
இதின் ஆரம்பகட்டமாக நமது மண்டல தலைவரான சகோ. முபாரக் அவர்கள் வரவேற்புரை கூறி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதுபோன்ற மாற்று மதத் தினருக்காக சிறப்பு நிகழ்ச்சிகளை தமிழமெங்கும் நடத்தி வருகிறது எனபதை வந்திருந்த மாற்று மத நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லி விளக்கினார்கள்.
அவரைத் தொடர்ந்து அமீரகத்திலிருந்து சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்ட சகோ.ஹமீன் இப்ராஹிம் அவர்கள் "இஸ்லாம் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இந்த இஸ்லாத்தை பற்றிய அறிமுக உரையானது, வந்திருந்த மாற்று மத நண்பர்கள் இஸ்லாத்தை புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் மிக எளிதாகவும், அறிவுப்பூர்வமாகவும் இருந்தது.
- மத மாற்றம் என்றால் என்ன?
- முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவது ஏன்?
- விஸ்வரூபம் படத்திற்கு முஸ்லீம்கள் ஏன் இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்?
- இலங்கயை சேர்ந்த ரிஸானா நஃபிக் என்ற பெண்ணிற்கு சவுதியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது ஏன்?
இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைத்து மாற்று மத அன்பர்களுக்கும் இஸ்லாத்தை தெரிந்து கொள்ளவதற்காக் இஸ்லாம் சம்பந்தமான விளக்க நூல் மற்றும் CDகள் இலவசமாக வழங்கப்பட்டன.
பிறகு மாற்று மத நண்பர்களுக்கு உணவு பரிமாறப்பட்டு சபை களைந்தது.
இந்த நிகழ்ச்சியில் மாற்று மத நண்பர்கள் மற்றும் நமது சகோதரர்கள் என பெரும் திரளாக வந்து கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை சிறப்பித்து தந்த அல்லாஹ்விற்க்கே எல்லாப் புகழும்!!!!
0 comments:
Post a Comment