Saturday, February 11, 2012

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 10-02-2012


அல்லாஹ்வின் கிருபையால், ஹித் பகுதியில் பயான் நிகழ்ச்சி இன்று 10-02-2012 இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோ.ஜாஹிர் ஹுசைன் அவர்கள், "மறுமை நாள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 10-02-2012


அல்லாஹ்வின் கிருபையால், ரிஃபா பகுதியில் பயான் நிகழ்ச்சி இன்று 10-02-2012 இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோ.ஜாஹிர் ஹுசைன் அவர்கள், "மறுமை நாள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.


இதில் நமது ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, February 8, 2012

முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்! ஏன்? ஏதற்கு!



கண்ணியமும் மகத்துவமும் மிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்:

உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்த தீங்கும் தராது. அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவன். (அல்குர்ஆன் 3:1-20)

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதவரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார். (அறிவிப்பவர்: அனஸ்(ரலி) புகாரி)

இடஒதுக்கீடு! பன்முகத்தன்மை கொண்ட இந்திய தேசத்தில் வாழும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அடிப்படையான வாழ்வாதார உரிமை தான் இடஒதுக்கீடு. நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் பயன்பெற வேண்டிய நன்நோக்கில் அரசியலமைப்பு ரீதியாக ஏற்படுத்தப்பட்டதுதான் இடஒதுக்கீடு. செல்வாக்கு மிக்க தங்கள் தலைவர்களால் சில சமுதாயத்தினரும் கடுமையான போராட்டங்களால் சில சமுதாயத்தினரும் இந்த உரிமையை பெற்று நிலைநாட்டி வருகின்றனர்.

உரிமைகளையும் கடமைகளையும் மார்க்கரீதியாக பெற்றுக் கொண்ட முஸ்லிம் சமுதாயமோ- தங்களின் இடஒதுக்கீடு உரிமையை பெறுவதில் அலட்சிய போக்குடன் இருந்து வருகின்றனர். ஆரம்ப காலங்களிலிருந்தே உரிமைகள் விஷயத்தில் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை கண்டு கொள்ளாமல் இருந்து, பிறகு ஓரங்கட்டி பிறகு தீவிரவாதி முத்திரை குத்தி வருகின்றனர்.

அடிமை இந்தியாவில் போராட்ட வீரர்களாகவும், சுதந்திர இந்தியாவில் அடிமைகளை போலவும் நடத்தப்படும் இந்த இஸ்லாமிய சமுதாயம் தன் நிலையை உணர்ந்து தனக்கு உண்டான வலிமையை கேட்டுப் பெற்று தானும் மண்ணின் மைந்தன் என்ற உரிமையை நிலைநாட்ட கிடைக்கவிருக்கும் களமே இந்த பிப்ரவரி 14 ல் நடைபெறவிருக்கும் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம்.

நமது நாடு விடுதலை அடைந்த பிறகு மாபெரும் வல்லரசு நாடாக வளர்ச்சி பெற்றுள்ளது உங்களுக்குத் தெரியும்.இந்த நாட்டின் அடக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களும் உங்கள் கண்ணெதிரில் உயரத்துக்குச் சென்று கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரிகிறது. எல்லாச் சமுதாய மக்களும் உயர் கல்வி கற்று பதவிகளையும் நல்ல ஊதியத்துடன் வேலை வாய்ப்பையும்,அரசியல் அதிகாரத்தை மற்றவர்களுக்குச்  சமமாகப் பெற்றுள்ளதையும் நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் உங்களின் நிலை என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா?

இந்திய நாட்டை உருவாக்கியதிலும் அதை வளப்படுத்தியதிலும் வெள்ளையனிடம் இருந்து நாட்டை மீட்பதிலும் மற்ற அனைத்து சமுதாயங்களை விட நாம் அதிக உழைப்பு செய்தோம்.

வெள்ளையனை எதிர்ப்பதற்காக அவனுடைய மொழியைப் படிக்கக் கூடாது என்றோம். படிப்பைப் பாதியில் நிறுத்தினோம். வெள்ளையனுடைய அரசாங்கத்தில் வேலை பார்க்கக்கூடாது என்று முடிவு எடுத்து அனைத்து வேலைகளையும் உதறித் தள்ளினோம்.

வழிபாட்டுத் தலங்களைக் கடவுள் வழிபாட்டுக்கு மட்டும் மற்ற சமுதாய மக்கள் பயன்படுத்தி வந்தபோது வெள்ளையனை எதிர்த்து கிளர்ச்சி செய்யும் மேடையாக பள்ளிவாசல்களை நாம் பயன்படுத்தினோம். வெள்ளையன் கொடுத்த இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி மற்ற சமுதாய மக்கள் முன்னேறிய போது அதையும் பயன்படுத்த மறுத்தோம்.

உடலாலும் பொருளாலும் உயிராலும் தியாகம் செய்வதில் மட்டும் அனைவரையும் நாம் மிஞ்சினோம். நாட்டின் விடுதலைக்காக கல்வியையும் வேலைவாய்ப்பு களையும் தியாகம் செய்த நம்மைத் தவிர மற்ற அனைவரும் நம்மை எல்லா வகையிலும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பல மடங்கு மேலே சென்று விட்டார்களே அது பற்றிச் சிந்தித்தீர்களா?

கூலித் தொழலாளியாகவோ, இறைச்சிக் கடைக்காரராகவோ, நடைபாதையில் வியாபாரம் செய்பவராகவோ, கொல்லுப் பட்டறையில் கடின வேலை செய்பவராகவோ, தோல் பதனிடும் தொழிலாளியாகவோ, பெட்டிக்கடை நடத்துபவராகவோ, குறைந்த ஊதியத்தில் கடைகளில் வேலை செய்பவர்களாகவோ இருப்பவர்கள் நம் சமுதாயத்தில் மட்டும் மிக அதிகமாக இருப்பது ஏன் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா?

சொந்த நாட்டில் தகுந்த கல்வியும் தகுதிக்கேற்ற வேலையும் மறுக்கப்பட்டு நாம் மட்டும் வெளிநாடுகள் சென்று மனைவி மக்களைப் பிரிந்து அல்லல்படுவது ஏன்?

ஒட்டகம் மேய்த்தல், சாலை போடுதல், கழிவுகளைச் சுத்தம் செய்தல், உயிரைப் பணயம் வைத்து உயரமான கட்டிடப் பணிகளில் கூலித் தொழில் செய்தல், தனியாருக்குக் காரோட்டும் வேலை, வீடுகளைச் சுத்தம் செய்தல், சமையல் வேலை இப்படி அற்பமான ஊதியத்தில் வேலை பார்த்து நீங்கள் மட்டும் ஏன் அவல நிலையில் இருக்க வேண்டும்?

மற்றவர்கள் எல்லாம் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் மட்டும் தொலைபேசி மூலம் குடும்பம் நடத்துவது ஏன்?இதை மாற்றியமைக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதா? இல்லையா?

88 லட்சம் மத்திய அரசு ஊழியர்களில் 11 லட்சம் இருக்க வேண்டிய முஸ்லிம்கள் 35 ஆயிரம் மட்டும் தான் உள்ளனர் என்று முஸ்லிம்களின் நிலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி சச்சார் கமிட்டியின் அறிக்கை கூறுகிறதே! இந்த நிலை இனியும் தொடரலாமா?

பாதுகாப்பு தொடர்பான பணிகளில் மூன்று சதவிகிதம் உள்ளனர் என்றும் தலித் மக்களின் நிலையை விட மோசமாக முஸ்லிம்களின் நிலைமை இருக்கிறது என்றும் சச்சார் அறிக்கை கூறுகிறதே? அதை மாற்றியமைக்க வேண்டாமா?

முஸ்லிம்களின் கல்வி அரசியல் பொருளாதார நிலை எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் அறிக்கையில் கூறப்பட்ட அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் உங்களை கவலையில் ஆழ்த்தவில்லையா?

முஸ்லிம்களில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் 65.31 சதவிகிதம். அதாவது ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 35பேர் ஐந்தாம் வகுப்பு கூட படிக்கவில்லை.

ஐந்தாம் வகுப்புக்கு மேல் எட்டாம் வகுப்பு வரை படித்தவர்கள் 15.14 சதவிகிதம் என அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 85 பேர் எட்டாம் வகுப்பு வரை படிக்கவில்லை.

எட்டாம் வகுப்புக்கு மேல் பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் 10.96 என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது 100 முஸ்லிம்களில் 11 பேர் தான் பத்தாம் 
வகுப்பு படித்தவர்கள்.பத்தாம் வகுப்புக்கு மேல் பன்னிரண்டு வரை படித்தவர்கள் 4.53 என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது 100 முஸ்லிம்களில் ஐந்து பேர் தான் 12ஆம் வகுப்பு வரை படித்தவர்கள்.பட்டப்படிப்பு படித்தவர்கள் 3.6 என்கிறது அந்த அறிக்கை. அதாவது 100 முஸ்லிம்களில் மூன்று பேர் தான் பட்டப்படிப்பு படித்தவர்கள்.

 இவ்வளவு மோசமான நிலையில் இந்தியாவில் எந்தச் சமுதாயமும் இல்லை. நமக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இந்த அவல நிலை என்றால், பொருளாதார நிலையிலாவது நமது நிலை உயர்ந்து இருக்கிறதா? அல்லது மற்ற சமுதாயங்களைத் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கிறதா? பொருளாதாரத்தில் கடைசி நிலையில் இருக்கும் தலித் மக்களுடன் போட்டியிடும் அளவுக்குத்தான் நமது நிலை உள்ளது.

முஸ்லிம் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் 1832 ரூபாயும் இருபது காசுகளும் தான் என்கிறது அந்த அறிக்கை.அது மட்டுமின்றி ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 31 பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர் எனவும் நீதிபதி மிஸ்ரா கமிஷன் கூறுகிறது.

மற்ற சமுதாய மக்களில் நூற்றுக்கு இருபது பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் போது நமது சமுதாயத்தில் நூற்றுக்கு 31 பேர் வறுமையில் உள்ளனர் என்றால் இந்த நிலையை உயர்த்திட நாம் பாடுபட வேண்டாமா?

வறுமைக்கோடு என்பதன் அர்த்தம் தெரிந்தால் இட ஒதுக்கீட்டை நம்மால் அலட்சியப்படுத்தவே முடியாது. கீழ்க்காணும் தகுதியில் இருப்பவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் என்று நிர்ணயித்துள்ளனர்.

சொந்தமாக இடம் இல்லாதவர்கள்,இரண்டு ஆடைகளுக்கும் குறைவாக வைத்துள்ளவர்கள், ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உணவு உண்பவர்கள், வெட்ட வெளியில் கழிப்பிடம் செல்பவர்கள். வீட்டு உபகரணங்கள் (டிவி. ரேடியோ மின் விசிறி குக்கர் போன்றவை) இல்லாதவர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள், கூலி வேலை செய்பவர்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாதவர்கள் நிலையான தங்குமிடம் இல்லாதவர்கள்.இத்தகைய நிலையில் நம் சமுதாயம் மட்டும் அதிக எண்ணிக்கையில் இருப்பது உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தவில்லையா? பிச்சைக்காரர்களின் வாழ்க்கைத் தரத்துக்கான ஒப்பான வாழ்க்கை வாழும் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த கண்டிப்பாக உழைக்கும் கடமை நமக்கு உள்ளதா? இல்லையா?

இதன் பின்னரும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை இயற்றாமல் காங்கிரஸ் இழுத்தடிக்கப் பார்க்கிறது. ஒருமித்த கருத்து ஏற்பட்டவுடன் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கபடும் என பிரதமர் கூறியுள்ளார்.

பாஜக இதை எப்படி ஒப்புக் கொள்ளும்? ஒருமித்த கருத்து எப்படி ஏற்படும்? ஒருமித்த கருத்து உருவான பின்னர் தான் இட ஒதுக்கீடு என்றால் மிஸ்ரா கமிஷன் அமைத்தது எதற்காக? முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பதை தான் பிரதமர் வேறு வார்த்தையில் சொல்லி இருக்கிறார். முஸ்லிம் சமுதயாத்தை ஏமாளிகளின் சமுதாயம் என்று பிரதமர் தப்புக் கணக்குப் போட்டுள்ளதையே இது காட்டுகிறது.

ஆனால் இத்தகைய பிரதமரையே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகளை அழைத்து இட ஒதுக்கீடு சம்பந்தமாக காங்கிரஸ் தலைவி சோனியாவுடன் சேர்ந்து பேச வைத்தது நம் சமுதாய மக்கள் சென்னை தீவுத்திடலில் திணற வைத்ததால் தான். 

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதா அவர்களும்,நம்முடைய கட்டுக்கடங்காத போராட்டங் களால் தங்களுடைய நிலையை மாற்றிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது.

குடந்தையை குலுங்கச் செய்த பேரணி மாநாடு தான் ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு ராஜசேகர ரெட்டியினால் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை எதிர்த்த கண்டித்த ஜெயலலிதாவை கமிஷன் அமைக்க வைத்தது. 

ஆட்சி கட்டிலில் அமர்ந்தவுடன் கொடுத்த வாக்குறுதியை மறந்து விடலாம் என்று எண்ணிய கலைஞரைக்கூட நம்முடைய தொடர் போராட்டங்களும், ஜூலை 4ல் சிறை நிரப்பும் போராட்டமும் தான் மாநிலத்தில் 3.5; சதவிகிதம் இட ஒதுக்கீட்டை பெற்று தந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

இதன் காரணமாக இட ஒதுக்கீட்டின் பலனை ஓரளவு பெற்றுள்ளோம். இருப்பினும் நம் முஸ்லிம் மக்கள் தொகைக்கேற்ப இந்த 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு போதாது என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.

இதன் காரணத்தினால் தான் தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 7 சதவிகிதமும் மத்தியில் 15 சதவிகிதமும் கேட்டு பெற வேண்டி இன்ஷாஅல்லாஹ் வருகின்ற பிப்ரவரி 14ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக இடஒதுக்கீடு கோரி முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற உள்ளது. 

திரும்பவும் எழுச்சியை காட்டும் நிலைக்கு சமுதாயம் தள்ளப்பட்டு விட்டது. 
தலைவர்களின் துதிபாட, அரசியல் கட்சிகளுக்கு பலம் சேர்க்க உன்னைக் காட்டி விலைபேசுவோருக்கு உன்னை அறியாமல் உதவ பல களங்களைச் சந்தித்துள்ளாய்!

இப்போது உனக்காக மானத்தோடும் மரியாதையோடும் நீ வாழ்வதற்காக உனக்கு ஏற்பட்ட நிலை உன் சந்ததிகளுக்கும் ஏற்படாமல் தடுத்து நிறுத்திட!

நாங்கள் பட்ட துன்பங்களை எங்கள் சந்ததிகளுக்கும் விட்டுச் செல்ல மாட்டோம் என்பதை அழுத்தமாக பதிவு செய்ய!

64 ஆண்டுகள் ஏமாந்தது போதும் இனியும் ஏமாற மாட்டோம் என்பதை அரசியல்வாதிகளுக்கு உணர்த்திட! 

இட ஒதுக்கீடை அடைய எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயங்க மாட்டோம் என்பதை உலகுக்கு உணர்த்திட!

தானே புயல் வராதா என ஏங்கும் தமிழக மக்கள் (?)



தலைப்பைப்பார்த்தவுடன் உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படலாம்! புயலால் பாதிக்கப்பட்டு ஒவ்வொருவரும் வீடு வாசல் என ஒவ்வொன்றையும் இழந்து பரிதவிக்கும் போது இது போன்ற புயல் நம் ஊருக்கு வராதா? என ஏங்கும் மதிகெட்ட மடையர்கள் யார்? என்று உங்களுக்கு ஒரு கனம் கோபம் கூட வரலாம்!
ஆனால், இப்படி “தானே” புயல் தங்களது மாவட்டத்திற்கு வராதா என புயல் வராத மாவட்டங்களில் வசிக்கும் தமிழக மக்கள் ஏங்கித்தவிப்பதாக மமகட்சியின் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாஹ் என்பவர் சட்ட சபையில் முழங்கியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பிறகு, முதல்வர் ஜெயலலிதா பதிலுரை வழங்கினார். பதிலுரையில் அறிவிக்கப்பட்ட சலுகைகளுக்கு நன்றி தெரிவித்து, அரசியல் கட்சிகளின் சார்பில் கட்சித் தலைவர்கள் சட்டசபையில் பேசினர்.
அப்போது ஒவ்வொருவரும் தங்களது தகுதிக்கு ஏற்ப முதல்வருக்கு ஜால்ரா தட்டிப் பேசினார்கள். அப்போது தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பைக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்ட வாத்தியார் அவர்கள் அதிமுக காரர்களே மூக்கின் மேல் விரல் வைக்கக்கூடிய அளவிற்கு முதல்வருக்கு ஜால்ரா தட்டி, அதிமுக எம்.எல்.ஏக்கள் உட்பட அனைவரையும் ஜால்ரா தட்டுவதில் விஞ்சி புதிய சாதனை படைத்துள்ளார்.
தானே வந்த வார்த்தைகள் :
ஆம்! : “தானே’ புயல் பாதித்த மாவட்டங்களில் முதல்வர் அறிவித்துள்ள திட்டங்களைப் பார்க்கும் போது, பிற மாவட்டங்களில் வசிப்போர், நமது மாவட்டத்தில் புயல் வரவில்லையே என்று, ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறி ஜால்ரா தட்டுவதில் என்னை விஞ்ச ஆள் இல்லை என்பதை நிரூபித்துள்ளார் வாத்தியார்
இஸ்லாமிய வரலாற்றில் முத்திரை பதித்த எம்.எல்.ஏ :
இதற்கு முன்பு எத்தனையோ எம்.எல்.ஏக்கள் இஸ்லாமிய சமுதாயத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு சட்டசபைக்கு சென்றுள்ளார்கள். அவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதமாக உள்ளது வாத்தியார் அவர்களின் வர்ணனை
தானே புயலால் பாதிக்கப்பட்டு சின்னாபின்னமாகிக் கிடக்கும் வேலையில், அந்த மக்களின் மனம் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் மீளாதிருக்கும் இவ்வேளையில் இது போன்ற புயல் தங்களது மாவட்டத்தில் வரவில்லையே என்று பிற மாவட்ட மக்கள் ஏங்குவதாக இவர் கூறியிருக்கும் கருத்தை பார்த்தால் ”தானே” புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையை விட, அம்மா அவர்கள் மீதும், எம்.எல்.ஏ பதவி சுகத்தின் மீதும் இவர் கொண்ட பாசப்புயலின் காரணமாக இவரது மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது நமக்கு பளிச்சென்று தெரிகின்றது.
இவர் இருக்க வேண்டிய இடம் சட்டசபையல்ல; கீழ்பாக்கம் மருத்துவமனைதான் என்பதும், தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதோடு இவருக்கும் இவரது மனநிலையை சரி செய்ய மருத்துவ உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் சமுதாய அக்கறை உள்ளவர்களின் தற்போதைய ஆசை.
சொன்னாலும் சொல்வார்:
நல்ல வேளை பிச்சைக்காரர்களுக்கு முதல்வர் அவர்கள் ஏதேனும் சலுகைகளை அறிவிக்காமல் போனார். அப்படி முதலைமைச்சர் பிச்சைக்காரர்களுக்கு ஏதேனும் சலுகைகளை அறிவித்தால், பிச்சையெடுக்காத மற்ற மக்கள் அனைவரும் தாங்களும் பிச்சைக்காரர்களாக இருந்திருக்கக் கூடாதா? என ஏங்குவதுதாக முதல்வருக்கு புகழாராம் சூட்டினாலும் சூட்டுவார்.
எய்ட்ஸ் நோயாளிகளுக்கும், கேன்சர் நோயாளிகளுக்கும் ஏதேனும் புதிய திட்டத்தையோ, புதிய சலுகைகளையோ முதலமைச்சர் அறிவித்தாரேயானால், நாமும் எய்ட்ஸ் நோயாளியாகவோ, கேன்சர் நோயாளியாகவோ இருந்திருக்கக் கூடாதா? என அனைத்து மக்களும் ஏங்குவதாகச் சொன்னாலும் சொல்வார்.
விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு கூட அடிக்கடி முதலமைச்சர் நிவாரண உதவித்தொகைகளை அறிவித்து வருகிறார். எனவே அதையெல்லாம் தொகுத்து வைத்துக் கொண்டு அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் கொடுத்த உதவித் தொகைகளை பார்த்து தமிழக மக்கள் தங்களது வீட்டிலும் இழவு விழக்கூடாதா? என ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று இவர் ஜால்ராத்தட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த அளவுக்கு மானம்கெட்டுப்போய் ஜால்ராத்தட்டும் ஒரு சட்டசபை உறுப்பினரை தமிழக முஸ்லிம் வரலாறு இப்போதுதான் முதல் முறையாகச் சந்திக்கின்றது.
சாதனை(?) பயணத்தில் ஒரு தனிமுத்திரை :
இதற்கு முன்பு இருந்த சுயநல எம்.எல்.ஏ க்கள் மற்றும், சிறந்த ஜல்ராத்தட்டி எம்.எல்.ஏ க்கள், மற்றும் சிறப்பாக அடிமைச்சாசனம் எழுதிக் கொடுத்த முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் அனைவரது சாதனை(?)களையும், தான் எம்.எல்.ஏ வாகப் பதவியேற்ற சிறிது காலத்திலேயே வாத்தியார் அவர்கள் முறியடித்திருப்பது இவரது சாதனை(?) பயணத்தில் ஒரு தனிமுத்திரை. இந்த தனித்துவ(?) முத்திரையின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தையும், ஜால்ரா தட்டுவதிலும், அடிமைச்சாசனம் எழுதிக்கொடுப்பதிலும், முதல் இடத்தைப் பிடித்துள்ளார் வாத்தியார்.
இவரது இந்த அம்மா புகழ்மாலையைக் கேட்டுவிட்டு தானே புயலால் பாதிக்கப்படாத மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தானே முன்வந்து துடைப்பத்துடனும், பிய்ந்த செருப்புகளுடனும் வாத்தியாருக்கு வரவேற்பளிக்கக் காத்துக் கொண்டுள்ளனர். தானே புயல் வராதா? என தமிழக மக்கள் தற்போது எதிர்பார்க்கவில்லை; இவர் துடப்பத்தால் அடிவாங்க தங்கள் மாவட்டத்திற்கு வரமாட்டாரா? என்றுதான் தமிழக மக்கள் தற்போது எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
மானம் என்பது துளியளவு கூட இல்லை:
உள்ளாட்சித் தேர்தலில் எங்களுடனான கூட்டணியில் மமகட்சி இல்லை என்று ஜெயலலிதா அறிவித்த பிறகும் கூட மானம் கெட்டுப்போய் கூட்டணி தொடரும் என்று அறிவித்தனர். அப்போதே தமிழக முஸ்லிம்கள் விளங்கிக் கொண்டனர் இவர்களுக்கு மானம் என்பது துளியளவு கூட இல்லை என்று.
அடித்து துவைத்தாலும், எட்டி மிதித்தாலும், காரித்துப்பினாலும், எங்களுக்கு எல்லாமே அம்மாதான் என்று இவர்கள் மானம்கெட்டு நிற்கும் நிலைபார்த்து சமுதாயம் இவர்களைக் காரி உமிழ்கின்றது. இருந்த போதிலும் நாங்கள் மானமிழந்து மரியாதை இழந்து, இன்னும் எதை வேண்டுமானாலும் அடகு வைத்தாவது எங்களுக்கு அம்மாவிடத்திலிருந்து வாரியத்தை வாங்கிவிடலாம் என்பதுதான் இவர்களது கனவு என்பது யாருக்கும் தெரியாமல் இல்லை. இப்படியெல்லாம் அதிமுக காரர்களையே விஞ்சக்கூடிய அளவுக்கு நீங்கள் அடிமைத்தனத்தை வெளிப்படுத்தினாலும் உங்களுக்கு வாரியப்பதவி கிடைக்குமா என்பது சந்தேகமே. அம்மா காலில் சாஷ்டங்கமாக விழுந்தால் எப்படியும் வாரியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிந்தால் வாத்தியார் அதையும் செய்யத் தயாராகவே இருப்பார் என்பதற்கு இது அச்சாரமாக அமைந்துள்ளது
எட்டி மிதிக்கும் போது, எட்டி மிதிப்பவரது காலைக் கட்டிப்பிடித்து, ”பார்த்து மிதியுங்கள் ஐயா, உங்கள் கால் வலிக்கப் போகின்றது” என்று சொல்லும் மானம் கெட்டவர்களுக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அதையும் தாண்டி இவர்கள் ஒருபடி கீழே போய், ”உங்களிடம் இப்படி மிதிவாங்க பல பேர் ஏங்கிக் கொண்டுள்ளார்கள்” என்று சொன்னால் அது எப்படி இருக்குமோ அப்படிதான் இவர்களது மானம்கெட்ட செயல்பாடு அமைந்துள்ளது.
விஜயகாந்துக்கு சொன்னது தான் வாத்தியாருக்கும் :
ஏதோ முஸ்லிம்களின் பெரும்பான்மையான ஆதரவுடன் நாம் வெற்றி பெற்றுள்ளோம். எனவே முஸ்லிம்களின் பிரதிநிதியாக நாம் இருக்கின்றோம். எனவே அம்மாவுடைய நெஞ்சத்தில் நீங்கா இடம் பிடித்துவிடலாம் என்று வாத்தியார் தப்புக் கணக்கு போடுவாரேயானால், அவருக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கின்றோம்.
விஜயகாந்த் வெற்றி பெற்றதே அதிமுகவை வைத்துத் தான். தேமுதிகவிற்கு ஒதுக்கிய சீட்டுக்களில் அதிமுக நின்றிருக்குமேயானால் அதிமுக இன்னும் அதிக இடங்களை பிடித்திருக்கும் என்று சட்டசபையில் ஜெயலலிதா சொன்னது தேமுதிகவிற்கு மட்டுமல்ல; உங்களைப் போல ஜால்ரா தட்டிக் கொண்டு பீற்றிக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கும் சேர்த்துத் தான் என்பதை தற்போதைக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
இவ்வளவு சொன்ன பிறகும், இவ்வளவு கேவலப்பட்ட பிறகும் அம்மா அம்மா என்று இவர் தனது சுயநலனுக்காக அம்மா புராணம் இவர்கள் பாடுகிறார் என்றால் மம கட்சியில் உள்ள மற்றவர்கள் இதை எப்படி சகித்துக் கொள்கிறார்கள்?
அரசியல் தான் தேவை என்று கருதும் மம கட்சியினர் இது போன்ற மானத்தை முழுமையாக கப்பலேற்றும் மம கட்சிக்கு முழுக்கு போட்டு விட்டு இவர்கள் அளவுக்கு மானத்தை விற்காத முஸ்லிம் லீக், தேசிய லீக் போன்ற கட்சிகளை நாடலாமே?
நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது “நம்பிக்கை கொண்டுள்ளோம்” எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது “நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே” எனக் கூறுகின்றனர். அல்லாஹ்வோ அவர்களைக் கேலி செய்கிறான். அவர்களது அத்துமீறலில் அவர்களைத் தடுமாற விட்டு விடுகிறான். அவர்களே, நேர் வழியை விற்று வழி கேட்டை வாங்கியவர்கள். எனவே அவர்களின் வியாபாரம் பயன் தராது. அவர்கள் நேர் வழி பெற்றோரும் அல்லர்.
அல்குர்-ஆன் 2 : 14 முதல் 16 வரை
நன்றி : உணர்வு வார இதழ்

Sunday, February 5, 2012

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 03-02-2012

அல்லாஹ்வின் கிருபையால், ரிஃபா பகுதியில் பயான் நிகழ்ச்சி இன்று 03-02-2012 இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சகோ.அலீம் அவர்கள், “நன்மையின் பக்கம் விரைவோம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் நமது ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

பிரசுரம் (03-02-2012)


மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி - 03-02-2012


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல வாராநிர நிகழ்ச்சி 03-02-2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.


இன்றைய நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து மெளலவி. அப்துந் நாஸிர் அவர்கள் "இஸ்லாமியர்களின் சமுதாய கடமைகள்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

இதில் சகோதரர் அவர்கள் தொழுகை மற்றும் இன்ன பிற வழிபாடுகளை மட்டும் செய்வது வணக்க முறைகள் அல்ல. சமுதாயத்திற்காக் குரல் கொடுப்பதற்க்கும் இறைவனிடத்தில் குலி உண்டு என்பதை விளக்கி சமுதாய பணிகளிலும் நாம் அதிகம் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கூறினார்கள். 

மேலும் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி தமிழ் மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்ட வாரியாக நடத்த இருக்கக் கூடிய முஸ்லீம்களின் வாழ்வுரிமை போராட்டத்தை பற்றி எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்