அல்லாஹ் தனது அருள்மறையாம் திருமறையான திருக்குர்ஆன்
இறக்கியருளப்பட்ட புனிதமிக்க ரமலான் மாதத்தில், போட்டி போட்டு கொண்டு அருளை
கொள்ளையடிக்க ஒவ்வொருவரும் முயற்ச்சி செய்து வருகிறோம்.

மார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் அறிந்து கொள்ள
வேண்டுமென்பதற்காக, திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான நபிமொழிகளின்
அடிப்படையிலும் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே, மார்க்கத்தின்
ஐய்யப்பாடுகளை விலக்கிக் கொள்ள சகோதர சகோதரிகள் தங்களது மார்க்கம் சம்பந்தமான
கேள்விகளை வினாத் தொடுத்தனர். அதில் சில.
- அல்லாஹ்வை “அவன்” என்று
அழைப்பது ஏன்?
- பெண்கள் ஜனாஸா தொழுகை நடத்தலாமா?
- மனிதன் தவறு செய்து தவ்பா செய்த பின், செய்த தவறை
மறுமை நாளில் திரையிட்டு காட்டுவானா?
- நாம் செய்கின்ற தவ்பாவை, அல்லாஹ் ஏற்றுக்
கொண்டுவிட்டான் என்பதை எவ்வாறு நாம் அறிந்து கொள்வது?
- கணவன் ஜகாத் கொடுத்த பிறகு, மனைவி ஜகாத் கொடுக்க கூடாது என்று
தடுக்கலாமா?
இது போன்ற இன்னும் அதிகமான கேள்விகளுக்கு சகோதரர்
முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான நபிமொழிகளின்
அடிப்படையில் கேள்வி கேட்ட சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தவ்ஹீத் சகோதர சகோதரிகள்
கலந்து கொண்டு பயனடைந்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே.
0 comments:
Post a Comment