Tuesday, May 31, 2011
பஹ்ரைனில் நடந்த 4வது இரத்ததான முகாம்
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 8:29 PM |
பிரிவு:
இரத்ததானம்

அல்லாஹ்வின் கிருபையால் பஹ்ரைன் டி.என்.டி.ஜே சார்பில் 27-05-2011 வெள்ளிக் கிழமை காலை 7:30 மணி முதல் 11:30 மணி வரை மாபெரும் இரத்ததான முகாம் பஹ்ரைன் சல்மானியா மருத்துவமனையில் மிகச்சிறப்புடன் நடைபெற்றது, இதில் 80 க்கும் மேற்ப்பட்டவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் இரத்தத்தை தானம் செய்து மனித நேயத்திற்குச் சான்று பகன்றார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாற்றுமத நன்பர் ஒருவர் தமிழகதில் நடைபெரும் இரத்ததானங்களைஅனைத்து சமுதாய மக்களுக்கு மத்தியிலும் மேலும் அதிகமாக சென்றடையுமாறு வழிவகை செய்யவும் கேட்டுக்கொண்டார். மேலும் ஒரு பாகிஸ்தானைச் சேர்ந்த டிரைவர் டி.என்.டி.ஜே யினரின் செயல்பாட்டைக் கண்டு அவரும் ஆர்வத்துடன் இரத்ததானம் செய்தார்.
இந்த இரத்ததான நிகழ்ச்சியை பஹ்ரைன் டி.என்.டி.ஜே நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மிகவும் சிறப்பாக எற்ப்பாடு செய்திருந்தனர், அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment