Friday, March 16, 2012

உம்ரா வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாவா மற்றும் சமுதாய பணிகளில் சிறந்து விளங்குவதை அனைவரும் அறிந்ததே. அதே போல் அதன் கிளைகளாக செயல்பட்டு வரும் மண்டலங்களில் ஒன்றான பஹ்ரைன் மண்டலத்திலும் தாவா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு கட்டமாக, பஹ்ரைன் மண்டலத்தில் நமது தமிழ் பேசும் மக்கள் சிலர் அல்லாஹ் கூறியுள்ள உம்ரா என்ற வழிபாட்டை செய்ய திட்டமிட்டுள்ளனர். அந்த சகோதரர்களில் ஒருவர், நாம் வருடா வருடம் ஏற்பாடு செய்து சிறப்பாக நடந்த உம்ரா நிகழ்ச்சிகளில் கல்ந்து கொண்டிருக்கிறார். 

அவர் நம்மை அணுகி, "சில தமிழ் பேசக்கூடிய சகோதரர்கள் என்னோடு சேர்ந்து உம்ரா செல்ல இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் ஒரு உம்ரா சம்பந்தமான சட்ட திட்டங்கள் பற்றிய ஒரு வகுப்பு நடத்த முடியுமா?" என்று நம்மை அணுகினார்கள். 

அதற்கு நாம மறுக்காமல், தாரளாமாக செய்கிறோம் என்று ஒப்புக்கொண்டு இன்று (16-03-2012) அஸர் தொழுகைக்குப் பிறகு இந்த நிகழ்ச்சியை பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் உம்ரா சம்பந்தமான சட்ட திட்டங்களை வந்திருந்த சகோதர சகோதரிகளுக்கு புரியக்கூடிய அளவில் மிக சிறப்பாக விளக்கினார்கள். மேலும் அவர்களது உம்ரா சம்பந்தமாக அவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கும் பதில் அளித்தார்கள்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் உம்ரா சம்பந்தப்பட்ட விளக்கத்தை முன்பு ஆன்லைன் பிஜெ இணையதளத்திலிருந்து எடுத்து நமது பஹ்ரைன் மண்டல மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று மீள்பதிவு செய்த உம்ரா செய்யும் முறை புகைப்படங்களுடன் கூடியதை புத்தகமாக அடித்து அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதனுடன் மார்க்க சம்பந்தப்பட்ட சகோதரர் அல்தாஃபி ஆற்றிய உரை அடங்கிய ஏகத்துவ CD யும் அவர்களுக்கு வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. 

இதில் கலந்து அனைத்து சகோதர சகோதரிகளும் இந்த நிகழ்ச்சி சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் அமைந்திருந்து என்று கூறி விடை பெற்றனர்.

பஹ்ரைனில் அதிகமான தமிழ் பேசக்கூடிய ஜமாஅத்கள் இருந்தும் இவர்கள் நம்மை மட்டும் அணுகியது ஏகத்துவத்திற்க்கு தேம்புட்டும் வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, March 10, 2012

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 09-03-2012


அல்லாஹ்வின் கிருபையால், ஹித் பகுதியில் பயான் நிகழ்ச்சி வெள்ளியன்று (09-03-2012) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இதில் சகோ.மொய்தீன் அவர்கள், "தவ்பா (பாவ மன்னிப்பு)" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

வாராந்திர நிகழ்ச்சி - 09-03-2012


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு 09-03-2012 அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோதரி.பெனஸிர் ஆலிமா அவர்கள், "பயனுள்ள கல்வி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 09-03-2012


அல்லாஹ்வின் கிருபையால், ரிஃபா பகுதியில் பயான் நிகழ்ச்சி வெள்ளியன்று (09-03-2012)இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோ.ஜெய்லானி அவர்கள், "இலாபமா? நஷ்டமா?"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, March 3, 2012

மீண்டும் ஓடாமல், விவாதத்தை எப்பொழுது வைத்துக் கொள்வோம் என சொல்லுங்கள்!


விவாதத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதை மட்டுமே  சான் குழுவினர் கவனத்தில் கொண்டு  கடிதம் எழுதுகின்றனர் என்பதற்கு மற்றுமொரு சான்றாக நேற்றையை (29-2-2012) அவர்களது மெயில் அமைந்துள்ளது.

”சரி நீங்க சொன்னபடியே உங்க மாநிலத்துக்கு வந்து நீங்க சொன்ன தலைப்புல  விவாதம் பன்ன நாங்க ரெடி நீங்க ரெடியாக? எப்பன்னு சொல்லுங்க என தெளிவாக அனுப்பிய மெயிலுக்கு அவர்கள் உண்மையில் விவாதம் செய்ய தயாராக இருந்தால் என்ன பதில் எழுதி இருக்கு வேண்டும் இன்ன தேதியில் வைத்துக் கொள்ளலாம் என எழுதி இருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் ஆனால் அவர்கள் அவ்வாறு எழுதவில்லை.

அவர்களின் மழுப்பல் மெயில்:

Let the name of Yahweh, the only true name of God upon which all the true prophets have called, who in flesh was known by the name Lord Jesus Christ be glorified forever and ever. Amen.

Dear Friends at TNTJ,

We are in receipt of your partial reply dated February 28, 2012 to our email dated February 24, 2012. As you have mentioned that you will be sending another reply to our email dated February 24, 2012, we will wait to receive that as well before we respond to this partial reply.

If you cannot reply by March 3 as we requested, and require more time to respond fully, please take time till March 6. However, if you still require more time, do let us know by when you will be able to fully respond.

Or alternatively, if you have a change of mind and wants us to treat this reply as your full and final response to our email dated February 24, 2012, do let us know and we will respond to your suggestions. If not, we will respond to this partial email along with the response for your full email which is yet to be received.

Looking forward for a debate on Quran.

Thanks and regards,
SAN

இரு சாராரின் கடித போக்குவரத்துக்களை படிக்கும் எவரும் ”சான் குழுவினர் விவாதத்திலிருந்து தப்பிக்க மழுப்பிக் கொண்டே இருக்கின்றனர். இவர்களுக்கு விவாதம் செய்ய  திராணி இல்லை”  என்றே கருதுவார்கள்.

அந்த அவர்களது மழுப்பழுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றுமொரு அதிரடி  பதில் மின்னஞ்லை நேற்றே (29-2-2012) அனுப்பியது.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய தனக்கு மகனை ஏற்படுத்திக் கொள்ளாத எல்லாம் வல்ல ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…

சான் குழுவினருக்கு,

உங்களது 24.02.2012 மெயிலில் உள்ள பொய்களுக்கும் புரட்டுகளுக்கும் பதில் சொல்வது அவசியமாகும். எனினும், விவாதம் நடைபெற வேண்டும் என்பது எங்களது முக்கிய நோக்கமாகும். அதனால் தான் விவாத ஒப்பந்தத்துக்குச் சமந்தமில்லாத விஷயங்களுக்கு பதில் எழுதுவதை தள்ளிவைத்து விட்டு விவாதம் தொடர்பான விஷயங்களை மட்டும் எழுதினோம்.

விவாத ஒப்பந்தத்துக்குச் சமந்தமில்லாத விஷயத்துக்குப் பதில் எழுதிக் கொண்டு விவாதத்துக்கு வராமல் நீங்கள் திசை திருப்புவதற்கு இடம் தரக்கூடாது என்பதே இதற்குக் காரணமாகும்.

அதனால்தான் உங்களது பொய்யான செய்திகளுக்குப் பதில் சொல்லும் எங்களது உரிமையைச் சற்று தாமதப்படுத்திவிட்டு, விவாதம் செய்வதற்கு நாங்கள் தயார் நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள் என்று விவாதத் தேதிகளையும் குறிப்பிட்டு உங்களுக்கு நேற்று பதில் அனுப்பினோம்.

இதன் பிறகும் விவாத ஏற்பாடுகளைச் செய்யாமல் உங்களுக்கு வசதியான தேதிகளையும் குறிப்பிடாமல் வழக்கம் போல் மழுப்பலான பதிலை அனுப்பியுள்ளீர்கள்.

உங்கள் பொய்களுக்குப் பதிலளிக்கும் உரிமையை நாங்கள் விட்டுத் தரமாட்டோம். விவாத ஒப்பந்தத்துக்குச் சமந்தமில்லாத விஷயங்களுக்கு விவாதத்தின் போது கூட நாங்கள் பதிலளிக்கலாம். அல்லது விவாதம் முடிந்த பின்னர் கூட நாங்கள் பதிலளிக்கலாம். அது எங்கள் வசதியைப் பொருத்த விஷயம். அந்தப் பதிலுக்கும் தற்போது நடக்க வேண்டிய விவாதத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

எங்கள் பதில் என்னவாக இருந்தாலும் விவாத ஒப்பந்த்துக்கு அது சம்மந்தமில்லாத விஷயம் என்பதால் உங்களது கொச்சியில் உங்களது ஏற்பாட்டில் நீங்கள் சொல்லும் தலைப்பிலேயே விவாதம் செய்யத் தயார் என்று நாங்கள் ஏற்கனவே எழுதிய நிலைபாட்டுக்குத் தான் நீங்கள் பதிலளிக்க்க் கடமைப்பட்டுள்ளீர்கள்.

விவாத ஒப்பந்தத்துக்குச் சமந்தமில்லாத உங்களது பொய்களை அம்பலப்படுத்தி நாங்கள் எப்போது எழுதுகிறோமோ அப்போது நீங்கள் பதில் தந்தால் போதும். அது உங்களைப் பொய்யர்கள் என்றும் உலகிற்குத் தோலுரித்துக் காட்டும் கடிதமாகத் தான் அது இருக்குமே தவிர விவாத ஒப்பந்தம் சம்பந்தமானவை அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே தாமதமில்லாமல் கொச்சி காவல்துறை ஆணையரை அணுகி அனுமதி ஆணையைப் பெற்று அரங்கை முன்பதிவு செய்து விவாத ஏற்பாடுகளைச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இதுகுறித்து நாங்கள் ஏற்கனவே எழுதிய மெயிலின் வாசகத்தை உறுதி செய்யும் வண்ணமாக அதன் முக்கிய பகுதியை கீழே தருகிறோம்.
  • ஆகவே, உங்கள் கொச்சியிலேயே வந்து மீண்டும் ஒரு முறை குர்ஆன் இறைவேதமா? என்ற தலைப்பில் விவாதிக்கத் தயாராக உள்ளோம். ஏற்கனவே நடந்த இந்த விவாதத்தை நாங்கள் லைவ் ரிலே பண்ணினோம். அதை நீங்கள் முழுமையாகப் பார்த்தீர்கள். முடிந்தால் அதற்குப் பதில் தயாரித்து வாருங்கள்.
  • இந்த விவாதம் முடிந்த மறு வாரம் சனி ஞாயிறுகளில் ஓடி ஒளிந்தது யார் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற வேண்டும்.
  • போலீஸ் அனுமதியைப் பெறுவதற்கு நீங்கள் தனித்தே பொறுப்பேற்றதால் நீங்களே முறையான அனுமதியைப் பெற்று விவாதம் நடக்கும் தேதிக்கு பதினைந்து நாட்களுக்கு முன்னதாக அதன் ஒரிஜினலை எங்களுக்கு அனுப்பித் தரவேண்டும்.
  • எங்கள் தரப்பில் 150 நபர்கள் கலந்து கொள்வார்கள். (அவர்கள் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கு வசதியாக போலீஸ் அனுமதியைப் பதினைந்து நாட்களுக்கு முன்னரே தர வேண்டும்.)
  • காவல்துறையில் அனுமதி பெறும் போது முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இந்த தலைப்பில் நடத்தப்படும் விவாதத்துக்கு அனுமதி என்று தெளிவாக இருக்க வேண்டும். தெளிவற்ற முறையில் ஏதோ ஒரு நிகழ்ச்சி என்பது போல் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பின்னர் விபரம் தெரிந்தவுடன் அனுமதியை மறுக்கும் நிலை ஏற்படும்.
  • சென்னையில் விவாதம் செய்ய நீங்கள் தயார் என்று சொன்னீர்கள். ஆனால் நேரடி ஒளிபரப்பு செய்ய போலீஸ் தடை விதித்துள்ளது என்று தான் மறுத்தீர்கள். எனவே நீங்கள் வாங்கும் அந்த போலீஸ் அனுமதியில் தொலைக்காட்சியிலும் இன்டர்நெட்டிலும் நேரடி ஒளிபரப்புச் செய்யலாம் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
  • நீங்கள் ஒப்புக் கொண்டபடி இதற்கான செலவுகளை நீங்களே ஏற்றுக் கொள்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.
    மார்ச் 17, 18 அல்லது மார்ச் 24, 25 அல்லது மார்ச் 31, ஏப்ரல் 1 அல்லது ஏப்ரல் 7, 8 அல்லது ஏப்ரல் 14, 15 அல்லது ஏப்ரல் 21, 22 அல்லது ஏப்ரல் 28, 29
  • ஆகிய ஏதாவது தேதிகளில் உங்களுக்கு வசதியான தேதியைத் தேர்வு செய்து எங்களுக்கு தாமதமின்றி தெரிவிக்கவும்.
  • இதில் எந்தவொன்றை நீங்கள் ஏற்க மறுத்தாலும் நீங்கள் ஒடி ஒளிந்தீர்கள் உறுதிபட தெளிவாகிவிடும்.
உங்களுக்கு வசதியான தேதியையும் விவாத ஏற்பாடுகளை துவங்கி விட்டோம் என்ற உங்களின் பதிலை மார்ச்-3 ஆம் தேதிக்குள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.


மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி - 02-03-2012


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி 02-03-2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்றைய நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து மெளலவி.அப்துந் நாஸிர் அவர்கள் "மலக்குமார்களின் சாபமும் துஆவும்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

இதில் சகோதரர் அவர்கள் மலக்குமார்கள் நமக்காக் எப்பொழுதேல்லாம் சாபம்யிடுகின்றனர், எப்பொழுதேல்லாம் துஆ செய்கின்றனர் என்பதை குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் எடுத்துரைத்தார்கள்.

இந்த உரையை தொடர்ந்து நமது பஹ்ரைன் வாழ் தமிழ் சகோதர, சகோதரிகளின் மார்க்க சந்தேகங்களுக்கும் குர்ஆன் ஒளியில் தெளிவாக விளக்கினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 02-03-2012


அல்லாஹ்வின் கிருபையால், ரிஃபா பகுதியில் பயான் நிகழ்ச்சி வெள்ளியன்று (02-03-2012)இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்சகோ.யாசர் அரஃபாத் அவர்கள், "எதில் போட்டி"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்