.jpg)
ஆரம்பத்தில் ஒரு சில தொழில் நுட்ப குறைபாடு காரணத்தினால் நிகழ்ச்சியை குறித்த நேரத்திற்கு ஆரம்பிக்க முடியாமல் தாமதமானது. இருந்தாலும் வந்திருந்த சகோதர சகோதரிகள் அதை பொருட்படுத்தமால் பொறுமையுடன் காத்திருந்தனர்.
அந்த இடைபட்ட நேரத்தில் நமது ஜமாஅத் சார்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கான ஆதரவு இல்லம் சம்பந்தமான விடியோ கிளிப் அதனை தொடர்ந்து, தமிழக அரசு ஹஜ் பயணிகளுக்கு மானியம் என்ற பெயரில் ஹாஜிகளை ஏமாற்றி வருவதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக விளக்கும் விடியோ போன்றவை ஒளிபரப்பப்பட்டது.
அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியான முஸ்லீம்களுக்கான் கேள்வி பதில் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் வந்திருந்த சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மிகத் தெளிவாக விளக்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment