Saturday, July 2, 2011

ஹித் சொற்பொழிவு - 01-07-2011


அல்லாஹ்வின் கிருபையால் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி ஹித் கிளையில் நேற்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இன்றைய நிகழ்ச்சியில் சகோ. ஜஃபர் நவாஸ் அவர்கள் உண்மைத் தோழர் அபூபக்ர் (ரலி) அவர்களின் வரலாறு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அதில் ஆரம்பமாக திருக் குர்ஆனின் 9வது அத்தியாயத்தின் 100வது வசனமான,
ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
என்ற வசனத்தை மேற்கோள் காட்டி தனது உரையை ஆரம்பித்தார்கள்.

இதன் தொடர்ச்சியாக,
  • இவருக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் அப்துல்லாஹ் (ஆதார நூல் : அல்இஸாபா பாகம் : 2 பக்கம் : 1088)
  • நபி (ஸல்) அவர்களை அதிகம் உண்மைப்படுத்தியதால் சித்தீக் (அதிகம் உண்மைப்படுத்துபவர்) என்ற பெயரும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்டது.
  • அபூபக்ர் (ரலி) அவர்கள் வயதில் மூத்தவராகவும் பல இடங்களுக்குச் சென்று வியாபாரம் செய்பவராகவும் இருந்தார்கள். எனவே மக்களுக்கு மத்தியில் அவர்கள் நன்கு அறிமுகமாகியிருந்தார்கள். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : புகாரி (3911)
  • மக்காவில் இஸ்லாம் பரவிய காலத்தில் நபியவர்களை ஏற்றுக் கொண்டவர்களில் அதிகமானோர் சாமானியர்கள் தான். ஆனால் இதற்கு விதிவிலக்காக பேர் புகழ் செல்வம் ஆகிய அனைத்தையும் உதறிவிட்டு சத்தியத்தின் பால் ஆஜ்ம்ப காலகட்டத்தில் விரைந்து வந்தவர்களில் அபூபக்ர் (ரலி) அவர்கள் முதன்மையானவர்கள். அறிவிப்பவர் : அபுத் தர்தா (ரலி) புகாரி (3661)
  • நபி (ஸல்) அவர்களுடன் நீண்ட தோழமையைப் அபூபக்ர் (ரலி) அவர்கள் பெற்றிருந்தமையால் மற்றவர்களுக்குத் தெரியாத பல ஹதீஸ்களை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள். ஆதார நூல் : அஹ்மத் (20)
  • இஸ்லாம் கற்றுத் தந்த அனைத்து விதமான நற்காரியங்களும் அபூபக்ர் (ரலி) அவர்களிடத்தில் நிரம்பியிருந்தது.( அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி) புகாரி (1897))
  • இஸ்லாத்தை உறுதியாக நம்பியதினால் மார்க்க விஷயங்களில் போட்டி போட்டுக்கொண்டு எல்லோரையும் விட முன்னால் நின்றவர். .( அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி)நூல் : முஸ்லிம் (1865))
  • துன்பமான நேரத்தில் தமது கடந்த கால சொகுசு வாழ்க்கையை எண்ணிப் பார்க்காமல் மரணத்தை நினைவு கூர்ந்தவர். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)  நூல் : புகாரி (1889)
  • சொர்க்கவாசி என்று நற்செய்தி சொல்லப்பட்டவர். அறிவிப்பவர் : அபூ மூசா அஷ்அரீ (ரலி) புகாரி (3674)
  • இவர்களும் (உமர் (ரலி)) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் போல் 63 ஆண்டு காலம் இந்த உலகத்தில் நல்லவராக வாழ்ந்து சரித்திரம் படைத்து விட்டு இறைவனிடம் சென்றார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி)  முஸ்லிம் (4686)
ஆகிய முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

இதில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்