Monday, August 8, 2011

வாராந்திர ரமாளான் சிறப்பு நிகழ்ச்சி

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், ரமளான் மாதம் முழுவதும் நமது மண்டல சார்பாக இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து ஒரு சிறிய உரையும் தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோ. முஹம்மது ஒலி அவர்கள் நிகழ்த்தினர்கள்.

மேலும், வியாழக்கிழமையன்று இரவுத் தொழுகைக்கு பிறகு சுமார் 11 மணியளவில் ரமளான் சிறப்பு நிகழ்ச்சி பஹ்ரைன் மண்டல தலைமைகத்தில் நடைபெற்றது.

இதில் ஆரம்பகட்டமாக, நமது மண்டல ஆலோசகர் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் செய்யும் அறிய பணி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி, அதில் நமது ஜமாஅத் செய்யும் செயல்பாடுகள் பற்றியும் விளக்கி கூறினார்.

அதை தொடர்ந்து தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோ. முஹம்மது ஒலி அவர்கள் இஸ்லாமிய அடிப்படை கல்வி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அந்த உரையை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி மற்றும் விஷேச சிறப்பு நிகழ்ச்சியும் நமது மண்டலம் சார்பில் நிகழ்த்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சி சுமார் அதிகாலை 2 மணியளவில் நிறைவுபெற்றது. இதன் பிறகு ஸஹர் உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

இதில் ஏராளமான தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனைடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Tuesday, August 2, 2011

ரமளான் சிறப்பு நிகழ்ச்சி - நாள் - 1

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அல்லாஹ்வின் மாபெரும் அருள் பெறக்கூடிய புனிதமிக்க ரமளான் மாதத்தின் முதல் நாளான இன்று, கடந்த வருடங்களைப் போல் தமிழ்நாடு தவ்ஹீத் - பஹ்ரைன் மண்டலம் தாயகத்திலிருந்து மாநில பேச்சாளாரான சகோ. முஹம்மது ஒலி அவர்களை அழைத்து ரமளான் மாதம் முழுவதும சொற்பொழிவும் ஏற்பாடு செய்துள்ளது.

இதில், முதல் நோன்பான இன்று இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு, மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு சிறிது இடைவெளி விட்டு சகோ.முஹம்மது ஒலி அவர்கள் "ஈமானின் கிளைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சி பஹ்ரைன் மண்டல இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பும் செய்ய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

இனி வரும் நாட்களில் தினமும் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகள் எங்கள் இணையதளத்தில் இன்ஷாஅல்லாஹ் நேரடி ஒளிபரப்பு செய்ய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்