அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், ரமளான் மாதம் முழுவதும் நமது மண்டல சார்பாக இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து ஒரு சிறிய உரையும் தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோ. முஹம்மது ஒலி அவர்கள் நிகழ்த்தி வருகிறார்கள் என்பதை அனைவரும் அறிந்ததே.
இதில், வியாழக்கிழமையன்று (25-ஆகஸ்ட்) இரவுத் தொழுகைக்கு பிறகு சுமார் 11 மணியளவிலிருந்து நிகழ்ச்சிகள் இனிதே ஆரம்பமானது.
ஆரம்பகட்டமாக, சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு தொழுகை சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோ. முஹம்மது ஒலி அவர்கள் அனைத்து கேள்விகளுக்கும் அருமையான முறையில் பதில் அளித்தார்கள். அல்ஹம்ந்துலில்லாஹ்....
இதைத் தொடர்ந்து குர்ஆனின் 7ஆவது அத்தியாயமான, அஃராஃப் என்ற அத்தியாயத்திலிருந்து, வசனம் 55 முதல் 100 வரை, சகோதர சகோதரிகளை 6 குழுக்களாக பிரித்து, கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பதில் அளித்த குழுவிற்க்கு மார்க்க புத்தங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி வந்திருந்த மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.
இதைத் தொடர்ந்து நிர்வாகிகளுக்கான தாயீ பயிற்சி போட்டியில், இரண்டாவது சுற்றில் நன்கு முயற்சி எடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்ந்துலில்லாஹ்....
இதன் பிறகு வந்திருந்த சகோதர சகோதரிகளின் கேள்வி பதில் நிகழ்ச்சி நமது மண்டலம் சார்பில் நிகழ்த்தப்பட்டது. இதில் கார சாரமான கேள்விகளும் கேட்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி சுமார் அதிகாலை 3.00 மணியளவில் நிறைவுபெற்றது. இதன் பிறகு ஸஹர் உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
0 comments:
Post a Comment