அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் விடுமுறை தினத்தை சிறந்த முறையில் கழிக்க நேற்று (25-01-2013) சிறப்பு "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமீரகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோதரர். ஹமீன் இப்ராஹிம் அவர்கள் வந்திருந்த சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மிகத் தெளிவாக விளக்கினார்கள்.
என்பன போன்ற பல கேள்விகளை கேட்டனர். இந்த அனைத்து கேள்விகளுக்கும் குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அழகாக விளக்கமளித்தார்கள்.

நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில
- பெண்கள் காது குத்தலாமா?
- ஒருவர் அக்கா தங்கை என்ற இரண்டு பெண்களை திருமணம் செய்யலாமா?
- எஞ்சியதற்கு தான் ஜகாத் என்பதன் விளக்கம் என்ன?
- திருக்குர்ஆனின் 36ஆவது அத்தியாயமான யாஸீனில் உள்ள 42ஆவது வசனத்தின் விளக்கம் என்ன?
- யூதர்களின் வரலாறு மற்றும் அவர்களின் கடவுள் நம்பிக்கை என்ன?

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment