அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி இன்று (05-10-2012) "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" என்ற கேள்வி பதில் நிகழ்ச்சி, பிரத்யேகமாக ஜகாத் தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்துவதர்காக நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
.jpg)
நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில
- ஜகாத் எனபது வருமானத்திற்கா அல்லது எஞ்சியதற்கா?
- ஒருவர் சம்பதித்து வாங்கிய சொத்தை, அவரது மனைவி, மகன் அல்லது பெற்றோர்களின் பெயரிலோ பதிவுசெய்தால் அந்த சொத்திற்கு யார் ஜகாத் கொடுக்க வேண்டும்?
- வருமானத்திற்கு தான் ஜகாத் கடமை என்றால், இத்தனை வருடங்களாக சம்பாதித்த சம்பளத்தை கணக்கு செய்து ஜகாத் இப்பொழுது கொடுக்க வேண்டுமா?
- கால்நடைகளின் ஜகாத் அளவுகோல் என்ன?
- விளைச்சலுக்குரிய ஜகாத் அளவுகோல் என்ன?
என்பன போன்ற பல ஜகாத் தொடர்புடைய கேள்விகள் கேட்டனர். இந்த அனைத்து கேள்விகளுக்கும் குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அழகாக விளக்கமளித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment