
அல்லாஹ்வின் வேதமும், அண்ணல் நபி (ஸல்) அவர்களுடைய அப்பழுக்கற்ற வாழ்க்கை வரலாறும் தள்;ளத் தெளிவாக நம்மிடம் இருக்கையில் இந்த அருவருக்கத்தக்க ஆபாசங்கள் மலிந்து விட்ட அசிங்கங்களைக் கொண்டு ஏன் தான் வாழ்க்கையை கழித்தார்களோ, மக்களை வழி நடத்தினார்களோ தெரியவில்லை?
அல்லாஹ்வும்இ அல்லாஹ்வின் தூதரும் சொல்லாத ஒன்றை கற்பனையாக சொல்வது மனிதர்களின் கற்பனையில் உருவான சட்டத்தின் மூலம் தீர்ப்பளிப்பது யூதர்களின் வேலை ஏகஇறைவனை ஏற்றுக் கொண்ட முஸ்லீம்களின் வேலை அல்ல.
3:23. வேதம் எனும் பாக்கியம் வழங்கப்பட்டோரை 27 நீர் அறியவில்லையா? அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பதற்காக அல்லாஹ்வின் வேதத்தை நோக்கி அழைக்கப்படுகின்றனர். பின்னர் அவர்களில் ஒரு பகுதியினர் அலட்சியம் செய்து புறக்கணிக்கின்றனர்.
3: 24. குறிப்பிட்ட நாட்களே தவிர நரகம் எங்களைத் தீண்டாது என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். தாமாக இட்டுக் கட்டிக் கொண்டது அவர்களது மார்க்க விஷயத்தில் அவர்களை ஏமாற்றி விட்டது.
சூஃபிக்களின் வழி கொட்டைக் கொள்கைகள் தான் இந்த மத்ஹபு என்பதை ஏன் விளங்கிக் கொள்ள மறுக்கின்றார்களோ தெரிய வில்லை?
கடந்த இரண்டு நாட்கள் நடந்த விவாதத்தில் அதே ச(ஜ)மாளி ஸ்டைலில் கழுவிய மீனில் நழுவிய மீனாய் நடக்க முயற்சித்தும் முடியவில்லை.
அவரைப் போன்று முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் கலையே இவர்களிடத்திலும் இருந்ததைக் காண முடிந்தது.
கடந்த மத்ஹபு வாதிகளின் விவாதத்திற்கும் இந்த விவாதத்திற்கும் ஒரு முன்னேற்றம் தெரிந்தது அது என்னவென்றால் ?
மத்ஹபில் உள்ள ஆபாசத்தை மட்டும் தானே நீங்கள் விமர்சிப்பீர்கள் வேறெந்த சட்டத்தையும் பேச மாட்டீர்கள் என்று அவர்களே மீண்டும் மீண்டும் கூறி ஒத்துக் கொண்டனர்.
மத்ஹபின் அனைத்து சட்டங்களையும் அக்கு வேறு ஆணி வேறாக பீஸ் பீஸாக பிய்த்த எறிந்தப் பிறகும் மற்ற சட்டங்களைப் பற்றி பேச வில்லை என்றும் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை என்றும் ஜ(ச)மாலி ஸ்டைலில் மீண்டும் மீண்டும் கூறி நேரத்தை வீணடித்தது எரிச்சலைத் தான் ஏற்படுத்தியது.
சமீபத்திய உணர்வில் கூட தேவ்பந்த் மதரஸாவின் தலாக் சட்டத்தை விட்டு கிழி கிழி என்று கிழித்துத் தள்ளினார் சகோ: பீஜே அவர்கள்.
இறைநம்பிக்கையாளர்கள் குடும்ப வாழ்க்கையில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பதைக் கூட திருமறைக்குர்ஆனும், திருமறைக்குர்ஆனைப் போன்று வாழ்க்கையை அமைத்துக் கொண்ட அண்ணல் நபி(ஸல்) அவர்களும் இங்கிதமாக சொல்லி இருக்கும் பொழுது அதை ஓரம் கட்டி விட்டு இத்தனை அசிங்கமாக, ஆபாசமாக பாடம் நடத்தும் மத்ஹபை கட்டி அழுவதேன் ? என்று மௌலவி எம்.ஐ.சுலைமான் அவர்கள் அழகாக எடுத்துரைத்தார் இந்த ஒன்றுக்காகவாவது அவர்கள் ஒழுங்காக பதில் சொல்லி இருக்க வேண்டாமா ?
தவ்ஹீத் எழுச்சி வருவதற்கு முன் இறையடிச் சேர்ந்தவர்கள் நரகம் செல்வதாக இருந்தால் கண்டிப்பாக இந்த சட்டங்களை எழுதி மார்க்கமாக்கிய மேதாவிகளுக்கு இரண்டு மடங்கு தண்டனையை கொடு இறைவா !! என்று கேட்கும் நிலையே உருவாகலாம்.
33:66. அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் ''நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுவார்கள்.
33:67. ''எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்'' எனவும் கூறுவார்கள்.
33:68. ''எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!''எனவும் கூறுவார்கள்.
- அதிரை ஃபாரூக்
Flash News ...
இலங்கை விவாதத்தில் தோற்ற போலி சுன்னத் ஜமாஅத்தினராகிய தப்லீக் ஜமாஅத்தினர் குர்ஆனில் தாங்களாகவே சில விஷயங்களை சேர்த்துக் கொண்டதாக விவாதத்தின் போது ஒப்புக் கொண்டனர். மேலும் கேவலமான தோல்வியையும் அடைந்தனர். தோல்வியைமறைப்பதற்காக தவ்ஹீத் ஜமாஅத்தினர் குர்ஆனை மறுப்பதாக குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர். இவர்கள் இப்போது பரப்பும் அனைத்துக்கும் முன்னரே நமது தமிழாக்கத்தில் பதில் அளித்துள்ளோம். அதை அறிந்து கொள்ள...
இலங்கையில் விவாதிக்கப்பட்ட தலைப்பு பற்றிய உரைகளைக் காண
0 comments:
Post a Comment