Wednesday, October 31, 2012

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - ஹித் கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் தியாகத் திருநாளின் விடுமுறை தினத்தில் ஹித் கிளையில் முஸ்லீம்களுக்கான சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி 28-10-2012 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது.  

இந்த நிகழ்ச்சியில் தாய்கத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் நமது சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். நிகழ்ச்சியில் கேட்க்கப்பட்ட கேள்விகளில் சில. 
  1. அத்தஹியாத்தில் விரல் அசைப்பதற்கு ஆதாரம் உண்டா?
  2. ஜனாஸாவிற்கு தொழுகை நடத்த உரிமை படைத்தவர் யார்?
  3. காலுறையில் மஸிஹ் செய்யும் சட்டம் பற்றிய விளக்கம்
  4. பால் குடி சட்டம் பற்றி சவூதி அரசாங்கம் கொடுத்த ஃபத்வா பற்றிய விளக்கம்
  5. தற்கொலை செய்து கொண்டவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா? 
மேலும் பல கேள்விகளை சகோதர, சகோதரிகள் கேட்டனர். கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் அறிவுப்பூர்வமாகவும், ஆதரப்பூர்வமாகவும், மக்கள் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் எளிய நடையில் விளக்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சகோதரர்கள் தங்கள் குடும்பத்துடன் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Tuesday, October 30, 2012

பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் தியாகத் திருநாளின் விடுமுறை தினத்தில் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி 28-10-2012 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது.  

இந்த நிகழ்ச்சியில் தாய்கத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் "பரிசு இங்கே பதில் எங்கே?" என்ற தலைப்பில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தினார்.

இவரது கேள்விகள் அனைத்து குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்திருந்தது. 

இந்த நிகழ்ச்சியில் பதிலளித்த சகோதரிகளுக்கு மார்க்க உரை அடங்கிய CD / DVDக்கள் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. 

இதில் நமது தவ்ஹீத் சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!! 

பிற மதத்தினருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் கிருபையால், தற்போதுள்ள தமிழ் அமைப்புகளின் தாவா பணிகளில் தலை சிறந்து விளங்குவது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே என்பது அனைவரும் அறிந்ததே. அதன் ஒரு கிளையான பஹ்ரைன் மண்டலத்தில் தியாகத் திருநாளின் விடுமுறை தினத்தையொட்டி "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (பிற மதத்தினருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி)" 27-10-2012 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இதின் ஆரம்பகட்டமாக நமது மண்டல தலைவரான சகோ. முபாரக் அவர்கள் வரவேற்புரை கூறி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதுபோன்ற மாற்று மதத் தினருக்காக சிறப்பு நிகழ்ச்சிகளை தமிழமெங்கும் நடத்தி வருகிறது எனபதை வந்திருந்த மாற்று மத நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லி விளக்கினார்கள்.

அவரைத் தொடர்ந்து தாய்கத்திலிருந்து சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்ட சகோ.கோவை. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் "இஸ்லாம் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த இஸ்லாத்தை பற்றிய அறிமுக உரையானது, வந்திருந்த மாற்று மத நண்பர்கள் இஸ்லாத்தை புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் மிக எளிதாகவும், அறிவுப்பூர்வமாகவும் இருந்தது. 

இந்த உரையை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. தொடக்கத்திலியே சகோதரர்கள் மிகவும் ஆர்வமாகவும், ஆக்கப்பூர்வமான கேள்விகளையும் தொடுத்தனர். இதற்க்கு நமது சகோதரர் மிகவும் தெளிவாக விளக்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில உங்கள் பார்வைக்கு.
  1. முஸ்லீம்களின் பண்டிகை தினங்களில் கலை நிகழ்ச்சிகள் ஏன் நடத்தப்படுவதில்லை? 
  2. முஸ்லீம் அல்லாதவர்கள் குர்ஆனை தொடலாமா?
  3. முஸ்லீம்கள் பன்றியை சாப்பிடுவது இல்லையே, ஏன்?
  4. மாற்று மதத்தவர்களை ஏன் திருமணம் செய்துகொள்ள இஸ்லாமியர்கள் தடுக்கிறார்கள்? 
இது போன்ற இன்னும் பல அறிவுப்பூர்வமான கேள்விகளை குழுமியிருந்த நண்பர்கள் கேட்டு விளக்கம் பெற்றனர். 

இந்த நிகழ்ச்சியில் சகோதரர் ஒருவருக்கு குர்ஆன் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் வந்திருந்த அனைத்து மாற்று மத நண்பர்களுக்கும் இலவசமாக அநேக புத்தகங்கள் வழங்கப்பட்டன. அவையாவன,
  1. இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (மாற்று மத நண்பர்களுக்கான கேள்வி பதில்கள்)
  2. திருக்குர்ஆன் கூறும் அறிவியல் சான்றுகள்
  3. அர்த்தமுள்ள இஸ்லாம்
  4. வருமுன் உரைத்த இஸ்லாம்
மேலும் இலவசமாக இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் CD-களும் வழங்கப்பட்டன.

பிறகு சகோதரர் அவர்கள் முடிவுரை கூறி உணவு பரிமாற்றத்துடன் சபை முற்று பெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் மாற்று மத நண்பர்கள் மற்றும் நமது சகோதரர்கள் என பெரும் திரளாக வந்து கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியை சிறப்பித்து தந்த அல்லாஹ்விற்க்கே எல்லாப் புகழும்!!!!

Saturday, October 27, 2012

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - தியாகத் திருநாள் 2012


அல்லாஹ்வின் கிருபையால், தியாகத் திருநாளான இன்று (27-10-2012) இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (இஸ்லாமியர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி) பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இதின் ஆரம்பகட்டமாக சகோ. அப்துல் ஹமீது அவர்கள் வரவேற்புரை சொல்லி மன்றத்தை ஆரம்பம் செய்தார்கள். அவரை தொடர்ந்து மாநிலத்திலிருந்து சிறப்பு விருந்தினராக வந்துள்ள சகோ. கோவை. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ''இப்ராஹிம் நபியின் தியாகம்'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இவரது உரை தொடர்ந்து கேள்வி பதில நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில
  1. ஹாரூத் மாரூத் மலக்குகளா ஷைத்தான்களா?
  2. நபிகள் நாயகத்திற்கு சூனியம் செய்யப்பட்டதாக வரக்கூடிய ஹதீஸ் பலவீனமானதா?
  3. மண்ணறை வேதனை சம்பந்தமாக வரக்கூடிய ஹதீஸின் விளக்கம் என்ன?
  4. தொலைக்காட்சி பார்க்கலாமா?
  5. ஜகாத் வருமானத்திற்கா எஞ்சியதற்கா?
மேலும் பல கேள்விகளை சகோதர, சகோதரிகள் கேட்டனர். கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் அறிவுப்பூர்வமாகவும், ஆதரப்பூர்வமாகவும், மக்கள் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் எளிய நடையில் விளக்கினார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பரிசு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இஷா தொழுகையை ஜமாஅத்-ஆக தொழுது, இரவு உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே முடிவு பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோதரர்கள் தங்கள் குடும்பத்துடன் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Saturday, October 20, 2012

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 19-10-2012


அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று வெள்ளியன்று (19-10-2012) அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இதில் சகோதரர்.சேரன்மகாதேவி ஜாஹிர் அவர்கள், "தியாகத் திருநாள் தரும் படிப்பினை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 19-10-2012


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (19-10-2012) அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோதரர்.பந்தர் அப்துல் ஹமீது அவர்கள், "ஏகத்துவ இமாம் இப்ராஹிம் (அலை)" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Friday, October 12, 2012

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 12-10-2012


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (12-10-2012) அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோதரர்.பந்தர் அப்துல் ஹமீது அவர்கள், "சுய பரிசோதனை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 12-10-2012


அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று வெள்ளியன்று (12-10-2012) அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இதில் சகோதரர்.கீழக்கரை சாபிர் அவர்கள், "நரகத்தில் இழுத்துச் செல்லும் பித்அத்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, October 11, 2012

பிஜெ அவர்களின் உடல் நலமடைய இறைவனிடம் பிரார்த்திப்போம்




நம் அனைவரையும் ஓர் இறைவன் என்ற ஏகத்துவ கொள்கைக்கு வர காரணமான சகோதரர் பிஜெ அவர்களின் உடல் பூரண சுகமடைய எல்லாம் வல்ல ரஹ்மானிடம் கேட்போம் ஏகத்துவ வாதிகளே!!!!!!!

சகோதரர் பி.ஜே. அவர்களுக்கு வலதுபுற மார்பின் மேற்பகுதியில் (Skin) தோலுக்கடியில் சிறிய அளவில் ஒரு கேன்சர் கட்டி உள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.மேலும் இதுவல்லாத மாற்று மருத்துவ முறைகளிலும் சிகிச்சைகள் உள்ளதாக சிலர் ஆலோசனை கூறுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக படைத்தவனின் அருள் கொண்டே தவிர நிவாரணம் இல்லை என்பதே நமது நம்பிக்கை.
வழக்கம் போல் அவர்கள் தமது பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
எனவே அவர்களுக்காக வல்ல அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நேரிலோ அல்லது தொலைபேசியிலோ அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இது குறித்து சகோதரர் பி.ஜே. அவர்கள் மாநில நிர்வாகத்திற்கு அனுப்பிய கடிதத்தை கீழே தருகிறோம்.
இப்படிக்கு
மாநில நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
10.10.2012
சகோதரர் பி.ஜே. அவர்களின் கடிதம்
மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். எனது உடல் நிலை குறித்து உங்களுக்கு இருக்கும் அக்கரையை நான் அறிவேன். ஆனாலும் என்ன சிகிச்சை செய்ய வேண்டி வந்தாலும் என் சக்திக்கு உட்பட்டு என்ன செய்ய இயலுமோ அதை இன்ஷா அல்லாஹ் நான் செய்து கொள்வேன். ஜமாஅத் மூலமோ தனிப்பட்ட நபர்கள் மூலமோ எனது சிகிச்சைக்காக செலவு செய்வதை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
எனது நோய் தனிப்பட்ட மனிதன் என்ற முறையில் எனக்கு ஏற்பட்டுள்ளது. ஜமாஅத் பணிகளால் ஏற்படும் இழப்புகளைத் தான் ஜமாஅத் செய்யும் கடமை உண்டு.
ஒருவேளை என்னால் செலவு செய்ய இயலாத அளவுக்கு பெரும் செலவு ஏற்படும் நிலை வந்தால் நான் அழகிய பொறுமையை மேற்கொள்வேனே தவிர யாருடைய உதவியையும் நான் பெற்று சிகிச்சை மேற்கொள்ள நான் தயாராக இல்லை. இதற்காக யாரிடமும் கடனாகக் கூட வாங்கி செலவிடவும் நான் தயாராக இல்லை. என் சக்திக்கு உட்பட்ட வகையில் நான் முடிவு செய்யும் வகையில் என்னை விட்டுவிடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
என் மருத்துவ செலவு தொடர்பாக எந்த ஆலோசனையும் செய்ய வேண்டாம் என்று கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் சில நிர்வாகிகள் இதை தமக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருப்பதாகக் கேள்விப்படுகிறேன். இது மறைக்க வேண்டிய விஷயம் அல்ல. மறைப்பதால் எந்த நன்மையும் இல்லை. நோய் வந்தால் ஃபித்னா செய்வார்கள் என்று நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறாகும். எந்த ஃபித்னா வந்தாலும் அதற்கு மார்க்க அடிபடையில் பதில் இருக்கும் போது பித்னாக்களுக்குப் பயந்து மறைப்பது ஏற்புடையதாக இல்லை. மறைக்கவும் முடியாது.
நான் மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது அடுத்த நிமிடம் உளவுத்துறைக்கு தெரிந்து எதிரிகளின் இயக்கங்களுக்கும் உடனே தெரிந்து விடும். அவர்கள் வழியாக நம் நிர்வாகிகளுக்குத் தெரியவரும் போது அது ஜமாஅத்தைப் பாதிக்கும். மனிதனுக்கு நோய் வருவது இயல்பானது தான். அல்லாஹ் இதுவரை எந்தப் பெரிய நோயும் இல்லாமல் எனக்கு பேருதவி புரிந்துள்ளான். இதுதான் ஆச்சரியமானது. இப்போது நோய் வந்துள்ளது ஆச்சரியமானது அல்ல. ஏதோ கொலைக் குற்றத்தை மறைப்பது போல் நோயை நீங்கள் மறைப்பதாக நான் கருதுகிறேன்.
புற்றுநோய் என்பது ஆபத்தான நோய் என்றாலும் மருத்துவ சிகிச்சை பெரும்பாலும் பயனளிப்பதில்லை என்றாலும் அல்லாஹ்வின் அருளால் குணமாக வாய்ப்பு உள்ளது. எனவே இதை நிர்வாகிகளுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் சொல்வதால் பலருடைய துஆக்கள் எனக்குக் கிடைக்கும். அதை நீங்கள் தடுக்கத் தேவை இல்லை.
அன்புடன்
பி.ஜைனுல் ஆபிதீன்
10.10.2012

Friday, October 5, 2012

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி இன்று (05-10-2012) "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" என்ற கேள்வி பதில் நிகழ்ச்சி, பிரத்யேகமாக ஜகாத் தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்துவதர்காக நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். அப்பாஸ் அலி அவர்கள் வந்திருந்த சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மிகத் தெளிவாக விளக்கினார்கள்.

நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில
  • ஜகாத் எனபது வருமானத்திற்கா அல்லது எஞ்சியதற்கா?
  • ஒருவர் சம்பதித்து வாங்கிய சொத்தை, அவரது மனைவி, மகன் அல்லது பெற்றோர்களின் பெயரிலோ பதிவுசெய்தால் அந்த சொத்திற்கு யார் ஜகாத் கொடுக்க வேண்டும்?
  • வருமானத்திற்கு தான் ஜகாத் கடமை என்றால், இத்தனை வருடங்களாக சம்பாதித்த சம்பளத்தை கணக்கு செய்து ஜகாத் இப்பொழுது கொடுக்க வேண்டுமா?
  • கால்நடைகளின் ஜகாத் அளவுகோல் என்ன?
  • விளைச்சலுக்குரிய ஜகாத் அளவுகோல் என்ன?
என்பன போன்ற பல ஜகாத் தொடர்புடைய கேள்விகள் கேட்டனர். இந்த அனைத்து கேள்விகளுக்கும் குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அழகாக விளக்கமளித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்