Saturday, July 13, 2013

“கேள்வி இங்கே. பதில் எங்கே?” – கருத்தரங்கம்



அல்லாஹ் தனது திருமறையான திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட இந்த புனிதமிக்க ரமலான் மாதத்தில், அவனது அருளை தேடியவர்களாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் மண்டல நிர்வாகம் ஓர் அரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

“சூனியம்”. நாம் ஒவ்வொருவரும் சூனியம் சம்பந்தமாக பல்வேறு விஷயங்களை அறிந்து வைத்திருக்கிறோம். ஒரு சிலர் உலக விஷங்களில் சூனியத்தின் தாட்பரியத்தை பற்றியும் இன்னும் சிலர் இஸ்லாத்தில் (இல்லாத ஒன்றான) சூனியம் என்று இருக்கின்றவற்றையும், இன்னும் ஒருபடி மேல் சென்று நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்டதாகவும் (அஸ்தக்ஃபிருல்லாஹ்) பல்வேறு விதமான எண்ணங்கள் உள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.

இவர்களின் சந்தேகங்களுக்கும் குழப்பங்களுக்கும் மருந்தளிக்கும் வகையில் கடந்த 11-07-2013 அன்று “கேள்வி இங்கே. பதில் எங்கே?” என்ற ஒரு சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்து கொண்ட ஒவ்வொரு சகோதர சகோதரிகளும், தாங்கள் மற்றும் தங்களது உறவினர்கள் சூனியத்தால் பாதிக்கப்பட்டதாகவும் (?), அதனால் மனநிலை பாதிப்படைந்த நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் (?), மேலும் நபிகள் நாயகத்துக்கே சூனியம் வைக்கப்பட்டதாக வருகின்ற செய்திகள் ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டதாவும் இருக்கின்றதே, என்பன போன்ற சூனியம் சம்பந்தமான தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

இவர்களின் சந்தேகங்களுக்கு சகோதரர் முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் விளக்கமளிக்கயில், சூனியம் என்பது என்ன? நாம் தற்போது சூனியம் என்று நம்புகின்றோமே (நாம் இருந்த இடத்திலிருந்தே ஒருவரின் கை, கால்களை முடக்க முடியும்), இதை தான் அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள் நாயகமும் நமக்கு கற்றுத் தந்துள்ளார்களா? என்பன போன்ற அறிவுச்சார்ந்த கேள்விகளை எழுப்பி, வாதம் வைத்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் விளக்கமளித்தார்கள்.

மேலும், சூனியம் சம்பந்தமாக நமது ஜமாஅத் நிலைபாடு என்ன என்பதையும், அதை நாம் எந்த வகையில் எடுத்திருக்கிறோம் என்பதையும் மிக அழகாக, ஆழமான குறிப்புகளோடு, தெளிவாக விளக்கினார்கள்.

இதனை தொடர்ந்து, நமது ஜமாஅத்தின் திருமண நிலைபாடு குறித்தும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு, அதற்கும் விளக்கமளிக்கும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சியானது அமைந்திருந்தது.

நமது ஜமாஅத் ஒரு விஷயத்தை பற்றி ஒரு முடிவு எடுப்பதாக இருந்தால், அதை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் தான் எடுக்கிறது என்பதையும் மேலதிக விளக்கமாக சகோதரர் அவர்கள் பதிவு செய்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தவ்ஹீத் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே.

0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்