Showing posts with label தியாகத் திருநாள் 2012. Show all posts
Showing posts with label தியாகத் திருநாள் 2012. Show all posts

Tuesday, October 30, 2012

பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் தியாகத் திருநாளின் விடுமுறை தினத்தில் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி 28-10-2012 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது.  

இந்த நிகழ்ச்சியில் தாய்கத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் "பரிசு இங்கே பதில் எங்கே?" என்ற தலைப்பில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தினார்.

இவரது கேள்விகள் அனைத்து குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்திருந்தது. 

இந்த நிகழ்ச்சியில் பதிலளித்த சகோதரிகளுக்கு மார்க்க உரை அடங்கிய CD / DVDக்கள் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. 

இதில் நமது தவ்ஹீத் சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!! 

பிற மதத்தினருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் கிருபையால், தற்போதுள்ள தமிழ் அமைப்புகளின் தாவா பணிகளில் தலை சிறந்து விளங்குவது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே என்பது அனைவரும் அறிந்ததே. அதன் ஒரு கிளையான பஹ்ரைன் மண்டலத்தில் தியாகத் திருநாளின் விடுமுறை தினத்தையொட்டி "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (பிற மதத்தினருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி)" 27-10-2012 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இதின் ஆரம்பகட்டமாக நமது மண்டல தலைவரான சகோ. முபாரக் அவர்கள் வரவேற்புரை கூறி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதுபோன்ற மாற்று மதத் தினருக்காக சிறப்பு நிகழ்ச்சிகளை தமிழமெங்கும் நடத்தி வருகிறது எனபதை வந்திருந்த மாற்று மத நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லி விளக்கினார்கள்.

அவரைத் தொடர்ந்து தாய்கத்திலிருந்து சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்ட சகோ.கோவை. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் "இஸ்லாம் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த இஸ்லாத்தை பற்றிய அறிமுக உரையானது, வந்திருந்த மாற்று மத நண்பர்கள் இஸ்லாத்தை புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் மிக எளிதாகவும், அறிவுப்பூர்வமாகவும் இருந்தது. 

இந்த உரையை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. தொடக்கத்திலியே சகோதரர்கள் மிகவும் ஆர்வமாகவும், ஆக்கப்பூர்வமான கேள்விகளையும் தொடுத்தனர். இதற்க்கு நமது சகோதரர் மிகவும் தெளிவாக விளக்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில உங்கள் பார்வைக்கு.
  1. முஸ்லீம்களின் பண்டிகை தினங்களில் கலை நிகழ்ச்சிகள் ஏன் நடத்தப்படுவதில்லை? 
  2. முஸ்லீம் அல்லாதவர்கள் குர்ஆனை தொடலாமா?
  3. முஸ்லீம்கள் பன்றியை சாப்பிடுவது இல்லையே, ஏன்?
  4. மாற்று மதத்தவர்களை ஏன் திருமணம் செய்துகொள்ள இஸ்லாமியர்கள் தடுக்கிறார்கள்? 
இது போன்ற இன்னும் பல அறிவுப்பூர்வமான கேள்விகளை குழுமியிருந்த நண்பர்கள் கேட்டு விளக்கம் பெற்றனர். 

இந்த நிகழ்ச்சியில் சகோதரர் ஒருவருக்கு குர்ஆன் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் வந்திருந்த அனைத்து மாற்று மத நண்பர்களுக்கும் இலவசமாக அநேக புத்தகங்கள் வழங்கப்பட்டன. அவையாவன,
  1. இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (மாற்று மத நண்பர்களுக்கான கேள்வி பதில்கள்)
  2. திருக்குர்ஆன் கூறும் அறிவியல் சான்றுகள்
  3. அர்த்தமுள்ள இஸ்லாம்
  4. வருமுன் உரைத்த இஸ்லாம்
மேலும் இலவசமாக இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் CD-களும் வழங்கப்பட்டன.

பிறகு சகோதரர் அவர்கள் முடிவுரை கூறி உணவு பரிமாற்றத்துடன் சபை முற்று பெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் மாற்று மத நண்பர்கள் மற்றும் நமது சகோதரர்கள் என பெரும் திரளாக வந்து கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியை சிறப்பித்து தந்த அல்லாஹ்விற்க்கே எல்லாப் புகழும்!!!!

Saturday, October 27, 2012

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - தியாகத் திருநாள் 2012


அல்லாஹ்வின் கிருபையால், தியாகத் திருநாளான இன்று (27-10-2012) இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (இஸ்லாமியர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி) பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இதின் ஆரம்பகட்டமாக சகோ. அப்துல் ஹமீது அவர்கள் வரவேற்புரை சொல்லி மன்றத்தை ஆரம்பம் செய்தார்கள். அவரை தொடர்ந்து மாநிலத்திலிருந்து சிறப்பு விருந்தினராக வந்துள்ள சகோ. கோவை. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ''இப்ராஹிம் நபியின் தியாகம்'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இவரது உரை தொடர்ந்து கேள்வி பதில நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில
  1. ஹாரூத் மாரூத் மலக்குகளா ஷைத்தான்களா?
  2. நபிகள் நாயகத்திற்கு சூனியம் செய்யப்பட்டதாக வரக்கூடிய ஹதீஸ் பலவீனமானதா?
  3. மண்ணறை வேதனை சம்பந்தமாக வரக்கூடிய ஹதீஸின் விளக்கம் என்ன?
  4. தொலைக்காட்சி பார்க்கலாமா?
  5. ஜகாத் வருமானத்திற்கா எஞ்சியதற்கா?
மேலும் பல கேள்விகளை சகோதர, சகோதரிகள் கேட்டனர். கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் அறிவுப்பூர்வமாகவும், ஆதரப்பூர்வமாகவும், மக்கள் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் எளிய நடையில் விளக்கினார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பரிசு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இஷா தொழுகையை ஜமாஅத்-ஆக தொழுது, இரவு உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே முடிவு பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோதரர்கள் தங்கள் குடும்பத்துடன் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்