Tuesday, December 31, 2013

பஹ்ரைன் மண்டலம் தலைமை மர்கஸ் பயான்

27-12-2013 (வெள்ளிக் கிழமை மக்ரிப் தொழுகைக்குப்பிறகு பஹ்ரைன் மண்டல தலைமை மர்கஸில் சகோதரர் பஸீஹ் அவர்கள்  தடுமாறும் உள்ளமும் அதற்க்கான தண்டனையும் என்ற தலைப்பில் உரையாற்றினார். ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

ஹித் கிளை வாராந்திர நிகழ்ச்சி


27.12.2013 (வெள்ளிக் கிழமைஜும்ஆ தொழுகைக்குப் பிறகு பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளையில்  அல்லாஹ்வை பொருந்திக்கொள்வோம் " என்ற தலைப்பில் சகோதரர் மொஹிதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.  அதிகமான மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.

ரிபாஃ கிளையில் நடைபெற்ற பயான் நிகழ்சி

28.12.13 சனிக்கிழமை இஷா தொழுகைக்குப் பிறகு பஹ்ரைன் மண்டலம் ரிபாஃ கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் யூசுப் ஹஸன் அவர்கள் ஸலாம் கூறுவதின் ஒழுங்குகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். மக்கள் ஆர்வத்துடன் கலந்து பயனடைந்தார்கள்.

Saturday, December 21, 2013

சிறு பிள்ளைகளுக்கான பயிற்சி வகுப்பு



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பிறகு பஹ்ரைன் மண்டல தலைமை மர்கஸில் வைத்து சிறு பிள்ளைகளுக்கான ஒழுக்கப் பயிற்சி வகுப்பு  நடைப்பெற்றது. இதில் சகோதரர் புர்ஹான் அவர்கள் நடத்தினார்கள் அதிகமான குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



வெள்ளிக்கிழமை பயானுக்குப் பிறகு பஹ்ரைன் மண்டல தலைமை மர்கஸில் வைத்து பிள்ளைகளுடைய திறமைகளை வெளிக்காட்டும் வகையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பிள்ளையை அழைத்து அவர்களுக்கு தெரிந்த விசயத்தை மக்கள் முன் சொல்லுவார்கள் அந்த வகையில் இந்த வாரம் ஆயிஷா என்ற சிறு பிள்ளை அழகான முறையில் ஒரு சூரா ஓதினார்கள்.

ஹிட்த் கிளை வாராந்திர நிகழ்ச்சி

20-12-2013 (வெள்ளிக் கிழமைஜும் ஆ தொழுகைக்குப் பிறகு பஹ்ரைன் மண்டலம் ஹிட்த் கிளையில் பெற்றோரை பேணுவோம் என்ற தலைப்பில் சகோதரர் பஸீஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.

தலைமை மர்கஸில் நடைப்பெற்ற வாராந்திர நிகழ்ச்சி

2013/12/20 தேதி வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பிறகு பஹ்ரைன் மண்டல தலைமை மர்கஸில் வைத்து பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் அப்துல் ஹமீது  (பந்தர் பாய்) அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் பலதார திருமணம் என்ற தலைப்பில் காலத்தின் தேவை கருதி சிறந்த முறையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பயன் தரும் வகையில் உரையாற்றினார்கள். ஆண்களும் பெண்களும் சேர்ந்து அதிகமான மக்கள் களந்துகொண்டனர்.

Thursday, December 19, 2013

Barhain National Day அன்று மருத்துவ முகாம்

கடந்த 17-12-2013 பஹ்ரைன் தேசிய நாள் - விடுமுறை நாளில் மக்களுக்கு பயன்படும் வகையில் பஹ்ரைன் டி.என்.டி.ஜே சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றை டி.என்.டி.ஜே மார்க்கஸில் வைத்து  ஏற்பாடு செய்திருந்தது இதில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான மருத்துவ சோதனைகளும் அதனடிப்படையிலான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது, இதில் 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கலந்து கொண்டவர்கள் அனைவரும் தங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக கருத்து தெரிவித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் இந்த முகாமில் குழந்தைகளுக்கான மருத்துவ சோதனைகள் மற்றும் ஆலோசனைகளை சிறப்பு மருத்துவர் டாக்டர் பிரவீன் ஆப்ரஹாம் அவர்கள் செய்தார்கள். 













Wednesday, December 18, 2013

வாராந்திர பயான் நிகழ்ச்சி


பஹ்ரைன் மண்டல தலைமை மர்கஸில் 13-12-2013 (வெள்ளிக் கிழமைமக்ரிப் தொழுகைக்கு பிறகு வாராந்திர பயான் நிகழ்ச்சியில்  முஸ்லீகளிடமுள்ள முடநம்பிக்கைகள் என்ற தலைப்பில் சகோ பஸிஹ் அவர்கள் உறையாற்றினார் அதில் ஆண்களும் பெண்களும் களந்து கொண்டு பயனடைந்தனர்.

தாயீ பயிற்சி

பஹ்ரைன் மண்டல தலைமை மர்கசில்   13-12-2013 (வெள்ளிக் கிழமை காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு தாஃயி பயிற்சி  நடைப்பெற்றது இதில் சகோ Basith மற்றும்  Yusuf Hasan உரையாற்றினார்கள். 

அங்கு களந்து கொண்டவர்களுக்கு பயான் பன்னும் போது நாம் கையாள வேண்டிய விசயங்களும் கற்றுக்கொடுக்கப்பட்டது.

குறிப்பு

ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை பஜ்ர் தொழுக்குப் பிறகு தாஃயி பயிற்சி நடைபெறும் ஆர்வமுள்ளவர்கள் களந்து பயிற்சி எடுக்கலாம்.

Wednesday, December 11, 2013

ரிஃபா பயான்

ரிஃபா கிளையில்  சனிக்கிழமை(07.12.2013) இஷா தொழுகைக்கு பிறகு வாராந்திர பயான் நிகழ்ச்சியில்  இறை அச்சம் என்ற தலைப்பில் சகோதரர் ஜாகிர் அவர்கள்  அவர்கள் உறையாற்றினார் அதில் சகோதரர்கள் களந்து கொண்டு பயனடைந்தனர்.

Sunday, December 1, 2013

மருத்துவ முதல் உதவிகள் பயிற்சி



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
பஹ்ரைன் மண்டல தலைமை மர்கஸில் 29 ம் திகதி வெள்ளிக்கிழமை பயான் நிகழ்சிக்கு பிறகு மருத்துவம் படித்தவர்களைக் கொண்டு  "மருத்துவ முதல் உதவிகள் பயிற்சி"  அளிக்கப்பட்டது. இந்த நிகழ்சி களந்து கொண்ட அனைவரும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மக்கள் இந்த நிகழ்சியில் சொல்லப்பட்ட செய்திகளையும் செயல் முறை வடிவில் வளங்கப்பட்ட பயிற்சியையும் கவனமாகவும் அவதானித்து தங்களுக்குள்ள சந்தேகங்களையும் கேட்டு தெரிந்து கொண்டனர். இந்த நிகழ்சியில் ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் கூட களந்து கொண்டனர்.
 மருத்துவ முதல் உதவி பயிற்சியில் குழந்தைகள் எதாவது ஒரு பொருளை விழுங்கி விட்டால் என்ன செய்வது? குழந்தை எதையாவது விழுங்கி விட்டார்கள் என்பதை எப்படி கண்டு பிடிப்பது ? 
 பெரியளவினான வெட்டுக்காயம் ஏற்பட்டால் இரத்தம் வருவதை முதலாவது எப்படி கட்டுப்டுத்துவது ?
தீயினால் எதாவது காயம் ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் ?
ஹார்ட் அடைக் ஏற்பட்டால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்கு முன் என்ன செய்யவேண்டும் ?
இப்படி ஏறாளமான விசயங்களை செயல் வடிவில் செய்துகாட்டினார்கள் இன்ஷா அல்லாஹ் அந்த வீடியோ நமது தளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்டும்.

வாராந்திர பயான் நிகழ்ச்சி

 பஹ்ரைன் மண்டல தலைமை மர்கஸில் 29-11-2013 (வெள்ளிக் கிழமைமக்ரிப் தொழுகைக்கு பிறகு வாராந்திர பயான் நிகழ்ச்சியில்  முஸ்லீம்களின் முதல் எதிரி ஷைத்தான் என்ற தலைப்பில் சகோ பஸிஹ் அவர்கள் உறையாற்றினார் அதில் ஆண்களும் பெண்களும் களந்து கொண்டு பயனடைந்தனர்.

தாஃயீ பயிற்சி

பஹ்ரைன் மண்டல தலைமை மர்கசில்   29-11-2013 (வெள்ளிக் கிழமை காலை பFஜ்ர் தொழுகைக்கு பிறகு தாஃயி பயிற்சி  நடைப்பெற்றது இதில் சகோ இப்லால் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார். 

அங்கு களந்து கொண்டவர்களுக்கு பயான் பன்னும் போது நாம் கையாள வேண்டிய விசயங்களும் கற்றுக்கொடுக்கப்பட்டது.

குறிப்பு

ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை பஜ்ர் தொழுக்குப் பிறகு தாஃயி பயிற்சி நடைபெறும் ஆர்வமுள்ளவர்கள் களந்து பயிற்சி எடுக்கலாம்.

Sunday, November 24, 2013

குழந்தைகளுக்கான வகுப்புகள்

அல்லாஹ்வின் கிருபையால்.....
 குழந்தைகளுக்கான புதிய வகுப்பு வெள்ளி கிழமை 22-11-13 முதல் தொடங்கப்பட்டது. அதில் குழந்தைகளை வயதடிப்படையில்  இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மார்க்கல்வியும் அதோடு இணைந்து அரபி எழுத பேச படிக்க பயிற்ச்சிகள் வழங்கப்படுகின்றது. அதிகமான குழந்தைகள் ஆர்வத்துடன் பங்குபெற்று பயனடைந்தார்கள்,

வகுப்பு ஆரம்பிக்கும் நேரம் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 10 : 30 வரை

நடத்தப்டும் பாடங்கள்

இரண்டு பிரிவாக மூன்று பாடங்கள் நடத்தப்படும்.ஒரு பாடத்திற்கு முப்பது நிமிடம்.
பெரிய பிள்ளைகளுக்கு
முதல் பாடம்         : அறபிக்
இரண்டாவது பாடம்   : துஆ மனனம்  (தொழுகையில் ஓதும் துஆ)
மூன்றாவது பாடம்    : வரலாறும் படிப்பினையும் 
                        அகீதா 

சிறிய பிள்ளைகளுக்கு
முதல் பாடம்        :  அறபிக் மற்றும் அறபி எழுத்துப் பயிற்சி 
இரண்டாவது பாடம் : அகீதா

மூன்றாவது பாடம்   : சூரா மனனம் மற்றும் துஆ மனனம் 


சொர்கத்திற்கு அழைத்து செல்லும் சிறு சிறு அமல்கள் - பஹ்ரைன் மண்டலம் தலைமை மர்கஸ்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (22-11-2013)நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முனீப் அவர்கள்   "சொர்கத்திற்கு அழைத்து செல்லும் சிறு சிறு அமல்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!...




Saturday, November 23, 2013

தாயி பயிற்ச்சி

அல்லாஹ்வின் கிருபையால்,தாயி பயிற்ச்சி 23-11-213 சனி கிழமை முதல் இனிதே தொடங்கியது. சகோதரர் யூசுப் அவர்களும் முபாரக்  அவர்களும் உரை நிகதினார்கள்.

"பொறுமையும் பொறாமையும்" ஹித் கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி 22.11.2013 (வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு

இந்த நிகழ்ச்சியில்  சகோதரர் முனீப் அவர்கள்   "பொறுமையும் பொறாமையும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, September 14, 2013

"பஜ்ர் தொழுகையின் முக்கியத்துவம்" தலைமை பயான் நிகழ்ச்சி


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (13-09-2013) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முஹம்மது ஃபஸிஹ் அவர்கள், "பஜ்ர் தொழுகையின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

"மறுமை நாளில் மனிதனின் நிலை" ஹித் கிளை பயான்


அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (13-09-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோ. அப்துல் முபாரக் அவர்கள் "மறுமை நாளில் மனிதனின் நிலை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

"அல்லாஹ்விற்கு கட்டுப்படுவோம்" ரிஃபா கிளை பயான்



அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு கடந்த 12-09-2013 அன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள், "அல்லாஹ்விற்கு கட்டுப்படுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Wednesday, September 11, 2013

திருக்குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 10-09-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள். 

இந்த வகுப்பில் திருக்குர்ஆனின் 83ஆவது அத்தியாயமான "அல் முதஃபிஃபீன்" விளக்கவுரையானது, கடந்த வார தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. 
 
இதை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். சகோதரர் அவர்களின் விளக்கமானது சிறப்பாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தது. 

இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்ந்துலில்லாஹ்.

Saturday, September 7, 2013

"இணை வைப்பாளர்களை புறக்கணிப்போம்" தலைமை பயான் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (06-09-2013) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முஹம்மது ஃபஸிஹ்அவர்கள், "இணை வைப்பாளர்களை புறக்கணிப்போம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

"இறுதி வெற்றி உறுதியானவர்களுக்கு மட்டும்" ஹித் கிளை பயான்


அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (06-09-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோ. ஜெய்லானிஅவர்கள் "இறுதி வெற்றி உறுதியானவர்களுக்கு மட்டும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, September 5, 2013

"அல் முதஃபிஃபீன்" விளக்கவுரை வகுப்பு - மூன்றாம் பகுதி


அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 03-09-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள். 

இந்த வகுப்பில் திருக்குர்ஆனின் 83ஆவது அத்தியாயமான "அல் முதஃபிஃபீன்" விளக்கவுரையானது, கடந்த வார தொடர்ச்சியாக வசனம் 25லிருந்து 36ஆம் வசனம் வரை நடத்தப்பட்டது. 
 
இதை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். சகோதரர் அவர்களின் விளக்கமானது சிறப்பாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தது. 

இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்ந்துலில்லாஹ்.

Saturday, August 31, 2013

உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் (30-08-2013)

அல்லாஹ்வின் மிகப்பெரிய கிருபையால், நமது பஹ்ரைன் மண்டலத்தின் சார்பாக நடைபெற்று வருகின்ற தாவா மற்றும் சமுதாய பணிகளை தாங்கள் அறிந்ததே.

அதன் ஒருகட்டமாக, இந்த பணிகளை மேலும் வீரியமாக மக்களுக்கு மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலும் நன்மைகளை அனைவருக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்ற நன்நோக்கத்தின் அடிப்படையிலும், நேற்று (30-08-2013) பஹ்ரைன் மண்டல தலைமையில் நமது ஜமாஅத் உறுப்பினர்களை ஒன்றிணைத்து அவர்களின் ஆலோசனை கேட்கும் கூட்டம் நடைபெற்றது.

நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு பணிகளிலும் அனைவரின் ஒத்துழைப்பும், நன்மைகளில் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று கருதி இந்த உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் அதிகமான நமது சகோதரர்கள் கலந்து கொண்டு ஆலோசனை கூறினர். அல்ஹம்துலில்லாஹ்.

"TNTJவின் அரும்பணிகள்" ஆன்லைன் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக நேற்று (30-08-2013) ஆன்லைன் நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து மாநில துணை செயலாளர் சகோதரர். முஹம்மது யூசுஃப் அவர்கள் "TNTJவின் அரும்பணிகள்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக நடத்தபடுகின்ற பல்வேறு மார்க்க மற்றும் சமுதாய பணிகளை எடுத்துரைத்து, மார்க்கம் இந்த பணிகளுக்கு எப்படியெல்லாம் வழி காட்டியுள்ளது என்பதனையும் மிக அழகாக விளக்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

"அழைப்புப் பணியின் அவசியம்" ரிஃபா கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு கடந்த 29-08-2013 அன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள், "அழைப்புப் பணியின் அவசியம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Wednesday, August 28, 2013

"அல் முதஃபிஃபீன்" விளக்கவுரை வகுப்பு - இரண்டாம் பகுதி


அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 27-08-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள். 

இந்த வகுப்பில் திருக்குர்ஆனின் 83ஆவது அத்தியாயமான "அல் முதஃபிஃபீன்" விளக்கவுரையானது, கடந்த வார தொடர்ச்சியாக வசனம் 13லிருந்து 36ஆம் வசனம் வரை நடத்தப்பட்டது. 
 
இதை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். சகோதரர் அவர்களின் விளக்கமானது சிறப்பாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தது. 

இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்ந்துலில்லாஹ்.

Saturday, August 24, 2013

”புறக்கணிக்கப்படும் எச்சரிக்கைகள்" தலைமை பயான் நிகழ்ச்சி


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (23-08-2013) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோதரர். ஜெய்லானி அவர்கள், ”புறக்கணிக்கப்படும் எச்சரிக்கைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Saturday, August 17, 2013

”நாம் ரமலான் மாத முஸ்லீம்களா?” தலைமை பயான் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (16-08-2013) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோதரர். அப்துல் ஹமீது அவர்கள், நாம் ரமலான் மாத முஸ்லீம்களா?” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!! 

"ரமலானின் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்” ஹித் கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (16-08-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோ. முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் "ரமலானின் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்” என்ற தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 13-06-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள். 

இதை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். சகோதரர் அவர்களின் விளக்கமானது சிறப்பாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தது. 

இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்ந்துலில்லாஹ்.

Saturday, July 27, 2013

மார்க்க கேள்வி பதில் சிறப்பு நிகழ்ச்சி


அல்லாஹ் தனது அருள்மறையாம் திருமறையான திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட புனிதமிக்க ரமலான் மாதத்தில், போட்டி போட்டு கொண்டு அருளை கொள்ளையடிக்க ஒவ்வொருவரும் முயற்ச்சி செய்து வருகிறோம்.

அந்த வகையில் அவனது அருளை கொள்ளையடித்துக் கொள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் மண்டல நிர்வாகம் ஓர் அரிய வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த வியாழன்று (26-07-2013) மறுதினம் அநேகமானவருக்கு விடுமுறை தினமாக இருப்பதனால், அன்றைய இரவு “சிறப்பு இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற இஸ்லாமியர்களுக்கான பிரத்யேக கேள்வி பதில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக, திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையிலும் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே, மார்க்கத்தின் ஐய்யப்பாடுகளை விலக்கிக் கொள்ள சகோதர சகோதரிகள் தங்களது மார்க்கம் சம்பந்தமான கேள்விகளை வினாத் தொடுத்தனர். அதில் சில.
  • அல்லாஹ்வை “அவன் என்று அழைப்பது ஏன்?
  • பெண்கள் ஜனாஸா தொழுகை நடத்தலாமா?
  • மனிதன் தவறு செய்து தவ்பா செய்த பின், செய்த தவறை மறுமை நாளில் திரையிட்டு காட்டுவானா?
  • நாம் செய்கின்ற தவ்பாவை, அல்லாஹ் ஏற்றுக் கொண்டுவிட்டான் என்பதை எவ்வாறு நாம் அறிந்து கொள்வது?
  • கணவன் ஜகாத் கொடுத்த பிறகு, மனைவி ஜகாத் கொடுக்க கூடாது என்று தடுக்கலாமா?
இது போன்ற இன்னும் அதிகமான கேள்விகளுக்கு சகோதரர் முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் கேள்வி கேட்ட சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தவ்ஹீத் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே.

Saturday, July 20, 2013

ரமலான் மாத இரண்டாம் வார சிறப்பு நிகழ்ச்சிகள்


 

 அல்லாஹ்வின் கிருபையால் இறைவேதமான திருக்குர்ஆன் இறங்கிய மாதமான புனித மிக்க ரமளான் மாதத்தின் இரண்டாவது வாரத்தை அடைந்துள்ளோம். இதில் முதல் வாரத்தை போன்றே பல மார்க்க நிகழ்ச்சிகளை பஹ்ரைன் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ளது. 

இந்த புனித மிக்க ரமளான் மாதத்தில் தினமும் இஃப்தார் நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து சிறப்பு மார்க்க சொற்பொழிவுகளும் நடைபெற்று வருகிறது.

ந்த ரமளான் மாத இரண்டாம் வாரத்தில் வெற்றி பெறும் மூஃமீன்கள் என்ற தொடர் உரை நமது பஹ்ரைன் மண்டல தலமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


ஒரு முஃமீன் வெற்றி பெற வேண்டுமெனில், எப்படிபட்டவனாக இருக்கவேண்டும் என்பதையும், மார்க்க கடமைகளை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அல்லாஹ் தனது திருமறையிலும் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையின் அடிப்படையிலும், தொடர் நிகழ்ச்சியாக நடைபெற்றது.

இந்த தொடர் நிகழ்ச்சியில் சகோதரர் மனாஸ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த அனைத்து நிகழ்ச்சிகள் அனைத்திலும் பஹ்ரைன் வாழ் தமிழ் மக்களை தூய்மையான மார்க்கத்தின் பால் அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன். 

Saturday, July 13, 2013

“கேள்வி இங்கே. பதில் எங்கே?” – கருத்தரங்கம்



அல்லாஹ் தனது திருமறையான திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட இந்த புனிதமிக்க ரமலான் மாதத்தில், அவனது அருளை தேடியவர்களாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் மண்டல நிர்வாகம் ஓர் அரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

“சூனியம்”. நாம் ஒவ்வொருவரும் சூனியம் சம்பந்தமாக பல்வேறு விஷயங்களை அறிந்து வைத்திருக்கிறோம். ஒரு சிலர் உலக விஷங்களில் சூனியத்தின் தாட்பரியத்தை பற்றியும் இன்னும் சிலர் இஸ்லாத்தில் (இல்லாத ஒன்றான) சூனியம் என்று இருக்கின்றவற்றையும், இன்னும் ஒருபடி மேல் சென்று நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்டதாகவும் (அஸ்தக்ஃபிருல்லாஹ்) பல்வேறு விதமான எண்ணங்கள் உள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.

இவர்களின் சந்தேகங்களுக்கும் குழப்பங்களுக்கும் மருந்தளிக்கும் வகையில் கடந்த 11-07-2013 அன்று “கேள்வி இங்கே. பதில் எங்கே?” என்ற ஒரு சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்து கொண்ட ஒவ்வொரு சகோதர சகோதரிகளும், தாங்கள் மற்றும் தங்களது உறவினர்கள் சூனியத்தால் பாதிக்கப்பட்டதாகவும் (?), அதனால் மனநிலை பாதிப்படைந்த நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் (?), மேலும் நபிகள் நாயகத்துக்கே சூனியம் வைக்கப்பட்டதாக வருகின்ற செய்திகள் ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டதாவும் இருக்கின்றதே, என்பன போன்ற சூனியம் சம்பந்தமான தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

இவர்களின் சந்தேகங்களுக்கு சகோதரர் முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் விளக்கமளிக்கயில், சூனியம் என்பது என்ன? நாம் தற்போது சூனியம் என்று நம்புகின்றோமே (நாம் இருந்த இடத்திலிருந்தே ஒருவரின் கை, கால்களை முடக்க முடியும்), இதை தான் அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள் நாயகமும் நமக்கு கற்றுத் தந்துள்ளார்களா? என்பன போன்ற அறிவுச்சார்ந்த கேள்விகளை எழுப்பி, வாதம் வைத்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் விளக்கமளித்தார்கள்.

மேலும், சூனியம் சம்பந்தமாக நமது ஜமாஅத் நிலைபாடு என்ன என்பதையும், அதை நாம் எந்த வகையில் எடுத்திருக்கிறோம் என்பதையும் மிக அழகாக, ஆழமான குறிப்புகளோடு, தெளிவாக விளக்கினார்கள்.

இதனை தொடர்ந்து, நமது ஜமாஅத்தின் திருமண நிலைபாடு குறித்தும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு, அதற்கும் விளக்கமளிக்கும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சியானது அமைந்திருந்தது.

நமது ஜமாஅத் ஒரு விஷயத்தை பற்றி ஒரு முடிவு எடுப்பதாக இருந்தால், அதை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் தான் எடுக்கிறது என்பதையும் மேலதிக விளக்கமாக சகோதரர் அவர்கள் பதிவு செய்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தவ்ஹீத் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே.
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்