Showing posts with label விளக்கங்கள். Show all posts
Showing posts with label விளக்கங்கள். Show all posts

Tuesday, May 1, 2012

திருக்குர்-ஆன் இறைவேதமே!



அடுக்கடுக்கான சான்றுகளை வைத்து நிரூபித்த டிஎன் டிஜே! திக்குமுக்காடிய கிறித்தவ போதகர்கள்!!
என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் (மத்தேயு 27:46). மேற்கண்ட வார்த்தைகள் ஏசு சிலுவையில் அறையப்பட்ட போது கடைசியாகப் புலம்பிய வார்த்தைகள். இதே வார்த்தைகளைத் தான் திருக்குர்ஆன் இறைவேதமே! என்ற தலைப்பில் விவாதிக்க வந்த கிறித்தவ போதகர்கள் விவாதத்தின் இறுதியில் சொல்லி புலம்பிக் கொண்டு சென்றிருப்பார்கள் என்று நினைக்கின்றோம்.
அந்த அளவிற்கு அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் திருக்குர்ஆன் இறைவேதமே! என்ற தலைப்பில் கிறித்தவ போதகர்களுடனான விவாதம் சிறப்பாக நடந்து முடிந்தது.
கடந்த 28, மற்றும் 29 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையிலுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத்தலைமயகத்தில் வைத்து நடைபெற்ற விவாதத்தில் பீஜே தலைமையிலான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுவினர் கிறித்தவ போதகர் ஜெர்ரி தாமஸ் குழுவினரோடு விவாதித்தனர். தரப்புக்கு தலா 25 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக சான் தரப்பினர் ஜனவரி 28, 29 ஆகிய தேதிகளில் நம்முடன் இந்தத் தலைப்பில் விவாதிக்க சம்மதம் தெரிவித்துவிட்டு, விவாதத்திற்கு முந்தைய நாள் நள்ளிரவு 1.40க்கு விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்தால் நாங்கள் வரமாட்டோம் என்று கூறி விவாதத்திலிருந்து நழுவி ஓடினர். விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்யமாட்டோம் என்று நாம் ஒப்புக் கொண்டால் தான் விவாதத்திற்கு வருவோம் என்று விடாப்பிடியாக அவர்கள் இருந்ததால், இவர்களுடன் இந்தத் தலைப்பில் விவாதித்தே ஆக வேண்டும். இவர்களை விட்டுவிடக்கூடாது என்று முடிவெடுத்து நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்ற அவர்களது நிபந்தனையையும் ஏற்று இந்த விவாதத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது தவ்ஹீத் ஜமாஅத்.
ஆரம்பமே அதிர்ச்சி:
ஜனவரி 21, 22 ஆகிய நாட்களில் நடைபெற்ற பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பிலான விவாதத்தில் அவர்களுக்கு நாம் வைத்த அந்த விஷப்பரீட்சை அதிர்ச்சியிலிருந்து அவர்கள் இதுவரை இன்னும் மீளவில்லை என்பது இந்த வாதத்திலும் நமக்கு தெள்ளத்தெளிவாக தெரிந்தது.
சென்ற வாதத்தில்,பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் விவாதிக்க வந்த கிறித்தவ போதகர்கள் பைபிள் இறைவேதம் தான் என்பதற்கு ஒரு சான்றைக்கூட எடுத்து வைக்கவில்லை. மாறாக நாம் பைபிளிலிருந்து காட்டிய ஆபாசங்களுக்கும், கேவலங்களுக்கும், உளறல்களுக்கும் விளக்கம் சொல்ல முடியாமல் திணறிப்போய் பைபிளைப் போலவே தாங்களும் உளற ஆரம்பித்தனர்.
ஆனால், திருக்குர்ஆன் இறைவேதமே! என்ற இந்தத் தலைப்பில், இந்த வேதம் படைத்த இறைவனிடத்திலிருந்துதான் வந்தது என்பதையும், இது அவனுடைய வேதம் தான் என்பதையும் நிரூபிக்கும் வகையில் அடுக்கடுக்கான சான்றுகள் எடுத்து வைக்கப்பட்டன.
எதிர்த்தரப்பினரை ஆட்டம் காண வைத்த அடுக்கடுக்கான சான்றுகள்.
  • இது போன்றதொரு குர்ஆனை கொண்டு வரமுடியுமா? என்ற திருக்குர்ஆனின் அறைகூவல்
  • குறைந்த வார்த்தையில் அதிகப் பொருள் தரக்கூடிய திருமறையின் நடை
  • சிந்தித்துப் பார்க்கச் சொல்லி சிந்தனையைத் தூண்டக்கூடிய வான்மறையின் வழிகாட்டல்
  • எளியநடையில் அனைவருக்கும் புரியும் வகையில் உள்ள திருக்குர்ஆனின் நடை
  • முஹம்மது நபிக்கு இந்த வேதத்தில் பங்கு இல்லை என்ற தெளிவான, திட்டவட்டமான அறிவிப்பு
  • தீமையைத் தூண்டாத தெளிவான வழிகாட்டுதல்கள்
  • இறைவனது இலக்கணக்கங்களைத் தெளிவுபடுத்தும் வேதம்

என்று தர்க்க ரீதியாக இது இறைவனுடைய வேதம் தான் என்பதை நிரூபிக்கும் வகையிலான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அதிசயிக்க வைத்த அறிவியல் சான்றுகள்:
1400 ஆண்டுகளுக்கு முன் அருளப்பட்ட இந்த வேதத்தில், எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டிய இவ்வேதத்தில், இந்த நூற்றாண்டு மனுதனுக்குக்கூட தெரியாத எண்ணற்ற அறிவியல் சான்றுகள் உள்ளனவே? இது எப்படி முஹம்மது என்ற எழுதப்படிக்கத் தெரியாத மனிதனுக்குத் தெரியும்? படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரியக்கூடிய பற்பல அறிவியல் உண்மைகளை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்லுகிறார்கள் என்றால் இது படைத்த இறைவனிடம் இருந்துதான் வந்துள்ளது என்பது நிரூபணமாகின்றது என்று கூறி அடுக்கடுக்கான அறிவியல் சான்றுகள் அள்ளிவைக்கப்பட்டன.
காட்டப்பட்ட அறிவியல் சான்றுகளில் சில:
  • வேதனையை உணரும் நரம்புகள் மனிதனது தோல்களில் தான் உள்ளன
  • தேனியின் வயிற்றிலிருந்து தான் தேன் உருவாகின்றது என்ற அதிசயம்
  • மலைகளை முளைகளாக ஆக்கியுள்ளோம் என்ற அறிவியல் உண்மை
  • மனிதனது மூளையில் முன்னெற்றி பாகம் தான் பொய் சொல்லத் தூண்டுகின்றது என்பதற்கான சான்று
  • கால்நடைகளில் பால் உற்பத்தியைப் பற்றி குர்ஆன் தத்ரூபமாக விளக்கும் அதிசயம்
  • மலையின் உச்சி அளவுக்கு மனிதன் பூமிக்கு அடியில் போக முடியாது என்று திருக்குர்ஆன் விடுக்கும் சவால்
  • விந்து வெளியேறும் இடத்தை விவரிக்கும் திருமறையின் அற்புதம்
  • பூமியைக் கடந்து செல்ல முடியும்; அதற்கு ஆற்றல் தேவை என்ற திருமறையின் வழிகாட்டல்
  • விண்வெளிப் பயணத்தின் போது இதயம் சுருங்கும் என்று சொல்லும் திருமறையின் அதிசயம்
  • குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை ஆண் தான் தீர்மானிக்கின்றான் என்ற அறிவியல் உண்மை
  • திருக்குர்ஆன் விவரிக்கும் பெருவெடிப்புக் கொள்கை
  • இரும்பு விண்ணிலிருந்துதான் இறக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம்

இப்படி அடுக்கடுக்கான அறிவியல் ஆதாரங்களை நாம் அள்ளிப்போட்டவுடன் செய்வதறியாது திகைத்த கிறித்தவ போதகர்கள் ஏதேதோ சொல்லி சமாளித்துப் பார்த்தனர். முடியவில்லை.
தங்களை அறியாமல் ஒப்புக் கொண்ட எதிர்த்தரப்பினர் :
இறுதியில் இவைகளை மறுக்க வழியில்லாமல், விஞ்ஞான உண்மைகள் இருந்தால் அது இறைவனுடைய வேதமாக ஆகிவிடுமா? என்று அறிவுஜீவிகளைப் போல கேள்வி கேட்டனர். மேலும், மேற்கண்ட அறிவியல் உண்மைகளையெல்லாம் முஹம்மது என்ற எழுதப்படிக்கத் தெரியாத மனிதருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கின்றோம். வேறு ஏதோ ஒரு சக்திதான் அவருக்கு இதைச் சொல்லிக் கொடுத்துள்ளது. அது கெட்ட ஆவியாகத்தான் இருக்கும் என்று உளற ஆரம்பித்து விட்டனர்.
அப்படியானால், கெட்ட ஆவிக்கு எப்படி இவ்வளவு அறிவியல் உண்மைகளும் தெரியும்? என்று நாம் கேட்க அவர்களுக்கு எந்தப் பதிலும் சொல்ல இயலவில்லை.
கடவுளை மகிமைப்படுத்துவது கடவுளுடைய வேதமா?
அவரைக் கேவலப்படுத்துவது கடவுளுடைய வேதமா? :
மேலும், இறைவனுடைய வேதம் என்றால் அதைப் படித்தாலே இது கடவுளிடத்திலிருந்து தான் வந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும். திருமறைக்குர்ஆன் அவ்வாறுதான் உள்ளது. இந்த அற்புத வேதத்தில்,
  • உளறல் இல்லை
  • முரண்பாடுகள் இல்லை
  • ஆபாசங்கள் இல்லை
  • அசிங்கங்கள் இல்லை
  • தரங்கெட்ட வார்த்தைகள் இல்லை
  • அருவறுப்பு இல்லை
  • இறைவனைக் கேவலப்படுத்துதல் இல்லை
  • கேவலமான சட்டங்கள் இல்லை
  • பொய்கள் இல்லை

என்று மேற்கண்ட செய்திகளை நிறுவியதுடன் கிறித்தவ போதகர்களுக்கு உரைக்கும் வண்ணமும், ஏற்கனவே அவர்கள் பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் திருக்குர்ஆனை இழுத்ததன் காரணமாகவும் மேற்கூறிய அத்தனை அபத்தங்களும், ஆபாசங்களும் நிறைந்து காணப்படும் பைபிள் எப்படி இறைவேதமாக இருக்க முடியும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டு கீழ்க்கண்ட கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டன.
  1. யாக்கோபுடன் கர்த்தர் சண்டை போட்டு தொடைச்சந்துக்குள் கையைவிட்டு யாக்கோபின் மர்ம உறுப்பை கர்த்தர் பிடித்தது நியாயமா?
  2. தந்தையே தான் பெற்ற மகளை திருமணம் முடிக்கலாம் என்ற கேவலத்தை சட்டமாக பைபிள் சொல்லலாமா?
  3. உடலுறவு கொண்ட பின்பு தனது மனைவி கன்னிதானா என்பதை சோதிக்க பாதிரியாரிடம் கூட்டிக்கொண்டு போகச் சொல்லி பைபிள் சொல்லும் சட்டம் சரிதானா?
  4. அடிமைப்பெண்களுடன் உடலுறவு வைக்கலாம் என்று அல்லாஹ் கூறும் சட்டத்தை விமர்சிக்கும் நீங்கள் உங்களது வேதத்தில் அண்ணன் பொண்டாட்டியை தம்பி அனுபவிக்கலாம் என்று எழுதி வைத்துள்ளீர்களே இது நியாயமா?
  5. உங்களது பைபிளில் புருஷசம்யோகத்தை அறியாத இளசுகளாகப் பார்த்து உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இது சரியா?
  6. ஒருவன் செய்த தவறுக்காக அவன் பொண்டாட்டியை அடுத்தவன் அனுபவிக்க வேண்டும் என்று சொல்லி சாபம் போடும் கர்த்தரின் சாபம் சரிதானா?
  7. ஊனமுற்றவனும், கூனனும், குருடனும், ஆணுறுப்பு அறுக்கப்பட்டவனும், விதை நசுங்கியவனும் கர்த்தருடைய சபைக்குள் வரக்கூடாது என்று சொல்லி அநீதியிழைக்கும் கர்த்தரின் சட்டம் சரியா?
  8. இறந்த சிங்கத்தின் உடலுக்குள் தேனீ கூடுகட்டுவதாக பைபிளில் சொல்லப்பட்டுள்ளதே! இது நடக்குமா?
  9. இராஜாக்களின் முலைப்பாலை குடிக்கச் சொல்லி பைபிள் போடும் கட்டளையை எப்படி நிறைவேற்றுவீர்கள்?
  10. சிம்சோன் என்ற நல்லவர்(?) செய்த சில்மிஷங்களின் பட்டியல்களுக்கு பதில் என்ன?
  11. ஒரு வயது போன தாத்தாவை வளைத்துப் போட தனது மருமகளுக்கு வழிகாட்டிய மாமியாரின் மன்மத லீலைகளுக்கு பதில் என்ன?
  12. வீட்டுக்கு குஷ்டரோகம், ஆடைக்கு குஷ்டரோகம் என்று பைபிள் சொல்லும் அதிசய குஷ்டரோகத்திற்கு உங்களது பதில் என்ன?
  13. மாதவிடாய்ப் பெண்களைத் தொட்டால் தீட்டு, அவள் உட்கார்ந்த இடத்தைத் தொட்டால் தீட்டு, தொட்டவனைத் தொட்டால் தீட்டு என்று கொடுமையான சட்டத்தை பைபிள் சொல்லக் காரணம் என்ன?
  14. சபையில் பெண்கள் பேசக்கூடாது என்று சொல்லி பெண்ணுரிமையை(?) பைபிள் பேணக்கூடிய லட்சணம் என்ன?
  15. ஸ்தீரியிடத்தில் பிறந்தவன் சுத்தமாவதில்லை என்ற பைபிள் கூற்றுப்படி ஏசு அசுத்தமானவரா?
  16. விருத்தசேதனம் செய்யாதவன் ஜெருசலத்திற்குள் வரமாட்டான் என்று பைபிள் சொல்லும் முன்னறிவிப்பு பொய்யாகி விட்டதே!
  17. சிரங்கு வந்த மொட்டைத்தலையனோ அரை மொட்டையனோ தீட்டு, தீட்டு என்று கத்தினால் சொறி, சிரங்கு போய்விடும் என்று பைபிள் சொல்லும் அற்புதச் சட்டத்தின் விளக்கம் என்ன?
  18. பைபிளில் சொல்லிக் காட்டியுள்ளபடி கர்த்தர் அம்மணமாகத்தான் ஓடுவாரா?
  19. பைபிளில் சொல்வது போல கர்த்தர் ஆந்தையைப் போல அலறி, நரியைப் போல ஊளையிடுவாரா?
  20. கர்த்தர் மனஸ்தாபப்பட்டு இளைத்துப் போவாரா?
  21. நான் ஒரு லூசு என்று பவுல் பைபிளில் தன்னைப்பற்றி சுய அறிமுகம் செய்கிறாரே! அந்த பைத்தியம் எழுதி வைத்தவை எப்படி வேதமாக முடியும்?
  22. இது எனது அபிப்பிராயம் என்று பவுல் சொல்லுவதெல்லாம் வேதமா?
  23. நான் விசாரித்து அறிந்ததை சொல்லுகின்றேன் என்று லூக்கா சொல்லுவது உங்களுக்கு வேதமா?
  24. ஏசுவுக்கு முத்தம் கொடுத்து அதுவும் ஓயாது முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்து காலில் தைலம் பூசிவிட்டாளே! அந்தப் பெண்ணை ஏசு தடுக்காமல் காலைக் காட்டிக் கொண்டிருந்ததேன்?
  25. விதவையையும், விவாகரத்தான பெண்ணையும் திருமணம் முடிக்கக்கூடாது என்பதுதான் கர்த்தர் சொல்லும் அற்புதச் சட்டமா?
  26. ஓணான் என்பவன் தனது விந்தை தனது அண்ணன் பொண்டாட்டியோடு உடலுறவு கொள்ளும் போது தரையில் விட்டதற்காக அவனை தண்டித்த கர்த்தர், அவளோடு விபச்சாரம் செய்ததைக் கண்டிக்காதது ஏன்?
  27. ஏசுவை கெட்ட நட்த்தை உள்ளவர் என்று பைபிளை ஆங்கிலத்தில் வெளியிட்ட கிங் ஜேம்ஸ் என்ற மன்னர் சொல்லியுள்ளாரே! அதுக்கு உங்கள் பதில் என்ன?
  28. திருக்குர்ஆன் மறுமையில் கிடைக்கும் பேறுகளைக் குறிப்பிட்டு சொல்லும் வசனங்களைக் கொச்சையாகச் சொல்லுகின்றீர்களே, ஒரு மனைவியை விட்டவனுக்கு அது போல நூறு மனைவி கிடைக்கும் என்று சொல்லித்தானே ஏசு உங்களையும் ஊழியம் செய்யக் கூப்பிடுகின்றார். உங்களுக்கு மட்டும் அது நியாயமா?
  29. ஒருவனை சபிக்கின்றோம் என்ற பெயரில் கூறுகெட்டதனமாக கர்த்தர் சபிப்பதாக பைபிளில் உள்ளதே! அது சரியா?
  30. கடவுளைத் துதிப்பதாக வரும் இடங்களில் கூட மச்சங்களே! ஆழங்களே! கிழவிகளே! குமரிகளே! பெரியோர்களே! தாய்மார்களே! என்ற ரீதியில் பைபிள் வழ வழா என்று பேசுகின்றதே! இதுதான் இறைவேதமா?

இது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை நாம் கேட்க, ஆடிப்போன சான் தரப்பினர் திருக்குர்ஆனுக்கு முன்னால் சரண்டர் ஆகிவிட்டனர்.
சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை
மேற்கண்ட பழமொழி இவர்களுக்கு கனகச்சிதமாக பொருந்திப்போகும். காரணமென்னவென்றால், முதலில் திருக்குர்ஆன் அனைத்து விஷயத்திற்கும் தீர்வு சொல்லும் வேதம் என்கின்றீர்களே! அப்படியானால், தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற வணக்கங்கள் குறித்து முழுமையாக குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா? என்ற ரீதியில் தான் முக்கால் வாசி கேள்விகளை எழுப்பினர்.
அதற்குரிய விளக்கமும் குர்ஆனிலேயே உள்ளது. நபியவர்கள் வசனங்களை ஓதிக்காட்டிய பிறகு, தான் ஓதிக்காட்டிய வசனங்களுக்கு விளக்கம் சொல்லுவதற்காகத்தான் அல்லாஹ் தனது நபியை அனுப்பியதாக கூறுகின்றான். அவர்களது விளக்கத்தில் இதற்கான விபரங்கள் உள்ளன என்று பீஜே சொல்லச் சொல்ல திரும்பத் திரும்ப கேட்ட அதே கேள்வியையே சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்பது போல ஜெர்ரி தாமஸ் கேட்டுக் கொண்டே இருந்தது மிகவும் கேலிக்குரியதாக இருந்தது.
குர்ஆனில் முரண்பாடு என்று சொல்லிக் கொண்டு அவர்கள் வைத்த வாதங்கள் சிறுபிள்ளைத்தனமாக அமைந்திருந்தன.
குர்ஆனில் எழுத்துக்கள் மாறியுள்ளனவே! அவைகளை ஒரு சில நபித்தோழர்கள் மாற்றி ஓதியுள்ளனரே! என்று பெரிய பட்டியல் வாசிக்க, அவை எதையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஏனெனில் அவை ஓரிருவர் அறிவிக்கக்கூடிய செய்திகள்; திருக்குர்ஆன் என்பது கல்வியாளர்களின் உள்ளங்களில் பாதுகாக்கப்படும் என்று இறைவன் சொல்லியுள்ளான். தற்போது கோடிக்கணக்கான மக்கள் மனனம் செய்து வைத்துள்ள மூலப்பிரதிகளுக்கு மாற்றமாக உள்ள இந்தச் செய்திகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொன்னவுடன் அவர்களுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் விழிபிதுங்கினர்.
விவாதத் துளிகள் :
  • விவாதத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்யக்கூடாது என்றும், அவ்வாறு ஒளிபரப்பு செய்தால் நாங்கள் விவாதிக்க வரமாட்டோம் என்றும் சொல்லி அதை ஒரு நிபந்தனையாக்கியதால், இணையதளத்தில் நாம் ஒளிபரப்பு செய்ய முடியவில்லை
  • ஆனால், தமிழகம் மற்றும் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மாநிலத் தலைமையகத்தை தொடர்பு கொண்ட நமது சகோதரர்கள் ஆவலோடு அவ்வப்போது விவாதத்தின் நிலவரங்களைக் கேட்டறிந்து கொண்டனர்.
  • உலகத்தின் பல பகுதிகளிலிருந்துமுள்ள நமது சாகோதரர்கள் வைத்த வேண்டுகோளுக்கிணங்க விவாதம் முடிந்த மறுநாள், 30.04.12 திங்கள் மற்றும் 01.05.12 செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள்,ஆன்லைன் பீஜே இணையதளத்தில் விவாதத்தை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாக அறிவிப்பு செய்யப்பட்டது.
  • இதற்கு பிறகு தான், பல நாடுகளிலிருந்துமுள்ள இணையதள நேயர்களின் அன்புத் தொல்லை கொஞ்சம் குறைந்தது.
  • பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் நடைபெற்ற விவாத டிவிடிக்களில் ஒளிப்பதிவு செய்யும் போது நாம் எந்தக் கூடுதல் குறைவும் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு பிரேமிலும் நேரத்தை குறிப்பிட்டு ஒளிப்பதிவு செய்திருந்தோம்.
  • ஆனால், ஒப்பந்தத்திலும் இவ்வாறு தான் நேரத்தோடு ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று இருக்கும் நிலையில் சான் தரப்பினர் தங்களது இணையதளத்தில் யூ ட்யூப் இல் வெளியிட்ட வீடியோவில் நேரம் பதிவு செய்யப்படாமல் இருந்ததை சுட்டிக்காட்டி இந்த விவாதத்திலாவது ஒப்பந்த அடிப்படையில் நேரப்பதிவோடு ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டது.
  • நமது தலைமையகத்தில் இந்த விவாதம் நடைபெற்றதால் நம் இடத்திற்கு வருகை தந்திருந்த கிறித்தவ தரப்பு விவாதக் குழுவினர், நல்ல முறையில் நாம் உபசரித்ததற்காக நமக்கு விவாத இறுதியில் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
  • விவாதத்தில் ஒரு நபரை அழைத்து வந்திருந்தனர். அவர் திருக்குர்ஆன் வசனங்களை அரபியில் ஓதிக் காட்டினார். அதற்காகவே அவரைத் தேடிப்பிடித்து அழைத்து வந்திருந்தனர் போலும். அவர் குர்ஆன் வசனங்களையும் அரபி உச்சரிப்புகளையும் கொலை செய்தார்.
  • அவரை வைத்து ஒரு சில பைபிள் வசனங்களை அரபியில் வாசித்துக் காட்டிவிட்டு திருக்குர்ஆனைப் போல நாங்களும் கொண்டு வந்து விட்டோம் என்று ஜெர்ரி அவர்கள் காமெடி பண்ண, அதற்கு பீஜே இவர் அரபியில் வாசித்த லட்சணத்தை அரபி படித்தவர்களிடம் போய்க் கேளுங்கள். இவரைக்கொண்டு போய் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தான் சேர்க்கச் சொல்லுவார்கள் என்று சொல்ல சபையில் ஒரே சிரிப்பலை.
  • விவாதம் செய்யும் போது எதிர்த்தரப்பில் விவாதித்த ஒரு நபர் கொஞ்சம் அதிகப் பிரசிங்கித்தனமாக தண்ணியடித்துவிட்டு வந்து உளறும் மனிதரைப்போல பேசிக் கொண்டு எழுந்து நின்று வரம்பு மீறினார். இது போன்ற போதையில் உளறும் ஆட்களையெல்லாம் இனிமேல் விவாதிக்க அழைத்து வரவேண்டாம் என்று பீஜே சொல்ல, ஜெர்ரியும் சபையிலேயே அந்த போதை பார்ட்டியைக் கண்டித்தார்.
  • கிறுக்குத்தனமாகவும்,ஏட்டிக்குப் போட்டியாகவும் குர்ஆன் வசனங்களைக்காட்டி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சகோதரர் பீஜே அவர்கள் ஒவ்வொரு குர்ஆன் வசனங்களாக மேற்கோள்காட்டியும், லாஜிக்காகவும், பைபிள் வசனங்களை இணைத்தும் சொன்ன பதில்கள் ஆக்கப்பூர்வமாகவும், அறிவிப்பூர்வமாகவும் இருந்தன.
  • கர்த்தர் தொடைக்குள் கையை விட்டு யாக்கோபின் மர்ம உறுப்பைத்தான் பிடித்தார் என்று கலீல் ரசூல் சொல்ல, அதற்கு ஆதாரம் கேட்ட எதிர்தரப்பினருக்கு கிரேக்க மொழியில் ஆணுறுப்பைத்தான் கர்த்தர் பிடித்தார் என்று வரும் ஆதாரத்தை எடுத்துக்காட்டியவுடன் கேட்டவர் கப்சிப்.
  • தேனீக்கள் பூக்களில் உண்பதோடு மட்டுமல்லாமல், கனிகளிலும் உண்கின்றது என்று சொல்லும் குர்ஆன் வசனம் பொய் என்று ஜெர்ரி சொல்ல மறு அமர்விலேயே அதற்கான ஆதாரத்தை அள்ளிப்போட்டவுடன் ஜெர்ரியும் கப்சிப். இந்த நூற்றாண்டில் கூட இவர்கள் அறிந்து கொள்ளாத உண்மைகளையும் 1400 வருடத்திற்கு முன்பாக போகிற போக்கில் திருக்குர்ஆன் சொல்லியுள்ளது என்பதை நினைக்கும் போது. இது அல்லாஹ்வுடைய வேதம் தான் என்பது மறுபடியும் நிரூபணமாகின்றது.

விவாதத்தில் பீஜே சொன்னதை உண்மைப்படுதிய கிறித்தவ தரப்பு பார்வையாளர்கள் :
விவாத டிவிடிக்களை வெளியிட வெட்கப்பட்ட கிறித்தவ போதகர்கள்:
வாதத்தை துவக்கிய பீஜே அவர்கள் தனது முன்னுரையில் பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பிலான விவாதத்தில் பைபிள் இறைவேதமில்லை என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபித்தோம். எந்த அளவிற்கென்றால், பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பிலான விவாத டிவிடிக்களை நீங்கள் வெளியிட வெக்கப்படுகின்ற அளவிற்கு உங்களை அந்த விவாதம் தள்ளியுள்ளது என்ற உண்மையை தனது துவக்க உரையிலேயே போட்டு உடைத்தார்.
அதற்கு பதிலளித்த சான் தரப்பினர் நாங்களும் டிவிடிக்களை வெளியிட்டுள்ளோம் என்று சப்பைக்கட்டு பதிலை கொடுத்தனர். ஆனால், அவர்களது இந்த மழுப்பல் சில மணி நேரத்திலேயே வெளியானது. உணவு இடைவேளையின் போது நம்மைச் சந்தித்த கிறித்தவ தரப்பிலிருந்து பார்வையாளர்களாக வந்து அமர்ந்திருந்த கிறித்தவ சகோதரர்கள் நம்மிடம் பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பிலான விவாத டிவிடிக்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. உங்களால் தர இயலுமா? என்று நம்மிடம் கேட்க, விவாத அரங்கத்திற்குள் ஒப்பந்தப் பிரகாரம் எதுவும் கொடுக்கக்கூடாது என்று இருப்பதால் அருகில் உள்ள எங்களது அலுவலகத்தில் டிவிடிக்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று பதிலளித்தனர். இந்த விஷயத்தை பீஜே அவர்கள் தனது உரையில் விவாதத்தின் இரண்டாவது அமர்வில் சுட்டிக்காட்டியவுடன் சான் தரப்பினர் முகம் சுருங்கிவிட்டது.
முதல் நாள் விவாதத்தின் இறுதியிலும், மறுநாள் விவாதம் முடிந்த பிறகும் பல கிறித்தவ சகோதரர்கள் நமது அலுவலகத்திற்கு வந்து விவாத டிவிடிக்களை வாங்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
வரும்! ஆனா வராது!
ஆரம்பத்தில் பீஜே அவர்கள், தனது உரையில் இறைவனுடைய இலக்கணத்தை சொல்லக்கூடிய வேதத்தில் இப்படி கிறுக்குத்தனங்கள் இருக்கலாமா? என்று கேட்டு பைபிளில் உள்ள சில உளறல்களை பட்டியலிட்டார்.
அதற்கு ஆவேசமாக பதிலளித்த ஜெர்ரி அவர்கள், பைபிள் குறித்து கேட்கப்படும் கேள்விகள் அனைத்திற்கும் நாங்கள் பதிலளிப்போம் என்று ஒரு வேகத்தில் கூறிவிட்டார். பைபிளில் உள்ள கேவலங்களாஇயும், ஆபாசங்களையும், அசிங்கங்களையும், உளறல்களையும் அள்ளிப்போட்டப் போட செய்வதறியாது திகைத்தவர்கள், இதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லமாட்டோம் என்று கூறி அந்தர்பல்டி அடித்தனர்.
பெண்ணுரிமை பேணும் லட்சணம் இதுதானா?:
பெண்களை இஸ்லாம் அடிக்கச் சொல்கின்றது. பெண்களிடம் இஸ்லாம் தனது இஷ்டத்திற்கு அவர்களது கணவனை உடலுறவு கொள்ளச் சொல்லி அனுமதி வழங்குகின்றது. இது சரியா? என்று ஏதோ பெண்கள் மேல் ரொம்ப அக்கறையுள்ளவர்கள் போல கேள்விகளைக் கேட்டனர்.
அதற்கு விளக்கமும் அளித்துவிட்டு, இதைக் கேட்க உங்களுக்கென்ன அருகதை இருக்கின்றது என்று கேட்டு, கர்த்தர் அடுத்தவன் மனைவியை எடுத்து இன்னொருவனுக்கு கையளித்தாரே! இது தான் பெண்களுக்கு நீதி செலுத்தும் லட்சணமா? பாதிரியாரிடம் அழைத்து சென்று கன்னிப்பரிசோதனை செய்யச் சொல்லுவதும், விபச்சாரம் செய்துவிட்டாளா? இல்லையா? என்பதற்கு மனைவியை நாற்றமெடுத்த தண்ணீரை குடிக்கச் சொல்லுவதும், சபைகளில் பெண்கள் பேசக்கூடாது என்று சொல்லுவதும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களை பாடாய்ப்படுத்தி எடுப்பதும் தான் பெண்ணுரிமை பேணும் லட்சணமா? என்று கேட்க கடைசி வரைக்கும் வாய்திறக்கவில்லை.
விளக்கம் கொடுப்பது ஒப்புக் கொள்வதா?:
முத்ஆ திருமணம் செய்வது சரியா?, அடைமைப் பெண்களுடன் உறவு வைக்கலாமா? என்ற ரீதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, திருக்குர்-ஆன் என்பது, சிறுகச் சிறுக 23ஆண்டுகள் இறக்கப்பட்ட வேதம். ஆரம்பத்தில் அந்த மக்களிடத்தில் அறியாமைக்காலத்திலிருந்த பழக்க வழக்கங்களை ஒவ்வொன்றாகத்தான் இறைவன் தனது வேத அறிவிப்பின் மூலம் தடை செய்தான். அந்த அடிப்படையில் ஆரம்பகட்டத்தில் எப்படி வட்டி, மது போன்ற விஷயங்கள் அனுமதிக்கப்பட்டு, பிறகு தடை செய்யப்பட்டதோ அதைப் போல மேற்கண்ட பழக்க வழக்கங்களும் அந்த மக்களிடத்திலிருந்த நிலையில், பின்னர் வேத அறிவிப்பின் மூலம் தடுக்கப்பட்டுவிட்டது என்று கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல பீஜே விளக்கமளித்தார். அனைத்தையும் கேட்டுவிட்டு தாங்கள் சொன்ன குற்றச்சாட்டுக்களை பீஜே ஒப்புக் கொண்டுவிட்டார் என்று சொன்னார்களே! பார்க்கலாம். இவர்களது சிந்தனைத்திறன் இவ்வளவு தான் என்பதை அங்கே தெளிவாக அறியமுடிந்தது.
விசித்திரமான விவாதம்
ஒரு மாணவனுக்கு தான் பரீட்சை எழுதப் போவதற்கு பல மாதங்களுக்கு முன்பே அவனது தேர்வு வினாத்தாளை கொடுத்தால் எப்படியிருக்குமோ அதைப்போலத் தான் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி இவர்கள் ஓட்டமெடுத்த நாள் அன்றே, இப்போது வைக்கப்பட்ட விவாதத்தில் பெரும்பகுதி வைக்கப்பட்ட ஆதாரத்தையும், வாதங்களையும் நாம் வைத்துவிட்டோம். அந்த விவாதத்தை நாம் நேரடியாக ஆன்லைன்பீஜே இணையதளத்திலும் ஒளிபரப்பு செய்தோம். அதை நாம் நேரடி ஒளிபரப்பு செய்ததை பார்த்துவிட்டு வந்திருந்த இவர்களுக்கு அந்த வாதங்களுக்கு பதில் சொல்ல இயலவில்லை என்றால் உண்மையிலேயே இது ஒரு விசித்திரமான விவாதம் தான் என்று பீஜே தனது இறுதி உரையில் குறிப்பிட்டார்.
பீஜே தர்காவிற்கு போனது ஆதாரமாகுமா?
1986 ஆம் ஆண்டு பீஜே தனது பத்திரிகையில் சூனியம் உண்டு என்று சொன்னாராம். அதை நாங்கள் ஆதாரமாகத் தருகின்றோம் என்று கூறி சில ஆதாரங்களை மேற்கோள்காட்டினார்கள். நாங்கள் அறியாமல் இருந்த போது செய்த தவறை ஆதாரமாகக் காட்டுகின்றீர்கள். 1986 அல்ல அதற்கு இன்னும் சில வருடங்களுக்கு முன்னால் சென்று தேடிப்பார்த்தால் தர்கா தட்டு தகடு தாயத்தை நான் ஆதரித்ததற்கும் உங்களுக்கு ஆதாரம் கிடைக்கும். இதுவெல்லாம் ஒரு ஆதாரமா? என்று கேட்க அந்த கேள்வி அதோடு சப்பையாகிவிட்டது.
புளித்துப்போன பழைய கஞ்சி
பரவலாக குர்-ஆனின் மீது வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு, சல்மான் ருஷ்டி என்ற கிறுக்கன் எழுதிய சாத்தானிய வேதம் என்ற நூலில் அவன் வைக்கும் குற்றச்சாட்டு என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். அதை குடித்துவிட்டு வந்தது போல வந்து பேசிக் கொண்டிருந்த சான் தரப்பு சகோதரர் ஒருவர், ஏதோ மிகப்பெரிய ஆதாரத்தை எடுத்து வைப்பது போல எடுத்து வைக்க, இதற்கு 1990ஆம் வருடத்திலேயே, வேதம் ஓதும் சாத்தான்கள் என்ற தலைப்பில் ஒரு நூல் வெளியிட்டு பதில் கொடுத்துவிட்டோம் என்று பதிலையும் பிரிண்ட் அவுட் எடுத்துக்காட்ட அந்த வாதம் புஷ் என்று போகிவிட்டது. இது புளித்துப்போன பழைய கஞ்சி என்பது அவருக்கு தெரியவில்லை போலும்.
தேவதூதர்களுக்கு எதுவும் பத்தாதா?
சுவனத்தில் அழகிய பெண்களை மணமுடித்து வைப்போம் என்று அல்லாஹ் சொல்லிக்காட்டும் வசனங்களை மேற்கோள்காட்டி இப்படித்தான் உங்கள் வேதம் உங்களை அழைக்கிறது என்று குற்றச்சாட்டுகளை வைத்தனர்.
அனைவரும் மரித்தவுடன் வானுலகத்தில் தேவ தூதர்களாக வாழ்வார்கள் என்பது கிறித்தவ நம்பிக்கை. அப்படியானால், வானிலுள்ள தேவ தூதர்கள் கீழுலகத்திற்கு இறங்கி வந்து இங்குள்ள பெண்களோடு உடலுறவு கொண்டார்கள் என்று ஆதியாகமத்தில் உள்ளதே. தேவதூதர்களுக்கு அங்கே கிடைப்பது போதவில்லை என்று தானே இங்கே இறங்கி வருகிறார்கள் என்றும், ஒரு மனைவியை தியாகம் செய்தால் உனக்கு நூறு மனைவி கிடைப்பாள் என்று சொல்லித்தானே ஏசுவும் உங்களை ஊழியம் செய்யக் கூப்பிடுகின்றார் என்றும் பீஜே கேட்க அமைதியானார்கள் ஊழியக்காரர்கள்.
-ஆன்லைன் பிஜெ 

Monday, April 23, 2012

இலங்கையில் நடந்த விவாதம்!


எப்படித் தான் இந்த மத்ஹபை மார்க்க சட்டம் என்று வைத்துக்கொண்டு இத்தனை நூற்றாண்டுகளை கடத்தினார்களோ தெரியவில்லை ?

அல்லாஹ்வின் வேதமும், அண்ணல் நபி (ஸல்) அவர்களுடைய அப்பழுக்கற்ற வாழ்க்கை வரலாறும் தள்;ளத் தெளிவாக நம்மிடம் இருக்கையில் இந்த அருவருக்கத்தக்க ஆபாசங்கள் மலிந்து விட்ட அசிங்கங்களைக் கொண்டு ஏன் தான் வாழ்க்கையை கழித்தார்களோ, மக்களை வழி நடத்தினார்களோ தெரியவில்லை?

அல்லாஹ்வும்இ அல்லாஹ்வின் தூதரும் சொல்லாத ஒன்றை கற்பனையாக சொல்வது மனிதர்களின் கற்பனையில் உருவான சட்டத்தின் மூலம் தீர்ப்பளிப்பது யூதர்களின் வேலை ஏகஇறைவனை ஏற்றுக் கொண்ட முஸ்லீம்களின் வேலை அல்ல.

3:23. வேதம் எனும் பாக்கியம் வழங்கப்பட்டோரை 27 நீர் அறியவில்லையாஅவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பதற்காக அல்லாஹ்வின் வேதத்தை நோக்கி அழைக்கப்படுகின்றனர். பின்னர் அவர்களில் ஒரு பகுதியினர் அலட்சியம் செய்து புறக்கணிக்கின்றனர்.

3: 24. குறிப்பிட்ட நாட்களே தவிர நரகம் எங்களைத் தீண்டாது என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். தாமாக இட்டுக் கட்டிக் கொண்டது அவர்களது மார்க்க விஷயத்தில் அவர்களை ஏமாற்றி விட்டது.

சூஃபிக்களின் வழி கொட்டைக் கொள்கைகள் தான் இந்த மத்ஹபு என்பதை ஏன் விளங்கிக் கொள்ள மறுக்கின்றார்களோ தெரிய வில்லை?

கடந்த இரண்டு நாட்கள் நடந்த விவாதத்தில் அதே ச(ஜ)மாளி ஸ்டைலில் கழுவிய மீனில் நழுவிய மீனாய் நடக்க முயற்சித்தும் முடியவில்லை.

அவரைப் போன்று முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் கலையே இவர்களிடத்திலும் இருந்ததைக் காண முடிந்தது.

கடந்த மத்ஹபு வாதிகளின் விவாதத்திற்கும் இந்த விவாதத்திற்கும் ஒரு முன்னேற்றம் தெரிந்தது அது என்னவென்றால் ?

மத்ஹபில் உள்ள ஆபாசத்தை மட்டும் தானே நீங்கள் விமர்சிப்பீர்கள் வேறெந்த சட்டத்தையும் பேச மாட்டீர்கள் என்று அவர்களே மீண்டும் மீண்டும் கூறி ஒத்துக் கொண்டனர்.

மத்ஹபின் அனைத்து சட்டங்களையும் அக்கு வேறு ஆணி வேறாக பீஸ் பீஸாக பிய்த்த எறிந்தப் பிறகும் மற்ற சட்டங்களைப் பற்றி பேச வில்லை என்றும் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை என்றும் ஜ(ச)மாலி ஸ்டைலில் மீண்டும் மீண்டும் கூறி நேரத்தை வீணடித்தது எரிச்சலைத் தான் ஏற்படுத்தியது.

சமீபத்திய உணர்வில் கூட தேவ்பந்த் மதரஸாவின் தலாக் சட்டத்தை விட்டு கிழி கிழி என்று கிழித்துத் தள்ளினார் சகோ: பீஜே அவர்கள்.

இறைநம்பிக்கையாளர்கள் குடும்ப வாழ்க்கையில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பதைக் கூட திருமறைக்குர்ஆனும், திருமறைக்குர்ஆனைப் போன்று வாழ்க்கையை அமைத்துக் கொண்ட அண்ணல் நபி(ஸல்) அவர்களும் இங்கிதமாக சொல்லி இருக்கும் பொழுது அதை ஓரம் கட்டி விட்டு இத்தனை அசிங்கமாக, ஆபாசமாக பாடம் நடத்தும் மத்ஹபை கட்டி அழுவதேன் என்று மௌலவி எம்.ஐ.சுலைமான் அவர்கள் அழகாக எடுத்துரைத்தார் இந்த ஒன்றுக்காகவாவது அவர்கள் ஒழுங்காக பதில் சொல்லி இருக்க வேண்டாமா 

தவ்ஹீத் எழுச்சி வருவதற்கு முன் இறையடிச் சேர்ந்தவர்கள் நரகம் செல்வதாக இருந்தால் கண்டிப்பாக இந்த சட்டங்களை எழுதி மார்க்கமாக்கிய மேதாவிகளுக்கு இரண்டு மடங்கு தண்டனையை கொடு இறைவா !! என்று கேட்கும் நிலையே உருவாகலாம்.
  
33:66. அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் ''நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதாஇத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுவார்கள்.

33:67. ''எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும்எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்'' எனவும் கூறுவார்கள்.

33:68. ''எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!''எனவும் கூறுவார்கள்.

அதிரை ஃபாரூக்

Flash News ...

இலங்கை விவாதத்தில் தோற்ற போலி சுன்னத் ஜமாஅத்தினராகிய தப்லீக் ஜமாஅத்தினர் குர்ஆனில் தாங்களாகவே சில விஷயங்களை சேர்த்துக் கொண்டதாக விவாதத்தின் போது ஒப்புக் கொண்டனர். மேலும் கேவலமான தோல்வியையும் அடைந்தனர். தோல்வியைமறைப்பதற்காக தவ்ஹீத் ஜமாஅத்தினர் குர்ஆனை மறுப்பதாக குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர். இவர்கள் இப்போது பரப்பும் அனைத்துக்கும் முன்னரே நமது தமிழாக்கத்தில் பதில் அளித்துள்ளோம். அதை அறிந்து கொள்ள...

இலங்கையில் விவாதிக்கப்பட்ட  தலைப்பு பற்றிய உரைகளைக் காண


Thursday, March 29, 2012

இலங்கைக்கு எதிரான கேலிக் கூத்தான தீர்மானம்



இலங்கைக்கு எதிராக ஐநா சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் குறித்து காரசாரமான வாதப்பிரதி வாதங்கள் தூள் பறக்கின்றன. இந்த விவாதங்கள் அனைத்தும் உண்மைக்குமாற்றமாகவும் உலக மக்களை ஏமாற்றும் வகையிலும் உள்ளன என்பது நமது நிலைப்பாடாகும்.

அமெரிக்காவும் அனைத்து உலக நாடுகளும் மக்களை முட்டாள்களாக்கப் பார்க்கின்றன என்பதற்கும். தமிழர்கள் பெயரில் இயக்கம் நடத்தும் அனைவரும் தமிழர்களை முட்டாள்களாக்கப்பார்க்கின்றனர் என்பதற்கும்  ஆதாரமாக ஐநாவில் கொண்டு வந்த தீர்மானம் அமைந்துள்ளதால் அறிவுடைய மக்கள் யாரும் இது போன்ற கிறுக்குத்தனங்களை ஆதரிக்க முடியாது. மக்களை ஏமாற்றும் இது போன்ற தீர்மான்ங்களை சிந்தனையாளர்கள் ஆதரிக்கமாட்டார்கள் என்பட்தை முதலில் நாம்தெளிவுபடுத்துகிறோம்.

நாட்டில் உள்ள ஊடகங்களும்தமிழக மக்களை உசுப்பேற்றி வந்த தமிழினத் தலைவர்களும் மக்களிடம் என்ன சொன்னார்கள்?இலங்கை அதிபர் ராஜ்பக்சே போர்க்குற்றம் செய்திருக்கிறார். நிராயுதபாணிகளைக் கொன்று குவித்துள்ளார். சரணடைய வந்ததமிழர்களை ஏமாற்றி சுட்டுத் தள்ளி இருக்கிறார். சிறுவர்களையும் பெண்களையும் கூட கொன்று குவித்துள்ளார். அவரைச் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி போர்க்குற்றம் செய்ததற்காக மரண தண்டனை வாங்கிக் கொடுக்கப் போவதுபோலவும் அந்த நேரம் நெருங்கி விட்டது போலவும் படம் காட்டினார்கள்.

திரும்பத் திரும்ப ஊடகங்கள் காட்டிய கோரக்காட்சிகளும் அதற்கு நியாயம் கிடைக்க உள்ளது என்ற பிரச்சாரமும் எந்த அளவுக்கு இருந்தன என்பதை நாம் அறிவோம். அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் என்ன என்பதை அறியாமலே இவர்களே தீர்மானத்தைத் தயாரித்தவர்கள் போல வீறாப்பு காட்டினார்கள். ஆனால் ஐநாவில் கொண்டு வந்த தீர்மானத்தில் இவர்கள் சொன்னது போல் ஒன்றுமே இல்லை.

தீர்மானத்தின் விவரம்:

2009 மே மாதத்தில் இலங்கை அரசு விடுதலைப் புலிகள் இடையே போர் முடிவுக்கு வந்த நிலையில்போரின் இறுதிக் கட்டத்தில் ராணுவத்தினரின் மனித உரிமை மீறல்கள் மீது நடவடிக்கைபோரால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் போன்றவற்றுக்கு இலங்கை அரசுக்கு ஆண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டது. அந்நாட்டு அரசு நியமித்ததெரிய வந்த பாடங்கள் மற்றும் மறுசீரமைப்பு கமிஷன்(எல்.எல்.ஆர்.சி.)’ அளித்த பரிந்துரைகளை அமல்படுத்தும் என்று அமெரிக்கா எதிர்பார்த்தது. ஆனால்,எல்.எல்.ஆர்.சி.யின் பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததுமனித உரிமை மீறல்கள் மீது கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தி அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. இதை நிறைவேற்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சில் பரிசீலிக்க வேண்டும். எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை அரசுடன்விவாதித்துஉரிய ஆலோசனைகளை ஐ.நா. கவுன்சில் அளிக்க வேண்டும்.

இது தான் தீர்மான வாசகம்

அதாவது இலங்கை அரசு நியமித்த கமிஷன் அளித்த பரிந்துரைகளை இலங்கை அரசு நிறைவேற்றவில்லையாம். அதை நிறைவேற்ற வேண்டுமாம். இது தான் தீர்மானத்தின்சாராம்சம்.

இதன் மூலம் இலங்கையில் வாழும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சில நிவாரணங்கள் கிடைக்கலாம். ஆனால் இவர்கள் விழுந்து விழுந்து படம் காட்டியதற்கு ஒரு தீர்வையும் காணோம். போர்க்குற்றவாளியை ஐநா பாதுகாப்புப் படை பிடித்து வந்துதூக்கில் போடப்போவது போல் என்னமோ நடக்கப் போவதாகப் பிரச்சாரம் செய்து வந்தார்கள். பூ இவ்வளவு தானாஇதற்குத் தானா இந்த ஆர்ப்பாட்டம்?

எந்தக் கொடுங்கோல் அரசாக இருந்தாலும் செய்ய வேண்டிய கொடுமைகளைச் செய்து விட்டு எஞ்சி இருப்பவர்களுக்கு சில வசதிகளைச் செய்து கொடுப்பது எல்லா நாடுகளிலும் நடக்கக் கூடிய ஒன்று தான். இந்தத் தீர்மானம் இல்லாவிட்டாலும் இதைச் செய்வதற்கு இலங்கைக்கு எந்தச் சங்கடமும் கிடையாது. தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதோவேலை வாய்ப்பு கொடுப்பதோ ராஜபக்சேவுக்குச் சிரமமானதல்ல. சொல்லப் போனால் நாட்டில் பிரச்சனை இல்லாமல் இருக்க இது அவருக்கு உதவவே செய்யும்.

தீர்மானம் என்ற பெயரில் உலக மக்கள் அனைவரையும் எல்லா அரசுகளும் ஏமாற்றியுள்ளன. அவர்களை மன்னிக்கலாம். ஆனால் தமிழர்களின் காவலர்களாக வேடம் போடும் தமிழ்த் தலைவர்கள் இந்தத் தீர்மானத்தை பார்த்த பிறகாவது அமெரிக்காவும் மற்றநாடுகளும் சேர்ந்து அயோக்கியத்தனம் செய்துள்ளன என்று கொந்தளிக்க வேண்டுமல்லவாஆனால் என்னால் தான் இந்த வெற்றி என்று கருனாநிதியும் ஜெயலலிதாவும் மற்ற அனைத்து தமிழ்ச் சமுதாயக் காவலர்களும் கூறி தமிழக மக்களைஏமாற்றுகின்றனர். ஒன்றும் இல்லாத ஒரு விஷயத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தால் இவர்கள் அமெரிக்கக் கைக்கூலிகளாக இருக்க வேண்டும். அல்லது அடி முட்டாள்களாக இருக்க வேண்டும்.

பயனற்ற ஒரு விஷயத்துக்காக உலகமே சேர்ந்து குரல் கொடுத்தாலும் தவ்ஹீத் ஜமாஅத் அந்த வழியில் செல்லாது.

அடுத்ததாக ராஜ பக்சே போர்க்குற்றம் செய்தார் என்பது உண்மை தான். ஆனால் ராஜபக்சே சந்தித்த நிலையை எந்த நாடு சந்தித்தாலும் அந்த நாடுகள் ராஜபக்சே போல் தான் செயல்படும். தனது நாட்டில் தலைவலியைக் கொடுத்துக் கொண்டு ஆயுதம் தாங்கிப் போராடுவோரை அழிக்க இது போன்ற வழிமுறைகளைத் தான் கையாள்வார்கள். சில நாடுகள் இது போல் செய்யவில்லை என்றால் அவர்கள் ராஜ்பக்சே சந்தித்தது போன்ற நிலையைச் சந்தித்தது இல்லை. அந்த வாய்ப்பு இல்லாததால் தான் சில நாடுகள் போர்க்குற்றம் செய்யவில்லையே தவிர மற்ற எல்லா நாடுகளுமே போர்க்குற்றவாளிகள் தான்.

ஜப்பானில் சரணடைந்த மக்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி அப்பாவிகளைக் கொன்றதற்கு நிகரான ஒரு போர்க்குற்றம் உலகில் நடந்தது இல்லை. வியட்நாம்கவுதமாலா,ஆப்கானிஸ்தான்ஈராக் ஆகிய நாடுகளில் அமெரிக்க மிருகங்கள் நடத்திய போர்க் குற்றத்தில் இலட்சத்தில் ஒரு பங்காகக் கூட ராஜபக்சேயின் போர்க் குற்றம் இருக்கவில்லை.

ஏன் நமது நாட்டிலும் கூட மாவோயிஸ்டுகளுக்கு எதிராகவும் காஷ்மீர் மக்களுக்கு எதிராகவும் நடந்து கொண்டிருப்பதும் ராஜ்பக்சே செய்தது போன்ற குற்றம் தான். தமிழகத்தில் நக்ஸலைட்டுகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் தேவாரம் என்ற அதிகாரி தலைமையில் நடந்த வேட்டைகளும் இந்த வகையானது தான். வீரப்பனைத் தேடுவதாகச் சொல்லிக் கொண்டு அப்பாவி கிராம மக்களைக் கொன்று புதைத்ததும்,சித்திரவதை செய்ததும் இந்த வகையானது தான். ஏன் சமீபத்தில் நடந்த என்கவுண்டர்களும் கூட இந்த வகையானது தான். இவை அனைத்துமே சட்டப்படி செய்யக் கூடாத காரியங்கள் தான். இலங்கை அரசு செய்ததும் இது போன்றது தான்.

 இதனால் தான் எந்த நாடும் போர்க்குற்றம் தொடர்பான தீர்மானங்களைக் கொண்டு வருவதுமில்லை. ஆதரிப்பதும் இல்லை. நாளை நமக்கு எதிராகவும் இது போன்ற தீர்மானங்கள் வந்து விடுமே என்ற அச்சம் தான் இதற்குக் காரணம்.

இதன் காரணமாகவும் நாம் இதை ஆதரிக்க முடியாது. போர்க்குற்றம் என்று தீர்மானம் கொண்டு வந்தால் ராஜ்பக்சே போல் செயல்பட்ட ஜார்ஜ் புஷ் உட்பட அனைவருக்கும் எதிராகத் தீர்மானம் கொண்டு வரவேண்டும். உலகை ஏமாற்ற பெரிய போர் குற்றவாளி சிறிய போர்க்குற்றவாளிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தால் அதை ஆதரிக்க முடியாது. இந்தக் காரணத்தாலும் இந்தத் தீர்மானத்தை நாம் ஆதரிக்க முடியாது.

மேலும் இலங்கை அரசு எந்த மாதிரியான போர்க்குற்றம் செய்ததோ அதே போன்ற போர்க் குற்றங்களைச் செய்தவர்கள் தான் விடுதலைப்புலிகள்.

யாழ்ப்பானம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் இருந்து சொத்துக்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டு முஸ்லிம்களை வெளியேற்றினார்கள். ஒரு முஸ்லிம் கூட அங்கே இல்லாதவகையில் துடைத்து எறிந்தனர்.

மேலும் கிழக்கு மாகான முஸ்லிம்கள் வசிக்கும் ஊர்களுக்குள் புகுந்து பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்ற மாபாவிகள் தான் விடுதலைப் புலிகள்.

நாங்கள் இலங்கை சென்றிருந்த போது கொழும்பில் இருந்து புறப்பட இருந்த நாளில் இலங்கை விமான நிலையத்தில் திடீர் தாக்குதல் நடத்தி கொன்று குவித்தார்களே அவர்கள் அனைவரும் அப்பாவி மக்கள் தான். அரை  மணி நேரம் நாங்கள் முன்னதாகச்சென்றிருந்தால் அந்தப் பட்டியலில் நாங்களும் இடம் பெற்றிருப்போம்.

கணக்கெடுத்துப் பார்த்தால் ராஜபக்சேயை விட அதிகமான அப்பாவிகளைக் கொன்றவர்கள் தான் விடுதலைப் புலிகள். அவர்களும் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டும்.அவர்களை ஆதரிப்பவர்களும் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட் வேண்டும். அப்படி இருந்தால் தான் போர்க்குற்றம் குறித்த தீர்மானம் நேர்மையானதாக இருக்க முடியும்.

புலிகள் ஒழித்துக் கட்டப்பட்ட பின்னர் தான் தமிழர்களும் முஸ்லிம்களும் இலங்கையில் நிம்மதியாக வாழ முடிகிறது என்பதை நியாயமான பார்வை உள்ள யாரும் மறுக்கமாட்டார்கள்.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உலக முஸ்லிம் சமுதாயத்தால் மறக்க முடியாத விடுதலைப் புலிகளின் வெறியாட்டக் காட்சிகளில் சில.








காத்தாங்குடி பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த மக்கள் மீது புலி பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி சிறுவர்கள் முதியவர்கள் என எந்த வித்தியாசமும் பார்க்காமல் ராஜ பக்சேய்யைவிட படு பயங்கரமான குற்றத்துக்கு இவை சாட்சிகள். ராஜ பக்ச்சே கோவிலுக்குள் அல்லது சர்ச்சுக்குள் புலிகள்நடத்தியது போன்ற பயங்கரவாதத்தை நிகழ்த்தியதில்லை .
-ஆன்லைன் பிஜே 
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்