Showing posts with label மருத்துவ முகாம். Show all posts
Showing posts with label மருத்துவ முகாம். Show all posts

Thursday, December 19, 2013

Barhain National Day அன்று மருத்துவ முகாம்

கடந்த 17-12-2013 பஹ்ரைன் தேசிய நாள் - விடுமுறை நாளில் மக்களுக்கு பயன்படும் வகையில் பஹ்ரைன் டி.என்.டி.ஜே சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றை டி.என்.டி.ஜே மார்க்கஸில் வைத்து  ஏற்பாடு செய்திருந்தது இதில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான மருத்துவ சோதனைகளும் அதனடிப்படையிலான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது, இதில் 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கலந்து கொண்டவர்கள் அனைவரும் தங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக கருத்து தெரிவித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் இந்த முகாமில் குழந்தைகளுக்கான மருத்துவ சோதனைகள் மற்றும் ஆலோசனைகளை சிறப்பு மருத்துவர் டாக்டர் பிரவீன் ஆப்ரஹாம் அவர்கள் செய்தார்கள். 













Sunday, December 1, 2013

மருத்துவ முதல் உதவிகள் பயிற்சி



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
பஹ்ரைன் மண்டல தலைமை மர்கஸில் 29 ம் திகதி வெள்ளிக்கிழமை பயான் நிகழ்சிக்கு பிறகு மருத்துவம் படித்தவர்களைக் கொண்டு  "மருத்துவ முதல் உதவிகள் பயிற்சி"  அளிக்கப்பட்டது. இந்த நிகழ்சி களந்து கொண்ட அனைவரும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மக்கள் இந்த நிகழ்சியில் சொல்லப்பட்ட செய்திகளையும் செயல் முறை வடிவில் வளங்கப்பட்ட பயிற்சியையும் கவனமாகவும் அவதானித்து தங்களுக்குள்ள சந்தேகங்களையும் கேட்டு தெரிந்து கொண்டனர். இந்த நிகழ்சியில் ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் கூட களந்து கொண்டனர்.
 மருத்துவ முதல் உதவி பயிற்சியில் குழந்தைகள் எதாவது ஒரு பொருளை விழுங்கி விட்டால் என்ன செய்வது? குழந்தை எதையாவது விழுங்கி விட்டார்கள் என்பதை எப்படி கண்டு பிடிப்பது ? 
 பெரியளவினான வெட்டுக்காயம் ஏற்பட்டால் இரத்தம் வருவதை முதலாவது எப்படி கட்டுப்டுத்துவது ?
தீயினால் எதாவது காயம் ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் ?
ஹார்ட் அடைக் ஏற்பட்டால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்கு முன் என்ன செய்யவேண்டும் ?
இப்படி ஏறாளமான விசயங்களை செயல் வடிவில் செய்துகாட்டினார்கள் இன்ஷா அல்லாஹ் அந்த வீடியோ நமது தளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்டும்.

Friday, December 21, 2012

மருத்துவ முகாம்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல விடுமுறை தினத்தை சிறந்த முறையில் கழிக்க மற்றும் மக்களுக்கு பயனுள்ள வகையில் அமைய கடந்த 17-12-2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இரத்த தான, இரத்த அழுத்தம் இரத்தத்தில் சர்க்கரை கண்டறியும் முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் போன்ற முகாம்கள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அதிகமான மாற்று மத சகோதரர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். குறிப்பாக இரத்த தான முகாமில் மனிதநேயத்தை பறை சாற்றும் விதமாக பல மாற்று மத அன்பர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் அதிகமான சகோதரர்கள் குருதி கொடை அளித்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டிருந்த இரத்த பரிசோதனை முகாம்களிலும் அதிகமான மாற்று மத சகோதரர்கள் உள்பட பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்ளும் வகையில் பல புத்தகங்களை இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பெரும் திரளாக மக்கள் கலந்து கொண்டனர். எல்லாப்புகழும் இறைவனுக்கே!!!
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்