Tuesday, November 8, 2011

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - தியாகத் திருநாள் 2011



அல்லாஹ்வின் கிருபையால், தியாகத் திருநாளான (06-11-2011) இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (இஸ்லாமியர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி) பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இதின் ஆரம்பகட்டமாக நமது மண்டல தாவா பொறுப்பாளர் சகோ. ஹாஜா குத்புதீன் அவர்கள் வரவேற்புரை சொல்லி மன்றத்தை ஆரம்பம் செய்தார்கள். அவரை தொடர்ந்து மண்டல தலைவர் சகோ. முபாரக் அவர்கள் பஹ்ரைன் மண்டல செயல்பாடுகள் குறித்து விளக்கினார்கள். மேலும் அவரை தொடர்ந்து நமது மண்டல ஆலோசனை குழு உறுப்பினரான சகோ. அப்துல் ஹமீது அவர்கள் ''ஈமானில் உறுதி'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இவரது உரை முடிந்தவுடன் தேனீருக்காக ஒரு சிறிய இடைவெளி விடப்பட்டது.

இந்த இடைவெளியில், நமது மண்டல ஜாமாத் சார்பாக தயாரிக்கப்பட்ட நமது தவ்ஹீத் ஜமாத்தின் அழைப்புப்பணி, மனிதநேய பணி மற்றும் பஹ்ரைன் மண்டல செயல்பாடுகள் குறித்து விளக்கமாக தயாரிக்கப்பட்ட ஒரு குறும் படம் ஒளிபரப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கவேண்டுமென தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட மேலாண்மை குழு உறுப்பினரான சகோ.M.S.சுலைமான் அவர்கள் "நன்மை செய்வதை விட்டு நம்மை தடுப்பது எது" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இவரது உரையில் நாம் நன்மை செய்யவேண்டுமென்று நினைத்தாலும் ஷைத்தான் நமது மனதை குழப்பி வேறுவிதமாக மாற்றி நம்மளை நன்மை செய்யவிடாமல் தடுத்து விடுகின்றது, என்பதை பற்றி அரிவுப்பூர்வமாக விளக்கி இந்த சிறிய உரையை முடிவுக்கு கொண்டுவந்தார்கள்.
இதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சிக்காக டோக்கன் விநியோகிக்கப்பட்டு ஆரம்பம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளான.

ஆண்கள் தரப்பிலிருந்து:
  1. அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றனா? அல்லது முதல் வானத்தில் இறங்கி வருகின்றானா?
  2. யாசகம் கேட்பவரை புறக்கணிப்பதாக கூறும் ஹதீஸின் விளக்கம் என்ன?
  3. பெரம்பலூர் மாவட்டம், லப்பைகுடி காட்டில் தவ்ஹீத் ஜமாஅத் பிரிந்தர்கான விளக்கம்.
  4. பிறை பற்றிய விளக்கம் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் எப்பொழுதும் பெருநாளை பிரிந்து தொழுகின்ற என்பதன் விளக்கம்.
  5. குண்டுவைத்தவர்கள் யார்?

பெண்கள் தரப்பிலிருந்து:

  1. விதியை நம்புவது எப்படி?
  2. காஃபிரான ஒருவரை இஸ்லாத்திற்க்கு கொண்டு வந்தால் என்ன நன்மைகள் அல்லாஹ்விடம் கிடைக்கும்? 
  3. பெண்கள் உயர்கல்வி படிக்கலாமா?
இந்த கேள்விகளுக்கெல்லாம் அறிவுப்பூர்வமாகவும், ஆதரப்பூர்வமாகவும், மக்கள் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் எளிய நடையில் விளக்கினார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக கேட்கப்பட்ட 2 கேள்விகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
நமது மண்டல செயலாளர் சகோ. ஜாகிர் ஹுசைன் அவர்கள் முடிவுரை கூறி சபையை முடித்தார்.

இதனை தொடர்ந்து இஷா தொழுகையை ஜமாஅத்-ஆக தொழுது, இரவு உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே முடிவு பெற்றது.

இந்த நிகழ்ச்சிக்காக ஆலோசனை படிவம் கொடுத்து, எழுதி வாங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியின் முடிவில் இலவசமாக CD விநியோகம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சகோதரர்கள் தங்கள் குடும்பத்துடன் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்