இதின் ஆரம்பகட்டமாக சகோ. அப்துல் ஹமீது அவர்கள் வரவேற்புரை சொல்லி மன்றத்தை ஆரம்பம் செய்தார்கள். அவரை தொடர்ந்து மாநிலத்திலிருந்து சிறப்பு விருந்தினராக வந்துள்ள சகோ. கோவை. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ''இப்ராஹிம் நபியின் தியாகம்'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இவரது உரை தொடர்ந்து கேள்வி பதில நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில
- ஹாரூத் மாரூத் மலக்குகளா ஷைத்தான்களா?
- நபிகள் நாயகத்திற்கு சூனியம் செய்யப்பட்டதாக வரக்கூடிய ஹதீஸ் பலவீனமானதா?
- மண்ணறை வேதனை சம்பந்தமாக வரக்கூடிய ஹதீஸின் விளக்கம் என்ன?
- தொலைக்காட்சி பார்க்கலாமா?
- ஜகாத் வருமானத்திற்கா எஞ்சியதற்கா?
மேலும் பல கேள்விகளை சகோதர, சகோதரிகள் கேட்டனர். கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் அறிவுப்பூர்வமாகவும், ஆதரப்பூர்வமாகவும், மக்கள் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் எளிய நடையில் விளக்கினார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பரிசு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இஷா தொழுகையை ஜமாஅத்-ஆக தொழுது, இரவு உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே முடிவு பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சகோதரர்கள் தங்கள் குடும்பத்துடன் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment