Tuesday, June 7, 2011


நபிமார்கள் வரலாறு 4(நபிமார்களின் குடும்பம்)

நபிமார்கள் வரலாறு என்ற தொடரில் நபிமார்கள் அனைவரும் மனிதர்கள் தாம் என்பதற்காக ஆதாரங்களை நாம் தொடராக பார்த்து வருகிறோம். இந்தத் தொடரில் அதற்கான இன்னும் சில ஆதாரங்களைப் பார்ப்போம்.

நபிமார்களின் குடும்ப அமைப்பு

நாம் எப்படி நமது வாழ்க்கையில் குடும்பமாக வாழ்கிறோமோ, குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறோமா அது போல் நபிமார்களும் தங்கள் வாழ்வில் குடும்பமாக வாழ்ந்திருக்கிறார்கள், குழந்தைகளையும் பெற்றிருக்கிறார்கள் என்பதற்கு திருக்குா்ஆனிலும் நபி மொழிகளிலும் நிறைய சான்றுகளைப் பார்க்க முடியும்.

இறை தூதர்கள் என்றால் துறவிகளாகத் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலானவர்கள் மனதில் குடி கொண்டிருக்கிறது. ஆனால் இந்த எண்ணம் தவறானது என்பதை சுட்டிக்காட்டி நபிமார்களும் மனிதர்கள் என்பதை எல்லா விதங்களிலும் மக்களுக்கு தெளிவு படுத்திய பெருமை இஸ்லாத்தை மட்டுமே சேறும்....

நபிமார்கள் வரலாறு 3 (நபிமார்கள் உணவு உட்கொண்டனர்)

நபிமார்கள் மனிதர்கள் தாம் என்பதற்கான ஆதாரங்களை நாம் பார்த்து வருகிறோம் அந்தத் தொடரில் நபிமார்களின் மனித குணங்கள் தொடர்பான செய்திகளைத் தொடர்ந்து பார்ப்போம்.

நபிமார்கள் உணவு உட்கொண்டனர்.

எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் அவன் தனது உணவுத் தேவையை முழுபைப் படுத்துவது கட்டாயமாக இருக்கிறது. உணவு இல்லையேல் உயிர் வாழ முடியாது என்பதுதான் உண்மையும் கூட.நபிமார்களாக இருந்தாலும் அவர்களும் உணவு உட்கொண்டால் தான் உயிருடன் இருக்க முடியும்.

இன்றைக்கு நமக்கு மத்தியில் அவ்லியாக்கள், சாமியார்கள், தெய்வ சக்தி படைத்தவர்கள் என்றெல்லாம் உளரக் கூடியவர்கள் கூட சாப்பாட்டு விஷயத்தில் மாத்திரம் வாய் மூடி அமைதியாக இருந்து விடுவதைப் பார்க்கிறோம் ஏன் எனில் எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் மக்களை ஏமாற்றுவதற்கு வேண்டுமானால் தங்களை கடவுளின் சக்தி படைத்தவர்களாக சித்தரிக்க முடியுமே ஒழிய நிஜ வாழ்க்கையில் நிரூபிக்க முடியாது என்பதற்கு உணவு இன்றி வாழ முடியாது என்ற நிலையே போதுமான சான்றாகும்.

மனிதர்களில் இறைவனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் நபிமார்கள் தாம் அந்த நபிமார்களே உணவின் தேவையின் பால் ஈர்க்கப்பட்டவர்களாகத் தான் இருந்தார்கள் என்பதை திருமறைக் குா்ஆனும், ஸஹீஹான ஹதீஸ்களும் நமக்கு உணர்த்துகின்றன....

நபிமார்கள் வரலாறு 2 (நபிமார்களின் நியமனமும் & மனிதத்தன்மையும்)

நபித்துவம் இறைவனின் நியமனம்

நபித்துவம் என்பது இறைவனின் பாக்கியமாகும்.மற்ற மதங்களின் கருத்துக்களைப் போல் இஸ்லாமிய மார்கத்தில் யாரும் பக்தியால் நபியாக மாற முடியாது.

முனிவர்களைப் போல் காடுகளிலும் மலைகளிலும் தங்கியிருப்பதால் ஒன்றும் அவர்கள் இறைவனின் நபியாக அங்கீகரிக்கப் படமாட்டார்கள்.அது போல் வயதின் அடிப்படையில் கல்வியின் அடிப்படையில் குடும்ப பாரம்பரியத்தின் அடிப்படையில் என்று எந்த அடிப்படையும் இதற்கு இல்லை.நபித்துவத்திற்கு இருக்கும் ஒரே அந்தஸ்து இறைவன் யாருக்கு விரும்புவானோ அவர்களுக்கு அந்தத் தகுதியை அந்தஸ்தை வழங்குவதுதான்.அந்த அந்தஸ்தைப் பெருபவர் சிறுவராகவும் இருக்களாம் பெரியவராகவும் இருக்களாம் வயோதிகராககவும் இருக்களாம்.இறைவனின் நாட்டம் தான் முக்கியம்....

நபிமார்கள் வரலாறு 1(குர்ஆன் ஹதீஸிலிருந்து மாத்திரம்)

அன்பின் இணையத்தள வாசகர்களே! 

நபிமார்கள் வரலாறு என்ற இந்தத் தொடரின் மூலம் நாம் ஆதம் நபி முதல் நமது ஆருயிர் நபி(ஸல்)அவர்கள் வரை அனைவரைப் பற்றிய வரலாற்றையும் திருக்குர்ஆன் ஆதாரப் பூர்வமான நபிமொழி அடிப்படையில் ஆராய இருக்கிறோம்.

இது தவிர்ந்த எந்தக் கட்டுக் கதையும் இதில் இடம் பெறாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

நபிமார்கள் வரலாறு என்று நாம் எழுதும் இந்தத் தொடருக்கு ஆதாரமாக திருமறையையும் நபி மொழியையும் மாத்திரம் நாம் எடுத்துக் கொண்டதற்காண காரணம்.வரலாறுகளைப் பொருத்தவரை அதிலும் குறிப்பாக நபிமார்கள் வரலாறுகளைப் பொருத்தவரை பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முற்பட்ட வரலாறுகளும் உண்டு சில ஆண்டுகளுக்குற்பட்ட வரலாறுகளும் உண்டு....

சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம்


மமகட்சியின் இந்த அராஜகங்களுக்கு அதிமுக அரசின் ஆதரவு இருக்கிறதா? அல்லது அரசுக்குத் தெரியாமலேயே இவர்கள் ஆட்டம் போடுகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், 09/06/2011 வியாழக்கிழமை அன்று தமிழக சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது. அதற்காக மக்களை பெருந்திரளாக திரட்டும் பணியையும் முடுக்கியும் விட்டது.
தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரங்களைக் கண்டு சுறுசுறுப்படைந்த காவல்துறை உயர் அதிகாரிகள் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை அழைத்து ”உணர்வு அலுவலகம் உங்களுடையது தான், 9 ஆம் தேதிக்குள் உங்கள் கையில் அந்த அலுவகம் ஒப்படைக்கப்படும்” என்று திட்டவட்டமாக உறுதியளித்தனர்.
அவர்களின் வாக்குறுதி நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாலும், அதிகாரிகள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதாலும் இந்த சட்டசபை முற்றுகைப் போராட்டம் 14 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பது என முடிவு செய்யப்பட்டள்ளது.
கயவர்களால் கள்ளத்தனமாக அபகரிக்கப்பட்ட உணர்வு அலுவலகத்தை 14 ஆம் தேதிக்குள் நம்மிடம் ஒப்படைக்காவிட்டால் 14 ஆம் தேதியன்று சட்டமன்றக்கூட்டம் நடக்குமேயானால் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்துவது என்றும், அதற்குள் சட்டமன்றக் கூட்டம் முடிக்கப்பட்டு விட்டால், அதே தேதியில் முதல்வர் வீடு முற்றுகைப் போராட்டத்தை நடத்துவது என்றும் முடிவு செய்து அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, June 5, 2011

வட மரைக்காயர் அலுவலகம் யாருக்கு சொந்தம் ? நடந்தது என்ன ? சட்ட மன்ற முற்றுகை போராட்டம் ஏன் ?

1. சென்னை மண்ணடி எண்: 7, வடமரைக்காயர் தெருவிலுள்ள இரண்டு மாடி கட்டிடம் முஸ்லிம் ட்ரஸ்ட் பெயரில் அதன் ஆயுட்கால சேர்மன் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களது பெயரில் பதிவு செய்யப்பட்டதாகும்
2. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அமைப்பாளராக இருந்த காரணத்தினால் அந்த கட்டிடத்தின் முதல் மாடியில் தமுமுக அலுவலகம் இயங்குவதற்கு அனுமதி வழங்கியிருந்தார்.
3. உணர்வு வார இதழை நிர்வகித்து வரும் முஸ்லிம் மீடியா ட்ரஸ்டின் சேர்மனாகவும் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இருந்த காரணத்தினால் அந்த கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் உணர்வு வார இதழ் அலுவலகம் இயங்குவதற்கும் அனுமதியளித்திருந்தார்.
4. 2004ஆம் ஆண்டு தமுமுகவிலிருந்து பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களும் அதன் முன்னனி பேச்சாளர்களும் கூண்டோடு விலகியதையடுத்து தமுமுக அலுவலகம் அந்த கட்டிடத்தில் இயங்குவதற்கு தடை செய்ய அதிகாரமிருந்தும் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அதை செய்யவில்லை
5. எவ்வித சட்டப்பூர்வ உரிமையும் இல்லாமல் முஸ்லிம் ட்ரஸ்ட் கட்டடத்தின் முதல்மாடியில் இயங்கிவந்த தமுமுகவினர், 2004ஆம் ஆண்டு உணர்வு அலுவலக ஊழியர்களைத் தாக்கி பொருட்களைச் சேதப்படுத்தி ரவுடித்தனம் செய்ததால் காவல்துறை மூலம் கிரிமினல் வழக்கு பதிவுசெய்யப்பட்டு RDO விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
6. RDO விசாரணையில் இறுதித் தீர்ப்பு வரும் வரை முதல் மாடியை தமுமுக வும், இரண்டாம் மாடியை உணர்வு இதழும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; யாரும் யாருக்கும் இடையூறு செய்யக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
7. RDO உத்தரவிட்ட 2004ஆம் ஆண்டு முதல் கடந்த 2011 மே 27ஆம் தேதி வரை உணர்வு வார இதழின் நிர்வாகப்பிரிவு அலுவலகம் தொடர்ந்து அந்தக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.
8. 2004ஆம் ஆண்டு முதல் கடந்த 2011 மே 27ஆம் தேதி வரை ஆயிரக்கணக்கான கடிதங்கள் தபால் துறை மூலம் அந்த அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டவை ஆதாரங்களாக நம்மிடம் உள்ளன.
9. கடந்த 2011 மே 27ஆம் தேதி அன்று நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து மாநில நிர்வாகிகளும், மற்றும் உணர்வு இதழின் பொறுப்பாளர்களும் ஊட்டி சென்றுவிட்டனர்.
10. இதைத் தெரிந்து கொண்ட மமகவை சேர்ந்த ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்டவர்கள் அத்துமீறி உணர்வு வார இதழ் அலுவலகத்தின் பூட்டை உடைத்து ரூபாய் 5லட்சம் பெருமானமுள்ள பொருட்களைத் திருடிச்சென்றதுடன் மறுபூட்டுப் போட்டு உணர்வு வார இதழ் அலுவலகத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர்.
11. செயல்வீரர்கள் கூட்டத்தை முடித்து 31.05.2011 செவ்வாய்க்கிழமை அன்று சென்னை திரும்பிய உணர்வு வார இதழின் பொறுப்பாளர்கள் தமது நிர்வாக அலுவலகம் சென்ற போது ரவுடிக்கும்பலோடு காத்திருந்த மமகவினர் உள்ளே செல்லவிடாமல் தடுத்து விரட்டியடித்து விட்டனர்.
12. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காகவும், சட்ட விரோத ஆக்கிரமிப்பிற்கு இந்த அரசின் ஆதரவு இருக்காது என்ற நம்பிக்கையிலும் சென்னை மாநகர ஆணையாளர் திரிபாதி அவர்களைச் சந்தித்து ஆதாரங்களை எடுத்துக்காட்டி தவ்ஹீத் ஜமாஅத் முறையிட்டது.
13. தவ்ஹீத் ஜமாஅத் கூறுவதில் உண்மையிருப்பதை விளங்கிக் கொண்ட ஆணையாளர் அவர்கள் தமக்கு அடுத்த பொறுப்பிலுள்ள JC செந்தாமரைகண்ணன் அவர்களுக்கு நமது புகாரை அனுப்பியதுடன் அவரிடம் நேரில் விளக்குமாறும் சட்டப்படி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
14. அதன் பிறகு JC செந்தாமரைகண்ணன் ACஅவர்களுக்கு அதை அனுப்ப அவர் B1 காவல்நிலையத்திற்கு அதை அனுப்ப இழுத்தடிப்பு வேலைகள் ஆரம்பமாயின.
15. 14ஆண்டுகளாக இயங்கிவந்த ஒரு வார இதழின் அலுவலகம் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பாரதூரமான விஷயத்தை -ஏற்கனவே RDO வால் இடப்பட்ட உத்தரவு மீறப்பட்டுள்ள நிலையில் – B1 காவல்நிலையத்தில் ஒரு பெட்டி கேஸுக்கு தரப்படும் முக்கியத்துவம் கூட தராமல் ஏனோ தானோ என்று தவ்ஹீத் ஜமாஅத்தின் புகாரை குப்பைக்கூடைக்கு அனுப்பும் வகையில் அவர்களின் நடவடிக்கை அமைந்தது.
16. காவல்துறையின் உயர் அதிகாரிகளின் ஆதரவோடும், காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வரின் ஆசியோடும் தான் இந்தச் சட்ட விரோத ஆக்கிரமிப்பு நடந்துள்ளது என்ற சந்தேகம் உறுதியானதால் வரக்கூடிய ஜூன் 9ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருக்கின்றது.
17. யாரும் பயப்பட வேண்டாம்; எல்லாம் சட்டப்படி நடக்கும் என்று பதவியேற்ற முதல்நாள் ஜெயலலிதா சொன்னது வழக்கமான அரசியல் பாம்மாத்து அறிவிப்பு தான் என்பது இதன் மூலமாக நிரூபணமாகின்றது.

Friday, June 3, 2011

வாரந்திர பயான் (03-06-2011)


அஸ்ஸலாமு அலைக்கும்...


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பயான் இன்று வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ஹமீது அவர்கள் இறைவனை நினைவு கூர்தல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.


"நம்பிக்கை கொண்டோரெ! உங்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்வின் நினைவைவிட்டு உங்களை திசை திருப்பி விட வேண்டாம். இதைச்செய்வோரே நஷ்டமடைந்தவர்கள். உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியதிலிருந்து செலவிடுங்கள்! "இறைவா! குறைந்த காலம் வரை நீ எனக்கு அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே" என்று அப்போது மனிதன் கூறுவான். (அல் முனாஃபிகூன் - 9,10)


என்கிற மேற்கூறிய வசங்களை மேற்கோள் காட்டி உரை நிகழ்த்தினார்கள். இதில் தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.


இன்ஷாஅல்லாஹ் வாரந்தோரும் நடக்கின்ற பயான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பெண்களுக்கு தனி இட வசதியுண்டு மற்றும் வாகன ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தொடர்புக்கு - சகோ. ஜாகிர் - +973-39320142
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்