Saturday, November 12, 2011

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (11-11-2011)


அல்லாஹ்வின் கிருபையால், தாவா பணிகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இன்று (11-11-2011) இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (மாற்று மதத்தினருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி) பஹ்ரைன் மண்டலம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. 


இதின் ஆரம்பகட்டமாக நமது மண்டலத்தின் துணை தலைவரான சகோ. மொய்தீன் அவர்கள் வரவேற்புரை கூறி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதுபோன்ற மாற்று மதத் தினருக்காக சிறப்பு நிகழ்ச்சிகளை தமிழமெங்கும் நடத்தி வருகிறது எனபதை வந்திருந்த மாற்று மத நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லி தெளிவுபடுத்தினார்கள்.


அவரைத் தொடர்ந்து தாயகத்திலிருந்து சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்ட மேலாண்மை குழு உறுப்பினரான சகோ.M.S.சுலைமான் அவர்கள் "இஸ்லாம் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 


இந்த இஸ்லாத்தை பற்றிய அறிமுக உரையானது, வந்திருந்த மாற்று மத நண்பர்கள் இஸ்லாத்தை புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் மிக எளிதாகவும், அறிவுப்பூர்வமாகவும் இருந்தது. 
இந்த உரையை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளி விட்டு குழுமியிருந்த சகோதர, சகோதரிகளுக்கு தேனீர் விநியோகிக்கப்பட்டது. 


இதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. தொடக்கத்திலியே சகோதரர்கள் மிகவும் ஆர்வமாகவும், ஆக்கப்பூர்வமான கேள்விகளையுல் தொடுத்தனர். இதற்க்கு நமது சகோதரர் மிகவும் தெளிவாக விளக்கினார்கள். இன்றைய நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில உங்கள் பார்வைக்கு.
  1. ஒரே குர்ஆனை பின்பற்றும் நீங்கள் ஏன் இத்தனை பிரிவுகளாக பிளவு பட்டுள்ளீர்கள்?
  2. பன்றி உண்பதற்க்கு இஸ்லாம் ஏன் தடை விதித்துள்ளது?
  3. கடவுளுக்கு உருவமில்லை என்று சொல்லும் நீங்கள், ஏன் இறைவனை "அவன்" என்று குறிப்பிடுகின்றீர்கள்?
  4. இயற்கை சீற்றங்கள் ஏன் நிகழ்கின்றன?

இது போன்ற இன்னும் பல அறிவுப்பூர்வமான கேள்விகளை குழுமியிருந்த நண்பர்கள் கேட்டு விளக்கம் பெற்றனர். 

இந்த நிகழ்ச்சியின் சிறந்த 2 கேள்விகளுக்கு 2 குர்ஆன் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் வந்திருந்த அனைத்து மாற்று மத நண்பர்களுக்கும் இலவசமாக அநேக புத்தகங்கள் வழங்கப்பட்டன. அவையாவன, 
  1. இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (மாற்று மத நண்பர்களுக்கான கேள்வி பதில்கள்)
  2. அர்த்தமுள்ள கேள்வி, அறிவுப்பூர்வமான பதில்கள்
  3. இது தான் பைபிள்
  4. இயேசு இறைமகனா?
  5. இயேசு சிலுவையில் அறையப்படவில்லை
  6. அர்த்தமுள்ள இஸ்லாம்
  7. வருமுன் உரைத்த இஸ்லாம்

நமது சகோ. மொய்தீன் அவர்கள் முடிவுரை கூறி சபையை முடித்தார். 
பிறகு மாற்று மத நண்பர்களுக்கு உணவு பரிமாறப்பட்டு சபை களைந்தது.
அதன் பிறகு குழுமியிருந்த நமது முஸ்லீம் சகோதரர்கள் இஷா தொழுகையை ஜமாஅத்-ஆக தொழுத பின்னர் சகோ. M. S. சுலைமான் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த சகோதரர்கள், மற்றும் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த சகோதரர்கள் என அனைவருக்கும் நன்றி கூறினார்கள். 


இதைத் தொடர்ந்து சகோதரர் கூறிய ஒரு சில வார்த்தைகளால், குழுமியிருந்த சகோதர்கள் அனைவருக்கும் கண்களில் தண்ணீர் வெளியாகி விட்ட நிகழ்ச்சி. அவர் கூறியது, "நான் இந்த மாற்று மத நிகழ்ச்சிக்கு இத்தனை சகோதரர்கள் வருவார்கள் என்று எதிர் பார்க்கவில்லை. இப்படி இத்தனை பேர் வருவார்கள் என்று தெரிந்திருந்தால் இந்த நிகழ்ச்சியை ஒரு மன்றம் வாடகைக்கு எடுத்து நடத்தியிருக்கலாம் என்று பஹ்ரைன் மண்டல ஜமாஅத் சகோதரர்களிடம் கேட்டேன். அதற்கு இவர்கள் வெளிமேடையில் நடத்த பணமில்லை" என்று சொன்னவுடன் குழுமியிருந்த சகோதரர்கள் அனைவருக்கும் கண்கள் கலங்கிவிட்டது. இதை கேட்டவுடனயே நமது சகோதரர்கள் அனைவரும் இந்த ஏகத்துவ பணிக்கு வாரி வழங்கினார்கள். புகழ் அனைத்தும் இறைவனுக்கே!!!!



இதனைத் தொடர்ந்து இரவு உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே முடிவு பெற்றது. 


இந்த நிகழ்ச்சியில் மாற்று மத நண்பர்கள் மற்றும் நமது சகோதரர்கள் என அனைவரும் வந்து குழுமிவிட்டனர். இதனால் உட்கார்வதற்க்கு இடமில்லாமல் சகோதரர்கள் கால் கடுக்க நின்று நிகழ்ச்சியை கேட்டனர் என்றால் மிகையாகாது. இத்தனை மக்களை கொண்டு வந்து சேர்த்த அல்லாஹ்விற்க்கே எல்லாப் புகழும்!!!!

0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்