அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நேற்று (01-May-2013) பஹ்ரைன் மண்டல நான்காவது பொதுக்குழு கூடியது. அல்ஹம்துலில்லாஹ்.


பஹ்ரைன் மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் / உறுப்பினர்கள் அனைவரும் வரவழைக்கப்பட்டு, தலைமை அவர்களின் நியமனத்தின் அடிப்படையில் தேர்தல் அதிகாரியாக சகோதரர். மூனிப் அவர்களின் முன்னிலையில் நிகழ்ச்சி ஆரம்பமானது.
முதற்கட்டமாக அமீரகத்திலிருந்து சகோதரர். ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் “சமுதாய கடமையும் மறுமை நன்மையும்” என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக உரையாற்றினார்கள்.
அதனை தொடர்ந்து செயலாளராக இருந்த சகோதரர் ஜாஹீர் ஹுசைன் அவர்கள், முந்தைய நிர்வாகத்தில் ஜமாஅத் சார்பில் பஹ்ரைன் மண்டலத்தின் தாவா மற்றும் சமுதாய பணிகளை தொகுத்து Power Point Presentation ஆக மக்கள் முன் சமர்பித்தார்.
அவரை தொடர்ந்து பொருளாளராக இருந்த சகோதரர் மாஹீன் அபூபக்கர் அவர்கள், முந்தைய நிர்வாகத்தின் நிதி நிலை அறிக்கையை தொகுத்து Power Point Presentationஆக மக்கள் முன் சமர்பித்து, அதை தேர்தல் அதிகாரியிடம் முறையாக ஒப்படைத்தார்.

இதனை தொடர்ந்து சகோதரர். மூனிப் முன்னிலையில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர்களின் பெயர்கள் மற்றும் பதவிகளாவன,
தலைவர் - திருச்சி. மொய்தீன் - +973-33776344
செயலாளர் - திருச்சி. ஜெய்லானி - +973-39798224
பொருளாளர் - துலுக்கர்பட்டி. மாஹின் அபூபக்கர் - +973-39943027
துணை தலைவர் - தென்காசி. முபாரக் - +973-39192162
துணை செயலாளர் - திருச்சி. யூசுஃப் ஷரீஃப் - +973-38827623
பிறகு துஆ ஓதி, மதிய உணவு பரிமாற்றத்துடன் சபை களைந்தது.

பஹ்ரைன் மண்டலத்தில் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகள் அனைத்தும் இம்மையிலும், மறுமையிலும் நன்மைகள் பெற்று தரக்கூடிய வண்ணம் அமைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் வேண்டிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
0 comments:
Post a Comment