Showing posts with label தமிழக செய்திகள். Show all posts
Showing posts with label தமிழக செய்திகள். Show all posts

Wednesday, March 13, 2013

மலிவு விலை சிற்றுண்டிகள்




இந்தியாவில் விலைவாசி உயர்வு வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதை ஆளும் கட்சிகள் கூட மறுக்கமுடியவில்லை. இந்த விலைவாசி உயர்வால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வருமானத்திற்கு மேல் ஏற்படும் அத் தியாவசிய செலவுகளை ஈடுகட்ட முடியாமல் தவிக்கும் நேரத்தில் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் மலிவு விலை சிற்றுண்டிகளை தமிழக முதல்வர் திறந்துள்ளார்.

சென்னை மாநகரில் வாழும் ஏழை மக்கள், கூலிப்பணியாளர்கள். ஓட்டுனர்கள், பாரம் தூக்குபவர்கள், பணி நிமித்தமாக சென்னை வந்து செல்பவர்கள் என அனைவரும் உணவை, மலிலி வு விலையில் பெறும் வகையில், சென்னை முழுவதும், 1,000 மலிலி வு விலை சிற்றுண்டி உணவகங்களை துவங்க, முதல்வர் ஜெயலலிலி தா உத்தரவிட்டார்.

இத்திட்டத்தின்படி, வார்டுக்கு ஒரு உணவகம் வீதம், 200 உணவகங்கள் துவக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சியில் உள்ள, 15 மண்டலங்களிலும், மண்டலத்திற்கு ஒன்று என, 15 உணவகங்கள் துவக்கப்பட்டன.

ஒரு இட்லிலி ஒரு ரூபாய், தயிர் சாதம் மூன்று ரூபாய், சாம்பார் சாதம் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய உணவகங்கள் அடிக்கும் கொள்ளைக்கு அளவில்லாத வகையில் இருக்கும் போது இந்த அறிவிப்பு நிச்சயமாக ஏழைகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் அந்த உணவுகள் தரமானதாகவும் சுகாதாரமானதாகவும் இருக்கும் வரை இந்த ஏற்பாடு சிறந்ததே.

ஆனால் இதுபோன்ற அறிவிப்புகள் குறைந்த நாட்கள் வரையே செயல்படுத்தப்படுகின்றன. அல்லது தரமற்ற முறையில் தயார் செய்து கொடுத்து மக்களே வெறுக்கும் நிலைக்கு கொண்டுவந்துவிடுகின்றனர்.

மம்தா பானர்ஜி ரயில்வே மந்திரியாக இருந்த போது ஜனதா சாப்பாடு என்ற திட்டத்தை கொண்டுவந்தார்.

7
பூரி, 150 கிராம் உருளைகிழங்கு மசால், ஊறுகாய், ஒரு மிளகாயுடன் பத்து ரூபாய்க்கும், 300 கிராம் எடையுடன் புளி, எலுமிச்சம், தயிர், சாம்பார், தக்காளி சாதம், 13 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இது பெரிய ரயில் நிலையங்களில் மட்டும் வழங்கப்பட்டது.

பின்னர் ஜனதா சாப்பாடு விலை உயர்த்தப்பட்டது. 7 பூரி, உருளை கிழங்கு மசால் அதே பத்து ரூபாய்க்கும், 300 கிராம் எடையுள்ள சாம்பார், தயிர், தக்காளி சாதம், 15 ரூபாய், புளி, எலுமிச்சம் சாதம், 16 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

தற்போது ஜனதா சாப்பாடு விலை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 7 பூரி, மசால் கிழங்கு அதே பத்து ரூபாய், தயிர் சாதம்லி17, சாம்பார் சாதம்லி19, தக்காளி சாதம்லி13, எலுமிச்சம் சாதம்லி18, புளி சாதம்லி20 ரூபாய் என விற்கப்படுகிறது.

குறைந்த அளவில் தயார் செய்வதால் குறைந்த நேரத்திலேயே விற்று தீர்ந்துவிடுகிறது. எல்லா மக்களுக்கும் இதன் பயன்கிடைப்பதில்லை. எல்லா ரயில் நிலையங்களிலும் குறிப்பாக ரயில்பெட்டிகளில் தயார் செய்யப்படும் உணவுகள் குறைந்த விலைக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும். ரயில் பெட்டிகளில் தயார் செய்யப்படும் உணவுகள் மிக குறைந்த அளவு, அதே நேரத்தில் அதிகவிலைக்கு விற்கப்படுகிறது. மேலும் டீ,காஃபி போன்றவைகள் சுடுதண்ணீர் போன்றே இருக்கிறது.

இதே போன்ற நிலை இந்த சிற்றுண்டிகளுக்கும் வந்துவிடக்கூடாது.

இதைபோன்று நீண்ட தூரம் செல்லும் பேருந்துகள் நிறுத்தும் உணவகங்களின் தரம் மற்றும் கட்டணங்களை அரசு கவனித்தால் நன்றாக இருக்கும்.

தமிழகத்தில் நீண்ட தூர பேருந்து சேவையில் அரசு விரைவு போக்கு வரத்துகழகம் மற்றும் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழக பேருந்துகளும் செயல்படுகின்றன. இது தவிர்த்து தனியார் ஆம்னி பேருந்துகள் என தினசரி லட்சக் கணக்கான பயணிகள் செல்கின்றனர்.

பயணக் களைப்பில் பசியாறவும், களைப்பு மற்றும் உடல் சோர்வைப் போக்கவும் சாலையோர உணவகங்களில் பேருந்துகள் நிற்பதுண்டு. தேர்வு செய்ய வேறு வாய்ப்பு பயணிகளுக்கு இல்லாதபோது அதிகமான விலைகொடுத்து டீ, காபி, டிபன், குளிர்பானங்கள் வாங்குவதும், புலம்பிக் கொண்டே தரமோ சுவையோ இல்லாத உணவுவகைகளை சாப்பிடவும் நேர்கிறது. குறிப்பிட்ட உணவகங்களில் குறிப்பிட்ட பேருந்துகள் நிற்பதற்கு காரணம் அங்கு ஓட்டுநர், நடத்தனர்களுக்கு இலவசமாக டீ, காபி, டிபன் தருவது மட்டுமே என்பது ஊரறிந்த ரகசியம். இதனை முடிவுக்கு கொண்டு வருவதாகவும், இதன் மூலம் அரசுப்போக்குவரத்துக் கழகத்திற்கு வருமானம் பார்க்கிறோம் என்றும் கழகத்தின் வணிகப்பிரிவுகள் களமிறங்கின.

டெபாசிட் தொகை ரூ.10 லட்சம் முதல் 12 லட்சம் வரை செலுத்த வேண்டும். தினசரி குறிப்பிட்ட பேருந்துகள் அந்தந்த கடைகளில் நிறுத்தப்படும். ஒரு வண்டிக்கு ரூ.40, ரூ.45, ரூ.55 என ஏதோ ஒரு கணக்கில் மாதாந்திர தொகை கட்டணமாக செலுத்த வேண்டும் என்று வரையறுத்தனர். கடந்த 2012 ஜனவரி 10 அன்று இந்த அறிவிப்பு வெளியானது. பின்னர் பிப்ரவரி 10 முதல் கறாராக அமல்படுத்தப்படுவது என்ற பெயரில் உணவகங்களில் கட்டாயம் பேருந்துகளை நிறுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அரசுப்போக்குவரத்துக் கழகத்திற்கு வருமானம் தானே என்று பார்த்தால், அவை முழுவதும் பயணிகள் பாக்கெட்டையே பதம் பார்க்கிறது. ஏற்கனவே பஸ்கட்டண உயர்வால் சுமார் 80 சதவீதம் கூடுதலாகச் செலவிடும் பயணிகள் தலையில் உணவகங்களும் விலை ஏற்றி அதிகாரப்பூர்வமாய் இப்போது கொள்ளையடிக்கிறார்கள்.

உணவகத்தில் விலைபட்டியல் கிடையாது, தரமான உணவுகள் கிடையாது மேலும் கட்டணம் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுகிறது. இவற்றை கவனத்தில் கொண்டு முதல்வர் அவர்கள் நியாயமான கட்டணத்தில் உணவுகள் தருவதற்கு ஏற்பாடு செய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்
.

Wednesday, April 25, 2012

சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு : முஸ்லிம்களின் கவனத்திற்கு ……!


இந்தியாவில் உள்ள பல்வேறு சாதி மக்களின் சமூக, பொருளாதார, சாதி, கல்வி விபரங்களை தொகுப்பதற்காக சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கணக்கெடுப்பு ஏப்ரல் 23-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது.  1931-ம் ஆண்டுக்குப் பிறகு இது மாதிரியான சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவில் நடத்தப்படவில்லை.
சுதந்திர இந்தியாவில் இதுதான் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு. இந்த கணக்கெடுப்பின் முடிவில் சாதிவாரி மக்கள் தொகை விபரம் துள்ளியமாக தெரியும்.
இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் எதிர்காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகார இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
விகிதாச்சார இட ஒதுக்கீடு என்பது இன்று பேச்சளவில் மட்டுமே இருக்கிறது. இந்த கணக்கெடுப்பு முடிந்தபிறகு விகிதாச்சார இட ஒதுக்கீடுக்கான குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கும். தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பட்டியலில் 
1) தக்னி முஸ்லிம்
2) தூதுகோலா
3) லெப்பை, ராவுத்தர், மரைக்காயர்
4) மாப்பிள்ளா
என 4 சாதியினராக பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் போது இந்த 7 சாதிகளில் ஒன்றை குறிப்பிட்டு, அது பள்ளி மாற்றுச் சான்றிதழில் இடம் பெற்றால் தான் அந்த குழந்தைக்கு வட்டாட்சியர் பிற்படுத்தப்பட்டோருக்கான சாதிச் சான்றிதழை வழங்குவார்.
இந்த சாதிச் சான்றிதழை வைத்து தான் மத்திய, மாநில அரசுகளின் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடும், கல்வி உதவித் தொகைகளும் பெற முடியும்.
பல முஸ்லிம்கள் இந்த விபரம் தெரியாமல் பட்டாணி, சாஹிப், பரிமளம் போன்ற உட்பிரிவுகளையும், குடும்பப் பெயர்களையும் சாதி என்ற இடத்தில் குறித்து விடுகின்றனர்.
பெற்றோர்கள் தெரியாமல் செய்யும் இந்தத் தவறின் காரணமாக மாணவச் செல்வங்களின் எதிர்காலம் பாழ்பட்டு போய்விடுகிறது.
எனவே மதம் என்று குறிப்பிடப்படும் இடங்களில் “இஸ்லாம்” என்றும் சாதி என்று குறிப்பிடப்படும் இடங்களில் மேற்கண்ட 7 பிரிவுகளில் ஏதாவது ஒரு பிரிவை மட்டுமே முஸ்லிம்கள் குறிப்பிட வேண்டும்.
வேறு எந்த பெயரையும் குறிப்பிடக்கூடாது. சாதிவாரி கணக்கெடுப்பின் போதும் இதே வழிமுறையைத் தான் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இந்த சாதி வாரி கணக்கெடுப்போடு சேர்த்து பொருளாதார கணக்கெடுப்பும் எடுக்கப்படுகிறது. சில முஸ்லிம் குடும்பங்களின் மாத வருமானம் 2 ஆயிரம் ரூபாய்தான் இருக்கும். ஆனால் கவுரவத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என கருதி மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய் என்று பொய்யாக சொல்கிறார்கள். இது மாதிரியான பொய்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாழாக்கி விடும் என்பதை மறந்துவிடக்கூடாது.
இந்த ஆண்டு வரை மருத்துவம், பொறியியல் படிக்கும் ஏழை மாணவர்கள் அரசின் கல்வி உதவித் தொகையை பெற வேண்டுமெனில் குடும்பத் தலைவரின் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்த அளவுக்கு உண்மையிலேயே வருமானம் உள்ள ஒரு முஸ்லிம் குடும்பத் தலைவர் கவுரவத்திற்காக மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய் என்று கொடுத்தால் ஆண்டு வருமானம் 1.20 லட்சம் ரூபாயாகி, இவர் ஏழை அல்ல என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டு, இவருடைய பிள்ளைகளுக்கு அரசின் கல்வி உதவித் தொகை கிடைக்காமல் போய்விடும்.
சமீபத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள அடிப்படை கல்வி உரிமைச் சட்டத்தின் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளும் கூட 25 சதவீது இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.
ஒரு முஸ்லிம் குடும்பம் வருமானத்தை அதிகப்படுத்தி காண்பித்தால் இந்த இடஒதுக்கீடும் கிடைக்காமல் போய்விடும். இப்படி முஸ்லிம்கள் சாதாரணமாக சொல்லும் சிறிய பொய் கூட எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் என்பதை புரிந்து கொண்டு பொருளாதார நிலவரங்களை கேட்கும் போது பிள்ளைகளுக்கு கிடைக்கும் அரசின் கல்வி உதவித் தொகை பாதிக்காதவாறு பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாத்தில் சாதிப் பாகுபாடுகள் கிடையாது. அதனால் சாதி இல்லை என்று தான் நாங்கள் விபரம் தருவோம் என்று சிலர் அடம் பிடிக்கிறார்கள். இஸ்லாத்தில் சாதிகள் கிடையாது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.
இந்த உண்மை முஸ்லிமல்லாதவர்களுக்கு நன்கு தெரியும். அதனால்தான் இஸ்லாத்தை நோக்கி மக்கள் அணி அணியாக வருகிறார்கள். சில விஷயங்கள் நம்மை மீறி நடந்துவிடும். அதில் ஒன்றுதான் சாதி ரீதியான இட ஒதுக்கீடு. இந்தியாவில் இட ஒதுக்கீடு என்பது சாதிரிதீயில் தரப்படுகிறதே தவிர மத ரீதியில் தரப்படவில்லை. அப்படி இருக்கும் போது சாதி இல்லை என்று முஸ்லிம்கள் குறிப்பிட்டால் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பயன் கிடைக்காமல் போய், அவர் தம் சந்ததியினர் கல்வி, வேலைவாய்ப்பில் அறவே ஒதுக்கப்பட்டு விடுவார்கள்.
அரசியல் சட்டம் வகுக்கப்படும் போது தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு சாதி ரீதியில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதுபோல் பின் தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கவும் வழி வகை செய்யப்பட்டது. அதோடு சேர்த்து இஸ்லாத்தில் சாதிகள் இல்லை. அதனால் முஸ்லிம்களுக்கு சாதி ரீதியான இடஒதுக்கீடு கொடுப்பது சரிப்படாது. எனவே அவர்களுக்கு மத ரீதியில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் விதி செய்யப்பட்டிருந்தால் இஸ்லாத்தில் இல்லாத சாதிகளை குறிப்பிடும் அவசியம் இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்காது. அதில் நம் முன்னோர்கள் கோட்டைவிட்டு விட்டனர். இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ் தான் இருக்கவேண்டும் என்று அரசியல் நிர்ணய சபையில் உரத்து முழக்கமிட்ட காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் கூட முஸ்லிம்களுக்கு சாதி ரீதியான இட ஒதுக்கீடு சரிப்படாது. மதரீதியான இட ஒதுக்கீடுதான் சாத்தியப்படும் என்று கொள்கை முழக்கம் செய்யத் தவறிவிட்டார்.
அதனால் இந்துக்களை சாதிரீதியாக பிரித்தது போல் முஸ்லிம்களையும் சாதிரீதியாக பிரித்து இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
இதைமாற்ற வேண்டுமெனில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். அப்படி திருத்தம் கொண்டு வந்த பிறகுதான் முஸ்லிம்கள் “சாதி இல்லை” என்று சொல்ல வேண்டும்.
அதற்கான கோரிக்கைகளையும், போராட்டங்களையும் முஸ்லிம்கள் முன்னெடுத்துச் சென்று வெல்ல வேண்டும். அந்த கோரிக்கையில் வென்று, அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு முன்பே “சாதி இல்லை” என்று ஒரு முஸ்லிம் குறிப்பிட்டால் மத்திய, மாநில அரசுகளின் கல்வி, வேலைவாய்ப்பில் உள்ள இட ஒதுக்கீடுகளையும், சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை, வங்கி வட்டி குறைப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் பறி கொடுக்க நேரிடும். இதை கவனத்தில் கொண்டு சமூக, பொருளாதார சாதி கணக்கெடுப்பின் போது முஸ்லிம்கள் சரிவர நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
-www.tntj.net
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்