Sunday, December 1, 2013

மருத்துவ முதல் உதவிகள் பயிற்சி



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
பஹ்ரைன் மண்டல தலைமை மர்கஸில் 29 ம் திகதி வெள்ளிக்கிழமை பயான் நிகழ்சிக்கு பிறகு மருத்துவம் படித்தவர்களைக் கொண்டு  "மருத்துவ முதல் உதவிகள் பயிற்சி"  அளிக்கப்பட்டது. இந்த நிகழ்சி களந்து கொண்ட அனைவரும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மக்கள் இந்த நிகழ்சியில் சொல்லப்பட்ட செய்திகளையும் செயல் முறை வடிவில் வளங்கப்பட்ட பயிற்சியையும் கவனமாகவும் அவதானித்து தங்களுக்குள்ள சந்தேகங்களையும் கேட்டு தெரிந்து கொண்டனர். இந்த நிகழ்சியில் ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் கூட களந்து கொண்டனர்.
 மருத்துவ முதல் உதவி பயிற்சியில் குழந்தைகள் எதாவது ஒரு பொருளை விழுங்கி விட்டால் என்ன செய்வது? குழந்தை எதையாவது விழுங்கி விட்டார்கள் என்பதை எப்படி கண்டு பிடிப்பது ? 
 பெரியளவினான வெட்டுக்காயம் ஏற்பட்டால் இரத்தம் வருவதை முதலாவது எப்படி கட்டுப்டுத்துவது ?
தீயினால் எதாவது காயம் ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் ?
ஹார்ட் அடைக் ஏற்பட்டால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்கு முன் என்ன செய்யவேண்டும் ?
இப்படி ஏறாளமான விசயங்களை செயல் வடிவில் செய்துகாட்டினார்கள் இன்ஷா அல்லாஹ் அந்த வீடியோ நமது தளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்டும்.

வாராந்திர பயான் நிகழ்ச்சி

 பஹ்ரைன் மண்டல தலைமை மர்கஸில் 29-11-2013 (வெள்ளிக் கிழமைமக்ரிப் தொழுகைக்கு பிறகு வாராந்திர பயான் நிகழ்ச்சியில்  முஸ்லீம்களின் முதல் எதிரி ஷைத்தான் என்ற தலைப்பில் சகோ பஸிஹ் அவர்கள் உறையாற்றினார் அதில் ஆண்களும் பெண்களும் களந்து கொண்டு பயனடைந்தனர்.

தாஃயீ பயிற்சி

பஹ்ரைன் மண்டல தலைமை மர்கசில்   29-11-2013 (வெள்ளிக் கிழமை காலை பFஜ்ர் தொழுகைக்கு பிறகு தாஃயி பயிற்சி  நடைப்பெற்றது இதில் சகோ இப்லால் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார். 

அங்கு களந்து கொண்டவர்களுக்கு பயான் பன்னும் போது நாம் கையாள வேண்டிய விசயங்களும் கற்றுக்கொடுக்கப்பட்டது.

குறிப்பு

ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை பஜ்ர் தொழுக்குப் பிறகு தாஃயி பயிற்சி நடைபெறும் ஆர்வமுள்ளவர்கள் களந்து பயிற்சி எடுக்கலாம்.

Sunday, November 24, 2013

குழந்தைகளுக்கான வகுப்புகள்

அல்லாஹ்வின் கிருபையால்.....
 குழந்தைகளுக்கான புதிய வகுப்பு வெள்ளி கிழமை 22-11-13 முதல் தொடங்கப்பட்டது. அதில் குழந்தைகளை வயதடிப்படையில்  இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மார்க்கல்வியும் அதோடு இணைந்து அரபி எழுத பேச படிக்க பயிற்ச்சிகள் வழங்கப்படுகின்றது. அதிகமான குழந்தைகள் ஆர்வத்துடன் பங்குபெற்று பயனடைந்தார்கள்,

வகுப்பு ஆரம்பிக்கும் நேரம் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 10 : 30 வரை

நடத்தப்டும் பாடங்கள்

இரண்டு பிரிவாக மூன்று பாடங்கள் நடத்தப்படும்.ஒரு பாடத்திற்கு முப்பது நிமிடம்.
பெரிய பிள்ளைகளுக்கு
முதல் பாடம்         : அறபிக்
இரண்டாவது பாடம்   : துஆ மனனம்  (தொழுகையில் ஓதும் துஆ)
மூன்றாவது பாடம்    : வரலாறும் படிப்பினையும் 
                        அகீதா 

சிறிய பிள்ளைகளுக்கு
முதல் பாடம்        :  அறபிக் மற்றும் அறபி எழுத்துப் பயிற்சி 
இரண்டாவது பாடம் : அகீதா

மூன்றாவது பாடம்   : சூரா மனனம் மற்றும் துஆ மனனம் 


சொர்கத்திற்கு அழைத்து செல்லும் சிறு சிறு அமல்கள் - பஹ்ரைன் மண்டலம் தலைமை மர்கஸ்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (22-11-2013)நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முனீப் அவர்கள்   "சொர்கத்திற்கு அழைத்து செல்லும் சிறு சிறு அமல்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!...




Saturday, November 23, 2013

தாயி பயிற்ச்சி

அல்லாஹ்வின் கிருபையால்,தாயி பயிற்ச்சி 23-11-213 சனி கிழமை முதல் இனிதே தொடங்கியது. சகோதரர் யூசுப் அவர்களும் முபாரக்  அவர்களும் உரை நிகதினார்கள்.

"பொறுமையும் பொறாமையும்" ஹித் கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி 22.11.2013 (வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு

இந்த நிகழ்ச்சியில்  சகோதரர் முனீப் அவர்கள்   "பொறுமையும் பொறாமையும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்