Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Saturday, July 16, 2011

அறிஞர் பீ.ஜெ. அவர்களின் வரலாறு, தொடர் - 4

அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் - பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்
தொடர்-4
எம்.ஏ.ஹபீழ் ஸலபி,இலங்கை.

சமூக உணர்வு:


இஸ்லாமிய வரலாறு தன்னுள் பதித்து வைத்துள்ள, இஸ்லாத்தை ஆழமாகக் கற்ற சீர்திருத்தவாதிகளிடம் வெறும் சிந்தனை மட்டுமல்லாது, உணர்ச்சி பூர்வமான உள்ளமும் செயல் திறனும் வேகமும் விவேகமும் சமூக அக்கறையும்  காணப்படுவதை அவதானிக்கலாம்.

சமகால சீர்திருத்தவாதி என்ற வகையில் ஏகத்துவப் பிரசாரத்தை துவக்க முன்னரே பீஜேவிடம் சமூக உணர்வு மிகுதியாக இருந்துள்ளது. அதே போல் அவரது மூத்த சகோதரர் அறிஞர் பீ.எஸ்.அலாவுத்தீன் அவரிடமும் இந்த உணர்வு இருந்தது என்பதை உணர்வுப் பத்திரிகையில் அவரது இளைய சகோதரர் ஹஜா அலாவுத்தீன் எம்.ஏ. அவர்கள் இவ்வாறு பதிவுசெய்கின்றார்.

‘…பல்வேறு வகையான ஊர் மக்கள் பிரச்சினைகளுக்காகவும் இச்சகோதரர்கள் அக்கால கட்டத்தில் போராடினர். இதற்கு உதாரணமாக பின்வரும் சம்பவத்தைக் கூறலாம்.

அவர்களின் சொந்த ஊரான தொண்டிக்கு அருகில் உள்ள தாலூகாத் தலைநகரான திருவாடானை என்ற ஊருக்கும் பல ஆண்டுகளாக நகரப் பேருந்து இல்லாத நிலையிருந்தது. இதற்கென போராட்டங்களும் பொதுக்கூட்டங்களும் உள்ளுர் அரசியல் கட்சிகளால் நடத்தப்பட்டபோது, அவர்களோடு இணைந்து போராடி நகரப் பேருந்துகள் வசதி பெற்றுத் தந்ததில் இச்சகோதரர்களுக்கும் பெரும் பங்கு உண்டு என உள்ளுர்வாசிகள் இன்றும் கூறுகிறார்கள்.(உணர்வு உரிமை:12 குரல்:36)

உறங்கிக் கொண்டிருந்த ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம் சமுதாயத்தையும் நோக்கி அவர் விழித்தெழுமாறு தனது பிரசாரத்தின் ஆரம்ப நாட்களிலேயே குரல் எழுப்பினார்.வீரியமான ஏகத்துவப் பிரசாரத்தோடு சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார் என்பதற்கு அவர் அல்ஜன்னத்தில் தீட்டிய பல ஆசிரியர் தலையங்கங்கள் மற்றும் அவர் ஆற்றிய சமூக உணர்வுமிக்க உரைகள் என்பன மறுக்கமுடியாத ஆதாரங்களாக உள்ளன.

முஸ்லிம் சமுதாயத்தை ஏய்த்துப் பிழைக்கும் தகுதியற்ற தலைமைகளை அவர் தாட்சண்யமின்றி விமர்சித்தார். அந்த நேரத்தில் இவ்வாறு புரட்சிகரமாக ஏழுதுவதை நினைத்துக் கூட பார்க்க முடியாத காலகட்டத்தில் முஸ்லிம் சமுதாயத்தை மட்டுமல்லாது,பல் சமூகத்தாரையும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட இனத்தை நோக்கியும் இஸ்லாமிய அழைப்பை விடுத்துள்ள பாங்கு ஓர் வித்தியாசமான அழைப்புப் பணிக்கான புதிய அத்தியாயமாக உள்ளது.

அல் ஜன்னத் நுழைவாயிலில் ‘உறக்கம் கலையட்டும்!  ஒரு சமுதாயம் விழித்துக் கொண்டது!!’ என்று அவர் தீடடிய தலையங்கம் ஆரம்பத்திலேயே இருபது கோடி மக்களைக் கொண்ட முஸ்லிம் சமுதாயத்தின் உறக்கத்தையும் அவல நிலையையும் வேதனையுடன் நினைத்துப் பார்க்கக் கூடிய சமூக உணர்வை வெளிக்காட்டுகிறது. இதைப் படிக்கும் யாரும் அதை நன்கு புரிந்து கொள்ளலாம்.

‘இந்தியாவில் மதத்தால், சாதியால் பல்வேறு சிறுபான்மைச் சமுதாயங்கள் இருக்கின்றன. மதச் சிறுபான்மையினரில் முஸ்லிம்களையும் கிறித்தவர்களையும் சீக்கியர்களையும் குறிப்பட்டுச் சொல்லலாம்.

மூன்று கோடி மக்களைக் கொண்ட கிறித்தவச் சமுதாயம் சமீபத்தில் நாடு தழுவிய அளவில் நடத்திய மாநாடுகளும் பேரணிகளும் அந்தச் சமுதாயம் விழித்துக் கொண்டு விட்டதைத் தெளிவாக அறிவித்தன. இந்தச் சமயத்தில் இருபது கோடி மக்களைக் கொண்ட முஸ்லிம் சமுதாயத்தின் உறக்கத்தையும் அவல நிலையையும் வேதனையுடன் நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.
 
இம்மாநாடுகளும் பேரணிகளும் இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக நடத்தப்பட்டன.
 
இந்து மதத்தில் பல்வேறு சாதிகள் உள்ளன. ஒரு சாதியில் பிறந்துவிட்ட காரணத்தினால் தங்களை எல்லா வகையிலும் உயர்வாகக் கருதி ஆட்சி, அதிகாரம், மதத்தலைமை ஆகியவற்றைத் தம் கைப்பிடியில் வைத்துக்கொண்டு, வளமாக வாழ்ந்து வரும் சாதியினரும் அம்மதத்தில் உள்ளனர். இவர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்டு, உரிமைகள் பறிக்கப்பட்டு, நாயினும் கீழாக நடத்தப்பட்டு வரும் தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் அம்மதத்தில் உள்ளனர்.
 
இவ்வாறு தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடும் சலுகைகளும் வழங்க அரசியல் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இவர்களது கல்வித் தரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவதற்காகவே இச்சலுகைகள் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டாலும், இதன் உண்மையான நோக்கம் அறிவுடைய மக்களுக்குத் தெரிந்தே இருந்தது.
 
ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னர் தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப் பட்டவர்களும் ஓரளவு தன்னுணர்வு பெற்றனர். தம்மை இழிவு படுத்திய இந்து மதத்தை அவர்கள் கை கழுவி விடக்கூடாது என்பதும் அவர்கள் மீது குத்தப்பட்ட கீழ்ச்சாதி முத்திரை நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதும் தான் இந்தச் சலுகைகளின் உண்மையான நோக்கம்.
 
இந்து மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் கிறித்தவ மதத்தை ஏற்றால் இச்சலுகைகள் ரத்துச் செய்யப்படுவதிலிருந்து இச்சலுகையின் நோக்கத்தை அறியலாம்.
 
தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் கிறித்தவ மதத்தைத் தழுவினால் முன்பு வழங்கப்பட்டது போன்ற சலுகைகள் தொடர வேண்டும் என்பது இம்மாநாடுகளின் முதல் கோரிக்கை.
 
பெரும்பான்மையாக இருக்கிறோம் என்ற ஒரே காரணத்துக்காக சிறுபான்மையினரை அடிமைகளாகவும் இரண்டாந்தரக் குடிமக்களாகவும் — மத்திய மாநில அரசுகளின் பரிபூரண ஆசியுடன் — மதவெறிப் பிரச்சாரம் செய்து வரும் கூட்டத்தினர், சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கி வருகின்றனர்.
 
மத்திய அரசினதும் உ.பி. மாநில அரசினதும் முழு ஒத்துழைப்புடனும் ஆதரவுடனும் இந்தக் குண்டர்கள் பாபரி மஸ்ஜிதை இடித்துத் தகர்த்ததையும் ஆட்சியாளர்களின் ஆதரவுடனேயே அது கோவிலாக மாற்றப்பட்டதையும் நாடு இன்னும் மறக்கவில்லை. இதனால், நாட்டுக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு இன்னும் பரிகாரம் காணப்படவில்லை.
 
பாண்டிச்சேரியில் புனித ஜென்மராக்கினி மாதா பேராலயம் உள்ளது. இந்தப் பேராலயம் இருக்கும் இடத்தில் வேதபுரீஸ்வரர் கோவில் இருந்தது. அந்தக் கோவிலை இடித்துத்தான் அந்த இடத்தில் இந்தத் தேவாலயம் எழுப்பட்டது என்று இந்து மத வெறிக்கூட்டம் நவீன கண்டுபிடிப்பை இப்போது வெளியிட்டுள்ளது.
 
அந்தப் பேராலயத்தில் திடீரென நுழைந்து கற்பூர ஆராதனை செய்தும் அந்த ஆலயச் சுவற்றில் ஓம் என்று எழுதியும் அராஜகம் செய்தது இந்தக் கூட்டம். அந்த ஆலயத்தைக் கைப்பற்றப் போவதாகவும் சபதம் செய்திருக்கிறது இந்து வெறிக் கும்பல்.
 
சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களுக்கும் உரிய பாதுகாப்புத் தந்து விஷமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது இவர்களின் மற்றொரு கோரிக்கை.
 
சிறுபான்மைச் சமுதாயமான முஸ்லிம் சமுதாயத்திற்கு மிகச் சிறுபான்மைச் சமுதாயத்தினரின் இம்மாநாடுகளில் ஏராளமான படிப்பினைகள் இருக்கின்றன.
 
முஸ்லிம் சமுதாயம் இதைவிடப் பெரிய மாநாடுகளை நடத்தியதில்லையா? நடத்தியிருக்கிறது? தலைவர்களுக்கு ஜிந்தாபாத் போடுவதற்காக மாநாடுகளை நடத்தி இருக்கிறது! பள்ளிவாசலை இடிக்கத் துணை நின்றவர்களை ஆதரித்து மாநாடுகளை நடத்தியுள்ளது! சமுதாயத்தின் ஓட்டுக்களைத் துரோகிகளுக்குப் போடச் சொல்லி மாநாடுகளை நடத்தியுள்ளது! இப்படி ஏராளமான மாநாடுகளை நடத்தி இருக்கிறது!
 
முஸ்லிம் சமுதாயத்தின் வறுமையை விரட்டி, சமுதாயத்தை முன்னேற்றக் கூடிய வகையில் ‘காயிதேமில்லத் மாவட்டம்’ அமைக்கும் மகத்தான கோரிக்கையை முன் வைத்து மாநாடுகளை இந்தச் சமுதாயம் நடத்தியுள்ளது.
முஸ்லிம் சமுதாயத்தின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்கக் கூடிய வகையில், புலவர்களும் தலைவர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் எழுப்ப வேண்டும் என்ற புனிதமான கோரிக்கையை முன்வைத்து மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன.
 
இப்படிப்பட்ட உருப்படியான(?) கோரிக்கைகளுக்குத்தான் இந்தச் சமுதாயத்தை அதன் தலைவர்கள் திரட்டியுள்ளனர்.
 
முஸ்லிம்களை விடப் பல மடங்கு குறைந்த எண்ணிக்கை கொண்ட சமுதாயம், பிரபலமான தலைவர்களைப் பெற்றிராத சமுதாயம், தனக்கெனத் தனியாக நாளிதழ் நடத்த முடியாத சமுதாயம் தனது மதத்துக்கும் சமுதாயத்துக்கும் ஏற்படக் கூடிய பாதிப்புகளை உணர்ந்து அதற்காப் போராடுகிறது!
 
முன்பொரு முறை சிறுபான்மையினர் நடத்தும் கல்விக் கூடங்களுக்கு எதிரான சட்டத்தைச் சிறுபான்மை மக்களின் நலனில் அக்கரையில்லாத ஜெயலலிதாவின் அரசு கொண்டு வந்த போதும் முஸ்லிம் சமுதாயமும் அதன் தலைவர்களும் தூக்கத்தில் தான் கிடந்தனர். நினைவுச் சின்னங்கள் எழுப்புவதை விடக் கல்விக் கூடங்கள் அவ்வளவு முக்கியம் வாய்ந்தவையா? என்ற எண்ணம் தான் அதன் தலைவர்களுக்கு இருந்தது. இந்தச் சமயத்தில் கிறித்தவ சமுதாயம் தான் மக்கள் சக்தியை இந்தச் சட்டத்துக்கு எதிராக ஒன்று திரட்டி வாபஸ் பெற வைத்தது.
 
இப்போது தனது வழிபாட்டுத் தலத்துக்கு ஆபத்து என்றவுடன் – மதம் மாறியவர்களுக்குச் சலுகைகள் மறுக்கப்பட்டால் தனது மதத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றவுடன் — மீண்டும் சிலிர்த்து எழுந்ததும் இந்தச் சமுதாயமே.
இது போன்ற நிலையை முஸ்லிம் சமுதாயம் சந்தித்த போது, இதன் தலைவர்கள் நடந்து கொண்ட முறையை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
 
பள்ளிவாசலுக்கு உரிமை கொண்டாடிய மதவெறி பிடித்த கும்பல், இரவோடிரவாகப் பள்ளிவாசலுக்குள் சிலைகளைக் கொண்டு போய் வைத்தது! இது நடந்தது காங்கிரஸ் ஆட்சியில். அதன் பின்னர் பள்ளிவாசலில் தொழுகை நடாத்தத் தடை விதிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் தான் இதுவும் நடந்தது. பள்ளிவாசலில் வைக்கப்பட்ட சிலைகளுக்குப் பூஜை செய்ய அனுமதியளிக்கப்பட்டதும் காங்கிரஸ் ஆட்சியில் தான். நேருவும் அவரது பரம்பரையும் ஆண்ட காலங்களில் நடந்த இந்த அக்கிரமத்தைச் சமுதாயத்தின் கவனத்துக்கொண்டு சென்று அவர்களை ஒன்று திரட்ட வேண்டிய முஸ்லிம் லீக் தலைவர்கள், காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு, முஸ்லிம் சமுதாயத்தின் ஓட்டுக்களைப் பெற்றுக் கொடுத்தனர். இந்த அக்கிரமம் பற்றிய செய்தி மக்களுக்குச் சென்று விடாமல் பார்த்துக் கொண்டனர். ஐந்தாறு தலைவர்களுக்குப் பதவிகளை வழங்கி விட்டால், முஸ்லிம் சமுதாயத்தின் எந்த உரிமைகளையும் பறிக்கலாம் என்ற நிலையைத் தோற்றுவிக்கக் கூடிய தலைவர்களைத் தான் இந்தச் சமுதாயம் பெற்றது.
 
அதன் பின்னர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டது. காங்கிரஸ் அரசு அதற்குப் பரிபூரண ஆசியும் ஒத்துழைப்பும் வழங்கியது. அதே காங்கிரஸ் ஆட்சியில் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட இடத்தில் கோயில் எழுப்பபட்டது. 

வழிபாட்டுக்காகத் திறந்து விடப்பட்டதும் காங்கிரஸ் ஆட்சியில்தான். தங்கள் பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக காங்கிரஸுடன் தோள் கொடுத்து நிற்பவர்கள் இந்தச் சமுதாயத்தின் தலைவர்களாகப் பவனி வருகிறார்கள்.
 
கேரளாவில் அரசைத் தாங்கிப் பிடித்திருப்பவர்கள் இந்த சமுதாயத் தலைவர்கள் தாம். இந்த துரோகத்தை முஸ்லிம் சமுதாயம் சீக்கரமே மறந்து விடக் கச்சிதமாகக் காரியங்கள் ஆற்றி வருபவர்களாகவே இந்தச் சமுதாயத்தின் தலைவர்கள் உள்ளனர்.
 
அவர்களோ வருமுன் காக்கப் பொங்கி எழுகின்றனர். இவர்களோ வந்த பின்னும் சமுதாயத்தைத் தாலாட்டி உறங்க வைத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஒரு பள்ளிவாசலை விட்டுக் கொடுத்தால் என்ன என்று கேட்கின்ற கோழைகளும் துரோகிகளும் இங்கே இருப்பது போல் அங்கே இல்லை.
 
‘பாபர் மசூதியைப் பற்றிப் பேசப் போகிறார்கள்’ என்று நீதிமன்றத்தில் முறையிட்டு இஸ்லாமிய மாநாட்டுக்கு இடைக்காலத் தடை வாங்கும் நயவஞ்சகர்கள் அங்கே இல்லை.
 
சமுதாயத்திற்காகக் குரல் கொடுப்பவர்களைத் தீவிரவாதிகள் என்று காட்டிக் கொடுக்கும் கயவர்களும் அங்கே இல்லை.
 
சமுதாயத்தைப் பாதிக்கின்ற பொதுவான பிரச்சினைகளில் கூட ‘அவனைச் சேர்க்கக் கூடாது; இவனைச் சேர்க்கக் கூடாது’ என்று முறுக்கிக் கொள்பவர்களும் அங்கே இல்லை.
 
ஷரீஅத்தைப் பாதுகாக்கும் கூட்டங்களையே பிழைப்புக்கு வழியாக்கி, ‘தந்தி மணியாடரில் 1000 ரூபாய்கள் அனுப்புக’ என்று கேட்கும் சமுதாயத் தலைவர்கள் இங்கே இருப்பது போல் அங்கே இல்லை.
 
எல்லா வேறுபாடுகளையும் மறந்து, பிரச்சினைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, கோரிக்கைகளை மட்டுமே முன்னிறுத்தி, கிறித்துவ சமுதாயம் அழுத்தமாகத் தன் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளது.
 
இந்த உணர்வுகளை முஸ்லிம் சமுதாயம் இனியாவது பெறும் என எதிர்பார்க்கிறோம். சமூகத்தை காட்டித் தங்களை வளர்த்துக் கொண்ட தலைவர்களை இனியாவது அடையாளம் காண வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறோம்.
 
கிறித்துவ மதத்தினரின் இம்மாநாடுகள் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமன்றி, வேறு சிலருக்கும் ஓர் உண்மையைத் தெளிவாகச் சொல்லி இருக்கின்றன.
 
‘இந்து மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் கிறித்தவ மதத்தில் சேர்வதால் அவர்கள் மீது குத்தப்பட்ட கீழ்ச்சாதி முத்திரை அழிந்து விடுவதில்லை. அவர்களது சாதி மறைந்து விடுவதில்லை. இந்து மத்திலிருந்து கிறித்தவ மதத்துக்கு மாறும் ஹரிஜன் ஒருவர் ‘கிறித்தவ ஹரிஜன்’ என்றே அழைக்கப்படுகிறார். மற்ற சாதியினரின் நிலையும் இதுதான்’ என்று இம்மாநாடுகளில் பேசிய கிறித்தவ அறிஞர்கள் உரை நிகழ்த்தியுள்ளனர். இதைக் காரணம் காட்டியே சலுகைகள் நீடிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
 
இவ்வளவு விழிப்புடனும் சமுதாயப் பொறுப்புடனும் நடக்கும் கிறித்தவ சமுதாயத்திற்கு ஓர்  உண்மையை நாம் கூறுவது பொருத்தமாக இருக்கும்.
 
தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் இந்து மதத்திலிருந்து வெளியேறிவிடக் கூடாது என்பதற்காகவே அவர்களுக்குச் சலுகைகள்(?) அளித்துள்ளனர், ஆட்சியாளர்கள். பள்ளிவாசலை இடித்ததை நியாயப்படுத்துகின்ற புதுப் பெரியவாலின் காலில் வீழ்ந்து கிடக்கின்ற அரசியல்வாதிகள் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதென்பது சாத்தியமில்லை என்பதை உணருங்கள்!
 
அப்படியே உங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படுவதாக வைத்துக் கொண்டாலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் சலுகைகளைத்தான் பெற்றுத் தர முடியுமே தவிர, அவர்கள் மீது காலம் காலமாகக் குத்தப்பட்ட கீழ்ச்சாதி முத்திரையை உங்களால் அழிக்க முடியாது. ஒரு இழிவிலிருந்து மீண்டும் அதே மாதிரியான இன்னொரு இழிவைத்தான் அந்த மக்கள் மீது நீங்கள் சுமத்துகிறீர்கள்!
 
கிறித்தவ மதத்திலும் சாதிகள் உள்ளன. அவற்றிக்கிடையே உயர்வு தாழ்வுகள் இருக்கின்றன என்று அந்த மாநாடுகளில் உங்கள் தலைவர்களும் மத குருமார்களும் முழங்கியதே இதற்குச் சான்று!
 
மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டுமானால் — அவனது சாதிகள் மறைய வேண்டுமானால் — சாதிகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் தீண்டாமையையும் சுத்தமாகத் துடைத்தெறிகின்ற இஸ்லாத்தின் பால் வாருங்கள்! இங்கே முஸ்லிம் ஹரிஜன் இல்லை! முஸ்லிம் முதலியார் இல்லை! எங்கிருந்து வந்தார்கள் என்பதையே மறக்கச் செய்யும் உயரிய தத்துவம் இஸ்லாம் மட்டுமே!
 
இதை நீங்கள் உணர்ந்தால்தான் உங்களின் விழிப்புக்கு அர்த்தமிருக்கும். விழித்துக் கொண்டு கிணற்றில் விழுவதை விட உறக்கம் மேலல்லவா என்பதை உணருங்கள்!
 
தீண்டாமையிலிருந்து விடுபடத் துடிக்கும் ஏனைய மதத்தவர்களுக்கும் இதையே சொல்கிறோம். உறங்கிக்கொண்டிருக்கின்ற முஸ்லிம் சமுதாயமும் விழிக்காத கிறித்தவ சமுதாயமும் விழிப்பதற்கு யோசித்துக்கொண்டிருக்கும் பெரும்பான்மைச் சமுதாயமும் இங்கு கூறப்பட்ட உண்மைகளை உணர்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.’
 
அவரது இத்தகைய ஓயாத சமூக உணர்வலைகள் பின்னாளில் கழக உருவாக்கத்திற்குக் காளாக அமைந்தது. எனினும், அவர் உருவாக்கியவற்றால் பலர் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவர் அனைத்தையும் துறந்தார். ஏகத்துவ இளம் பிரசாரகர்களின் இடைவிடாத பிரசாரத்தால் வளர்க்கப்பட்ட கழகத்தை பதவி ஆசையற்ற அவர் நம்பி பொறுப்பை ஒப்படைத்த கழகத் தலைமைகள் இன்று ஏகத்துவத்திற்கு எதிராக கலகம் பண்ணும் துரோகத்தை செய்து கொண்டிருக்கிறது. இந்த வரலாற்றுத் துரோகத்தை என்றும் வரலாறு மறக்கவும் மன்னிககவும் மாட்டாது. கழக உருவாக்கமும் துரோகமும் பற்றிய அத்தியாயத்தில் அவற்றை விரிவாக அலசுவோம்.
 
பல ஆய்வு நூல்களை எழுதி, அறிவுக்குப் பங்களிப்புச் செய்து, பிரபல்யம் பெற்றவர்கள் பலரை, வரலாறு தன்னுள் பதிவு செய்துள்ளது. அவர்களில், அதிகமானவர்கள் தம் மூளையிலேயே வாழ்ந்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். எழுதுகோலால் தடுத்த அளவு கூட தீமைகளைத் தடுக்க களத்திற்கு அவர்களில் அதிகமானவர்கள் வரவில்லை.

இன்றை பல அரபு நாட்டு அறிஞர்களைக் கூட இதற்கு உதாரணம் காட்ட முடியும். ஆட்சியாளர்களின் தவறை அவர்கள் விமர்சிப்பதில்லை. துணிந்து விமர்சித்தவர்கள் சிலரின் முகவரி தொலைக்கப்பட்டுள்ள வரலாறும் உள்ளது.

ஆனால், சமூக சீர்திருத்தவாதிகள் அறிவுப்பணியோடு மட்டும் தம் சிந்தனையை சுருக்கிக் கொள்வதில்லை. சமூகத்தில் தலைவிரித்தாடும் மடமையின் கொடுமைகளைக் காணும் போது, அவர்களின் உள்ளத்தில் எரியும் உணர்ச்சிவேகம், அவ்வாறு மவ்னியாகி, அவதானிகளாக மட்டும் நின்றுவிட அவர்களை விடுவதில்லை. சூழலில் உள்ள தீமைகளையும் ஆட்சியாளர்களின் அநியாயங்களையும் தலைவர்களின் தகிடுதத்தங்களையும் அவர்களால் பார்த்துச் சகிக்க முடிவதில்லை. ஏகத்துவக் கொள்கை, நடைமுறை வாழ்விலும் பரந்த பூமியிலும் அது வாழ வேண்டும் என்ற உணர்ச்சி பூர்வமான வேகம் அவர்களிடம் காணப்படும். எனவே, அவர்கள் அசத்தியக் கோட்டை நடுவே நின்று கொண்டு தம் இன்னுயிரையும் மதிக்காது தீமைகளை எதிர்த்துப் போராடுவார்கள்.

இத்தகைய ஏகத்துவப் போராளியாக தனது துணிகரமான பேச்சால், எழுத்தால், சமுதாயப் பணியால் பீஜே ஆற்றிக் கொண்டிருக்கும் பணி மிக முக்கியமாக அவதானத்திற் கொள்ளப்பட வேண்டும். அவரது பிரச்சார வரலாற்றில் இதற்கான நிறைய சம்பவங்களைக் கூற முடியும்.

முதல் தடவை பீஜே இலங்கை வந்த போது, தும்மலசூரியவில் அமைந்துள்ள அகதியாக் கலாபீடத்தில் அவர் உரையாற்றும்போது, அசத்தியக் கும்பல் தடைகளை ஏற்படுத்தியது. நாங்கள் இந்த பனங்காட்டு நரிகளுக்குப் பயந்தவர்களில்லை என்ற அடிப்படையில் கூக்கிரலிட்டவர்களுக்கு அவர்களுக்குப் புரியும் அவர்களின் அதே பாணியில் பதில் அளித்தார். 

ஒருவருக்கு தனது சொந்த நாட்டில்  தைரியம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. பீஜே கால் வைத்த அத்தனை இடங்களிலும் அவரை நோக்கி வந்த பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் துணிவாக முகம் கொடுத்தார். இதுவரை அவர் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளப் பின்னின்றதில்லை. 

20-03-2005 அன்று இலங்கை அக்குருணையில் நடை பெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சியில் பழைமை விரும்பிகளின் தூண்டுதலால், கற்கள் தன் மேனியைப் பதம் பார்க்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்ட போதும், மத்ஹப்வாதிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் மேடையிலிருந்து இறங்க மாட்டேன் என்ற உறுதி இதற்கோர் அண்மைய, இலங்கை மக்கள் நேரடியாகப் பார்த்த  உதாரணமாகும்.

இது போன்ற பல சம்பவங்களை அவரது பிரச்சார வாழ்வு முழுதும் அவதானிக்கலாம்.

வரலாறு இன்னும் வளரும் இன்ஷா அல்லாஹ்…

Tuesday, July 12, 2011

அறிஞர் பீ.ஜெ. அவர்களின் வரலாறு, தொடர் - 3

அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் - பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்
தொடர்-3
எம்.ஏ.ஹபீழ் ஸலபி,இலங்கை.
 
 
இரண்டாவது தொடரில் முபாரக் மதனி கூட்டம் சவூதி முப்திகளை மார்க்கத்தின் அதாரடிகளாக நினைத்து பீஜே பற்றி கிபாருல் உலமாக்களுக்கு இவர்கள் எழுதிய கடிதம் தொடர்பாகப் பார்த்தோம்.சவுதி அரசாங்கம் அறிஞர் பீஜே அவர்களை கவ்ரவ விருந்தினராக அழைத்த போது,அதற்குப் பீஜே எழுதிய பதில் கடிதம் உண்மையில் அவரின் உன்னதமா பணிகளைப் பற்றி கிபாருல் உலமா அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது.

எனினும்,அக்கடிதத்தில் முபாரக் மதனிக் குழு குறிப்பிடும் பல விடயங்களில் முபாரக் மதனியே முரண்பட்டுள்ளார். ஆதாரபூர்வமானதாக இவர்கள் நம்பும் ஹதீஸ்களை பீஜே மறுக்கின்றார்.அதனால், இவர் முஃதஸிலாக் கொள்கையுடையவர் என வாதிடும் இவர், அதே வேலையை தனது முதல் மொழிபெயர்ப்பு நூலிலேயே ஆரம்பித்துள்ளார்.
 
சவூதி நாட்டைச் சேர்ந்த கலாநிதி ஸாலிஹ் பின் பவ்ஸான் அல் பவ்ஸான் என்பவர் கிதாபுத் தவ்ஹீத் என்று எழுதிய அறபி நூலை முபாரக் மதனி மொழிமாற்றம் செய்தார். தமிழில் இதுதான் தவ்ஹீத் என்ற தலைப்பில் ஸவூதி அரேபியர் ஒருவரின் நிதி உதவி மூலம், இலங்கையிலுள்ள அன்ஸாருஸ் சுன்னா முஹம்மதிய்யா (20.05.2000) அன்று இலவசமாக வெளியிட்டது.
இம்மொழிபெயர்ப்பில் ஸஹீஹான ஹதீஸை காரணமின்றி இருட்டடிப்புச் செய்து, மறுத்துள்ளார் முபாரக் மதனி .இது, கிதாபுத் தவ்ஹீத் என்ற  நூலில் 76ம் பக்கம் இடம் பெற்றுள்ளது.

கலாநிதி ஸாலிஹ் பின் பவ்ஸான் அல் பவ்ஸான் என்பவரின் கிதாபுத் தவ்ஹீத் மூலத்தையும் இவர்களின் இருட்டடிப்பு மொழிபெயர்ப்பையும் இதோ தருகின்றோம்.

عروة بن مسعود لقريش  وقال عروة بن مسعود لقريش : يا قوم واللّه لقد وفدت إلى كسرى وقيصر والملوك فما رأيت ملكا يعظمه أصحابه ما يعظم أصحاب محمد محمدا صلى الله عليه وسلم ، واللّه ما يحدون النظر إليه تعظيما له ، وما تنخم نخامة إلا وقعت في كف رجل منهم فيدلك بها وجهه وصدره ، وإذا توضأ كادوا يقتتلون على وضوئه . انتهى (1)

உர்வா பின் மஸ்ஊத் என்பவர் குறைஷிகளைப் பார்த்து ‘நான் ரோம்,பாரசீக மன்னர்களிடமும் இன்னும் பல அரசர்களிடமும் தூதுக் குழுக்களோடு சென்றிருக்கின்றேன். ஆனால்,முஹம்மத்(ஸல்)அவர்களை அவர்களது தோழர்கள் மதிப்பது போன்று அவர்கள் எவரையும் அவரது தோழர்கள் மதிப்பதை நான் காணவில்லை. நபி(ஸல்) அவர்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் மரியாதையால் எப்போதும் அவர்களை உற்று நோக்கியவர்களாகவே அவர்களது தோழர்கள் இருக்கிறார்கள்’  என்று கூறினார்.(இருட்டடிப்பைப் பார்க்க பக்கம்:129)

பீஜேவுக்கு எதிராக வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் இவர் வேண்டுமென்றே நீண்ட வாக்கியத்தையே விட்டு விட்டு மொழிபெயர்த்துள்ளார். ஒரு பெரிய வாக்கியமே நடுவில் உருவி எடுக்கப்படுவது தற்செயலாக நடந்திருக்குமா?
அரபியையும் இவர்களது இருட்டடிப்பையும் பாருங்கள்.

وما تنخم نخامة إلا وقعت في كف رجل منهم فيدلك بها وجهه وصدره ، وإذا توضأ كادوا يقتتلون على وضوئه . انتهى (1
 
மேலே உள்ள பகுதியை அப்படியே மறைத்து,இருட்டடிப்புச் செய்துவிட்டார்கள்.

அதன் தமிழாக்கத்தைப் பாருங்கள். ‘நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காரி உமிழ்ந்தால், அது கீழே விழாது. யாருடைய கையிலாவது தான் விழும். 
(அதாவது அந்தச் சளி கீழே விழாமல் ஒவ்வொருவரும் கையை நீட்டி அதைப் பெற முயல்வார்களாம்) யார் கையில் அது விழுந்ததோ அதன் மூலம் தமது முகத்திலும் நெஞ்சிலும் அதைத் தடவிக் கொள்வார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளுச் செய்தால் அந்தத் தண்ணீருக்காக சண்டையிட்டுக் கொள்வார்கள்.
 
இவ்வளவு பெரிய வாக்கியம் கவனக் குறைவால் விடுபட்டிருக்க முடியுமா?
 
இது புகாரியில் இருந்தாலும் இது சரியானதாக இருக்க முடியாது என்று இவரின் ஆழ் மனது கூறியதால் இவர் இந்த இருட்டடிப்புச் செய்திருந்தால் இவரின் உள் மனதும் குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்பதைத் தானே சொல்கிறது.
 
குர்ஆனுக்கு மாற்றமான இது போன்ற செய்திகள் புகாரியில் இருந்தாலும் இதை நம்பக் கூடாது என்று இவரின் மனசாட்சி கூறியிருக்கிறது.
இதை பீஜே வெளிப்படையாக எடுத்துக் காட்டி, இச் செய்தி தவறு என்று கூறுகிறார்.
 
முபாரக் மஸ்வூத் லெப்பை போன்றவர்கள் அதை மக்கள் காதுகளுக்குப் போகாமல் மறைக்க எண்ணுகின்றனர்.  ஆதாரப்பூர்வமான செய்தியில் அந்தச் செய்தியின் ஹைலைட்டாக இருக்கும் வாக்கியத்தை மறைத்து, மோசடி செய்து விட்டு, பத்வாக் கேட்டு சவூதி முப்திகளுக்குக் கடிதமும் எழுதுகின்றார்.
 
இவர்கள் மறைத்தாலும் ரஹ்மத் டிரஸ்ட் வெளியிட்ட புகாரி தமிழாக்கத்தின் மூலம் இது மக்களை அடையுமே  அப்போது எதைப் போட்டு மூடுவார்கள்? புகாரியைத் தடைசெய்யச் சொல்லி யாருக்கு எழுதப் போகின்றார்கள்?
 
ஒரு விடயம் இவர்களது அறிவுக்கு புரியவில்லை என்றால், மறுத்து, மறைத்து, இருட்டடிப்புச் செய்வார்களாம். பீஜே நியாயமான காரணம் குறிப்பிட்டால், பத்வாக் கேட்டு அவமானப்படுவார்களாம்.
 
இவர்கள் வாதப்படி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை இருட்டடிப்புச் செய்வது, நபித்துவத்தை மறுப்பதற்குச் சமனானது. எந்தவித நியாயமுமின்றி அந்த வேலையைத்தானே செய்துள்ளார்.
 
மக்களே! இவர்களை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
 
கலாநிதி பவ்ஸான் அவர்கள் மூலத்தில் குறிப்பிட்டுள்ளதையே இவர்கள் இருட்டடிப்புச் செய்துள்ளதால், இவர்கள் ஏனைய விடயங்களில் எவ்வளவு இருட்டடிப்புச் செய்வார்கள் என்பதைக் கொஞ்சம் நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்.
 
பீஜேவை விமர்சிப்பதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?இவர்கள் விமர்சிப்பதிலும் நேர்மையற்றவர்கள் என்பதற்கு இதே பெரிய ஆதாரமாக உள்ளது.

வித்தியாசமான பண்புக் கூறுகள்
அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் எழுத்துக்களையும் உரைகளையும் ஆழ்ந்து நோக்கும் போது, அரபு, ஆப்ரிக்க, ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் அவ்வப்போது சில துறைகளில் மட்டும் சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்ள முனைந்தவர்களையோ, அரசியல் அதிகார வீச்சுக்கு முக்கியத்துவம் அளித்து, நபி வழியை விட்டு விலகி, கிலாபத் கனவு கண்ட இயக்கவாதிகளையோ அவர் பின்பற்றவில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. ஏனெனில், மற்றவர்களின் சாயல் படியாத தனித்துவமான பண்புக் கூறுகளுடையதாக பீஜேவுடைய எழுத்தும் பேச்சும் காணப்படுகின்றன. அவரது தஃவா அணுகுமுறையும் அவர்களிலிருந்து வேறுபாடுடையதாக உள்ளது. 

இவைகள்தான் அவரை வேகமாக முன்னணிக்குக் கொண்டு வந்த பின்னணிகள் என்று கூட கருத வாய்ப்புள்ளது.

இந்த ஒப்பீடு மற்ற அறிஞர்களது பணியைக் குறைத்து மதிப்பிடுவதற்கான முயற்சியாக யாரும் தவறாக அர்த்தப்படுத்திவிடக் கூடாது. ஆனால், பீஜேவுடைய பணி பன்முகத் தன்மையுடையது என்பதை மறுக்க முனைபவர்களுக்கும் ஏற்கத் தயங்குபவர்களுக்கும் தக்க பதிலைப் பதிவு செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன்.

மிகக் குறுகிய காலத்தில் மிகப் பெரிய மக்கள் சக்தி மிக்க இயக்கமாக அவர் உருவாக்கிய தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், சமய மற்றும் சமுதாயப் பிரச்சினைகளில் மக்கள் நலனை மையப்படுத்திப் போரடுவதிலும் முஸ்லிம்களின் உரிமையை விட்டுக் கொடுக்காமலிருப்பதிலும் மிக முக்கிய அங்கமாக உள்ளது. அதனது தொடர் போராட்டத்தில் அது அடைந்த முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு, தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல் எனலாம். அதேவேளை, அவர் ஒதுக்கிவிட்டு வெளியேறிய இயக்கங்கள் வெறிச்சோடிக் கிடப்பதையும், அவர் உருவாக்கிய தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  வீரியம் பெறுவதையும் அதன் அதிர்வுகள் இந்தியாவிற்கு வெளியேயும் வேகமாக செல்வாக்குச் செலுத்தி வருவதையும் அவதானிக்க முடிகிறது. இது பல இயக்கங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனிநபர் தாக்ககுதலை ஆரம்பித்துள்ள இவர்களின் நடவடிக்கைகள் இதை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

எனினும், அவர் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சமகால அரசியல், பொருளியல், சமய, சமூகப் பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்குர்ஆன், ஹதீஸ் என்பன மட்டும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முன்வைக்கும் காத்திரமான தீர்வை, ஆழமான ஆய்வுத் தேடலினடியாய்க் கிட்டும் அதன் முடிவுகள் மூலம் தானாக முகம் கொடுக்கின்றார். மக்களுக்கு விரிந்த தெளிவை வழங்கும் ரமழான் மாத தொடர் சொற் பொழிவை இதன் மணிமகுடமாக நோக்க முடியும். அவரது இத்தொடர் சொற்பொழிவுகள் மிகப் பெரிய ஆய்வுப் பரிமாணம் கொண்டவைகள்.

இந்த வகையில் நோக்கும் போது, நவீன பிரச்சினைகளுக்குரிய பல்துறை சார்ந்த சிக்கல்களுக்கு அவர் நல்ல பல தீர்வுகளையும் தீர்ப்புக்களையும் வழங்கியுள்ளார். ஒரு புதிய பிரச்சினை தலை தூக்கும் போது, இது பற்றி பீஜே என்ன கருத்துச் சொல்லியுள்ளார் என்று அவரை எதிர்ப்பவர்கள் கூட ஆவலுடன் கூர்ந்து அவதாணிக்கும் நிலையை அவரது காத்திரமான பத்வாக்கள் கனதியான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.

உலக அதிசயங்களைப் பற்றி பெரும்பாலானோர் அதிசயத்தில் இருந்த போது, உலக அதிசயம் எது? என்று அவர் ஆற்றிய உரை  விழிப்புருவங்களையும் வியப்படைய வைத்தது.அவரை எதிர்ப்பவர்கள் கூட இவ்வுரையைக் கேட்டு விட்டு எப்படி அவரால் மட்டும் இவ்வாறு வித்தியாசமாக சிந்திக்க முடிகிறது என்று என்னிடம் வியந்த பல சந்தர்ப்பங்கள் உண்டு. உலக அதிசயம் எது? என்ற உரை ரியாதிற்கு வரத் தாமதமானதும் எத்தனை பேர் அதை விரைவாக அழைப்பித்துத் தாருங்கள் என்று ஜாலியாத் மவ்லவிமார் உட்பட பலர் பல முறை முறையிட்டதை நான் ரியாத் மண்டலத்தில் அவதானித்தேன்.

இந்நிகழ்வுகள் எல்லாம் அவரது சிந்தனைகளும் பத்வாக்களும் காத்திரமான சுதந்திர சிந்தனைப் பள்ளிக்கு உரிமை கோரக் கூடியனவாக இருக்கின்றன என்பதைப் பட்டவர்த்தனமாகப் புலப்படுத்துகின்றன. எனவே, பழைமைவாதிகளால் இதைப் பொறுத்துக் கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முடியவில்லை.அதனால், அவர்கள் பொறாமைப்பட ஆரம்பித்து, நிலை தடமாற்றத்திற்கு ஆளாகிவிடுகின்றனர். இவ்வாறு தடம்புரண்டவர்களின் தடையங்களும் அவ்வப்போது இதில் அடையாளப்படுத்தப்படும்.

நவீன பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் இஸ்லாமிய மூலாதார  ஆழியில் ஆய்வினடியாய் அவர் எடுத்து வைக்கும் காத்திரமான தீர்வுகள், அல்குர்ஆன் – சுன்னா என்பனவற்றின் மீதுள்ள அவரின் உறுதியான நம்பிக்கையையும் அவற்றில் அவருக்குள்ள விரிந்த புலைமையையும் உறுதிப்படுத்துகின்றன.
 
இஸ்லாத்தின் மீது வசைபாடுவோர் சார்ந்து நிற்கும் மாற்று மதங்களின் உறுதியற்ற நிலை பற்றிய தெளிவான பார்வையும் அவருக்கு உண்டு. இதற்கு நிறைய ஆதாரங்களைத் தரமுடியும். இவை பற்றி மத ஒப்பீட்டாய்வு பற்றிய அவரது பங்களிப்பு எனும் பகுதியில் விரிவாகப் பேசவுள்ளேன். இப்போது, ஓர் உதாரணத்தை இங்கு சுட்டிக்காட்ட ஆசைப்படுகின்றேன்.
 
சில வருடங்களுக்கு முன்னர் ‘வுhந டீiடிடந யனெ ஞரசயn’ எனும் தலைப்பிட்டு நியூஸ் வீக் வார இதழ் ஒரு கட்டுரை வெளியட்டது. அதில், ‘பைபிளும் – அல் குர்ஆனும் ஒரே செய்தியைத் தான் சொல்கின்றன. இரண்டுமே கடவுளின் தூதர்களைப் பற்றியும் மீட்சியைப் பற்றியும் நரகத்தைப் பற்றியும் தான் பேசுகின்றன. இவ்வாறு இரண்டிற்கும் ஒற்றுமை இருக்க மதத்தின் பெயரால் போராட்டம் ஏன்?’ என்று ‘நியூஸ் வீக்’ இதழில் அல்குர்ஆனையும் – பைபிளையும் ஒப்பிட்டு சில தவறான கேள்விகளை எழுப்பி ஒரு கட்டுரையை வெளிளிட்டது.
 
அந்தக் கட்டுரையிலிருந்து சில பகுதிகளைத் தருகின்றோம். படித்துவிட்டு அதற்கான பீஜேவுடைய பதிலைப் படித்துப்பாருங்கள். நாம் மேலே குறிப்பிட்ட உண்மைக்கு இது ஓர் உதாரணமாகிவிடும்.
 
‘பைபிளைப் போலவே, குரானிலும் தெய்வீக அதிகாரம் வலியுறுத்தப்படுகிறது. ஆனால், தெய்வீக அருள் பெற்ற மனிதர்கள்தான் பைபிளை எழுதினார்கள் என்று யூதர்களும், கிறித்தவர்களும், கருதுகிற போது, அல்லாஹ்வின் நிரந்தரமான வார்த்தைகளாகவே குரானை முஸ்லிம்கள் நினைக்கிறார்கள். குரான் என்றால் ஒப்பித்தல் என்று அர்த்தம். ஆக, கடவுளின் சொற்களை வெளிப்படுத்த முஹம்மத் ஒரு கருவியாக இருந்திருக்கிறார்; அவராக அவற்றை உருவாக்கவில்லை. மேலும், முஹம்மதுவிடம் கடவுள் பேசிய மொழி அரபி, ஆதலால், குரானின் மொழிபெயர்ப்புகள், கடவுளின் அசல் உரைகளுக்கு விளக்க உரைகளாகவே கருதப்படுகின்றன.
 
பைபிளைப் படிக்கிறவர்கள், ஆபிரகாம், மோஸஸ், டேவிட், ஜான் த பாப்டிஸ்ட், ஜீஸஸ் – ஏன், கன்னிமேரி ஆகிய பெயர்களைக் குரானிலும் பார்க்கலாம். ஆனால், இவர்களைப் பற்றிய செய்திகள் பைபிளில் இருப்பதற்கு முற்றிலும் மாறுபட்டவை. குரானில், தேவ தூதர்கள் எல்லோருமே முஸ்லிம்கள், உதாரணமாக, ஆபிரகாம் (இப்ராஹீம்), முதல் முஸ்லிம் ஆகக் கருதப்படுகிறார். ஏனெனில், அவர் தமது தகப்பனாரின் மதத்தை ஏற்காமல் அல்லாஹ்வைச் சரண் அடைந்தார்; அவருடைய பெயரும் பைபிளில் குறிப்படப்படவில்லை. இஸ்லாமிய புனிதத் தலமான மெக்காவில் அவர் காபா கட்டிய குறிப்பும் இல்லை. குரானில் பேசப்படும் மூஸா பைபிளில் வரும் மோஸஸ் போல இருக்கிறார். பெற்றோருக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்பது திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. குரானில் வரும் ஈஸா, பைபிளில் வரும் ஜீஸஸ் போன்றே சித்தரிக்கப்பட்டிருக்கிறார். மெக்காவில் முஹம்மதுவை முதலில் மக்கள் நிராகரித்து அலட்சியம் பண்ணியது போலவே அவரையும் வெறுத்திருக்கிறார்கள். ஆனால், ஏசு கடவுளின் குழந்தை என்ற கிறிஸ்தவர்களின் கூற்றை குரான் ஏற்கவில்லை. சிலுவையில் ஏசு அறையப்பட்டதைக் கூட மேலோட்டமாகத்தான் சொல்லுகிறது. ஆனால், குரானின்படி ஏசுபிரான் மர்மமான முறையில் இறக்கவில்லை.அல்லாஹ் அவரை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்கிறார்!
 
அரசியல் ரீதியாக, மேற்கத்திய நாடுகளில் தற்போதைய நிலை குரானுக்கு எப்படித் தவறாகச் சிலர் அர்த்தம் கற்பிக்கிறார்கள் என்பதுதான். குரான் ஒரு ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றிச் சொல்லுகிறது. ஆனால், சரித்திரத்தைப் பார்த்தால், மதரீதியான அதிகாரத்துக்கும், இஸ்லாமிய அரசுகளுக்கும், தொடர்ந்து போராட்டம் இருந்து வருவது தெரியும். ஒரு காலத்தில் குரானில் அடிப்படையில் நடுவர்கள் தீர்ப்பளித்து வந்தார்கள். இன்றைய இஸ்லாமிய நாடுகளைப் பொறுத்த வரை அதிகாரப்பூர்வமான மதத் தலைமையின் கருத்துக்களுக்கு முழுதுமான மதிப்பும், அங்கீகாரமும் கிடைப்பதில்லை.
 
எல்லா நாடுகளிலும் உள்ள மதவாதிகளைப் போலவே, முஸ்லிம்களும் தமது விதண்டாவதங்களுக்கு எல்லாம் அல்குர்ஆனை ஆதாரம் காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். தங்களுக்குச் சாதகமாக இவற்றைக் கூற ஆரம்பித்து விடுகிறார்கள். உஸாமா பின் லாடன் அவர்களில் ஒருவர் எனக் கூறலாம்.’
 
மேற்கண்ட ‘நியூஸ் வீக்’ இதழின் தவறான கருத்துப் பற்றி அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீனிடம் கல்கி வார இதழ் நிருபர் சித்தார்த் பேட்டி எடுத்தார். இது மத ரீதியான போராட்டம் அல்ல!’பைபிளும் – அல் குர்ஆனும் அடிப்படையில் ஒன்றல்ல என்பதை அவர் ஆணித்தரமாக நிறுவினார்.
 
(‘பைபிளிலும், திருக்குர்ஆனிலும் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களில் அடிப்படையாகவே பல வேறுபாடுகள் உண்டு.
 
  1. கடவுளுக்கு மனைவி, மக்கள் இல்லை. இது இஸ்லாத்தின் அடிப்படை. ஆனால், கிறிஸ்தவம் ஏசுவை கடவுளின் குமாரர் என்கிறது.
  2. கிறித்துவம் பிதா – சுதன் – பரிசுத்த ஆவி என்ற திரித்துவத்தைச் சொல்கிறது.
  3. மனிதன் பாவியாகவே பிறக்கிறான் என்று பைபிள் சொல்கிறது. ஆனால் ஒரு பாவமும் அற்றவனாகப் பிறக்கிறான் என்று இஸ்லாம் சொல்கிறது.
  4. எல்லோருடைய பாவங்களையும் சுமந்து கொள்வதற்காக ஏசு தன்னைத்தானே சிலுவையில் பலியாக்கிக் கொண்டார் என்று கிறித்துவம் சொல்கிறது. ஒருவரது பாவத்தை மற்றவர் சுமக்கவே முடியாது என்று இஸ்லாம் சொல்கிறது.
  5. பாவம் செய்து விட்டால் மதகுருமார்களிடம் ஊழகெநளளழைn செய்வதன் மூலம் பாவ நிவர்த்தி அடையராம் என்று கிறித்துவம் சொல்கிறது. ஆனால், இஸ்லாமோ கடவுளிடம் நேரடியாகப் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்று சொல்கிறது.
சொர்க்கம், நரகம் பற்றி இரண்டு வேதங்களில் பேசப்பட்டாலும், அதை அடைவதற்கான வழிகளில் இரண்டும் வித்தியாசப்படுகின்றன. ஒருவன் செய்யும் நன்மை, தீமைக்கேற்ப, சொர்க்கமா, நரகமா என்பதைக் கடவுள் தீர்மானிப்பார் என்று மிகத் தெளிவாகவே குரானில் சொல்லப்பட்டிருக்கிறது.
 
பைபிளிலும், அல்குர்ஆனிலும் கிட்டத்தட்ட ஒத்த பெயருடைய பலரைப் பற்றிச் செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், அவர்களை அறிமுகப்படுத்தும் விதத்தில் வித்தியாசப்படுகின்றன. உதாரணமாக, தாவீது (அல்குர்ஆனில் தாவூத்) லோத்து (அல்குர்ஆனில் லூத்) ஆகியோரைப் பற்றி பைபிளில் தவறான முறையில் சொல்லப்பட்டிருக்கின்றன. அல்குர்ஆன் இதை மறுக்கிறது.
 
இரு மதங்களுக்கிடையே போராட்டம் என்பது முற்றிலும் தவறாகும். அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு அளிப்பதும், கிறித்துவ மார்க்கத்தைப் பரப்புவதற்காகவோ நிலை நிறுத்துவதற்காகவோ அல்ல. உண்மையில் யூதர்கள்தான் கிறித்தவர்களுக்கு முதல் எதிரி. ஏசுவைக் கொன்றவர்கள் மட்டுமல்ல, அவர் வாழ்ந்த காலத்தில் இழிசொற்களால் ஏசியவர்களும் யூதர்களே! எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டவே இஸ்ரேலை ஊக்கப்படுத்தி, முஸ்லிம் நாடுகளை மிரட்டி வருகிறது அமெரிக்கா. உஸாமா பின் லாடனைப் பிடிப்பதற்காக ஆப்கான் மீது படையெடுத்து அப்பாவிகளைக் கொன்றது கிறித்துவ மார்க்கத்தின் நோக்கமாக இருக்கவே முடியாது. ஆப்கான் மீது தன் ஆதிக்கத்தை நிலை நாட்டவே இந்தப் படையெடுப்பு.
 
திருக்குரானில் இரண்டு விதமான கட்டளைகள் உள்ளன. தனி மனிதர்கள் பின்பற்ற வேண்டியவை, அரசுகள் பின்பற்ற வேண்டியவை என்று இரு வகைகள். துரதிஷ்டவசமாக  குரானில் உள்ள போர் குறித்த கட்டளைகளை, முஸ்லிம் அல்லாதவர்கள் – அதிலும் இஸ்லாத்தை வெறுப்பவர்கள், இஸ்லாத்துக்குத் தவறான வடிவம் தர பயன்படுத்திக் கொள்கிறார்கள். குரானில் ‘வெட்டுங்கள்; கொல்லுங்கள்’ என்ற வசனங்கள் உண்டு. ஆனால், இவற்றைத் தனியாகப் பார்க்கக்கூடாது. இந்த வசனங்களுக்கு முன் உள்ள வசனங்களைப் பார்த்தால் யுத்த களத்தில், செயல்படுத்த வேண்டிய கட்டளைகள் என்பது புரியும் (உதாரணம், இரண்டாவது அத்தியாயம்: 190,191)
 
முஸ்லிம்களிலும் அரைகுறையாகப் புரிந்து கொள்ளும் சிலர் மக்களைத் தூண்டி ஆள் சேர்ப்பதற்காக இத்தகைய வசனங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இரண்டுமே தவறாகும்.
கல்கி (03.03.2002)
 
இதே போல் இஸ்லாத்தின் மீது சேறு பூச முனையும் அசத்தியவாதிகளுக்கு அவர் மறுப்பளிக்கும்போது, அணல் ததும்பும் அந்த வார்த்தைகளில் அவர்கள் கதிகலங்கிப் போவதை அப்படியே அவதானிக்க முடியும். இதற்கு பெண் சல்மான் ருஷ்டிக்கு ஆதரவு அளித்த இந்தியா டுடேக்கு, பெண் சல்மான் ருஷ்டியா? ஒரு உலகளாவிய சதி என்று அவர் பதில் அளித்துத் தீட்டிய ஆசிரியர் தலையங்கம் அல்ல சவுக்கடியை கொஞ்சம் படித்துப் பாருங்கள்.அதில்தான் எத்தனை வேகம்! எத்தனை விவேகம்!
 
‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலம் முதல் இன்று வரை இஸ்லாம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகின்றது! அதைப் பின்பற்றி நடப்போர் அதிகரித்து வருகின்றனர்! சமீப காலமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெகு வேகமாக இஸ்லாம் பரவி வருகின்றது!
 
இந்த வளர்ச்சியினால் பாதிக்கப்பட்ட யூத, கிறிஸ்தவ சக்திகளும் நமது நாட்டிலுள்ள இந்து வெறி சக்திகளும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த சர்வதேச அளவில் திட்டம் தீட்டிச் செயல்பட்டு வருகின்றன.
எப்படியாவது, ‘இஸ்லாம் ஒரு பிற்போக்கான மார்க்கம்’ என்று காட்ட பல முனைகளில் சூழ்ச்சி செய்து வருகின்றன. இந்தியாவிலும் உலக அளவிலும் நடக்கும் நிகழ்ச்சிகள் இதை ஊர்ஜிதம் செய்கின்றன. இஸ்லாமிய சமுதாயம் மிக்க விழிப்புடனிருக்க வேண்டிய நேரமிது!
 
அமேரிக்க அதிபர் கிளின்டன் சல்மான் ருஷ்டி என்ற மஞ்சள் எழுத்தாளனைச் சந்தித்ததை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இந்தச் சந்திப்பை இந்தியாவில் உள்ள செய்தித் தாள்கள் முக்கியத்துவத்துடன் வெளியிட்டதை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.
 
இதைச் சாதாரண சந்திப்பாக அறிவுடையோர் கருத முடியாது. ஏனெனில், உலகின் ஒரே வல்லரசாகச் சமீப காலத்தில் தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்ட நாடு அமேரிக்கா. உலகிலேயே அதிக அதிகாரம் பொருந்திய பதவி அந்நாட்டு அதிபர் பதவி. உள்நாட்டு விவகாரங்களிலும் மூக்கை நுழைக்க வேண்டிய ‘பிஸி’ ‘யான பதவி அது!
 
அயல் நாட்டு மன்னர்களும் அதிபர்களும் அமைச்சர்களும் கூட எளிதில் சந்திக்க முடியாத அமேரிக்க அதிபரைச் சர்வ சாதாரணமாக சல்மான் ருஷ்டி சந்திக்க முடிகின்றது.
 
இவர் ஏதேனும் ஒரு நாட்டின் அதிபரா? மாபெரும் விஞ்ஞானியா? சிறந்த சமூக சேவகரா? மிகப் பெரும் தியாகியா? பெரிய வீரரா? எதுவுமே இல்லை! ஒரு எழுத்தாளன்! அவ்வளவு தான்.
 
எழுத்தாளன் என்றால், தூங்கிக் கொண்டிருக்கும் சமுதாயத்தைத் தட்டி எழுப்பும் புரட்சிகரமான எழுத்தாளரா? அல்லது அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களைத் தட்டி எழுப்பும் துணிச்சல் மிக்க எழுத்தாளரா? போதைப் பொருட்கள், ஒழுக்கக் கேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டி, மக்களை நல்வழிப்படுத்தும் சீர்திருத்த எழுத்தாளரா? தீராத பிரச்சினைகளுக்குத் தீர்வு கூறும் சிந்தனை மிக்க எழுத்தாளரா? மனித நேயம் வளரப் பாடுபடும் மனிதாபிமானமுள்ள எழுத்தாளரா? நிச்சியமாக இல்லை. ஒரு கீழ்த்தரமான மஞ்சள் எழுத்தாளர்!
இழிந்த நடையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றியும் அவர்களின் துணைவியர் பற்றியும் அவதூறுகளை எழுதிய நரகல் நடை எழுத்தாளர்! 

இதைத் தவிர எழுத்துலகில் வேறெந்தச் சாதனையும் செய்ததில்லை. இந்தக் கழிசடையைத்தான் அமேரிக்க அதிபர் சந்திக்கிறார். இந்த செய்தியைத்தான் பத்திரிகைகள் பெரிதாக விளம்பரப்படுத்தின.
 
(இவனது ‘சாத்தானிய வசனங்கள்’ என்ற நூலுக்கு ‘வேதம் ஓதும் சாத்தான்கள்’ என்று நாம் எழுதிய மறுப்பு நூலில் இவனது உளறல்கள் அடையாளம் காட்டியுள்ளோம்.)
 
குறைந்த பட்ச தகுதி கூட இல்லாத இவனை அமேரிக்க அதிபரும் பிரிட்டன் அதிபரும் சந்திக்க நேரம் ஒதுக்குகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? இங்குள்ள பத்திரிகையாளர்கள் இதைப் பெரிதுபடுத்துகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?
முஸ்லிம் பெயர் தாங்கியை வைத்தே இஸ்லாத்தை கொச்சைப்படுத்த முயல்வதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இருக்க முடியாது.
 
மேலை நாடுகளில் கிறித்தவ மதத்தை நார் நாராகப் பலர் கிழித்துள்ளனர். இன்றளவும் கூட கிறித்தவத்துக்குச் சமாதி கட்டிக்கொண்டிருக்கின்றனர். அவர்களை எல்லாம் இந்த அதிபர்கள் சந்தித்ததில்லை. இந்துக்களாகப் பிறந்த தி.க.வினர், கம்யூனிஸ்டு இயக்கத்தவர், பா.ம.க. மற்றும் ம.க.இ.க. ஆகிய கட்சியினர் இந்து அறிவுப்பூர்வமான இந்த விமர்சனங்கள் பற்றி இந்த நாட்டின் செய்தித்தாளகள் என்றேனும் வரவேற்று எழுதியதுண்டா? இல்லவே இல்லை. முற்போக்கும் புரட்சிகரச் சிந்தனையும் தான் ருஷ்டியை முன்னிலைப்படுத்தக் காரணம் என்றால், டாக்டர் சேப்பன், பிரபஞ்சன் போன்றோரை அதே காரணத்துக்காக இந்த மேல் சாதிப் பத்திரிகைகள் முன்னிலைப்படுத்தியதுண்டா?
 
பிற்போக்குத் தனத்தின் மொத்த வடிவமாக அமைந்துள்ள தங்கள் மதத்தை விமர்சிப்பதைக் கண்டு கொள்ளமாட்டார்களாம். பிற்போக்குத் தனத்தைப் புறமுதுகிடச் செய்த இஸ்லாத்தைத் தவறாக எவரேனும் விமர்சனம் செய்தால் அவர் புரட்சியாளராம்!
 
தங்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள் பலர் தங்கள் மதத்தை விமர்சிப்பது போல் இஸ்லாத்தை விமர்சிக்கும் முஸ்லிம் பெயர் தாங்கிகள் கிடைக்க மாட்டார்களா? என்று ஏங்கிக் கொண்டிருந்தவர்கள், இஸ்லாம் தோன்றியது முதல் இன்று வரை இரண்டு கழிசடைகளைத் தான் பெற முடிந்துள்ளது. இந்தப் பதினான்கு நூற்றாண்டுகளில் சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரீன் என்ற இரண்டு அறிவீனர்களைத் தான் அவர்களால் பிடிக்க முடிந்துள்ளது.
 
இந்தியப் பத்திரிகையாளர்களுக்கு இப்போது கிடைத்திருப்பர் தஸ்லிமா நஸ்ரீன்.
‘பெண்களும் புரட்சிகர சிந்தனைகளும் மூலையில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்று கருதப்படுகின்ற ஒரு சமூகத்தில் தன் கருத்துக்களை நெஞ்சு நிமிர்த்திச் சொல்லி அசாத்திய துணிச்சலுடன் வாழ்க்கை நடத்துவதற்காகவாவது இந்த எழுத்தாளரை எத்தனை பாராட்டினாலும் தகும்’ என்று உச்சியில் ஏற்றுகிறது இந்தியா டுடே, ஏனைய பத்திரிகைகளும் கூட இதே போக்கைத் தான் கடைப்பிடிக்கின்றன.
 
இந்தியா டுடேயில் இவரைப் பற்றிய கட்டுரையில் கூறப்படுவதன் அடிப்படையிலேயே இந்தியப் பத்திரிகையாளர்களை நாம் அடையாளம் காண முடியும்.
 
‘பெண்கள் வித்தியாசமாக நடத்தப்படுவதை என்னுடைய ஒன்பதாவது வயதில் முதல் முறையாக உணர்ந்தேன். எனக்கு பத்து வயதாகும் போதே இனி மேல் வெளியே போகக்கூடாது என்று சொல்லி விட்டார்கள். ஆனால், என் இரண்டு சகோதரர்களுக்குத் தடையில்லை என்கிறார்.’ (இந்தியாடுடே – 93, டிசம்பர் 6       -         20)
 
இவள் இஸ்லாத்தை வெறுத்ததற்கு கூறிய காரணத்தை இந்தியாடுடேயும் ஒப்புக் கொண்டு வெளியிட்டுள்ளது. இந்தியாடுடே இன்னொரு இடத்தில் கூறுவதைப் பாருங்கள்!
 
-மூன்று வருடங்களுக்கு முன்பு டாக்கா மெடிக்கல் காலேஜில் அனஸ்தீஸியாலஜிஸ்டாக இருந்த நஸ்ரீனால் நோயாளிகளுக்குச் சிகிச்சை தரவும் முடியவில்லை-
 
இந்த இரண்டுக்குமிடையில் உள்ள முரண்பாடு இந்தியாடுடேயின் முற்போக்குக்(?) கண்களுக்குத் தெரிய நியாயமில்லை. ஒன்பது வயதிலேயே வெளியே செல்ல விடாமல் தடுக்கப்பட்ட இவள் எப்படி ஆங்கில மருத்துவம் கற்று டாக்கா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணிபுரிந்தாள்? இவள் கூறுவது பச்சைப்பொய் என்பதை இந்தியாடுடே உணரவில்லை. ஒருவேளை காளிதாசனுக்கும் ஞான சம்பந்தனுக்கும் ஞானம்(?) பொங்கியது போல் தஸ்லீமா நஸ்ரீனுக்கும் மருத்துவ அறிவு பொங்கியதாக நினைத்து விட்டது போலும்!
 
இவள் எத்தகைய வேஷக்காரி என்பதற்கும் பொய்யிலேயே ஊறிப்போனவள் என்பதற்கும் இதைவிட வேறு சான்று தேவையில்லை.
 
ஆண் – பெண் உடலுறவு பற்றிப் பச்சையா எழுதக் கூடியவர்கள் இந்த நாட்டிலும் உள்ளனர். பெரும்பாலும் பெண்கள் பெயரில் ஒளிந்து கொண்டு ஆண்களே எழுதி வருகின்றனர். இவர்களையெல்லாம் எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்று இப் பத்திரிகைகள் போற்றியதில்லை.
 
‘ஆண், பெண் செக்ஸுவாலிடி பற்றி வெளிப்படையாக இவர் எழுதியிருக்கிறார். புத்தகங்களின் தலைப்பே இதைப் படம் பிடித்துக்காட்டும்’ என்றும் இந்தியாடுடே கூறி மகிழ்கிறது.
 
ஆபாசமான தலைப்புகளில் ஆண், பெண் உடலுறவு பற்றிப் பச்சையாக எழுதியதில் ஆனந்தப்படுகிறார்கள். இவள் புரட்சிகர எழுத்தாளராம்!
இவள் எவ்வளவு தரங்கெட்டவள் என்பதற்கும் இந்தியாடுடே சாட்சி சொல்லுகிறது.
 
‘இவர் எழுதிய ஒரு கதையில் வெறுத்துப்போன இரண்டு குடும்பத் தலைவிகள் தங்கள் செக்ஸ் வாழ்வைப் பற்றி பேசுவதாக வருகிறது’ என்று இந்தியா டுடே வெளிச்சம் போடுகிறது.
 
உலக வரலாற்றில் எவரும் செய்யாத பெரும் புரட்சி ஒன்றையும் இவள் செய்திருக்கிறாள். மஞ்சள் பத்திரிகையில் பச்சையாகப் பலரும் எழுதி வருகின்றனர். ஆண்களே இந்தக் கேவலமானதைச் செய்து வருகின்றனர்.
தகாத உறவுகளை நியாயப் படுத்துவோர் உள்ளனர். ஓரினப் புணர்ச்சிக்கு வக்காலத்து வாங்குவோர் உள்ளனர். இந்தக் கீழ்த்தர எழுத்து வியாபாரிகள் கூட ‘ஆண்களே! நீங்கள் கண்ட பெண்களைக் கற்பழியுங்கள்’ என்று எழுதியதில்லை. அவர்களே எழுதத் துணியாத’  புரட்சிகரமான(?) இந்த யோசனையைக் காம வெறி கொண்ட இவள் எழுதியிருக்கிறாள்.
 
‘ஒருதரம் ஆண்களைப் பலாத்காரம் செய்ய ஆரம்பிக்கும் படி பெண்களைத் தூண்டினார்’ என்றும் இந்தியா டுடே பெருமிதப்படுகிறது.
 
தகாத உறவு கூட, இருவரும் விரும்பியதால் நடப்பதாகத் தான் மஞ்சள் பத்திரிகையாளர்கள் எழுதி வந்தனர். இவளோ ஆண்களைப் பலாத்காரம் செய்யும்படி ஏவுகிறாள்.
 
இந்த மேல் சாதிப் பத்திரிகையாளர்களை நாம் கேட்கிறோம். சொரணை இருக்குமானால் நேரடியாக இதற்குப் பதில் கூறட்டும்!
 
இவளது இது போன்ற எழுத்துக்கள் புரட்சி என்றால் உங்கள் குடும்பத்துப் பெண்கள் இவள் எழுதியது போல் எழுதவும் இவளைப் போல் நடக்கவும் உற்சாகமூட்டுவீர்களா? அனுமதியாவது கொடுப்பீர்களா? குறைந்த பட்சம் கண்டு கொள்ளாமலாவது இருப்பீர்களா? இதைப் புரட்சி என்று கூறும் நீங்கள் இந்தப் புரட்சிக்கு உங்கள் குடும்பத்துப் பெண்களைத் தயார்படுத்துவீர்களா? மாட்டீர்கள் என்றால் இவளுக்கு எந்த முகத்துடன் வக்காலத்து வாங்குகிறீர்கள்?
 
பெண்கள் கிடக்கட்டும்! ஆண்களாகிய நீங்கள் உங்கள் பத்திரிகையில் இந்தப் புரட்சியை ஆரம்பித்து வைப்பீர்களா? ஒரு பெண் பலருடன் நடத்திய செக்ஸ் வாழ்க்கையை எழுதினால் பிரசுரிப்பீர்களா? கண்ட இடங்களில் ஆண்களைப் பெண்களும் பெண்களை ஆண்களும் பலாத்காரம் செய்யுமாறு அறிவுரை கூறுவீர்களா? அவ்வாறு செய்து விட்டு இவளை ஆதரித்தால் அதில் உள்ள நியாயத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியும்.
 
‘இவையெல்லாம் மனித நாகரீகத்துக்கு அப்பாற்பட்டவை! மனித அறிவை மழுங்கடிக்கக் கூடியவை! இவ்வாறு எழுதுவது கேவலமான பிழைப்பு என்று நீங்கள் கருதினால், இவளை ஆதரிப்பதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் நீங்கள் வெட்கப்பட வேண்டாமா?
 
இவளது காமவெறிப் போக்குக்கு மற்றுமொரு சான்றையும் இந்தியா டுடே தருகின்றது.
 
பொதுவாக பத்திரிகையாளர்கள் பரந்த மனப்பான்மையுடயவர்கள். கவிஞர்கள் அதை விடவும் பரந்த மனப்பான்மை உடையவர்கள் என்று கருதப்படுகின்றனர். முனைவியை இவர்கள் அடக்கியாள மாட்டார்கள்; அவளுக்குப் போதிய சுதந்திரம் வழங்குவார்கள் என்றெல்லாம் நம்பப்படுகிறது.
‘கடந்த பத்து வருடங்களில் அடுத்தடுத்து மூன்று முறை திருமண வாழ்க்கை தோல்வி அடைந்ததால், ஆண்கள் பற்றி இப்படி ஒரு அணுகுமுறை அவருக்குள் உருவாகியிருக்கலாம். ஒரு கவிஞருடனும் இரண்டு பத்திரிகையாளர்களுடனும் வாழ்ந்து பார்த்தவர் இவர் என்று இந்தியா டுடே கூறுகிறது.
 
ஒரு தடவை திருமண ஒப்பந்தம் முறியலாம்! இரண்டு தடவi முறியலாம். பத்தாண்டுகளில் மூன்று திருமணம் செய்து உறவை முறித்துக்கொண்டால்’ நாகரித்தை விரும்புகின்ற பத்திரிகையாளர்கள், கவிஞர்களுடன் கூட இவளால் வாழ்க்கை நடத்த முடியவில்லை என்றால் கோளாறு எங்கே என்பதை யாரும் அறியலாம்.
 
‘நான் ஆவேசமும் நம்பிக்கையும் அடிக்கடி மாறும் மனநிலை கொண்டவள்’ என்று அவளே கூறியதாக இந்தியா டுடே குறிப்பிடுகின்றது.
 
இது புரட்சியா? அல்லது பைத்தியமா? இத்தகைய தடுமாற்றத்துக்கும் அடிக்கடி தன்னை மாற்றிக் கொள்வதற்கும் பெயர்தான் புரட்சி என்று நீங்கள் கருதினால் இந்த நாட்டின் அரசியல் வாதிகளுக்குப் பட்டுக் கம்பளம் விரியுங்கள்! அடிக்கடி நிலைமாறும் அரசியல்வாதிகளைச் சந்தர்ப்பவாதிகள் என்று விமர்சிக்கும் நீங்கள் இவளை மட்டும் புரட்சிக்காரி என்பது ஏன்?
 
மனநிலை சரியில்லாதவள், துணிந்து பொய் சொல்பவள், காம வெறி பிடித்து அலைபவள், இளைஞர்களின் மனதைக் கெடுப்பவள் என்றெல்லாம் தெரிந்திருந்தும் இவளை நீங்கள் ஆதரிப்பதன் காரணத்தைச் சொல்ல மாட்டீர்கள். நீங்கள் சொல்லாவிட்டாலும் எங்களுக்கு நன்றாகத் தெரியும்.
 
அவள் இஸ்லாத்தை விமர்சித்து விட்டாள் என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை. அவள் பைத்தியக் காரியானாலும் அவள் கூறுவது பச்சைப் பொய் என்றாலும் வெறி பிடித்து அலைபவள் என்றாலும் இஸ்லாத்தை அவள் குறை கூறி இருக்கும் போது அவளைப் பாராட்டாமல் உங்களால் இருக்க முடியாது.
 
‘மதம், பெண்களை எப்படி போகப் பொருளாக நடத்துகின்றது என்று நீரூபிக்க குரானில் உள்ள வாசகங்களை மேற்கோள் காட்டி
விளாசித்தள்ளியிருந்தார் நஸ்ரீன்.’ இது இந்தியா டுடேயின் வாசகம்.
எவ்வளவுதான் மறைத்தாலும் இவர்களின் உள்நோக்கம் இப்போது தெளிவாகத் தெரிந்து விட்டது. பயன்படுத்தியிருக்கும் வார்த்தையைக் கவனித்தீர்களா? 

எழுதினார்; குறிப்பிட்டார் என்று கூட எழுதவில்லை. ‘விளாசித் தள்ளினார்’ என்று மகிழ்ச்சித் துள்ளலுடன் தேர்வு செய்து இந்த வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளது இந்தியா டுடே. காமவெறி பிடித்த பைத்தியக் காரியைக் கூட புரட்சியாளராகச் சித்திரிக்கக் காரணம் இதுதான்.
 
இந்தியப் பத்திரிகையாளர்களுக்கு மீண்டும் சொல்கிறோம். எழுதுவதை எழுதிவிட்டு, பிறகு பல்டி அடித்து மன்னிப்புக் கேட்டு தடுமாறக் கூடிய சல்மான் ருஷ்டி போன்ற கோழைகளையும், மனநிலை சரியில்லாத கேவலமான தஸ்லீமா நஸ்ரீனையும் தான் உங்கள் வலையில் சிக்க வைக்க முடியும். ஒழுங்கான ஒரு முஸ்லிமைக் கூட உங்களால் பிடிக்க முடியாது.
அப்படி என்ன விளாசித் தள்ளிவிட்டார் என்பதை விளக்கமாகக் கூறினால், நாமும் கொஞ்சம் விளாசித் தள்ளலாம். அதை இந்தியா டுடே குறிப்பிடவில்லை.
 
‘நீங்கள் அவர்களுக்கு ஆடை அவர்கள் உங்களுக்கு ஆடை’ என்று ஆண் – பெண் சமத்துவத்தைக் குர்ஆன் கூறுகிறதே அதை விளாசினாரா?
 
‘ஆண்களுக்கு இருப்பது போன்ற உரிமைகளும் கடமைகளும் பெண்களுக்கும் உள்ளன’ எனக் குர்ஆன் கூறுகிறதே அதை விளாசினாரா?
 
ஆண்களாயினும் பெண்களாயினும் சட்டத்தின் முன் சமம் என்று இஸ்லாம் கூறுகிறதே அதை விளாசினாரா?
 
அவள் விளாசித் தள்ளியது எது என்று இந்தியா டுடே தெளிவுபடுத்தினால் பதிலளிக்க நாம் தயாராக இருக்கிறோம்.
 
இவளுக்கு எங்கிருந்தெல்லாம் ஆதரவு கிடைக்கின்றது என்று பாருங்கள்!
 
‘அலேன்கின்ஸ்பெர்க், குந்தர்கிராஸ், ஜான் இர்விங், நார்மன்மெய்லர், ஆழிடான் போன்ற சர்வதேச எழுத்தாளர்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்து மரண தண்டனை விதித்ததைக் கண்டித்திருக்கிறார்கள். சக தோழர் சல்மான் ருஷ்டியும் தான்’ என்று இந்தியா டுடே கூறுகிறது!
 
இதில் ஆச்சரியப்பட ஏதுவுமில்லை. இவளுக்காக நாளை  வெள்ளை மாளிகையின் கதவுகள் கூட திறக்கப்படலாம்! பிரிட்டிஷ் மகாராணியும் போப்பாண்டவரும் கூட இவளைக் கட்டி அணைக்கலாம்? ஆயினும் இஸ்லாத்தை இழிவுபடுத்தும் இவர்களின் திட்டம் ஒருக்காலும் வெற்றி பெறப்போவதில்லை.
 
இவளது தகாத நடத்தைக்கும் போக்குக்கும் எதிராக பங்களாதேஷ் மக்கள் திரண்டெழுந்திருப்பதைப் பிற்போக்கு என்று வர்ணிக்கும் இந்தியப் பத்திரிகையாளர்களுக்கு நாம் சிலவற்றை நினைவு படுத்துகிறோம்.
 
பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளர் சுஜாதா ஒரு தொடர்கதையைக் குமுதத்தில் எழுதினார். (‘இரத்தம் ஒரே நிறம்’ என்று நினைவு) அத்தொடர் கதையில் நாடார் சமூகத்தைப் பற்றி அவர் பயன்படுத்திய வார்த்தைக்காக அந்த சமூகமே கொதித்தெழுந்தது. குமுதம் இதழ்கள் சாலை நடுவே எரிக்கப்பட்டன. உடனடியாக அத்தொடரை குமுதம் நிறுத்தியது. இது போன்றுதான் கி. ராஜ நாராயணன் விஸ்வகர்ம சமுதாயத்தைப் பற்றி எழுதிய போதும் எதிர்ப்பு வந்தது. அவர் மன்னிப்புக் கேட்டார்.
 
எந்த சமூகம் பற்றியும் தவறாக எழுதுவதை அந்தச் சமூகம் சகித்துக் கொள்வதில்லை. இது மனித இயல்பு. இதை உணர்ந்து குமுதமும் நடந்து கொண்டது. எழுதியவர்களும் நடந்து கொண்டனர். புரட்சி வசனம் பேசிக் கொண்டிருக்கவில்லை. புரட்சியாக எழுதக் கூடியவர்களும் கூட அதற்குரிய இலக்கணத்துடன் எழுத வேண்டும்.
 
சினிமா டைரக்டரான பாலசந்தர் தனது சமூகமான பிராமண சமுதாயப் பெண்ணைப் பற்றி ‘அரங்கேற்றம்’ சினிமா எடுத்த போது, இப்பத்திரிகைகள் கொதித்ததை நாம் மறக்கவில்லை. சமீபத்தில் உ.பி.யில் ‘ஸஹமத்’ அமைப்பு நடத்திய நிகழ்ச்சியின் சுவரொட்டியில் ராமனின் தங்கை சீதை என்று குறிப்பிட்டிருந்ததைக் காரணம் காட்டி நாடாளு மன்றத்தையும் நாட்டையும் ரகளையால் திணறச் செய்தார்களே! ஒரு ராமாயணத்தின் அடிப்படையில் ஆதாரத்தோடு வெளியிடப்பட்ட செய்திக்கே இத்தனை காலாட்டா செய்தார்களே! ஸஹமத்தைக் கண்டித்து வேண்டாத வேலையிலீடுபடுவதாகத் தலையங்கம் எழுதினார்களே! சுஜாதாவுக்கெதிராகவும் கி.ராஜநாராயணனுக்கெதிராகவும் ஸஹமத்துக்கெதிராகவும் போராடியது மட்டும் முற்போக்காம். பங்களாதேஷ் மக்களது நடத்தை பிற்போக்காம். இதுதான் இந்தியப் பத்திரிகைகளின் ‘பத்ரிகா தர்மம்.’
 
இந்தியப் பத்திரிகையாளர்களின் ஒரு தலைப்பட்சமான போக்குக்கு இன்னொரு சான்றையும் கூட நாம் குறிப்பிட முடியும்.
 
ஹைதராபாத் சிறுமிகள் இருவரை இரண்டு அரபிகள் திருமணம் செய்ததை இந்தப் பத்திரிகைகள் பரபரப்பான செய்தியாக்கின. பெண்ணின் விருப்பமின்றி நடைபெறும் திருமணத்தை இஸ்லாம் அங்கீகரிக்க மறுப்பதால் நாமும் அதனைக் கண்டிக்கின்றோம்.
 
நாள் தோறும் தலைப்புச் செய்தியாக்கி நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்து ஆட்டம் போட்டார்களே அது நல்ல நோக்கத்தில் செய்தது தானா? உண்மையிலேயே பொருந்தாத திருமணத்தை எதிர்ப்பதென்றால் இது போல் நடக்கும் அனைத்துத் திருமணங்களையும் அவர்கள் எதிர்க்க வேண்டுமல்லவா?
 
N.T. ராமாராவ் அடுத்தவரின் மனைவியை திருமணம் செய்தது சரிதானா? அப்பெண்ணின் கணவர் புகார் செய்த பின்னரும் கூட இதை அவ்வளவு பெரிய விடயமாக இந்தியப் பத்திரிகைகள் எடுத்துக் கொள்ளவில்லையே அது ஏன்? 

ஒரு சாமியார் திடீரெனக் காணாமல் போகப் பலவிதமான வதந்திகள் வந்தனவே அது பற்றிப் பாராளுமன்றத்தில் எவரும் வாய் திறக்கவில்லையே? பத்திரிகைகள் கண்டு கொள்ளவில்லையே அது ஏன்?
 
எந்தச் செய்தியாவது இஸ்லாத்தை மாசுபடுத்த உதவும் என்றால் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தப் பயன்படும் என்றால் இவர்கள் அதைப் பெரிய விசயமாக ஆக்குவது என்று செய்து விட்டார்கள். சர்வதேச அளவில் இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பதை சமுதாயம் கண்டுகொள்ள வேண்டும்.’)
 
பீஜே அல் ஜன்னத் பத்திரிகை ஆசிரியராக இருக்கும்போது,அது ஒரு மந்தி இதழாக வெளி வந்து கொண்டிருந்தது.பல ஆயிரம் வாசகர்களை ஏகத்துக் கொள்கையின் நிழலில் கொண்டுவந்து சேர்த்தது.இன்று அது முடவன் கையில் வசை பாடும் ஏடாக முடங்கிக் கிடக்கிறது வேதனையளிக்கிறது.
 
பல பத்திரிகைகள் இஸ்லாமிய ஒழுக்க நியமங்களை துச்சமாக மதித்து எழுதவும், இறைத் தூதரின் புனிதமான ஆளுமைகளுக்கு மாசு கற்பிக்கவும் துணிந்த போது, பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற உலமாக்கள் எந்த மறுப்பும் அளிக்காமல் உறங்கிக் கொண்டிருந்தனர்.
 
ஆனால், பீஜே அவர்கள் இஸ்லாத்திற்கு எதிரான இவ்வாறான சவால்களை எதிர் கொள்ள, துணிந்து அறை கூவல் விடுத்ததையும் அவற்றை முறியடிக்க தன் பேனாவை வலிமையாகப் பயன்படுத்தியதையும் அவரது எழுத்துகளிலிருந்தே புரிந்து கொள்ள முடிகிறது.
 
இதேபோல் சல்மான் ருஷ்டி இஸ்லாத்தை விமர்சித்து எழுதிய போது, அவனது உளரல்கள் நிறைந்த ‘சாத்தானியக் கவிதை’ நூலின் அபத்தங்களுக்கு தமிழ் உலகில் ஆணித்தரமான பதில் அறிஞர் பீஜே அவர்களால் அளிக்கப்பட்டது. அது வேதம் ஓதும் சாத்தான்கள் என்ற தலைப்பில் இலங்கையில் அன்ஸாருஸ் சுன்னாவினரால் கூட வெளியிடப்பட்டது. இதை வாசிக்க விரும்புவோர் தற்போது ஆன்லைன்பீஜேயில் முழமையாக வாசித்துக் கொள்ளலாம். ‘சாத்தானியக் கவிதை’கள் பற்றி மாற்று மதத்தினர் எழுப்பிய கேள்விகளுக்கு இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியில் ஆரம்ப காலங்களிலேயே பதில் அளித்துள்ளார்.
 
பீஜே அவர்கள் அல் ஜன்னத் பத்திரிகை ஆசிரியராக இருக்கும்போது, அவர் தீட்டிய கட்டுரைகள் இலங்கையிலுள்ள பாமர,படித்த மக்கள் தொடக்கம் பல்கலைக்கழக மாணவர்களையும் ஈர்த்து நின்றது. இந்த வகையில், இலங்கைத் தவ்ஹீத் எழுச்சியில் பீஜேவுடைய பங்களிப்பு தனியாக மதிப்பீடு செய்யப்படவேண்டியது. இது பற்றிய சில குறிப்புக்களை ஆன்லைன்பீஜேயில் விமர்சனங்கள் என்ற பகுதியில் அண்மையில் வெளியிடப்பட்ட இலங்கையில் தவ்ஹீத்  அமைப்புகளின் பிரிவினைக்கு யார் காரணம்? என்ற கட்டுரையில் பெற்றுக்கொள்ளலாம்.

இஸ்லாமிய சிந்தனையின் நவீனத்துவப் பிரமாணங்களைக் கற்றறிந்து விளக்குவதிலும், நவீன இஸ்லாமிய ஆய்வறிவு மரபிலும், அதன் தாக்கத்தை மதிப்பீடு செய்வதிலும் பீஜே ஆற்றும் வகிபங்கு, தென்னிந்தியா, இலங்கை தமிழ் மொழி பேசும் மக்களின் சிந்தனை மரபிலும் பரந்த தமிழ் கூறும் நல்லுலகிலும் பாரிய செல்வாக்குச் செலுத்திவருகிறது. அவரது தஃவா அனைத்துத் துறைகளையும் தழுவி நிற்கிறது. அவர் அண்மையில் (06-12-2009) அன்று சேப்பாக்கத்தில் பாபர் மஸ்ஜித் இடிப்பும் சூழ்ச்சியும் என்ற தலைப்பில் ஆற்றிய உரை ஒரு மிகப் பெரிய வரலாற்று ஆய்வாளனுக்குரிய மிடுக்கை வெளிக்காட்டுமுகமாக இருந்தது. ராமரா? பாபரா? என்று அவர் சில வருடங்களுக்கு முன்னர் ஆற்றிய உரையில் இந்திய வரலாற்றாசிரியர்கள் மற்றும் லிபரான் போன்றோர் கால் மடித்து அமர்ந்து கேட்டுத் தெளிவு பெற வேண்டிய விடயங்கள் நிறையவே உள்ளன.

தனித் தன்மையுடைய இவ்வாறான அவரின் ஒட்டுமொத்தப் பணியின் விளைவுகளையும் தாக்கத்தையும் எதிர்கால வரலாறே முழுமையாக மதிப்பீடு செய்யும். சமகால நமது மதிப்பீடுகளைவிட அது வலுவானதாக இருக்கும்.  ஏனெனில், அவரது சிந்தனைகள் சமகால தாக்கங்களைவிட எதிர்காலத்தில் விரிந்த வாசிப்பைப் பெறும். பல கோணங்களில் அவரது பணிகள் பற்றிய ஆய்வுகள் மலரும்.அப்போது, தாக்கங்கள் இன்னும் வலுவாகும்.

வரலாறு இன்னும் வளரும் இன்ஷா அல்லாஹ்…

Thursday, July 7, 2011

அறிஞர் பீ.ஜெ. அவர்களின் வரலாறு, தொடர் - 2

அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் - பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்
தொடர்-2
எம்.ஏ.ஹபீழ் ஸலபி,இலங்கை.

முதல் தொடரை அவரது பொருளாதாரம் பற்றிய தகவலோடு நிறைவு செய்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக அவரது பொருளாதாரம் பற்றிய இன்னும் சில செய்திகளை இதில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.

ஏனெனில், சவூதி அரேபியாவில் பீ.ஜேவுடைய நூல்களுக்குத்  தடை விதிப்பதற்காக சில காழ்ப்புணர்வு கொண்டவர்கள் படாத பாடுப்டடார்கள். ஆயிரம் கொடுங் கரங்கள் ஒன்று சேர்ந்தாலும் சூரியனின் செங்கதிர்களை மறைத்து விட முடியாது. அதேபோல் சத்தியத்தையும் மறைக்க முடியாது என்பது இவர்களின் முயற்சி தோல்வியடைந்ததிலிருந்து தெரியவருகிறது.
பீ.ஜேவுடைய நூல்களை வெளிட சவூதியில் எந்தத் தடையும் இல்லை.பல நூல்கள் பலமுறை பலவாயிரம் பிரதிகள் வெளியிடப்பட்டுள்ளன.அவற்றைப் படத்தோடு பின்னர் குறிப்பிடுவோம்.

அண்மையில் திருமறையின் தோற்றுவாய் என்று நூல் மட்டும் 35000 பிரதிகள், ரியாதிலுள்ள ரப்வா ஜாலியாத் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான ராயல்டியை வெளிடும் நிறுவனங்கள் வழங்கத் தயாராக உள்ளன.ஆனால்,பீஜே அதை வாங்கத் தயாராக இல்லை.

சில மாதங்களுக்கு முன்னர் ஓர் அரபி இருபது ஆயிரம் ரியால் தருவதாகக் கூறினார்.நான் அண்மையில் தமிழ் நாடு சென்றிருந்த போது, பீஜேவிடம் அவரது அலுவலகத்தில் வைத்துக் கேட்டபோது, அப்பணத்தை வாங்க மறுத்துவிட்டார்கள்.இந்த நூற்றாண்டில் பணத்திற்கு ஆசைப்படாத ஓர் அறிஞரை சந்தித்த மனமகிழ்ச்சி அப்போது எனக்கு ஏற்பட்டது.வாடகை வீட்டில் வாழும் இவ்வளவு ஏழ்மை நிலையில் இருக்கும் போது கூட சுய மரியாதையுடன் அவர் வாழ்வதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அனைத்துச் செல்வத்தையும் விட தன்மானத்தையே அவர் மிகப் பெரிய செல்வமாகக் கருதுகின்றார் என்பதே இதற்குக் காரணம்.

இருபதாயிரம் ரியால்களை வாங்குவதற்கு பீஜே மறுத்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட அரபியும் ஆச்சரியப்பட்டார்.எனவே,அவர் பீஜேவடைய ஒரு நூலை வெளியிடுமாறு பத்தாயிரம் ரியால்களை வழங்கினார். மாமனிதர் என்ற நூல் அப்பணத்தில் நஸீம் ஜாலியாத் அணுசரனையுடன் வெளிடப்பட்டது.
இதுதான் அந்த நூல்

எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் நுலை வெளிட அனுமதித்த அறிஞர் பீஜே அவர்களுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக.

அவரது நூல்கள் பற்றி ஆய்வு செய்யும் போது, மாமனிதர் என்ற நூலின் சிறப்புத்தன்மை பற்றி விரிவாக விபரிப்பேன் இன்ஷா அல்லாஹ்;.
சவூதி அரேபியாவில் பீஜே நுழைவதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.அவர் வருவதற்கான வாய்ப்புகள் திறந்துதான் உள்ளன.ஒரு தடவை சவூதி அரசாங்கமே அவரை கவ்ரவ விருந்தினராக அழைத்தது. அப்போது கும்பகோண இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை மாநாட்டால் அதை ஏற்க முடியவில்லை.

அதேவேளை, அவர் இங்கு வந்துதான் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.அவர் இங்கு வராமலேயே தொலைக்காட்சி,இணையம்,குருந்தகடுகள்,நுல்கள்,உணர்வு,ஏகத்துவம் என்பன மூலம் அவர் எப்பவோ இங்கு நுழைந்துவிட்டார்.

சவூதி அரேபியாவில் பீ.ஜேவுடைய நூல்களுக்குத்  தடை என்று அவதூறு பரப்புவோருக்கும் தடை விதிக்க முயற்சி செய்தோருக்கும் பீஜே அவர்கள் தக்க பதிலை அளித்திருந்தார்கள்.அதில் அவரது பொருளாதார விடயம் பற்றிய சில குறிப்புகள் உள்ளதால் மேலதிக விளக்கத்திற்காக அதை இங்கு தருகின்றேன்.
(சவூதி அரேபியாவிலும் இன்னபிற  அரபு நாடுகளிலும்
பீ.ஜேவுடைய நூல்களுக்குத்  தடை
பீஜேயின்  திருக்குர்ஆன் தமிழாக்கத்துக்கு தடை!
சவூதி அரேபியாவில் பீ.ஜே. நுழையத்  தடை!
சவூதி உலமாக்கள் விவாதத்துக்கு  அழைத்த போது பீ.ஜே பின் வாங்கி விட்டார்!
என்றெல்லாம் சில மதனிகளும் பணத்துக்காகவே தவ்ஹீதைச் சொல்லும் போலி உலமாக்களும் மக்கள் மத்தியில் திட்டமிட்ட ஒரு பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர்.

இது குறித்து பல்வேறு சகோதரர்கள் விளக்கம் கேட்கும்போது, தக்க விளக்கம் அளித்து வந்த போதும் அனைத்து  மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் பகிரங்கப்படுத்தவில்லை. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தேய்ந்து போன ரிகார்ட் போல் இதையே பயங்கரமான ஒரு செய்தியாகச் சொல்லிக் கொண்டு திரிகின்றது இந்தக் கும்பல்.
இது குறித்து விரிவாக எழுதும் அவசியத்தை  ஏற்படுத்தி விட்டனர்.
அரபு  நாடுகள் தான் அத்தாரிட்டியா?

இவர்கள் கூறுவது போல் எனது நூல்களை  அரபு நாடுகளில் தடை செய்து விட்டதாகவே வைத்துக் கொள்வோம். அரபு நாடுகளில் நுழைவதற்கு எனக்குத் தடை போட்டு விட்டதாகவே வைத்துக் கொள்வோம். இதன் காரணமாக  எனது கருத்துக்கள் தவறு என்பது நிரூபணமாகி விடுமா?

அவர்கள் தான் மார்க்கத்தின் அத்தாரிட்டியா? நான் சொல்லும் கருத்துக்கள் குர்ஆன் ஹதீஸுக்கு முரண்பட்டு இருப்பதாகவோ,  தவறானதாகவோ உள்ளது என்று தக்க ஆதாரத்துடன் நிரூபித்தால் தான் எனது கருத்துக்கள் தவறு என்று ஆகும் என்ற அடிப்படை அறிவு கூட இவர்களுக்கு இல்லை. நமது கருத்துக்களை எதிர் கொள்ள அவர்களிடம் சரக்கு இல்லாததால் இதுவே இவர்களுக்கு பெரிய ஆதாரமாகத் தெறிகிறது.

சத்தியத்தைச்  சரியாக எடுத்துச் சொல்லும் யாராக இருந்தாலும் இது  போன்ற அடக்குமுறைகளை எதிர்  கொள்ளத் தயாராகவே இருக்க வேண்டும் என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டு தான் நாங்கள்  களத்தில் இறங்கி இருக்கிறோம்.
இவர்கள் ஆசைப்படுவது போல், சவூதி  என்ன  ஒட்டுமொத்தமாக உலகமே திரண்டு தடை போட்டாலும் நமது பயணம் நின்று விடாது. இக்கொள்கையை நம்பியவர்களின் மன உறுதியை எந்த வகையிலும் இது குலைக்காது என்பதைத் திட்டவட்டமாக நான் அறிவித்துக் கொள்கிறேன்.

கூலிக்கு தவ்ஹீத் பேசும் இந்தக் கும்பல் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இது எப்போது  என்னைப் பாதிக்கும்? சவூதியிலோ, மற்ற அரபு நாடுகளிலோ நான் ஊதியம் பெற்று, அதற்காகவே தவ்ஹீதைச் சொன்னால் அந்த நாடுகளின் கோபப் பார்வை என்னைப் பாதிக்கும்.

எந்த  ஒரு கால கட்டத்திலும் நான் எந்த அரபு நாட்டு அரசிடமிருந்தோ, அல்லது நிறுவனங்களிடமிருந்தோ பணமோ,  பொருளோ,  அன்பளிப்போ பெற்றதில்லை. சில நேரங்களில் அரபு நாடுகளில் பணி புரிவோர் இலவசமாக வழங்கப்படும் கிதாப்களை வாங்கி அனுப்பும் போது, பெற்றுக் கொண்டதைத் தவிர வேறு எதனையும் நான் பெற்றுக் கொண்டதில்லை.

ஜாக்  அமைப்பில் பணியாற்றிய அந்த சமயத்தில் மதனிகள் அல்லாத கஷ்டப்படும் உலமாக்களின்  சிரமத்தைக் கருத்தில் கொண்டு கமாலுத்தீன் மதனீ அவர்கள்  மதனிகளாக இல்லாத சில தாயிகளுக்கு  சிறிய அளவிலான உதவித் தொகை கிடைக்க ஏற்பாடு செய்தார். ஆனால் எந்த நிறுவனத்திடமிருந்தும்  நான் எதையும் பெற விரும்பவில்லை என்று மறுத்து விட்டேன். எந்தக் கால கட்டத்திலும் இதில் நான் சபலப்பட்டதே இல்லை. அப்படி இருக்கும் போது இவர்கள் ஆசைப்படுவது போன்ற தடைகள் வந்தால் அது என்னை எள் முனையளவும் பாதிக்கப் போவது இல்லை.

என்னுடைய  நூல்கள் பலவற்றை சவூதியில்  வெளியிட ஜாலியாத் மூலம் அனுமதி கேட்ட போது, நான் அனுமதியளித்துள்ளேன்.

சில மதனிகள்  நூல்கள் எழுதி அதை இலவசமாக  வெளியிடப் போகிறோம் என்று  கூறி உதவி அளிக்கும் நிறுவனத்துக்கு தவறான தகவல் தந்து லட்சங்களைக்  கறப்பார்கள். ஒரு நூல் வெளியிட்டு பெரிய சொத்து வாங்கியவரை நான் அறிவேன்.

எனது  நூல்களை வெளியிட அனுமதி கேட்கும் போது, அதற்கான ராயல்டி  இவ்வளவு வேண்டும் என்றால்  அதைத் தருவதில் சவுதி  நிறுவனங்களுக்கு எந்தத் தயக்கமும் இருக்காது. அப்படி இருந்தும் எவ்வித பிரதிபலனும்  எதிர்பாராமல் இலவசமாக் வெளியிட  அனுமதித்தேன். இந்த அனுமதிக்காக  மற்றவர்கள் அடைகின்ற ஆதாயமும் எனக்கு இல்லை. இலவசமாக அவர்கள் வெளியிடும் போது அந்த நூலின் விற்பனை பெரிதும் பாதிக்கப்படும். ஏற்கனவே நான் அச்சிட்டு வைத்திருந்த நூல்கள் தேங்கும் என்ற வகையிலும் எனக்கு இழப்பு ஏற்படும்.

செய்திகள் மக்களைச் சென்றடைந்தால்  சரி என்று தான் நினைத்தேனே தவிர, சவூதி அரபு நாட்டுப் பணத்துக்குப் பல்லிளிக்கவில்லை.
அவ்வாறு பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. (இது பின்னர் விளக்கப்பட்டுள்ளது)

செய்திகள் மக்களைச் சென்றடைவதற்கு  நமது சிரமம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதால் தான் நான் அனுமதியளித்தேன்.
இதை சுயதம்பட்டம் அடிப்பதற்காக குறிப்பிடவில்லை. அரபு நாடுகள் தடை வித்தித்தால் அதனால் எனக்கு எந்த நட்டமும் இல்லை என்பதற்காகவும்,  சவூதி அரசு மூலம் வெளியிடப்படும் எனது இலவச நூல்களை காண்பவர்கள் பீஜேக்கு இதன் மூலம் பெருந்தொகை கிடைத்திருக்கும் என்று யாரும் சொல்லி விடக் கூடாது என்பதற்காகவும் இதைக் குறிப்பிடுகிறேன்.
தடை பூச்சாண்டி ஏன்?
இந்தத்  தடை பூச்சாண்டி ஏன் என்றால்  அதற்கும் காரணம் உண்டு. அரபு நாடுகள் சென்ற தமிழ்  கூறும்  முஸ்லிம் சகோதரர்கள் அங்கே சென்றதும் அல்லாஹ்வின்  அருளால் தவ்ஹீத்வாதியாக மாறி வருகிறார்கள். தங்களால் இயன்ற தஃவா பணிகளையும் சுயநல நோக்கமின்றி செய்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

சவூதியில் உள்ள ஜாலியாத்கள் எனும்  தஃவா சென்டர்களில் முக்கிய  மொழிகளுக்கு அம்மொழி மேசும் பிரச்சாரகர்களை நியமித்திருக்கிறார்கள். அது போல் தமிழ் மொழி பேசும் முஸ்லிமகள் மத்தியிலும் முஸ்லிமல்லாத மக்களிடமும் தூய இஸ்லாத்தைச் சொல்கிறோம் என்ற பெயரில் சம்பளம் வாங்கும் இவர்களில் பலர் அந்தப் பணியைச் செய்வதில்லை. இவர்களின் உப்புக்குச் சப்பாக நடத்தப்படும் பிரச்சாரக் கூட்டங்களுக்கும்  மக்கள் செல்வதில்லை. நம்மைக் காட்டிப் பணம் கறக்கிரார்கள் என்று மக்கள் நம்புவதால் இவர்கள் நடத்தும் சன்மார்க்க(?) விளக்கக் கூட்டத்தை மக்கள் அங்கீகரிப்பதில்லை.

அதே சமயம்  தவ்ஹீத் சகோதரர்கள் தமிழ்  மொழியில் மட்டும் மார்க்கத்தை  அறிந்த சிலர் மூலம் நடத்தும் பிரச்சார நிகழ்ச்சிகளில் பெருமளவு பங்கெடுப்பார்கள். படியளக்கும் எஜமானர்களுக்கு இது தெரிந்தால் இவர்கள் தூங்கி வழிவது தெரிந்து விடும்.

இதைத் தடுக்க வேண்டுமானால் என்ன செய்யலாம்? சன்மார்க்கக் கூட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் உலமாக்களை குறிப்பாக என்னை வசைபாடுவது. என் மீது வெறுப்பை விதைத்தால் தவ்ஹீத் ஜமாஅத் நிகழ்ச்சிக்கு மக்கள் போக மாட்டர்கள் என்று தங்கள் பிரச்சாரப் பாணியை அமைத்துக் கொண்டார்கள். பாவம்! இவர்கள் மார்க்கம் பேசாமல் தனி நபர் தாக்குதல் நடத்தியது இன்னும் அவர்களைத் தனிமைப்படுத்தி விட்டது.

அடுத்து என்ன செய்யலாம்?

சவூதியில் சட்டதிட்டங்கள் கடுமையானவை. அங்கே கூட்டமாக கூடி பேசினாலே பிரச்சனையாகிவிடும். பீஜேக்கு தடை என்று மக்களிடம் பரப்பினால், ஆகா! தடை செய்யப்பட்டவர்களின் அமைப்பில் செயல்பட்டால் நமக்குப் பிரச்சனை வருமோ என்று தவ்ஹீத் சகோதரர்களுக்குப் பயம் வருமாம். இதன் காரணமாக தங்கள் செயல்பாடுகளை முடக்கி விடுவார்கள். களத்தில் நிற்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள்,  பயந்து போய் முடங்கி விடுவார்கள். இப்படி கணக்குப் போட்டதன் விளைவு தான் இந்தப் பிரச்சாரம்.
இந்தச்  சகோதரர்களை முடக்கிப் போட்டால் தான் முன்பு போல் இவர்கள்  வாயில் வந்ததையெல்லாம் உளற  முடியும். அவர்களை அச்சுறுத்தி பணிய வைக்கவே  இந்த தரம் கெட்ட பொய்ப் பிரச்சாரம்.

ஆனால், அல்லாஹ்வின் நாட்டமோ  வேறு விதமாக இருந்தது. யார் இப்படி பரப்பினார்களோ அவர்களின் கூடாரம் காலியானது. இந்த இழி செயல் செய்த சில போலி உலமாக்கள் பாலியல் உள்ளிட்ட பல குற்றச் சாட்டுக்காக கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். ஆட் குறைப்பு என்ற பெயரில் சிலர் தூக்கி அடிக்கப்பட்டார்கள். பாக்கவிகளும் அஷ்ரபிகளும் சிறைக் கம்பிக்குப் பின்னால் நின்றார்கள்.

இவர்களின் மதனி செல்வாக்கோ,  அரபு மொழிப் புலைமையோ,  ஜாலியாத் பதவியோ இவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. தவ்ஹீத் தாயியாக களத்தில் நின்ற தாயிகளுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைத்தது.
உணர்வு  ஏட்டில் எழுதப்படும் கட்டுரைகளைப் பற்றி போட்டுக் கொடுத்து, குறிப்பிட்ட சில பக்கங்களுக்கு  கறுப்புச் சாயம் பூசியதையும்,  சில பக்கங்களைக் கிழித்து விட்டு விற்பனை செய்ய வைத்ததையும் தவிர வேறு ஒன்றும் இவர்களால் செய்ய முடியவில்லை. அது கூட மார்க்க அடிப்படையில் செய்த இடையூறு அல்ல. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால், சவூதி பிரமுகருக்கு ரோஜா மாலை தூவுவது போன்ற படம் இடம் பெற்று, அது விமர்சிக்கப்பட்டிருந்தது. தமிழ் மொழியில் உள்ளதை இவர்கள் தான் தணிக்கைக்குச் சொல்லும் நிலையில் இருந்ததால் இதைக் கிழிக்கச் செய்தனர். இது ஒர் உதாரணமே.

மூன்றாவது திட்டம்

சவூதியில் எனக்கோ,  எனது நூலுக்கோ எந்தத் தடையும் இல்லை என்பது அவர்களுக்கே தெரியும். ஆனால், சவூதி அரசின் கவனத்துக்கு பீஜேயைப் பற்றி கொண்டு சென்றால் நிச்சயம் தடை செய்து விடுவார்கள் என்பதால் அதற்கான புகாரையும் தயார் செய்து சவூதியின் தலைமை முஃப்திக்கு அனுப்பினார்கள்.
சவூதியின் தலைமை முஃப்தியும் மூத்த  உலமாக்கள் அமைப்பின் தலைவருமான  அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ்  அவர்களுக்கு எழுதப்பட்ட நான்கு பக்கக் கடிதம் இது  தான்.

1. தம்மாம் ஜாலியாத்தில் பொழுதைப் போக்கும் முகம்மது ஜக்கி முகம்மது (இலங்கைவாசி)

2. தம்மாம் ஜாலியாத்தில் இதே போல் பொழுதைப் போக்கி சம்பளம் வாங்கும் முபாரக் மஸ்வூத் லெப்பை எனும் முபாரக் மதின  (இலங்கைவாசி)

3. இதே வேலை பார்க்கும் முகம்மது நூஹ்

ஆகிய இம்மூவரும் கையெழுத்திட்டு அந்தக் கடிதத்தை எழுதினார்கள்.
அந்தக் கடிதம் இதோ.

இக்கடிதத்தில் இவர்கள் குறிப்பிடும் விஷயம் இது தான்.

தமிழகத்தில் ஜைனுல் ஆபிதீன் என்று ஒருவர் இருக்கிறார். இவர் இலங்கையிலும் இந்தியாவிலும் பிரபலமானவர். முஸ்லிம்களிடமும் முஸ்லிம் அல்லாதவரிடமும் பிரபலமானவர்.

குர்ஆன் சுன்னாவின் பால் அழைப்பதிலும் பித்அத்தை ஒழிப்பதிலும் இவருக்குப் பெரும் பங்கு  உண்டு.

எழுத்து  பேச்சு  விவாதம்  கருத்தரங்கம் என்று பல் துறைகளில் இவருக்கு ஆற்றல் உண்டு. கப்ர் வணங்கிகளுடனும்  காதியானிகளுடனும்  கிறித்தவர்களிடமும் இவர் விவாதங்கள் பல நடத்தியுள்ளார்.

இவரது பேச்சுக்கள் குறுந்தகடுகளாகவும் ஒளிப்பேழைகளாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன. பாமர மக்கள் மத்தியில் இவருக்குப் பெரிய வரவேற்பு உள்ளது.

இவர்  திருக்குர்ஆனைத் தமிழாக்கம் செய்துள்ளார். சில வசனங்களுக்கு விளக்கக் குறிப்புகளும்  கொடுத்துள்ளார். இது இரண்டு முறை புதிப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் சில தவறுகளை நாங்கள்  காண்கிறோம். அவற்றுள் சில

1. அல்லாஹ் மேகத்தில் வருவான் என்பதற்கு அல்லாஹ்வின் தண்டனை வரும் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

2. ஹாரூத் மாரூத் மலக்குகள் அல்ல. ஷைத்தான்கள் என்று எழுதியுள்ளார்.

3. ஸாத் அத்தியாயத்தில் 34 வது வசனத்தில் அவரது சிம்மாசனத்தில் ஒரு முண்டத்தைப் போட்டோம் என்று மொழிபெயர்க்காமல் அவரை ஒரு சடலமாகப் போட்டோம் என்று எழுதியுள்ளார். சுலைமான் நபி ஒரு இரவில் நூறு மனைவியருடன் உடலுறவு கொண்டதாக வரும் ஹதீஸ்களை மறுத்துள்ளார்.

4. ரசூல்  நபி என்பதற்கிடையே எந்த வேறுபாடும் இல்லை என்று எழுதியுள்ளார்.

5. ஆதம்(அலை) அவர்கள் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்று எழுதாமல் ஒரு தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்று எழுதியுள்ளார்.

6. சிஹ்ர் – சூனியம் என்பது கற்பனை என்கிறார்.

7. நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்யப்பட்டதாக புகாரியில் இடம் பெற்ற ஹதீஸை மறுக்கிறார்.

8. நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரணாக இருந்தால் அதை மறுக்க வேண்டும் என்கிறார். இத்தகைய ஹதீஸ்கள் சுமார் 50 உள்ளன எனக் கூறுகிறார்.

9. பத்து தடவை பாலூட்டினால் தான் தாய் பிள்ளை உறவு ஏற்படும் என்று நபிகள் நாயகம் மரணிக்கும் வரை குர்ஆனில் ஒரு வசனம் இருந்தது என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கும் ஹதீஸையும் இவர் மறுக்கிறார்.

10. ஸாலிம் என்ற இளைஞருக்கு பாலூட்டு அவர் உன் பிள்ளையாகி விடுவார் என்று ஹுதைபா (ரலி) அவர்களின் மனைவியிடம் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக வரும் ஹதீஸையும் இவர் மறுக்கிறார்.

11. முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்பது சூனியக்காரர்களைக் குறிக்காது. ஷைத்தானையே குறிக்கும் என்று எழுதியுள்ளார்.

12. பெண்கள் முகத்தை மறைக்க எந்த ஆதாரமும் இல்லை என்கிறார். இதனால் ஒழுக்கக் கேடுகள் தான் ஏற்படும் என்கிறார்.

13. குர்ஆனை எடுத்து எழுதிய நபித் தோழர்கள் சில எழுத்துப் பிழைகளை விட்டுள்ளனர். அது அப்படியே உள்ளது எனக் கூறி சில ஆதாரங்களையும் கூறுகிறார்.

14. குர்ஆனின் ஓரத்தில் ஸஜ்தா என்றும் மற்றும் சில வார்த்தைகளும் பின்னால் எழுதப்பட்ட பித்அத் என்று கூறி இவ்வாறு செய்தவர்களைக் கண்டிக்கிறார்.

15. நிச்சயமாக என்பதை அறவே தவிர்த்து விட்டார்.

இவரது திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் நாங்கள் கண்ட தவறுகள் இவை. இவை தவிர அவரது உரைகளிலும்  நூல்களிலும் இன்னும் பல தவறுகளைச் செய்துள்ளார். உதாரணத்துக்காக சில. இவை மட்டுமல்லாமல் இன்னும் உள்ளன.

1. இறைவன் முதல் வானத்திற்கு இறங்குகிறான் என்பதற்கு நேரடிப் பொருள் செய்யவில்லை.

2. இஜ்மாவையும்  கியாஸையும் அறவே மறுக்கிறார்.

3. சலபிக் கொள்கையை மறுத்து கிண்டல் செய்கிறார். அவர்கள் தக்லீது செய்பவர்கள் என்கிறார்.

4. மனித உடலுக்குள் ஜின்கள் நுழைவதையும் இவர் மறுக்கிறார்.

5. நபிகள் நாயகம் (ஸல்) மரணித்த பின் அவர்களை யாரும் கனவில் காண முடியாது என்கிறார்.

6. பலவீனமான ஹதீஸ்கள் துணைச் சான்றுகள் மூலம் சரியான ஹதீஸ் என்ற நிலைக்கு உயரும் என்பதையும் மறுக்கிறார்.

7. தாடியைக் கத்தரிக்க எந்த அளவும் நிர்ணயிக்கப்படவில்லை என்கிறார்.

8. ஆடைகளைத் தரையில் இழுபடும்படி தொங்க விடுவதால் தவறல்ல என்கிறார்.

9. ஒரு பொருளுக்கு ஒரு தடவை தான் ஜகாத் என்கிறார். ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் இல்லை என்கிறார்.

10. ஜும்ஆவுக்கு முன் சுன்னத் உண்டு என்கிறார்.

11. குழந்தையாக இருந்த போது நபிகள் நாயகத்தின் இதயம் பிளக்கப்பட்டதை மறுக்கிறார். அது குர்ஆனுக்கு முரண் என்கிறார்.

இவரது இத்தகைய தவறுகளை நேருக்கு நேராகவும் எழுத்து வடிவிலும்  சகோதர தாயிகள் அவருக்குச் சுட்டிக் காட்டிய பின்னரும் தன் நிலையில் நீடிக்கிறார். எதிர் கருத்துச் சொல்பவர்களை விவாதத்துக்கு, அல்லது முபாஹலாவுக்கு அழைக்கிறார்.

இவருக்கு  இருக்கும் பேச்சாற்றல்  காரணமாக இவர் கூறுவதை பாமர மக்கள் நம்புகின்றனர்.

அதனடிப்படையில்  தங்களிடம் இது குறித்து சில விளக்கங்களை எதிர் பார்க்கிறோம்.

1. இவருடன் நாங்கள் எப்படி நடந்து கொள்வது?

2. குர்ஆன் ஹதீஸ் பக்கம் மக்களை அழைப்பதற்காக இவர் பாடுபடுவதாலும்  பித்அத்களை ஒழிக்கப் பாடுபடுவதாலும் இவரைப் பற்றி மக்கள் மத்தியில் பேசக் கூடாது. அது தான் சமுதாயத்துக்கு நன்மை என்று சலபி உலமாக்கள் சிலர் கூறுகின்றனர். இது சரியா?

3. எவ்விதத் தவறும் இல்லாமல் மன்னர் பஹத் செலவில் ஒரு தமிழாக்கம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இவரது தமிழாக்கத்தை விற்பதும் வாங்குவதும் கூடுமா? அவரது தமிழாக்கம் ரகசியமாக சவூதி அரேபியாவில் விற்கப்படுகிறது.

இது பற்றி தங்களின் மேலான விளக்கத்தை எதிர்பார்க்கிறோம்.

இது தான் மேற்படி மதனிமார்கள் எழுதிய புகார் பட்டியல்.

கடிதத்தில்  பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் கொஞ்சம் வஞ்சப் புகழ்ச்சியுடன் எழுதப்பட்டதைக் கண்டு இவர்களை நாகரிகமாக  விமர்சித்தவர்கள் என்று  யாரும் எண்ணிவிடக் கூடாது. மக்களிடம் இவர்கள் செய்யும் விமர்சனம் எவ்வளவு தரம் கெட்டதாக இருந்தது என்பதை நாம் அறிவோம்.

நமது  கொள்கைச் சகோதரர்கள் பற்றி  உளவுத் துறையில் போட்டுக் கொடுத்து இழி செயல் புரிந்தனர் என்பதும் தம்மாமில் பிரசித்தம்.

தவ்ஹீத் பிரச்சாரம் தான் தமுமுகவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை எனக் கூறி  தர்கா விழாக்களுக்கு வாழ்த்து வழங்கிய தமுமுகவின் கொள்கை இவர்களுக்குத் தடையாக இல்லை.

சில அறியாத சகோதரர்கள் தமுமுக தேவை என்று  நினைக்கிறார்கள். சமுதாயத்துக்குக் குரல் கொடுப்பார்கள் என்று  அவர்கள் நம்புவதால் இப்படி நினைக்கிறார்கள். அந்தக் காரணமும் இவர்களுக்கு இல்லை. இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இலங்கையில் தமுமுக இவர்களுக்கு உதவாது. தம்மாமிலும் உதவ முடியாது. அப்படி இருந்தும் தம்மாம் தமுமுகவுடன் இவர்கள் கை கோர்க்க முடிகிறது. தமுமுக நடத்தும் தொலைக் காட்சி நிகழ்ச்சியில் முகம் காட்ட முடிகிறது. சவூதியில் ஹிஸ்ப் எனப்படும் அரசியல் அமைப்புகளுக்குத் தடை என்ற போதும் இவர்களுடன் கூடிக் குலாவ முடிகிறது.

ஜமாஅதே  இஸ்லாமி,  தப்லீக் , விடியல் ஆகிய இயக்கங்களின் கொள்கைகளும் சவூதியின் கொள்கைக்கும் இவர்கள் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கும் முரணானவை. இவர்களும் இரகசியமாகச் செயல்பட்டுக் கொண்டு தான் உள்ளனர். ஆனால், இவர்களுக்கு எதிராக எந்தப் புகாரையும் இவர்கள் அளித்ததில்லை.

சவூதியில் எதையும் தீர விசாரிப்பார்கள்  என்பதால் தான் தரக் குறைவாக  எதையாவது எழுதினால் மாட்டிக் கொள்வோம் என்று இப்படி ஒரு  புகார் அனுப்பினார்கள்.

இவர்கள் அனுப்பிய புகாருக்குப் பின்னர்  சவூதி அரசு எடுத்த நடவடிக்கை  என்ன? இவர்கள் ஆசைப்பட்டது போல் எந்தத் தடையும் போடவில்லை.
மாறாக புகார் அனுப்பியவர்கள் வழியாக எனக்கு இரண்டு மடல்களை அனுப்பி  என்னிடம் சேர்ப்பிக்கும் படியும்  இந்தப் புகார் கடிதத்தையும் பீ.ஜே.வுக்கு அனுப்ப வேண்டும் என்றும் புகார் எழுதியவர்களுக்கு சவூதி அரசு உத்தரவிட்டது.

இதன்  பின்னர் புகார் அனுப்பியவர்களில் ஒருவரான முபாரக் மதனி என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சவூதி அரசு உங்களுக்கு சில  தகவல்களைத் தெரிவிக்க பணித்துள்ளது. உங்கள் பேக்ஸ் நம்பர் வேண்டும் என்று கேட்டார். யாருக்கும் தெரியாமல் அவர் எழுதிய புகார் கடிதத்தை அவர் வழியாகவே எனக்கு அல்லாஹ் கிடைக்கச் செய்தான்.

இவர்கள் கொள்கைவாதிகள் என்றால்  நாங்கள் தடை செய்ய வேண்டும் புகார் கொடுத்தவருக்கு அரசு மரியாதையா? என்று கேட்டு வேலையை உதறி இருக்க வேன்டும்.

(முபாரக் மதனிக் கூட்டம்  எழுதிய புகார் கடிதத்தை  சவூதி அரசு அவரிடமே பீஜேவுக்கு அனுப்பச் சொன்னதால் ஆத்திரமடைந்த முபாரக் மதனி அதை அனுப்பிவிட்டு, ஒட்டக மூளையுள்ள மோட்டு முப்தி இதை பீஜேவுக்குத் தெரியப்படுத்திவிட்டார் என்று புலம்பினார்.)

இத்துடன்  சவூதி அரசின் சார்பில் என்னிடம் சேர்ப்பிக்கச் சொன்ன கடிதங்கள்  இது தான்.

தலைமை முப்தீ அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் தம்மாம் ஜாலியாத் முதீருக்கு எழுதுவது  அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜைனுல்  ஆபிதீன் என்பவர் செய்த  திருக்குர்ஆன் தமிழாக்கம் பற்றி உங்கள் ஜாலியாத் தாயிகள்  புகார் தெரிவித்துள்ளனர். அதில் பல தவறுகள் உள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து அழகிய முறையில் ஜைனுல் ஆபிதீனுடன் கலந்துரையாடல் நடத்த ஆர்வம் கொண்டுள்ளோம். இவ்வாண்டு (ஹிஜ்ரி 1426) ராபிதா அல் ஆலமுல் இஸ்லாமி மூலம் ஹஜ் கடமையை நிறைவேற்ற அழைப்பு விடுக்கிறோம். துல்ஹஜ் பிறை 1 முதல் ஹஜ் முடியும் வரை நமது விருந்தினராக அவரை அழைக்கும் அழைப்பிதழையும் இணைத்துள்ளோம். எனவே, இந்த அழைப்பிதழை அந்தப் பெரியவரிடம் விரைந்து சேர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

என்பது முதல்  கடிதம்.

அடுத்த கடிதம் எனக்கு எழுதப்பட்டதாகும்.

பெறுநர்: பேராசிரியர் ஜைனுல் ஆபிதீன்
இந்தியாவின் பிரச்சார தாயி.

உங்கள்  மீது ஸலாம் உண்டாகட்டும். இவ்வாண்டு ஹஜ்ஜுக்கு உங்களை அழைக்கிறோம். அதற்கான அனுமதி எண் ……

உங்களை  உபசரிக்கும் செலவு எங்களுடையது. பயணச் செலவு உங்களுடையது.

ஜனவரி 1  2006 முதல் ஜனவரி 16  2006 வரை விருந்தினராக இருப்பீர்கள்.

இஹ்ராம் நிய்யத்துடன் பிரவேசிக்க வேண்டும்.

சவூதி வருகை பற்றி ஒரு வாரம் முன்பு பேக்ஸ் மூலம் தெரிவிக்கவும்.

நீங்கள் ஒருவர் மட்டுமே வரலாம்.

இப்படி இரண்டாம் கடிதம் கூறுகிறது-

ஹஜ் அழைப்பில்  ஹஜ் கிரியை முடியும் வரை  இஹ்ராமுடன் தங்கவே அழைப்பு  இருந்தது. விவாதித்தல் பற்றி  எந்த விபரமும் காணப்படவில்லை. முப்தி அவர்களின் கட்டளையை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா என்பது தெரியவில்லை.

ஹஜ் முடிந்த  பின் எங்கே விவாதிப்பது  அதற்கான கால அளவு எதுவுமே இதில் காணப்படவில்லை.

சாதாரண  நட்பு முறையில் பேசவே அவர்கள்  விரும்பியுள்ளனர் என்பது இதிலிருந்து  தெரிகிறது. இந்த மதனிகள்  சுட்டிக் காட்டிய விஷயங்கள் புதுமையானது அல்ல என்பதால் கண்ணியப்படுத்துவது தான் இதன் நோக்கமாக இருந்தது.

இல்லாவிட்டால் ஹஜ் இல்லாத காலங்களில் இதற்காக  வரச் சொல்லி அழைப்பு அனுப்பி  இருப்பார்கள். ஹஜ் பரபரப்பில் இதற்காக அழைப்பு அனுப்ப மாட்டார்கள்.

இந்த அழைப்புக்கு  நாம் பதில் அளித்து கடிதம் அனுப்பினோம். அதன்  கடிதம் இதோ.

தமிழக முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதற்கு  எதிராக கும்பகோணத்தில் ஜனவரி  29 அன்று மாநாடு பேரணி நடத்துகிறோம்.
நானே  அமைப்பில் தலைவராக இருப்பதால் இந்தக் கட்டத்தில் என்னால் எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளது என்று பேரணியின் நோக்கம் செயல்பாடு அனைத்தும் விளக்கப்பட்டது.

எனவே,  ஜனவரிக்குப் பின் இரண்டு மாத அவகாசத்தில் தாங்கள்  வசதிப்படும் எந்த நாளில் என்னை அழைத்தாலும் எனது சொந்தச் செலவில் வந்து மதனிமார்கள் கூறிய புகார்கள் குறித்து நட்பு முறையில் கலந்துரையாடல் நடத்தத் தயாராக இருக்கிறேன் என்று பதில் போட்டேன்.

அந்தப் பதிலை  முபாரக் மதனி அக்கடிதத்தில்  குறிப்பிட்ட அத்தனை பேக்ஸ் எண்ணுக்கும் அனுப்பினேன்.

ஜித்தாவின்  ஷிப்லி அவர்கள் மூலம் நேரடியாகவே ஜித்தாவில் உள்ள தலைமை அலுவலகத்திலும் சேர்ப்பித்தேன்.

ஆண்டுகள்  பலவாகியும் அவர்களிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை.
இதிலிருந்து ஹஜ்ஜுக்கு விருந்தாளியாக  அழைத்து கௌரவப்படுத்தவே விரும்பியுள்ளார்கள், விவாதிப்பதற்கு அல்ல என்பது உறுதியானது.
இவர்களின் புகார் பைஸா பெறுமானமில்லாதது என்பது சவூதி அரசின் நடவடிக்கையில் இருந்து தெரிகிறது.

ரகசியமாக  குர்ஆன் தமிழாக்கம் விற்பனை  செய்யப்படுகிறது என்று  இவர்கள் போட்டுக் கொடுத்தும் எந்த ரெய்டும் நடத்தப்படவில்லை. பொதுவாக பிரச்சாரம் தொடர்பாக எத்தகைய கடும் நடவடிக்கையை  சவூதி எடுக்குமோ அவற்றில் ஒன்றைக் கூட எடுக்கவில்லை.

இது தான் நடந்த உண்மை. இது மட்டுமல்லாமல்  என்னைப் பற்றி இவர்கள்  எழுதிய புகார்களில் எதை  இவர்கள் குறையாக சுட்டிக் காட்டினார்களோ, அவை அனைத்தும்  அவர்களிடம் என்னைப் பற்றி  உயர்வான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியது.

இதனால் தான் இது தான் பைபிள் என்ற நூலை இலவசமாக ஜாலியாத்கள் வெளியிட்டன.

இது போல் இயேசு இறைமகனா  என்ற நூலையும் இலவசமாக வெளியிட்டுள்ளனர்.

அர்த்தமுள்ள இஸ்லாம் என்ற நூலையும் பித்அத் என்ற தலைப்பில்  நான் இலங்கையில் ஆற்றிய உரையையும் புத்தகமாக  வெளியிட்டனர்.

நோன்பு  என்ற எனது நூலையும்

குர்ஆன் கூறும் ஓறிறைக் கொள்கை

திருமறையின் தோற்றுவாய் என்ற நூலையும் வெளியிட்டனர்.

சவூதியில் படித்தவர்களாக இவர்கள் இருந்தும்  எனக்கெதிராக எல்லா வகையான கேடுகளையும் சவூதியில் செய்து முடிக்க எல்லா வாய்ப்புகளையும் இவர்கள் பெற்றிருந்தும் இவர்களின் எந்தத் திட்டமும் பலிக்கவில்லை.

துபை,  கத்தர் போன்ற நாடுகளில் எனக்கு எதிராக செயல்பட்டவரும் இவர்களைப் போன்ற ஒரு மதனி தான். அவர் செய்த தில்லுமுல்லுகள் , திருகு தாளங்கள் என்னென்ன? என்பதை அடுத்த தொடரில் இன்ஷா அல்லாஹ் விளக்குகிறேன்.

பீ.ஜே. கோடி கோடியாக பணம் சேர்த்து விட்டார் என்று புளுகுபவர்களுக்கும்  பதிலளிக்க நண்பர்கள் வற்புறுத்துகின்றனர். பொது வாழ்வில் எனது நேர்மை குறித்து எழுப்பப்படும்  அனைத்துக் கேள்விகளும்  அபத்தமானவை  உண்மைக்கு புறம்பானவை என்பதையும் அடுத்தடுத்து விளக்குவேன் இன்ஷா அல்லாஹ்.

மதனிகளாக  இருந்தும் இவர்களின் தில்லுமுல்லுகளைக்  கண்டு கொதித்துப் போன நல்ல மதனிகளும் உள்ளனர். நம்மால் செய்ய முடியாததை இந்தச் சாமானியர்களாவது செய்கிறார்களே என்று மகிழ்ச்சியடையும் மதனிகளை எனது இந்த விமர்சனம் கட்டுப்படுத்தாது.

வரலாறு இன்னும் வளரும் இன்ஷா அல்லாஹ்…

Wednesday, June 29, 2011

அறிஞர் பீ.ஜெ. அவர்களின் வரலாறு, தொடர் - 1

அறிஞர் பீ.ஜெய்னுல் ஆபிதீன் - பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்
ஆசிரியர்: எம்.ஏ.ஹபீழ் ஸலபி,இலங்கை.



சகோ: ஹபில் ஸலபி அவர்கள் ஒரு சிறந்த பேச்சாளரும்,எழுத்தாளருமாவார்.இவர் இலங்கையில் பிறந்து தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா அரபிக் கல்லூரியில் கல்வி கற்று தற்போது மத்திய கிழக்கில் வசித்து வருகிறார்.இவர் நட்புக்கு இலக்கணம்,சிறுவர்களுக்கான இஸ்லாமிய நன்னெறிக் கதைகள்,இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்.போன்ற காலத்தின் தேவையை பூர்த்தி செய்த புத்தகங்களை எழுதியதின் மூலமாக இஸ்லாமிய எழுத்துலகில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்தவர்.இவர் சகோ: பி.ஜெ அவர்களின் பேச்சுக்களையும் புத்தகங்களாக மாற்றியுள்ளார்.அதில் இஸ்லாத்தின் பார்வையில் ஆபாசம் என்ற புத்தகம் ஆபாசம் என்றால் என்ன?அதை எப்படி புரிய வேண்டும்? எப்படி அனுகவேண்டும்? என்பதைப் பற்றியெல்லாம் மிகத் தெளிவாக விளக்கப் பட்டுள்ளமை பாராட்டத்தக்கதே. (இப்படிக்கு இலங்கை ரஸ்மின்)

இந்த நூற்றாண்டில் தமிழ் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் பன்முக ஆளுமை நிறைந்த  அறிஞர் பீஜேவுடைய வரலாற்று ஆய்வு பற்றிய தொடர் இது. கடல் கடந்த அண்மை நாட்டிலுள்ள ஒருவனால் இம்முயற்சி முழமையான சாத்தியமா என்ற அச்ச உணர்வோடு, எனக்குக் கிட்டிய தகவல்களை மையமாக வைத்து எழுத ஆரம்பிக்கின்றேன். இதில் உங்கள் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. குறிப்புக்கள் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இத்தொடருக்குள் நுழைவதற்கு முன்னர் சில விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். ஏனெனில், நான் அழைப்புப் பத்திரிகை ஆசிரியராக இருக்கும் போது, பல அறிஞர்களைப் பற்றி எழுத ஆசைப்பட்டேன்.எனினும், சிலரைப் பற்றித்தான் எழுத முடிந்தது.
உமர் பின் அப்துல் அஸீஸ்,இமாம் இப்னுத் தைமிய்யா,முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் போன்றோர் பற்றி எழுதினேன். அப்போது எந்த விமர்சினத்தையும் முன்வைக்காத சிலர், அறிஞர் பீஜே பற்றி நான் எழுத முனையும் போது மடடும் என்மீது தக்லீத் சாயம் பூசுவதுண்டு. இது இவர்களின் நுணிப்புல் மேதாவித்தனத்தையும் காழ்ப்புணர்வையும் வெளிக்காட்டுகிறது.


அறிஞர் பீஜே பற்றிய இத்தொடரின் நோக்கம் தக்லீத் பண்ணுவதற்கோ,தனிமனித வழிபாட்டை ஆதரிப்பதற்கோ அல்ல.குறுட்டு தக்லீதைத் தகர்த்து, தனிமனித வழிபாட்டை ஒழிப்பதில் அவரது பணி மகத்தானது. இந்த நுற்றாண்டில் சுதந்திரமாக சிந்திக்கும் ஒரு பெரும் சமூகத்தை அல்குர்ஆன் – சுன்னாவின் நிழலில் உருவாக்கிய அன்னவரின் மகத்தான பணியை மதிப்பீடு செய்வதோடு, தமிழ் உலகில அவர் ஏற்படுத்திய ஏகத்துவப் புரட்சியின் வரலாற்று முக்கியத்துவத்தை எதிர்கால தலைமுறைக்கு ஆவணமாக வழங்க வேண்டும் என்பதுமாகும்.
 

1992ம் ஆண்டு பீஜே அவர்கள் முதல் தடவையாக இலங்கை வந்தார்கள். அப்போது, நான் ஸலபிய்யாக் கலாபீடத்தில் இரண்டாம் வருடத்தில் மாணவனாகக் கற்றுக்கொண்டிருந்தேன்.அவர் எங்களோடு ஸலபிய்யாக் கலாபீட வளாகத்தில் கழித்த நாட்கள் என் நினைவில் இன்றும் பசுமையாக உள்ளது. அதன் பின்னர் அவர் இலங்கை வந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் சந்திக்கத் தவறியதில்லை. 2005ம் ஆண்டு அவர் கலந்து கொண்ட காத்தான்குடி மாநாட்டில் எனக்கும் உரையாற்ற வாய்ப்புக்கிடைத்தது. அண்மையில் இரண்டு தடவைகள் இந்தியா சென்று அவரோடு நீண்ட நேரம் பல விடயங்களைப் பகிர்ந்துகொள்ள முடிந்தது. அதேபோல்,அவரது உரைகள்,எழுத்து,சிந்தனை,பத்வாக்ள் அனைத்தாலும் நான் தாக்கமுற்றிருக்கின்றேன்.அவற்றைத் துணையாகக் கொண்டு இப்பணியைத் தொடங்குகின்றேன்.

ஒவ்வொரு நூற்றாண்டிலும், அந்தக் கால சூழ்நிலை சவால்களை முறியடித்து, சத்திய இஸ்லாத்தை உயிர்ப்பித்து, அதன் போதனைகளைத் தெளிவுபடுத்தி, செயல்திறன்  மிக்க கொள்கைவாதிகளை உருவாக்கி, மக்களை மூட நம்பிக்கையிலிருந்து விடுவித்து, அனாச்சாரங்களிலிருந்தும் அழிவிலிருந்தும் காத்திட, அல்லாஹ் சிலருக்குப் பன்முக ஆளுமை அருளாக வழங்குகின்றான்.

ஒவ்வொரு நூற்றாண்டிலும் மார்க்கத்தை உயிர்ப்பிப்பதற்காக இந்த உம்;மத்திற்கு, ஒரு சீர்த்திருத்தவாதியை அல்லாஹ் அனுப்புகின்றான் என நபி அவர்கள் கூறிய செய்தி ஒன்று அபூதாவூதில் பதிவாகியிருக்கின்றது.
அதேபோல், தெளிவான மார்க்க ஞானம் என்பதும் அல்லாஹ்வின் மிகப்பெரிய அருள். ‘அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகின்றானோ, அவருக்கு மார்க்கத்தில் தெளிவை வழங்குகின்றான்’ (புகாரி)
அல்லாஹ்வின் அருளைப் பெற்றவர்களாளேயே சமூகத்தில் கொள்கை மாற்றங்களை ஏற்படுத்த முடிகிறது. இவர்களால் எத்தகைய கேள்விகளுக்கும் மார்க்கத்தின் மூலாதார நிழலில் பட்டென்று பதில் சொல்ல முடிகிறது.இஸ்லாத்தின் பெயரால் தோன்றும் வழிகேட்டுக் கொள்கைகளுக்கு மறுப்பு அளிக்க முடிகிறது. விவாதிக்க அழைப்புவிடுத்து, அவர்களோடு விவாதித்து, அவர்களின் கொள்கை தவறு என்று நிரூபித்து மக்களுக்குத் தெளிவை வழங்க முடிகிறது. ஏனென்றால், இவை அல்லாஹ்வின் மகத்தான  

அருள்கள்:
மார்க்கத்தில் தெளிவுபெற்ற  சீர்திருத்தவாதிகளின் வரிசையில், எழுச்சிமிக்க அறிவு வெடித்துச் சிதறி, வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் பிரவாகமெடுக்கின்ற நடப்பு நூற்றாண்டின் சீர்திருத்தவாதியாக அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் காணப்படுகின்றார்கள்.
 

எழுத்தாற்றல், பேச்சாற்றல், விவாதத்திறமை, ஆய்வு நுணுக்கம், அரசியல் வியூகம், நவீன விஞ்ஞான அறிவு, பத்திரிகா தர்மம், இதழியல் ஞானம், தலைமைத்துவத் தகைமை போன்ற இன்னோரன்ன பன்முக ஆளுமைப் பண்புகள் அவரிடம் ஒருங்கே ஒன்றிணைந்துள்ளன. இது, வெறும் வீரவணக்கமன்று. அனைவரும் அறிந்து வைத்திருக்கின்ற, அதே வேளை பொறாமையின் காரணமாக சிலாகித்துச் சொல்ல மனம் வராத விடயங்கள்.எனினும், அவரது தஃவா மற்றும் சமுதாயப் பணிகளை மணமங்கொள்ளும் பலரால் ஆங்காங்கே சிலாகிக்கப்பட்டுள்ளது.
 

குறிப்பாக அவரது தஃவாவின் தொடக்கத்திலிருந்து துணை நின்று இன்றுவரை பீஜேவுடைய மகத்தான பணிகளுக்குப் பக்க துணையாக நிற்கும் எஸ்.ஷம்ஷூல் லுஹா அவர் ஏகத்து எழுச்சியில் பீஜேவுடைய பங்களிப்பை மதிப்பீடு செய்துள்ளார்.இன்னொருவர் தனது முதுகலைமாணிப் பட்டத்திற்கு  பீஜேவுடைய வரலாற்றை ஆய்வாக சமர்ப்பித்துள்ளார். நான் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இளமாணிப் பட்டப் படிப்பிற்கு சமர்ப்பிக்கும் ஆய்வுக்கு இத்தலைப்பை பெரிதும் ஆசைப்பட்டேன்.எனினும், அதற்கான வாய்ப்பு அப்போது எனக்குக் கிடைக்கவில்லை.இப்போது அதைவிட விரிவாக எழுதக் கூடிய வாய்ப்பை அல்லாஹ் வழங்கியுள்ளான்.அல்ஹம்துலில்லாஹ்.
 

இஸ்லாமிய தஃவாவிலும், ஆய்விலும், எழுத்துப் பணியிலும், சமூக விடுதலைப் போராட்டத்திலும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இடைவிடாது மகத்தான பங்களிப்பாற்றிவரும், அறிஞர் பி.ஜைனுலாப்தீன் அவர்களின் ஆழமான இஸ்லாமிய அறிவும், விரிந்த, செழுமையான, சீரிய சிந்தனையும், தர்க்கரீதியான, எளிய இனிய உரையும் தமிழ் கூறும் நல்லுலகில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்திவரும் இற்றை நாளில், பல பரிமாணங்களைக் கொண்ட, பல்வேறு துறைசார்ந்த அன்னாரின் பணிகள் பற்றி எழுந்தமானமாக, தரக்குறைவாக காழ்ப்புணர்வைக் கக்குகின்ற சிலருக்கு,உண்மை தெளிவுபடுத்தப்பட வேண்டும். அவர் பற்றிய  உண்மைகளை ஊர்வலமாக்க வேண்டியது உண்மை அறிந்தவர்களின் கடமையுமாகும். அதனால், அவரது பணிகளை மதிப்பீடு செய்யும் பணியை நான் துவக்கிவைக்கின்றேன்.
 

அவர் மீது இன்று பலராலும் பரப்படும் வதந்திகள்,அவதூறுகள் என்பன பத்திரிகைகள்,மீடியாக்கள், மிம்பர் மேடைகள்,குறுந்தகடுகள் என பல்வேறு ஊடகங்கள் மூலம் மக்களை சென்றடைகிறது.இருபக்கங்களையும் பார்ப்பதற்குரிய ஆய்வறிவில்லாத மக்கள் நம்பவும் செய்கின்றனர். எதிர்கால சமூகத்திற்கு இந்த நிலை ஏற்படக் கூடாது என்ற ஆதங்கமும் இதை எழுத என்னைத் தூண்டிய காரணங்களில் ஒன்று.

ஜனனமும் கல்வியும்:
பீர் முஹம்மது, மர்யம் பீவி தம்பதிகளுக்கு மகனாக 1953ம் ஆண்டு, பெப்ரவரி மாதம், பத்தாம் திகதி இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில், எளிமையான குடும்பத்தில் பிறந்த இவர், காலம் சென்ற தனது மூத்த சகோதர் பீ.எஸ்.அலாவுதீன் (மன்பஈ) போன்று, மார்க்கக் கல்வியையே தேர்ந்தெடுத்துக் கற்று, பட்டம் பெற்றார்.
 

இஸ்மாயீல் ஸலபிக்கு மறுப்பு எழுதும் போது, தனது கல்வி பற்றி பீஜே குறிப்பிட்ட சில விடயங்களை இங்கு தருகின்றேன்.
(என்னைப் பற்றியும் என் சகோதரர் பற்றியும் சில விஷயங்களை நான் குறிப்பிட வேண்டும். நானும் என் சகோதரர் பீ ஷைக் அலாவுதீன் என்ற பி.எஸ்.அலாவுதீனும் மதீனாவில் படிக்கவில்லை. உம்ராபாத்திலும் படிக்கவில்லை. மத்ஹப், ஷிர்க், தரீக்கா மற்றும் எல்லா பித்அத்களையும் ஆதரிக்கும் கல்விக் கூடங்களில் தான் பயின்றோம். அது தான் மார்க்கம் என்று போதிக்கப்பட்டோம். படித்து முடித்து வெளி வந்தவுடன் நாங்கள் நண்பர்களாக விவாதித்துக் கொண்டே இருப்போம். அப்போது தான் தர்கா வழிபாடு தவறு என்று எங்களுக்குத் தோன்றியது. இது குறித்து நாங்களே ஆய்வு செய்து, ஆதாரங்களைத் திரட்டி, ஷிர்க்கை மட்டும் எதிர்த்தோம். மத்ஹப், தரீக்கா இன்ன பிற பித்அத்களை அந்தக் கால காட்டத்தில் நாங்கள் எதிர்க்கவில்லை. அவற்றைத் தவறு என்று கூட அறியவில்லை.
தர்காவை எதிர்க்கின்ற அனைவரும் தவ்ஹீத் வாதிகள் என்று கருதியதால் அது போன்ற எல்லா இயக்கங்களிலும் தொடர்பு வைத்தோம். இதனால் தான் 280 நாட்கள் நான் தப்லீக் ஜமாஅத்தில் இந்தியா முழுதும் சென்றேன். 

அதுபோல், என் சகோதரர் ஜமாஅதே இஸ்லாமி,  சிம்  போன்ற இயக்கங்களில் ஈடுபாடு காட்டினார். அந்தக் கால கட்டத்தில் நாங்கள் தப்லீகையும் விரும்பினோம். ஜமாஅதே இஸ்லாமியையும் விரும்பினோம். தர்கா வழிபாட்டை அவர்கள் எதிர்க்கிறார்கள் என்ற ஒரே காரணத்தால்.
இந்தக் கால கட்டத்தில் தான் ஃபீ ழிலாலில் குர்ஆன் என்ற சையித் குதுப் எழுதிய நூலை ஒரு நிறுவனத்துக்காக என் சகோதரர் மொழி பெயர்த்துக் கொடுத்தார்கள். தர்கா வழிபாட்டை சையித் குதுபும் எதிர்த்ததால், அந்த நூலிலும் தர்கா வழிபாட்டுக்கு ஆதரவான கருத்து இல்லாததால் நாங்கள் சரி என்று நம்பிய போது, அது மொழி பெயர்க்கப்பட்டது.
 

குர்ஆன் ஹதீஸில் உள்ள பல விஷயங்களை  தப்லீக் ஜமாஅத்,  ஜமாஅதே இஸ்லாமீ ஆகியவை நிராகரிப்பதையும் மத்ஹபுக்கு வக்காலத்து வாங்கியதையும் படிப்படியாக கண்டு, வெறுத்து ஒதுங்கிய சில மாதங்களில் என் சகோதரர் இளம் வயதில் மரணித்த்து விட்டார்.  இதன் பின் என் சகோதரர் மொழி பெயர்த்த அந்த நூலை சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெற்று பாக்கர் வெளியிட்டார். அது எனக்குத் தெரிய வந்த போது, அது குறித்த விளம்பரத்தை உணர்விலும் வெளியிட மறுத்தேன். அவர் நடத்திய தொலைக் காட்சி நிகழ்ச்சிகளிலும் அந்த விளம்பரத்தைப் போடக் கூடாது என்றேன். எனது மூன் பப்ளிகேஷனில் மட்டுமன்றி, அவரது மீடியா வேல்டிலும் விற்கக் கூடாது என்று கண்டிப்புடன் தடுத்து விட்டேன். தவறான கருத்து அதில் இருக்கும் போது, அதை விற்பது எப்படி ஹலாலாகும்  என்பதே இதன் காரணம். ஆயிரக்கணக்கில் அந்த புத்தகம் பாகரிடம் தேங்கி இருந்தது.)
 

சமூகத்தில் பெரும் மாற்றங்களை நிகழ்திக் காட்டிய பெரிய அறிஞர்களின் வரலாற்றை ஆய்வு செய்யும் போது, ஓர் உண்மையையை நான் உணர்ந்து கொண்டேன்.அவர்கள் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டததைக் கற்று பட்டம் பெறவர்களில்லை.இமாம் இப்னுத்தைமிய்யா,முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப்,அல்பானி போன்ற அறிஞர்கள் குடும்ப சூலழில் கற்று தமது சுய ஆய்வு முயற்சியால் மகத்தான் பணியாற்றியவர்கள்.அந்தப் பின்னணியிலேயே பீஜேவுடைய பணியும் மதிப்பிடப்படவேண்டும்.
பல்கலைக்கழகக் கோட்பாட்டுப் பாடத்திட்டத்திற்குள் சிறைப்பட்ட பலரின் நிலையை நாம் இன்று பார்க்கின்றோம்.அவர்கள் கோட்பாட்டைவிட்டு வெளியே வரமாட்டார்கள்.
 

சத்தியத்திற்கு மாற்றமான பாடத்திட்டத்தைப் போதிக்கின்ற ஓரு மதரசாவில் பீஜே கல்வி கற்றாலும், உண்மையை விளங்கிக் கொண்ட நாள் முதல் சந்தனக் கூடு, முரீது வியாபாரம், வரதட்சணைக் கொடுமை, தரீக்கா, ஷிர்க்-பித்அத், சமூகக் கொடுமைகள், ஆட்சியாளர்களின் அராஜகம் போன்றவைகளைக் கடுமையாக எதிர்த்து வருகின்றார். இதனால், பலமுறை கடுமையான தாக்குதலுக்கும் வெட்டுக்குத்துக்கும் உள்ளாகி, உயிர் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியுள்ளார். பல முறை சிறைவாசமும் அனுபவித்துள்ளார்.

திருமணம்:
1980ஆம் ஆண்டு வரதட்சணை வாங்காமலே திருமணம் செய்தார். வரதட்சணைக் கொடுமை தாண்டவமாடும் ஒரு நாட்டில், வரதட்சணை வாங்காத இவரின் வீரமிக்க இச்செயல், அன்று வினோதமாக நோக்கப்பட்டுக் கொச்சைப்படுத்தப்பட்டது. அதை அவர் கண்டு கொள்ளவில்லை. அதன் விளைவாக பலவாயிரம் இளைஞர்கள் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்யத் துணிவு பெற்றுள்ளனர். அத்தோடு, வரதட்சணைக் கொடுமையை அறியாமல் அப்போது வாங்கிய தொகையை, பகிரங்கமாக திருப்பிக் கொடுக்கின்றனர்.
 

பீஜே அவர்களும் அவரது அண்ணன் அறிஞர் பீ.எஸ். அலாவுத்தீன் மன்பயீ அவர்களும் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்ததற்கு ஒரு வாத்தியாரின் பரிதாபகரமான தற்கொலை முடிவு காரணமாக அமைந்தது. பல பெண் குழந்தைகளையுடைய அவர் தனது பெண் குமருகளை கரை சேர்க்கப் வரதட்சணைப் பணம் இல்லாததால் ஆயுள் காப்புறுதி செய்து விட்டு, லாரியில் மோதி தற்கொலை செய்து கொண்டார். இது தற்கொலை என்பதால் அவரது குடும்பம் குடும்பத் தலைவனையும் இழந்து காப்புறுதிப் பணமும் கிடைக்காமல் தவித்தது. வரதடசணையின் இக்கோர முகம் இவர்களது வாழ்வில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
அப்போது, ஏகத்துவக் கொள்கையில் பெரியளவு தெளிவு கிடைக்காத நேரம். இப்போது, வரட்சணைக்கு எதிரான பிரச்சாரத்தை பீஜே அளவுக்கு யாரும் செய்யவில்லை. அறியாமல் வாங்கிய வரத்சணையை திரும்பக் கொடுக்கும் அளவு பெரும் தாக்கத்தை அவரது பிரச்சாரம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.


பொருளாதார நிலை :
மார்க்கப் பிரசாரப் பணியில் ஈடுபடுகின்றவர்களின் பொருளாதாரம் சரியானதாக இருக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.அதனால்,பீஜேவுடைய பொருளாதார நிலை பற்றி முதலில் இங்கு குறிப்பிடுகின்றேன்.

இன்று மார்க்கப் பிரச்சாரத்திற்காக பலர் அறபு நாடுகளில் சம்பளம் பெற்று, தமது வாழ்வை வழப்படுத்திக் கொள்கின்றனர். இன்றைய உலமாக்களில் பலர் மார்க்கப் பிரசாரம் செய்கிறோம் என்ற பெயரில் வெளிநாடுகளில் ரியால்,தீனார்,திர்ஹம் எப்பவற்றிற்காக தஞ்சமடைந்தவர்களாகவே உள்ளனர். அல்லது வெளிநாட்டுக் காசை நம்பி உள்நாட்டில் மார்க்க வியாபாரம் செய்பவர்கள். யு.ஊ. அறைகளில் இருந்து கொண்டு, ஒன்றிரண்டு பயான்கள் செய்து,உப்புச் சப்பில்லாத கட்டுரை எழுதிக் கொண்டு, பிரசாரம் செய்வதாக சொல்லிக் கொள்பவர்கள்.இத்தகையவர்களில் ஒருவராக இருந்துகொண்டு, தனது எஜமானுக்கு ஜால்ராப் போடும் ஒருவர் பீஜே பொருளாதாரம் பற்றி அண்மையில் கேள்வி எழுப்பினார்.அதற்குப் பீஜே அளித்த பதிலை இங்கு தருகின்றேன்.
 

‘எனது சொத்து,  எனது பொருளாதார நிலை குறித்து பொதுவாக நான் அதிகம் பேசுவதில்லை இது போல் சீண்டும் போது மட்டுமே நான் பேசி இருக்கிறேன். இது குறித்துப் பேசும் போது நான் எதையோ எதிர்பார்ப்பதாக நினைத்து விடுவார்களோ என்று நினைத்து, பேசுவோர் பேசிக் கொள்ளட்டும் என்று இருந்து வருகின்றேன். இப்போது நாம் யுத்த களத்தில் நிற்கும் போது நீங்கள் கேட்பதால் நான் பதில் சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.
 

முதல் எனது சொத்து விபரத்தைத் தந்து விடுகிறேன்.
 

நான் 25 ஆண்டுகளில் சம்பாதித்த எனது மொத்த சொத்தின் மதிப்பு நீங்கள் ஒரு பள்ளிவாச்ல் கட்டுவதற்குக் கமிஷன் அடிக்கிறீர்களே அதை விடக் குறைவு தான். மிகைப்படுத்திச் சொல்லவில்லை. நிஜமாகத் தான் சொல்கிறேன். உள்ளது. இரண்டு கிரவுன்ட் அளவு.
நான் தற்போது சென்னையில் சிறிய வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன்.
 

எனது சொந்த ஊரில் எனது தந்தையிடமிருந்து வாரிசாகக் கிடைத்த ஒரு வீட்டு மனை உள்ளது. இரண்டு செண்டுக்கும் குறைவான சுமார் 800 சதுர அடி அளவுடையது. இது எனது சம்பாத்தியம் அல்ல.
 

எனது குடும்ப நகைகளை விற்று மதுரையில் நான் ஒர் அச்சகம் நடத்தினேன். மிஷினை நானே இயக்குவேன். ஐபண்டிங் செய்வேன். இன்னும் அச்சு சம்மந்தமான அனைத்து வேலைகளையும் நானே செய்து வந்தேன். இதனிடையே தான் தாஃவா பணியையும் செய்து வந்தேன்.
தமுமுக ஆரம்பித்த பின் அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு நான் சென்னையில் இருக்க வேண்டும் என்று நண்பர்கள் வற்புறுத்தியதால் நான் சென்னைக்கு வருவதற்காக அச்சகத்தை விற்றேன். எனது ஊரைச் சேர்ந்த தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள் தம்முடைய ஒரு வீட்டை விற்க இருப்பது தெரிந்ததால் அச்சகத்தை விற்ற பணத்தில் அந்த வீட்டை வாங்கினேன்.
 

எனது பூர்வீக இடத்தில் சொந்த வீடு ஒன்று கட்டினால் நல்லது என்று நான் நினைத்த போது, அதற்கான நிதி என்னிடம் இல்லை. அப்போது நான் வாங்கிய வீடு நல்ல விலைக்குப் போகிறது என்பது தெரிந்ததால் அதை விற்று விட்டு உங்கள் பூர்வீக இடத்தில் வீடு கட்டலாமே என்று ஹைதர் அலி ஆலோசனை கூறினார். அதை விற்று (அப்போது ஐந்து இலட்சம் என்று நினைவு) அதில் தான் எனது பூர்வீக இடத்தில் நான்கு லட்சம் ரூபாயில் ஒரு பெட்ரூம் உள்ள சிறு வீடு கட்டினேன்.
அந்த வெள்ளை மாளிகையைப் பற்றி இலங்கையைச் சேர்ந்த ரஸ்மி (முஜீப் விவாதத்துக்காக தொண்டி வந்திருந்தார்.) அவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம்.
 

(இவரும் இவரது நண்பர்கள் சிலரும் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டாலும், எனது பொருளாதார நிலையை அறிந்து கொள்வதற்காக இரகசிய வருகை தந்தனர். இஸ்மாயீல் ஸலபி வகையறாக்கள் பணம் பண்ணுவதற்காக தவ்ஹீத் பேசுவது போல் பீஜேயும் பேசுகிறாரா என்று ஆராய்வதற்காகவே ஒரு குழுவாக வந்தார்கள். எனக்குத் தெரியாமல் நான் வாடகைக்குக் குடியிருக்கும் சிறிய வீட்டையும் எனக்கு என்று சொந்தமாக எந்தச் சொத்தும் இல்லை என்பதையும் விசாரித்து அதன் பிறகு தான் தவ்ஹீத் ஜமாஅத்தில் தீவிர ஈடுபாட்டுடன் உள்ளனர். பிற்காலத்தில் இதை என்னிடம் அவர்களே சொல்லிக் காட்டினர்.)
 

வீடு கட்டுவதற்குப் போக மீதமுள்ள தொகை ஒர் இலட்சத்துடன் முப்பதாயிரம் சேர்த்து ஒர் இலட்சத்தி முப்பதாயிரம் ரூபாய்க்கு ஹைதர் அலி ஆலோசனையின் பேரில் எனது ஊருக்கு அருகில் ஒரு வயல் வாங்கினேன்.
எனது பூர்வீக வீடும் அந்த வயலும் தான் என்னிடம் உள்ள அசையாச் சொத்துக்கள்.
 

மதுரையில் இருந்த போது, நல்லூர் என்ற கிராமத்தின் அருகில் மிகக் குறைந்த விலைக்கு மணை கிடைக்கிறது என்று சிலர் கூறியதை நம்பி (1990 இருக்கும் என்று நினைக்கிறேன்.) 3000 ரூபாய்க்கு ஒரு மனை வாங்கினேன். மக்கள் குடியேறாத பகுதியில் உள்ள அந்த இடம் இருக்கிறதா? யாரும் ஆக்ரமித்துக் கொண்டார்களா என்பது தெரியவில்லை.
 

என் பெயரிலோ என் மனைவியின் பெயரிலோ எந்த வங்கிக் கணக்கும் இல்லை. வங்கியில் கணக்கு வைத்துக் கொள்ளாதவன் இந்தக் காலத்தில் நானாகத் தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். எனது மூன் பப்ளிகேஷன் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு உள்ளது. அதில் புத்தகங்கள் விற்பது தொடர்பான வரவு செலவு தவிர வேறு எந்த வரவு செலவும் இல்லை. அதை நான் இயக்குகிறேன்.
 

என் மகன் பத்துக்கு பத்து அளவில் சிறிய கடை வைத்துள்ளார். இரண்டாம் மகன் இந்து சகோதரருக்குச் சொந்தமான தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார்.
 

நாங்கள் மூவரும் உழைத்துத் தான் எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறோம். நாங்கள் மூவரும் உழைப்பது சொத்துக்கள் வாங்குவதற்குப் போதுமானது அல்ல. இதைத் தவிர வேறு ஏதாவது சொத்துக்கள் என் பெயரிலோ என் மனைவி பெயரிலோ என் பிள்ளைகள் பெயரிலோ இருந்தால் இஸ்மாயீல் சலபிக்கு நான் இலவசமாக அளிக்கத் தயாராக இருக்கிறேன். அல்லது யாரெல்லாம் இது பற்றி பேசித் திரிகிறாரோ அவர்கள் அனைவருக்குமே இதைக் கூறிக் கொள்கிறேன். அவர்கள் இது தவிர என் பெயரிலோ என் மனைவி மக்கள் பெயரிலோ சொத்துக்கள் இருந்தால் இலவசமாகவே அவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
 

எனக்கு இருக்கும்(?) சொகுசு பங்களாக்கள்,  கார்கள், பண்ணை வீடுகள் அனைத்தையும் இஸ்மாயீல் ஸலபிக்குத் தந்து விடுகிறேன்.
இது போன்ற கிறுக்குத் தனங்களுக்கு ஒரு மனிதன் பதில் சொல்லாமல் இருந்தால் எதை வேண்டுமானாலும் சொல்வீர்களா?
 

நான் மதுரையில் அச்சகம் நடத்திக் கொண்டிருந்த போது, சில இளைஞர்கள் வந்தனர். பத்துப் பேர் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
அவர்கள் வந்த போது, கையால் இயக்கப்படும் கட்டிங் மிஷினில் நான் பேப்பர் கட்டிங் செய்து கொண்டிருந்தேன். வந்தவர்கள் என் காலையே பார்த்தார்கள். என்ன விபரம் என்று கேட்ட போது, நீங்கள் இரண்டாயிரம் ரூபாய் செருப்பு போட்டிருப்பதாகச் சொன்னார்கள். அதைத் தான் பார்க்க வந்தோம் என்று கூறினார்கள். நான் ஹவாய் செருப்பு அணிதிருந்ததையும்  உடலுழைப்பு செய்ததையும் பார்த்து விட்டு அதன் காரணமாக தவ்ஹீதுக்கு வந்தார்கள்.
 

இது போல் நீங்கள் அவதூறு பரப்பியதால் தால் சத்தியம் வளர்ந்து கொண்டிருக்கிறது.
 

இப்படி எல்லாம் சிலர் நினைப்பதற்குக் காரணம் உள்ளது.(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன. (அவர்களைப் பற்றி) அறியாதவர்  (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன். (திருக்குர்ஆன் 2:273)
மூடர்கள் பார்த்தால் செல்வந்தர்கள் என்று நினைக்கும் அளவுக்கு நபித்தோழர்கள் சுயமரியாதையுடன் நடந்ததை அல்லாஹ் புகழ்ந்துரைக்கிறான். அதை இஸ்மாயீல் ஸலபி மூலம் அல்லாஹ் என் விஷயத்திலும் மெய்யாக்கி விட்டான்.
 

அல்ஜன்னத்தில் 2000 சம்பளம் வாங்கிக் கொண்டைருந்தவன் தானே என்று அவர் கூறுவதன் உள் நோக்கம் அனைவருக்கும் தெரிந்ததே  அதாவது மார்க்கப் பணியின் மூலம் நான் பணம் திரட்டினேன் என்று சொல்லாமல் சொல்கிறாராம்.
 

எனவே, இது குறித்தும் நான் விரிவாகச் சொல்லும் நிலையை ஏற்படுத்தி விட்டார்.
 

நான் மதரஸாவில் ஓதிக் கொண்டிருந்த காலத்தில் எனது ஆசிரியர்கள் செல்வந்தர்கள் வீடுகளுக்குச் சென்று வாசலில் காத்துக் கிடப்பதையும்  செல்வந்தர்களைக் கண்டதும் எழுந்து நிற்பதையும்  மலேசியா சென்று கவுரவப் பிச்சை எடுத்ததையும் கண்ட போது, நானும் சுய மரியாதை உள்ள என் சக மாணவர்களும் கூனிக் குறுகி விடுவோம். இந்தப் பணத்தாசை தானே உண்மையைச் சொல்வதை விட்டும் இவர்களைத் தடுக்கிறது என்று பேசிக் கொள்வோம். இவ்வாறு பேசிக் கொண்டவர்களில் முஹம்மது கான் பாக்கவி மட்டும் என் நினைவில் இருக்கிறார். மற்றவர்கள் நினைவில் இல்லை. சின்ன வயசில் நான் அப்போதே சபதம் எடுத்தேன். எந்த நிலையிலும் செல்வந்தர்களிடம் போய் நிற்கக் கூடாது. கூனிக் குறுகக் கூடாது. நமக்காக் எதையும் கேட்கக் கூடாது என்றெல்லாம் தீர்மானம் செய்து கொண்டேன். அல்லாஹ்வின் அருளால் 29 ஆண்டுகள் இந்த சபதத்தில் உறுதியாக இருந்து வருகிறேன்.
 

மிக மிக நெருக்கமான சில நண்பர்களிடம் கடன் வாங்கியதுண்டு. அல்லாஹ்வின் அருளால் இன்று என் உறவினர் தவிர வேறு எவருக்கும் நான் பத்துப் பைஸா கூட கடனாளி இல்லை.
எத்தனையோ தடவை வெளி நாடுகளுக்கு நான் பிரச்சாரத்துக்குச் சென்றுள்ளேன். எனக்கு எந்த அன்பளிப்பும் தரக் கூடாது என்ற நிபந்தனையுடன் தான் சென்று வந்தேன். சில பொருட்களை நான் வாங்கி வந்தேன் என்றால் எனது சொந்தப் பணத்தில் வாங்கியது தான்.
அதனால், பணத்துக்காக சத்தியத்தை மறைக்கும் இஸ்மாயீல் ஸலபீ போன்றவர்களின் செயல் எனக்கு வெறுப்பாகத் தெரிகிறது.
அதனால் தான் நீங்கள் கற்பனை செய்வது போல் நான் சொத்து சேர்க்கவில்லை.
 

அனைத்துச் செல்வத்தையும் விட தன்மானத்தையே நான் பெரிய செல்வமாகக் கருதுகிறேன்.
 

நான் செய்யும் மார்க்கப் பணிக்காகவோ, சமுதாயப் பணிக்காகவோ எந்த ஊதியமோ வேறு ஆதாயமோ அடையக் கூடாது என்பதிலும் நான் உறுதியாக இருக்கின்றேன். மார்க்கத்துக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணிப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பொருளாதாரத்தை வழங்கலாம் என்பதில் எனக்கு மறுப்பு இல்லை. மேற்கண்ட வசனத்திலேயே அதற்கு அனுமதி உள்ளது. இல்லாவிட்டால் தாவா ப்ஃணிகள் அறவே நடைபெறாத நிலை ஏற்படும் என்பதையும் நான் அறிவேன். ஆனாலும், நான் அந்த நிலையை என் விஷயத்தில் தவிர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
 

ஆனாலும், துவக்க காலத்தில் எனக்கு வேறு வழி தெரியாத நிலையில் நஜாத் பத்திரிகையில் ஐஏசி அமைப்பின் மூலம் மாத ஊதியம் (சுமார் ஒருவருடம் இருக்கலாம்) வாங்கினேன். அப்போது கூட அந்த ஊதியம் எனது மார்க்கப் பணிக்காக இருக்கக் கூடாது என்பதற்காகப் பத்திரிகைகளை சந்தாதாரர்களுக்கு அனுப்புதல்,  ஸ்டாம்ப் ஒட்டுதல்,  பார்சல் கட்டுதல்  ப்ரூஃப் திருத்துதல் உள்ளிட்ட பணிகளையும் செய்து வாங்கிய ஊதியத்துக்காக உடல் உழைப்பு செய்தேன்.
 

அடுத்து, அல்ஜன்னத் பத்திரிகையை நான் தான் நடத்தினேன். அதில் நட்டம் ஏற்பட்டதால் நடத்த முடியவில்லை. எனது அச்சகத்தின் வருமானத்தையும் அது சாப்பிடக் கூடிய நிலை ஏற்பட்ட போது, மக்களிடம் நன்கொடை கேட்டால் தருவார்கள் என்று நண்பர்கள் கூறினார்கள்.
 

ஒரு இயக்கம் நன்கொடை கேட்கலாம். தனி நபர் நன்கொடை கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே, ஜாக் இயக்கமே எடுத்துக் கொண்டு மக்களிடம் நன்கொடை பெற்று நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறி ஒப்படைத்து விட்டேன். அது வரை எனது அல்ஜன்னத் அச்சகத்தில் அச்சிட்டு நான் தான் நடத்தி வந்தேன்.
 

இதன் பிறகு தான் அல்ஜன்னத் பத்திரிகை சென்னைக்கு மாறியது. அப்போது தான் 2000 ரூபாய் சம்பளம் வாங்கினேன். அதைத் தான் ஸலபி குறிப்பிடுகிறார்.
 

அந்த உறுத்தலைத் தவிர்பபதற்காக எழுத்துப் பணி அல்லாத வேறு பணிகளையும் நான் செய்தேன். (அது ஒரு தனிக் கதை)
சில காலம் (எவ்வளவு காலம் என்பது நினைவில் இல்லை.) இந்த ஊதியத்தைப் பெற்றாலும் சமுதாயப் பணிகள் செய்ய ஜாக் இயக்கம் முட்டுக்கட்டை போட்டதாலும் ஆசிரியரான எனது எழுத்துச் சுதந்திரத்தைப் பறித்ததாலும் நான் விலகிக் கொண்டேன். சென்னையில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த எனக்கு அந்தச் சம்பளம் வாடகைக்குக் கூட போதுமானதாக இல்லை என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.சென்னை வந்ததும் நூல்கள் எழுதி, தனியார் புத்தக வெளியீட்டாளர்களிடம் கொடுத்து, வெளியிட்டு அதன் மூலம் கிடைக்கும் இலாபம் தான் எனது வருமானமாக இருந்தது. அதன் பின் நானே புத்தகம் வெளியிடலானேன்.
 

எனக்கு இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டு சீரியஸான நிலையில் தமுமுக நிர்வாகிகள் என்னை தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அப்போது, அதற்கு ஐம்பதாயிரம் ரூபாய் செலவானது. அதை உணர்வு இதழில் இருந்து செலுத்தினார்கள். நான் எவ்வளவோ மறுத்தும் கடனாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியும் அவர்கள் மறுத்து விட்டனர். இவ்வளவு காலம் உணர்வு பணியைச் சம்பளம் இல்லாமல் செய்தீர்கள். அதற்கான ஊதியமாக இருக்கட்டும் என்று கூறியதை அப்போது நான் ஏற்றுக் கொண்டேன். தர்மமாக வாங்காமல் உழைப்புக்காக வாங்கினோம் என்ற மனத் திருப்தி ஏற்பட்டது.
 

ஆனால், நூல்கள் வெளியிட ஆரம்பித்த பின் கிட்டத் தட்ட பத்து ஆண்டுகளாக நான் எந்தப் பணிக்கும் எந்த ஊதியத்தையும் பெற்றதில்லை. உணர்வில் கட்டுரை எழுதுதல்,  கேள்வி – பதில் எழுதுதல்,  பிழை திருத்தல், மற்றவர்களின் கட்டுரைகளைத் தணிக்கை செய்தல் ஆகிய அனைத்து வேலைகளையும் நான் செய்து வந்த போதும் இந்தப் பத்து ஆண்டுகளில் எந்த ஊதியமும் பெற்ற்தில்லை. தஃவா சென்டரில் பாடம் நடத்திய போதும் அதற்காக நான் எந்த ஊதியமும் பெற்றதில்லை.
தவ்ஹீத் ஜமாஅத் தலைமைப் பொறுப்பில் எனது முழு நேரத்தையும் செலவிட்ட போதும் அதற்காக ஊதியமோ ஊக்கத் தொகையோ நான் பெற்றதில்லை.
 

நான் பொறுப்பு வகித்த எந்த இயக்கத்திலும் பண வரவு – செலவை நான் கையாள்வதில்லை. சில நெருக்கடியான் நேரத்தில்  கையாள வேண்டிய நிலை ஏற்பட்டால் இன்னொரு நிர்வாகி, அல்லது சில நிர்வாகிகள் துணயுடன் தான் கையாண்டிருக்கிறேன். எந்தக் கடனும் ஜமாஅத்தில் பெற்றதில்லை.
தலைமைப் பொறுப்பின் மூலம் நான் ஆதாயம் அடைந்தவனாக இருந்தால் நான் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகாமல் தொடர முடியும். நான் பொறுப்பில் தொடர்வதைத்தான் மக்களும் விரும்பினார்கள். ஆதாயத்துக்காக பொறுப்பில் உள்ளவன் என்றால் இதை விட்டு விலகிக் கொள்ள மாட்டார்.
ஜாக் தலைமைப் பொறுப்பில் இருந்தும் நானாகத் தான் விலகினேன்.
தமுமுக பொறுப்பில் இருந்தும் நானாகத் தான் விலகினேன்.
தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பில் இருந்தும் நானாகத் தான் விலகினேன்.
இப்போது, அனைத்துப் பொறுப்புக்களிலும் இருந்து விலகியதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் எனது தேவைகளுக்கு ஏற்ப சம்பாதிக்க இந்தப் பொறுப்புக்கள் தடையாக இருப்பதும் முக்கிய காரணமாகும்.
 

தேர்தல் திருவிழாக்கள் வரும் போது, இயக்கத் தலைவர்களுக்கு நல்ல அறுவடை கிடைக்கும். ஆனால், எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் தனியாக எந்த அரசியல் தலைவரையும் சந்தித்தது இல்லை. பல நிர்வாகிகள் அல்லது பல இயக்கத்தினருடன் தான் சந்தித்துள்ளேன். கடந்த தேர்தல் திமுகவை ஆதரித்தோம் இட ஒதுக்கீட்டுக்காக தேர்தல் முடிந்த சில மாதங்களில் முதல்வர் வீடு முற்றுகைப் போராட்டம் அறிவிக்க முடிந்ததற்குக் காரணம், எனக்கோ நான் சார்ந்துள்ள இயக்கத்துக்கோ எந்த ஆதாய எதிர்பார்ப்பும் இல்லாததே காரணம்.
 

ரமலான் மாத தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் விளம்பரம் மூலம் நடத்தப்பட்ட போது, பல இலட்சங்கள் லாபம் கிடைத்தது. உங்கள் உரை தானே ஒளிபரப்பாகிறது. இதை நீங்களே விளம்பரம் பிடித்து நடத்தலாமே என்று பல நண்பர்கள் என் நிலைமை அறிந்து என்னிடம் கூறினார்கள். நான் மறுத்து விட்டேன். அந்த வருவாய் அப்போது தமுமுகவுக்கு பயன்பட்டது. இப்பொது தவ்ஹீத் பணிக்குப் பயன்படுகிறது. இதை நான் நடத்தினால் யாரும் என்னைக் கேள்வி கேட்க முடியாது. ஆனால், இவன் ஆதாயத்துக்குத் தான் பேசிக் கொண்டிருக்கிறான் என்று ஒருவன் நினைத்து, சத்தியத்தை மறுத்து விடக் கூடாது என்பதற்காக இந்த நிலைப்பாட்டை எடுத்தேன்.
மீடியா வேல்டு மூலமும் தொலைக்காட்சி மூலமும் குறுந்தகடுகள் விற்பனை மூலமும் தனி நபர் சம்பாதிக்கிறார். நீங்களே நடத்தலாமே என்று கூறிய போது அதையும் நான் மறுத்து விட்டேன்.
 

என்னால் ஜமாஅத் ஆதாயம் அடையும் வகையில் தான் அன்றும் இன்றும் நடந்து வருகிறேன். இனியும் நடக்க துஆ செய்யுங்கள்.
 

ரமலானுக்கு முன் ஒரு சிறு கடையை வாடகைகுப் பேசி வைத்திருந்தேன். எனக்கு என்று தெரிந்தவுடன் தர மறுத்து விட்டனர். வாடகைக்கு வீடு பேசிவிட்டு வந்தால், மறு நாள் இல்லை என்று கூறி விடுவார்கள். இதற்கெல்லாம் கூட இடையூறு செய்பவர்கள் உள்ளனர். இப்படி பல விதமான இழப்புகள் தான் எனக்குக் கிடைத்துள்ளது.
 

மார்க்கத்தை தொடர்புபடுத்தி நான் சம்பாதிப்பதாக யாரேனும் கூறுவதாக இருந்தால் நான் புத்தகம் எழுதி விற்பனை செய்வதைத் தான் கூற முடியும். புத்தகத்தின் எழுத்துக்காக நான் எந்த விலையும் வைப்பதில்லை. பிரபலமான எழுத்தாளர்கள் எழுதும் 40 பக்க புத்தகம் 100 ரூபாய் விலை போடப்படும். அப்படி எல்லாம் நான் போடவில்லை.
 

புத்தகம் தயாரிக்கும் செலவு,  அதை விற்பனை செய்யும் இடத்துக்கான வாடகை,  அட்வான்ஸ்,  மின் கட்டணம்,  ஊழியர் சம்பளம் ஆகிவற்றுக்கு நான் முதலீடு செய்த அடிப்படையில் தான் அதில் லாபம் கிடைக்கிறது. மாதம் பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு அதில் எனக்கு வருமானம் வருகிறது. அதில் உள்ள முதலீட்டை எடுத்து வேறு ஏதாவது வழியில் பயன்படுத்தினால் எனக்கு இன்னும் அதிக லாபம் கிடைக்கும். அது பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
 

என்னுடைய நூல்கள் பலவற்றை சவூதியிலுள்ள ஜாலியாத்கள் இலவசமாக வெளியிட்டுள்ளன. அதனால், எனக்குப் பாதிப்பு என்று நான் சிந்திக்காமல் அனுமதித்தேன். பீஜே நூல்களுக்கு சவூதியில்  தடையா என்ற கட்டுரையில் இதை விளக்கியுள்ளேன்.
 

வரலாறு இன்னும் வளரும் இன்ஷா அல்லாஹ்…
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்