கடந்த 17-12-2013 பஹ்ரைன் தேசிய நாள் - விடுமுறை நாளில் மக்களுக்கு பயன்படும் வகையில் பஹ்ரைன் டி.என்.டி.ஜே சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றை டி.என்.டி.ஜே மார்க்கஸில் வைத்து ஏற்பாடு செய்திருந்தது இதில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான மருத்துவ சோதனைகளும் அதனடிப்படையிலான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது, இதில் 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கலந்து கொண்டவர்கள் அனைவரும் தங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக கருத்து தெரிவித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் இந்த முகாமில் குழந்தைகளுக்கான மருத்துவ சோதனைகள் மற்றும் ஆலோசனைகளை சிறப்பு மருத்துவர் டாக்டர் பிரவீன் ஆப்ரஹாம் அவர்கள் செய்தார்கள்.





















