது. இதை கேட்டவுடனயே நமது சகோதரர்கள் அனைவரும் இந்த ஏகத்துவ பணிக்கு வாரி வழங்கினார்கள். புகழ் அனைத்தும் இறைவனுக்கே!!!!



இதனைத் தொடர்ந்து இரவு உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே முடிவு பெற்றது. 


இந்த நிகழ்ச்சியில் மாற்று மத நண்பர்கள் மற்றும் நமது சகோதரர்கள் என அனைவரும் வந்து குழுமிவிட்டனர். இதனால் உட்கார்வதற்க்கு இடமில்லாமல் சகோதரர்கள் கால் கடுக்க நின்று நிகழ்ச்சியை கேட்டனர் என்றால் மிகையாகாது. இத்தனை மக்களை கொண்டு வந்து சேர்த்த அல்லாஹ்விற்க்கே எல்லாப் புகழும்!!!!

Wednesday, November 9, 2011

சிறப்பு நிகழ்ச்சி - ரிஃபா கிளை (09-11-2011)

அல்லாஹ்வின் திருப்பெயரால்,

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையின் சார்பாக சிறப்பு பயான் நிகழ்ச்சி இன்று (09-11-2011) நடைபெற்றது. 

இன்றைய நிகழ்ச்சியில், நமது தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள மாநில மேலாண்மை குழு உறுப்பினரான சகோ. M. S. சுலைமான் அவர்கள் "மரண்த்திற்க்கு பின்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

இதில் ஆரம்பகட்டமாக அல்லாஹ் தனது திருமறையில் கூறியிருக்கின்ற "இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டும் அன்றி வேறில்லை" என்ற வசனத்தை மேற்கோள் காட்டி தனது உரையை ஆரம்பித்தார்.


இந்த அற்பமான 50 அல்லது 60 வருட வாழ்க்கைகாக நாம் காட்டுகின்ற முக்கியத்துவத்தை விட, மறுமை வாழ்க்கையை நம்பக்கூடிய முஸ்லீம்களான நாங்கள் அதற்க்கு எந்தளவு முக்கியத்துவம் அளிக்கிறோம் என்பதை சிந்தித்து பார்க்க கடமைபட்டுள்ளோம் என்றார்.


இதனை தொடர்ந்து சகோதரர்கள் தங்களது மார்க்க சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.


இந்த நிகழ்ச்சியை நமது ஹித் கிளை சகோதரர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

சிறப்பு நிகழ்ச்சி - ஹித் கிளை (08-11-2011)


அல்லாஹ்வின் திருப்பெயரால்,

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டல ஹித் கிளையின் சார்பாக தியாகத் திருநாளின் நிகழ்ச்சி 08-11-2011 செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. 

இன்றைய நிகழ்ச்சியில், நமது தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள மாநில மேலாண்மை குழு உறுப்பினரான சகோ. M. S. சுலைமான் அவர்கள் "தவ்ஹீத் ஏற்படுத்திய மாற்றங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

இவர் உரையில் நாம் ஏகத்துவம் எனும் தவ்ஹீத் வருவதற்க்கு முன், முஸ்லீம்கள் என்று சொல்லக்கூடிய நாம் எப்படி இருந்தோம்? இன்று தவ்ஹீத் என்ற ஓரிறைக் கொள்கை வந்த பிறகு எப்படி இருக்கிறோம்? என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள வகையில் மிகத் தெளிவாக விளக்கினார்கள். 


இந்த ஏகத்துவம் என்ற தவ்ஹீத் இன்று எவ்வளவு வீரீயமாகவும், எப்படியெல்லாம் மக்களை கவர்ந்திருக்கின்றது, மேலும் இன்று மக்கள் இந்த ஏகத்துவ கொள்கையை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு நாளுக்கு நாள் முன் வருகின்றனர் என்பதை பற்றியும் விளக்கினார்கள். 


இதன் பிறகு சகோதர, சகோதரிகள் இஸ்லாம் சம்பந்தமான கேள்விகள் கேட்க சகோதரர் அவர்கள் மிக அழகாகவும், மக்களுக்கு விளங்கும் வகையிலும் எடுத்துரைத்தார்கள். 


இதனை தொடர்ந்து இரவு உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.


இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Tuesday, November 8, 2011

தர்பியா நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

அல்லாஹ்வின் கிருபையால் பஹ்ரைன் மண்டல நிர்வாகிகளின் தர்பியா நிகழ்ச்சி (05-11-2011) அன்று நடைபெற்றது.

இதில் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள மேலாண்மை குழு உறுப்பினரான சகோ. M. S. சுலைமான் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

இவர் நமது மண்டலத்தில் நடைபெறுகின்ற தாவா பணிகள் மற்றும் வகுப்புகள் பற்றியும் கேள்வி கேட்டு பஹ்ரைன் மண்டல நிர்வாகிகள் விள்க்கினார்கள். அல்லாஹ்வின் உதவியுடன் நிகழ்ச்சி சிறப்பாக முடிவு பெற்றது.

சிறப்பு நிகழ்ச்சி (பெண்களுக்காக)

அல்லாஹ்வின் கிருபையால், பெண்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி இன்று (07-11-2011) மக்ரீப் தொழுகைக்குப் பிறகு ஆரம்பமானது.

இந்த நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்த்து வருகை புரிந்துள்ள மேலாண்மை குழு உறுப்பினரான சகோ. M. S. சுலைமான் அவர்கள் "பெண்களின் சமுதாய கடமை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் அல்லாஹ் தனது குர்ஆனில் மற்றும் நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதரப்பூர்வமான ஹதீஸ்களை எடுத்துக் காட்டி பெண்கள் சமுதாயக் கடமையாக என்ன உள்ளது என்பதை அறிவுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் குறிப்பிட்டுக்காட்டினார்கள்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கேள்வி பதில் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அதில் கேட்கப்பட்ட கேள்விகளாவன.

  1. சுன்னத் ஜமாஅத்திற்க்கும், தவ்ஹீத் ஜாமஅத்-திற்க்கும் இடையேயுள்ள வேறுபாடுகள்
  2. தவ்ஹீத் ஜமாஅத் ஏன் அரபு அரசாங்கத்திடமிருந்து பண உதவி பெருவதில்லை?
  3. பணிக்கு செல்ல சொல்லி வர்புருத்தும் மனைவிகளை, கண்வன்மார்களை பற்றி இஸ்லாம் கூறும் விளக்கம்

மற்றும் பல கேள்விகளை கூடியிருந்த சகோதரிகள் கேட்டு விளக்கம் பெற்றனர்.

இதன் பிறகு ஒரு சிறிய உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நமது ஏராளாமான சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - தியாகத் திருநாள் 2011



அல்லாஹ்வின் கிருபையால், தியாகத் திருநாளான (06-11-2011) இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (இஸ்லாமியர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி) பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இதின் ஆரம்பகட்டமாக நமது மண்டல தாவா பொறுப்பாளர் சகோ. ஹாஜா குத்புதீன் அவர்கள் வரவேற்புரை சொல்லி மன்றத்தை ஆரம்பம் செய்தார்கள். அவரை தொடர்ந்து மண்டல தலைவர் சகோ. முபாரக் அவர்கள் பஹ்ரைன் மண்டல செயல்பாடுகள் குறித்து விளக்கினார்கள். மேலும் அவரை தொடர்ந்து நமது மண்டல ஆலோசனை குழு உறுப்பினரான சகோ. அப்துல் ஹமீது அவர்கள் ''ஈமானில் உறுதி'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இவரது உரை முடிந்தவுடன் தேனீருக்காக ஒரு சிறிய இடைவெளி விடப்பட்டது.

இந்த இடைவெளியில், நமது மண்டல ஜாமாத் சார்பாக தயாரிக்கப்பட்ட நமது தவ்ஹீத் ஜமாத்தின் அழைப்புப்பணி, மனிதநேய பணி மற்றும் பஹ்ரைன் மண்டல செயல்பாடுகள் குறித்து விளக்கமாக தயாரிக்கப்பட்ட ஒரு குறும் படம் ஒளிபரப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கவேண்டுமென தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட மேலாண்மை குழு உறுப்பினரான சகோ.M.S.சுலைமான் அவர்கள் "நன்மை செய்வதை விட்டு நம்மை தடுப்பது எது" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இவரது உரையில் நாம் நன்மை செய்யவேண்டுமென்று நினைத்தாலும் ஷைத்தான் நமது மனதை குழப்பி வேறுவிதமாக மாற்றி நம்மளை நன்மை செய்யவிடாமல் தடுத்து விடுகின்றது, என்பதை பற்றி அரிவுப்பூர்வமாக விளக்கி இந்த சிறிய உரையை முடிவுக்கு கொண்டுவந்தார்கள்.
இதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சிக்காக டோக்கன் விநியோகிக்கப்பட்டு ஆரம்பம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளான.

ஆண்கள் தரப்பிலிருந்து:
  1. அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றனா? அல்லது முதல் வானத்தில் இறங்கி வருகின்றானா?
  2. யாசகம் கேட்பவரை புறக்கணிப்பதாக கூறும் ஹதீஸின் விளக்கம் என்ன?
  3. பெரம்பலூர் மாவட்டம், லப்பைகுடி காட்டில் தவ்ஹீத் ஜமாஅத் பிரிந்தர்கான விளக்கம்.
  4. பிறை பற்றிய விளக்கம் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் எப்பொழுதும் பெருநாளை பிரிந்து தொழுகின்ற என்பதன் விளக்கம்.
  5. குண்டுவைத்தவர்கள் யார்?

பெண்கள் தரப்பிலிருந்து:

  1. விதியை நம்புவது எப்படி?
  2. காஃபிரான ஒருவரை இஸ்லாத்திற்க்கு கொண்டு வந்தால் என்ன நன்மைகள் அல்லாஹ்விடம் கிடைக்கும்? 
  3. பெண்கள் உயர்கல்வி படிக்கலாமா?
இந்த கேள்விகளுக்கெல்லாம் அறிவுப்பூர்வமாகவும், ஆதரப்பூர்வமாகவும், மக்கள் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் எளிய நடையில் விளக்கினார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக கேட்கப்பட்ட 2 கேள்விகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
நமது மண்டல செயலாளர் சகோ. ஜாகிர் ஹுசைன் அவர்கள் முடிவுரை கூறி சபையை முடித்தார்.

இதனை தொடர்ந்து இஷா தொழுகையை ஜமாஅத்-ஆக தொழுது, இரவு உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே முடிவு பெற்றது.

இந்த நிகழ்ச்சிக்காக ஆலோசனை படிவம் கொடுத்து, எழுதி வாங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியின் முடிவில் இலவசமாக CD விநியோகம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சகோதரர்கள் தங்கள் குடும்பத்துடன் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Monday, November 7, 2011

தியாகத் திருநாள் - சிற்றுண்டி நிகழ்ச்சி


அல்லாஹ்வின் உதவியால், பெருநாள் தினமான இன்று (06-11-2011) பெருநாள் தொழுகைக்குப் பிறகு பஹ்ரைன் மண்டல ஜமாஅத் சார்பாக ஒரு சிறிய சிற்றுண்டி உணவு நம்து மர்க்கஸில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் நமது ஜமாஅத் சகோதர்கள் மட்டுமல்லாது பிற சகோதரர்களும் அவர்களின் குடும்பத்தாருடன் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த பஹ்ரைனில் வேறு எந்த ஜமாஅத்தும் செய்யாத மிக அரிய செயல் என்றும், நல்ல ஒரு புதிய முயற்ச்சி என்றும், இந்த ஒரு புதிய விதமான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் நிர்வாகிகளுக்கு துஆ செய்து மகிழ்ச்சி தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

நோட்டிஸ் விநியோகம் - தியாகத் திருநாள் 2011


அல்லாஹ்வின் கிருபையால் தியாகத் திருநாளான இன்று (06-11-2011) பெருநாள் தொழுகைக்குப் பிறகு தியாகத் திருநாளிர்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளின், கிட்டத்தட்ட 500 நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது.

வாரந்திர நிகழ்ச்சி - 04-11-2011

அல்லாஹ்வின் திருப்பெயரால்,

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பயான் நிகழ்ச்சி 04-11-2011 வெள்ளிக் கிழமை மாலை மஃக்ரீப் தொழுகைக்குப் பின் இனிதே ஆரம்பமானது.

இன்றைய நிகழ்ச்சியில், நமது தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள மாநில மேலாண்மை குழு உறுப்பினரான சகோ. M. S. சுலைமான் அவர்கள் "நாம் இவ்வுலகில் அந்நியர்களா?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இவர்களது உரையில் நாம் இவ்வுலகிற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்து, அதன் காரணத்தால் மறுமையின் பற்றற்று வாழ்கிறோம் என்பதை குறித்து பேசினார்கள். மேலும் நமது வணக்க வழிபாடுகளில் எவ்வாறு அலட்சிய போக்கை காண்கிறோம் என்று உலகப்பூர்வமாக அழகிய முறையில் விளக்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்