Friday, May 10, 2013

பேச்சாளர் பயிற்சி முகாம்


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தில் தாஇயி பயிற்சி முகாம் சகோ. முஹம்மது ஃபஸிஹ் அவர்களின் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. 

நேற்றைய (10-05-2013) தாஇயி பயிற்சி முகாமில் நமது மண்டல சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறிய உரை நிகழ்த்தினார்கள். இவர்களின் உரையில் கவனிக்க வேண்டிய விஷய்ங்களையும், மக்களுக்கும் எடுத்துரைக்கும் முறையையும் சகோதரர் ஃபஸிஹ் அவர்கள் மிக அழகாக விளக்கினார்கள்.

மேலும், இனிவரும் காலங்களில் இன்னும் முயற்சி செய்து சிறு சிறு பிழைகளும் வராதமாறு உரை நிகழ்த்துமாறு கூறி சபையை முடித்தார்.

இதில் நமது மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Wednesday, May 8, 2013

"அல்அஃலா" விளக்கவுரை வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 07-05-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள். 

இந்த வகுப்பில் திருக்குர்ஆனின் 87ஆவது அத்தியாயமான "அல்அஃலா" வின் விளக்கவுரைகளை திருக் குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். சகோதரர் அவர்களின் விளக்கமானது சிறப்பாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தது. 

இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்ந்துலில்லாஹ்.

Monday, May 6, 2013

"கொள்கை உறுதி" - ரிஃபா கிளை பயான்


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு கடந்த 04-05-2013 அன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.புர்ஹான் அவர்கள், "கொள்கை உறுதி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Saturday, May 4, 2013

அல்லாஹ்வின் அருளான குழந்தை செல்வம் - தலைமை பயான்


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (03-05-2013) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முஹம்மது ஃபஸிஹ் அவர்கள், "அல்லாஹ்வின் அருளான குழந்தை செல்வம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

மறைமுக அருள் (பரக்கத்) - ஹித் கிளை பயான்


அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (03-05-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோ. தென்காசி முபாரக் அவர்கள் "மறைமுக அருள் (பரக்கத்)" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, May 2, 2013

பஹ்ரைன் மண்டல நிர்வாகிகள்




பஹ்ரைன் மண்டல நிர்வாகிகள்
தலைவர்
நாஸர் காதர்  

செயலாளர்
ஜாகிர் 

பொருளாளர்
செய்யது முஹம்மத் 

துணை தலைவர்
சஹாப்தீன்

இணை செயலாளர்கள்
ஃபஸிஹ்  
ஜாகிர்
யூசுப் அசன்  

ஹித் கிளை நிர்வாகிகள்
தலைவர்
சாபிர் - +973 - 39081498செயலாளர்
சிராஜ் 

பொருளாளர்
ஹபிபுல்லாஹ் - +973 - 33019675

பஹ்ரைன் மண்டல 4ஆவது பொதுக்குழு



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நேற்று (01-May-2013) பஹ்ரைன் மண்டல நான்காவது பொதுக்குழு கூடியது. அல்ஹம்துலில்லாஹ்.

பஹ்ரைன் மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் / உறுப்பினர்கள் அனைவரும் வரவழைக்கப்பட்டு, தலைமை அவர்களின் நியமனத்தின் அடிப்படையில் தேர்தல் அதிகாரியாக சகோதரர். மூனிப் அவர்களின் முன்னிலையில் நிகழ்ச்சி ஆரம்பமானது.

முதற்கட்டமாக அமீரகத்திலிருந்து சகோதரர். ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் “சமுதாய கடமையும் மறுமை நன்மையும்” என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக உரையாற்றினார்கள்.

அதனை தொடர்ந்து செயலாளராக இருந்த சகோதரர் ஜாஹீர் ஹுசைன் அவர்கள், முந்தைய நிர்வாகத்தில் ஜமாஅத் சார்பில் பஹ்ரைன் மண்டலத்தி
ன் தாவா மற்றும் சமுதாய பணிகளை தொகுத்து Power Point Presentation ஆக மக்கள் முன் சமர்பித்தார்.

அவரை தொடர்ந்து 
பொருளாளராக இருந்த சகோதரர் மாஹீன் அபூபக்கர் அவர்கள், முந்தைய நிர்வாகத்தின் நிதி நிலை அறிக்கையை தொகுத்து Power Point Presentationஆக மக்கள் முன் சமர்பித்து, அதை தேர்தல் அதிகாரியிடம் முறையாக ஒப்படைத்தார்.

இதனை தொடர்ந்து சகோதரர். மூனிப் முன்னிலையில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர்களின் பெயர்கள் மற்றும் பதவிகளாவன,

தலைவர் - திருச்சி. மொய்தீன் - +973-33776344
செயலாளர் - திருச்சி. ஜெய்லானி - +973-39798224
பொருளாளர் - துலுக்கர்பட்டி. மாஹின் அபூபக்கர் - +973-39943027
துணை தலைவர் - தென்காசி. முபாரக் - +973-39192162
துணை செயலாளர் - திருச்சி. யூசுஃப் ஷரீஃப் - +973-38827623

புதிய நிர்வாகம் அல்லாஹ்வின் கிருபையால், நல்ல முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து சகோதரர். முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் “கொள்கை உறுதி” என்ற தலைப்பில் ஒரு சிறிய உரை நிகழ்த்தினார்கள். இந்த உரையானது புதிய நிர்வாகிகளுக்கு தேம்பூட்டும் விதமாக அமைந்தது.

பிறகு துஆ ஓதி, மதிய உணவு பரிமாற்றத்துடன் சபை களைந்தது.


பஹ்ரைன் மண்டலத்தில் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகள் அனைத்தும் இம்மையிலும், மறுமையிலும் நன்மைகள் பெற்று தரக்கூடிய வண்ணம் அமைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் வேண்டிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்