அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர முதல் வெள்ளியன்று நடத்தப்படுகின்ற ஆன்லைன் நிகழ்ச்சியானது இன்று (01-02-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். தாவூத் கைசர் அவர்கள் "நவீன பிரச்சனைகளும் நமது அணுகுமுறையும்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
இன்றைய காலத்தில் தற்போது நடந்த மூன்று பிரச்சனைகளை குறித்து இஸ்லாம் எப்படி அந்த விஷயங்களுக்கு தீர்வு காண சொல்கிறது என்பதை பற்றி விளக்கினார்கள். அவை,
- சமீபத்தில் நடந்த டெல்லி கற்பழிப்பு வழக்கு
- சவூதி அரேபியாவில் தூக்கு தண்டனை கொடுக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த சகோதரி ரிஸானா வழக்கு
- விஸ்வரூபம் திரைப்பட வழக்கு

அவரை தொடர்ந்து தமாமிலிருந்து வருகைபுரிந்துள்ள சகோ. முனீப் அவர்கள் இந்த சம்பவங்களின் மேலதிக விளக்கங்கள் மற்றும் இதன் உண்மை தன்மையையும் எடுத்து கூறி சபையை முடிவுக்கு கொண்டு வாந்தார்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment