எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டல ஹித் கிளையின் சார்பாக தியாகத் திருநாளின் நிகழ்ச்சி 08-11-2011 செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.
இன்றைய நிகழ்ச்சியில், நமது தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள மாநில மேலாண்மை குழு உறுப்பினரான சகோ. M. S. சுலைமான் அவர்கள் "தவ்ஹீத் ஏற்படுத்திய மாற்றங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இவர் உரையில் நாம் ஏகத்துவம் எனும் தவ்ஹீத் வருவதற்க்கு முன், முஸ்லீம்கள் என்று சொல்லக்கூடிய நாம் எப்படி இருந்தோம்? இன்று தவ்ஹீத் என்ற ஓரிறைக் கொள்கை வந்த பிறகு எப்படி இருக்கிறோம்? என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள வகையில் மிகத் தெளிவாக விளக்கினார்கள்.
இந்த ஏகத்துவம் என்ற தவ்ஹீத் இன்று எவ்வளவு வீரீயமாகவும், எப்படியெல்லாம் மக்களை கவர்ந்திருக்கின்றது, மேலும் இன்று மக்கள் இந்த ஏகத்துவ கொள்கையை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு நாளுக்கு நாள் முன் வருகின்றனர் என்பதை பற்றியும் விளக்கினார்கள்.
இதன் பிறகு சகோதர, சகோதரிகள் இஸ்லாம் சம்பந்தமான கேள்விகள் கேட்க சகோதரர் அவர்கள் மிக அழகாகவும், மக்களுக்கு விளங்கும் வகையிலும் எடுத்துரைத்தார்கள்.
இதனை தொடர்ந்து இரவு உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment