Sunday, June 2, 2013

வாரம் ஒரு சட்டம்

மாற்று மத தாவா


அல்லாஹ்வின் கிருபையால், பாஸ்மா கேம்ப்பில் பணிபுரியும் நமது சகோதரரின் சக உழியரான பிலிப்பைன்ஸை சேர்ந்த சகோதரிக்கு தூய மார்க்கமான இஸ்லாத்தை பற்றி தாவா செய்து, மாமனிதர் நபிகள் நாயகம் ஆங்கில புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

"ஜனாஸா தொழுகையின் சட்டங்கள்" ரிஃபா கிளை பயான்


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு நேற்று (01-06-2013) நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள், "ஜனாஸா தொழுகையின் சட்டங்கள்" என்ற தலைப்பில் ஒரு சில விஷயங்களை சகோதரர்களுக்கு மத்தியில் பகிர்ந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Saturday, June 1, 2013

பஹ்ரைன் மண்டல சிறப்பு நிகழ்ச்சி


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (31-05-2013) நடைபெற்றது.

இன்றைய நிகழ்ச்சியானது, சகோ. பி. ஜெய்னுல் ஆபிதீன் கேப்டன் தொலைக்காட்சியில் கலந்து கொண்டு வழங்கிய சிறப்பு பேட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

"நன்மையெனக் கருதும் தீமை" ஹித் கிளை பயான்


அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (31-05-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோ. முனீப் அவர்கள் "நன்மையெனக் கருதும் தீமை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து சகோ. பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் கேப்டன் தொலைக்காட்ச்யில் கல்ந்து கொண்ட சிறப்பு பேட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

பெண்களுக்கான தஃப்ஸீர் வகுப்பு


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பெண்களுக்கான குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு நேற்று (31-05-2013) அஸர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இதில் அதிகமான சகோதரிகள் மார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் அறிந்துகொள்ள, ஆலீம் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த வகுப்பில் அதிகமான சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!! 

"அல் புரூஜ்" விளக்கவுரை வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 28-05-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள். 

இந்த வகுப்பில் திருக்குர்ஆனின் 85ஆவது அத்தியாயமான "அல் புரூஜ்"விளக்கவுரைகளை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். சகோதரர் அவர்களின் விளக்கமானது சிறப்பாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தது. 

இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்ந்துலில்லாஹ்.
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்